பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / போட்டித்தேர்வுக்கு உதவும் தகவல்கள் / கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)

கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)

ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்)  ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்தியளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சிபெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும். பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி.,. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும்.

பொதுப்பிரிவினர் 21முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத் தினர் 35வயது வரையும் தேர்வு எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஒருவர் நான்கு முறை தேர்வு எழுதலாம்.

O.B.C., S.C., ST பிரிவினர் ஏழுமுறை எழுதலாம். பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல்தாள் பொதுஅறிவு , இரண்டாம்தாள் திறன் அறிவு. தலா 200 மதிப்பெண்கள். இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு மெயின் தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது. தகுதித் தேர்வு பகுதி – ஏ, பகுதி – பி என இருபிரிவாக நடத்தப்படுகிறது .

பகுதி-ஏ தேர்வு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்து எழுதலாம். பகுதி-பி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்விரு தேர்வுக்கும் மதிப்பெண்கள் தலா 300. தகுதித் தேர்வின் மதிப்பெண்கள், சிவில்சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. மெயின்தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித்தேர்வு. மற்றொன்றில் ஏழு தாள்களை எழுதவேண்டும்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழு தாள்களையும் திருத்துவார்கள். தேர்வுக்கு தயாராக விரும்புவோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம். 21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப்பவர்கள் பலரும் தேர்ச்சி அடையவில்லை என்றால் சோர் வடைந்து விடுகின்றனர். 68% பேர் இரண்டு, மூன்றாவது தேர்விலே தேர்ச்சி பெறுகிறார்கள். முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10%க்கும் குறைவே. எனவே, பொறுமை, விடா முயற்சி, கடின  உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!

ஆதாரம்  விதை 2 விருட்சம்

3.35882352941
மு.குமரேசன் May 13, 2018 09:00 PM

சார், நான் இளநிலை பொறியியல் படிக்கிறேன்.... எனக்கு மாவட்ட ஆட்சியர் ஆவது என்பது கனவு இது வரை நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்ப இருந்து நான் படிக்க என்ன செய்ய வேண்டும்.சரியான வலி முறையை கூறுங்கள் ப்ளீஸ்

hema May 03, 2018 10:58 PM

Super

டீ .கேசவன்[சேலம்] Feb 27, 2018 11:16 AM

சார் ba தமிழ் படித்தால் மட்டும்தான் தமிழில் ias exam தமிழில் எழுத முடியுமா ? நான் பி.comca படிக்கிறேன்.நான் தமிழில் ias exam எழுத முடியாத ?

டீ. கேசவன் [சேலம்] Feb 01, 2018 11:43 AM

நான் பி.காம் [CA ] முதலாம் ஆண்டு படிக்கிறேன் எனக்கு IAS ஆக மிகவும் விருப்பம் .ஆனால் IAS படிக்க மிகவும் கடினம் என கூறுகிறர்கள் .அதற்கான முழு விவரத்தியும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் தமிழ் வழியில் படித்தவர்கள் IAS ஆக முடியாதா .அதற்கான விவரத்தியும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

கமல் Dec 07, 2017 08:08 PM

நான் இளங்கலை வரலாறு படித்துள்ளேன் ,எனக்கு வயது 20 ஆகிறது நான் கலெக்டர் தேர்வுக்கு தயாராகுவது எப்படி .இது வரை நான் எந்தமுயற்சியும் , பயிற்சியும் எடுக்கவில்லை , மேலும் எனக்கு ஆங்கில அறிவும் கொஞ்சம் குறைவுதான் , நான் தேர்வுக்கு தயாராக உரிய வழிமுறையை கூறவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top