பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / ஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்

ஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள் பற்றிய குறிப்புகள்

 1. ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க தலைவராக விளங்க வேண்டுமெனில், வலுவான, தாக்கம் மிகுந்த, விரும்பத்தக்க மற்றும் வெற்றிகரமான ஆளுமையை ஒருவர் பெற்றிருக்க வேண்டும்.
 2. ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒருவர் எவ்வாறு வினையாற்றுகிறார் மற்றும் அவரது செயல்பாட்டின்போதும், அதன் பிறகும், அதனால் அவர் மற்றவர்களிடத்தில் எந்தவிதமான தாக்கத்தை உண்டாக்கியுள்ளார் என்பதை வைத்து ஒருவரின் ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. தன் ஆளுமையால் வலுவான தாக்கத்தை உண்டாக்கும் ஒருவரால், அதிக நபர்களை கவர்ந்திழுக்க முடியும்.
 3. உதாரணமாக, ஏதேனும் ஒரு பிரபல நபரின் சிந்தனை, பேச்சு, எழுத்து மற்றும் செயல்பாடு அகியவற்றால் நீங்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருப்பதை உணர்ந்தால், ஆளுமையின் தீரத்தை அறிய முடியும்.
 4. உங்களுக்கான ஒரு வெற்றிகரமான ஆளுமையை நீங்களும் வளர்த்துக் கொள்ளலாம். இதை சாதிக்க, ஒருவருக்கு, ஆர்வம், மதிநுட்பம் மற்றும் நீடித்த முயற்சி ஆகிய பண்புகள் அவசியம்.
 5. உங்களின் நடத்தை அம்சங்களை ஒரு குறிப்பிட்ட வகைப்பாட்டில் மாற்றி, தவறுகளை களைந்தால், வெற்றிகரமான ஆளுமையை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். இந்த நோக்கத்தை அடைய, ஒருவர் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களைப் பற்றி நாம் இக்கட்டுரையில் அலசலாம்.
 6. ஒருவரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் அவரின் மிணுக்கான உடை மட்டுமே, அவருக்கான சிறப்பான ஆளுமையை கட்டமைத்து விடாது. வேண்டுமானால், மற்றவர்களை தன்பால் கவர்வதற்கான முதல் படியாக வேண்டுமானால் அது அமையலாம். ஏனெனில், first impression எனப்படும் முதலாவது ஈர்ப்பே, எதிர்மறையாக போய்விட்டால், பின்னர், ஒருவரை நமக்கு சாதகமான நபராக மாற்ற, மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.
 7. ஏனெனில், ஒருவர் தனது முதல் நடவடிக்கையிலேயே, பிறரை கவர்ந்துவிடும்போது, அவரின் அடுத்தடுத்த முயற்சிகள் எளிதானவையாக அமைகின்றன. பல அம்சங்களை உள்ளடக்கிய முதல் அறிமுகத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
 8. முதல் கட்ட கவர்தல்(first impression) என்பது, உங்களின் உயரம், உடல் கட்டமைப்பு, முக ஒப்பனை, தலைமுடி அலங்காரம், உடல் வலிமை உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதா? என்ற கேள்வி வருகிறது. இதற்கு பதில், இல்லை என்பதுதான். உங்களின் உடல் தோற்றம் என்பது சிறு அளவு மட்டுமே தாக்கம் செலுத்தும் தன்மை கொண்டது. வெறும் உடல் தோற்றத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் என்று எவரும் இல்லை.
 9. உங்களிடம் இருக்கும் நேர்மறையான அம்சங்களை, நீங்கள் எந்த இடத்தில், எப்படி சரியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதிலேயே முதல் கட்ட கவர்தலின் வெற்றி அடங்கியுள்ளது.
 10. உங்களின் தனிப்பட்ட தோற்றம் என்று பார்த்தால், அதில் உங்களின் உடை முக்கியப் பங்காற்றுகிறது. அதற்காக, விலை உயர்ந்த, பகட்டான, நவீன நவநாகரீக உடைதான் அணிய வேண்டும் என்பது அர்த்தமல்ல. நீங்கள் அணியும் உடை, சுத்தமாக, நன்கு Iron செய்யப்பட்டதாக, உங்களின் உடலுக்கு நன்குப் பொருந்துவதாக இருந்தாலே போதுமானது.
 11. எந்த நிகழ்ச்சிக்கு எப்படி உடையணிந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ரசனை வேண்டும். திருவிழா, திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகள்(parties) உள்ளிட்டவைகளுக்கு உடைகள் ஒரு மாதிரியும், நேர்முகத் தேர்வு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்லுகையில் formal type உடையும் அணிய வேண்டும்.
 12. அரைகுறையாகவோ, நிறப் பொருத்தமற்றோ, அநாவசியமான உடல் பாகங்கள் தெரியும்படியோ உடையணிதல் கூடாது. இதற்குப் பெயர் எளிமையான உடை அல்ல. உங்களின் ஆடை விஷயத்தில் தேவையான அளவு கவனம் செலுத்துவது முக்கியம். ஆள் பாதி ஆடை பாதி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஏனெனில், ஒருவரின் ஆளுமையை அவரின் ஆடை பெரியளவில் தீர்மானிக்கிறது.
 13. அதேசமயம், நீங்கள் சிறப்பாக உடையணிந்து விட்டாலே, நீங்கள் மற்றவர்களை முழுவதும் கவர்ந்துவிட முடியும் என்று அர்த்தமல்ல. ஆனால், அடிப்படை விஷயம் என்னவென்றால், நல்ல சிறப்பான உடையணிந்த ஒருவருக்கு, இயல்பாகவே தன்னம்பிக்கை பிறக்கிறது. அந்த தன்னம்பிக்கையை அவர் தனது மூலதனமாக பயன்படுத்திக் கொள்கிறார்.
 14. ஆனால், சரியான முறையில் உடையணியாத ஒருவர், ஒரு முக்கியமான இடத்தில் இருக்கும்போது, தேவையான தன்னம்பிக்கையப் பெற முடிவதில்லை. எனவே, உங்களின் நோக்கத்தை அடைவதில், தடுமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
 15. ஆடை மட்டுமின்றி, காலணியும் சரியாக அமைந்திருப்பது முக்கியம். ஷ¤ அணிந்திருந்தால், அது சரியாக பாலிஷ் செய்யப்பட்டு, சேதமடையாத ஒன்றாக இருக்க வேண்டும். செருப்பாக இருந்தாலும், அழுக்காக இல்லாமலும், சேதமடையாமலும் இருக்க வேண்டும். மிகவும் பழைய ஷ¤ அல்லது செருப்பை, முக்கியமான நிகழ்வுகளுக்கு அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஆதாரம் : கல்வி மற்றும் பொருளதார விழிப்புணர்வு இயக்கம்

3.02666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top