பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / முன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை

நேர மேலாண்மை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள், வேலை தேடும் இளையோர்கள் என ஒவ்வொருவருக்கும் தேவையான நேரம் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றம் காண்கிறது.

பள்ளி செல்லும் மாணவருக்கு அன்றைய வீட்டுப்பாடங்களை தூங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்பதும், கல்லூரி மாணவருக்கு பரீட்சை காலத்தில் தங்கள் பாடங்களை படித்து முடிக்க வேண்டும் என்ற அவசரமும், வேலை தேடுவோருக்கு வயதாகிக் கொண்டே போகிறது விரைவாக வேலையினைப் பெற்று வருமானத்தை பெற வேண்டும் என்பன  போன்ற தேவைகள் இருக்கின்றது.

தனிப்பட்ட தேவைகளுக்காக ஓவ்வொருவரும் செலவழிக்கும் நேரமும், தேவையான நேர அளவும் மாறுபடுகிறது. தேவைப்படும் நேரத்தை சரியாக கணக்கிட்டு, மிச்சமிருக்கும் நேரத்தை உபயோகமான வகையில் பயன்படுத்திக்கொள்வதுதான் அறிவை வளர்க்கும் செயல். ஜப்பானியர்கள் பயணத்தின் போது கிடைக்கும் நேரத்தை தூங்குவதற்கு பயன்படுத்திவிட்டு, கிடைக்கும் நேரத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.

நாமும் அதுபோன்று இருக்க வேண்டும் என்பது அல்ல. இது ஜப்பானியர்களின் நேர மேலாண்மை குறித்த ஒரு பதிவே. நமக்கானத் தேவைகள், பயணங்கள், சூழ்நிலைகள், காலங்கள் வேறு மாதிரியானவை. நாம் அப்படியே பிறரின் நேர மேலாண்மையை பின்பற்றினால், அது வெற்றிகரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. கிடைக்கும் நேரத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு நாமே ஒரு திட்டமிடலை உருவாக்க வேண்டும்.

  • என்னென்ன வேலைகளுக்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்?
  • தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரங்கள்.
  • தேவைக்கும் குறைவாக இருக்கும் நேரங்கள்
  • வருங்காலத் தேவைகள்
  • வருங்காலத்திற்காக தயாராக என்ன செய்யலாம்?
  • தன்னிடம் குறைவாக இருக்கும் திறனை, கிடைக்கும் நேரத்தைக் கொண்டு * எப்படி மேம்படுத்துவது?

போன்ற கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்தால், நேர திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான வரையறைக்குள் வர முடியும். திட்டமிடல் குறித்த இந்த வரையறை எதிர்காலத்திற்கான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துணை புரியும்.

எனேனில் உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்பொழுது அது உங்களை வேகமாக இயங்க கட்டாயப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக இரண்டு நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கிறது, நீங்கள் எந்த நிறுவனம் சிறந்த நிறுவனம் என்று ஆய்வு செய்கிறீர்கள், எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதில் தெளிவு காண்கிறீர்கள். மூளையின் செயல் திறன் சிறப்பாக இருந்தால்தான் தெளிவான முடிவுகளை விரைவாக எடுக்க முடியும்.

நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும், செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்திற்கான வழியில் அழைத்துச் செல்லும்.

ஆதாரம் : மனித நேய அறக்கட்டளை

2.98684210526
Haleefullah May 10, 2017 08:48 AM

நேரமேலாண்மை கடை பிடிக்க வேண்டிய பேணுதலான வழிமுறை.
பிரயாண நேரம் ஓய்வாகவும் தூங்கவும் வசதியாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top