பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோக்கம் மற்றும் குறிக்கோள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதற்கு இணங்க, சுதந்திரமானதும், பாரபட்சமற்றதும் ஒழுக்க நெறியின்பாற்பட்டதும், செயல்திறன் மிக்கதும், அரசு அன்றாடம் எதிர்கொள்ளும் புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் கொண்டதும், பொதுமக்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், குறிப்பாக விளிம்புநிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலுமான திறன் மிக்க அரசுப் பணியாளர்களை உருவாக்கி வளர்த்திடுவதே தேர்வாணையத்தின் முதன்மையான நோக்கம்.

குறிக்கோள்

  • மேலும் தேர்வாணையம் கீழ்க்காணும் குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு பயணித்து வருகிறது.
  • தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு, மாநில குடிமைப் பணிகளுக்கான தெரிவு முறை சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்தல்.
  • காலத்திற்கேற்ப தெரிவு முறைகளை மேம்படுத்துதல்.
  • அரசுப் பணியாளர்களின் பணி நிலைகள் குறித்து அவ்வப்போது அரசுக்கு தக்க ஆலோசனை வழங்குதல்.
  • அரசுப் பணியாளர்களின் நலன்களையும், நேர்மைத் திறனையும் தொடர்ந்து பாதுகாத்தல்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. தேர்வாணையத்தின் தேர்வுகளில் கலந்து கொள்ள எவ்வாறு விண்ணப்பிப்பது?

இணைய வழி முலமாக மட்டும்.

2. இணைய வழி விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமா?

தேவையில்லை.

3. நான் இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது சான்றிதழ்களை அனுப்பிவைக்க வேண்டுமா?

தேவையில்லை.

4. நான் தேர்விற்கான கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது?

1. இணைய வழி (நிகழ் நிலை) மூலமாக:

  • வலை வங்கி முறை (Net Banking)
  • கடன் அட்டை (Credit Card)
  • பற்று அட்டை (Debit Card)

2. இணைய வழி இல்லாமல் :

தேர்வாணைய அறிவிக்கையில் குறிப்பிடப்படும் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும் வங்கிக் கிளைகள் மூலமாக

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

3.08163265306
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top