பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளர் பிரச்சினைகள் , குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் ஆகியன பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

குழந்தை தொழிலாளர்

குழந்தை தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து தேசத்திற்கு சவாலாகவே விளங்கி வருகிறது. அரசு இந்தப் பிரச்சினையை சமாளிக்க தன்முனைப்பு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை தீவிரமானதும், சமூக மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் அரசாங்கம் 1979ம் ஆண்டில் குருபாதசாமி கமிட்டியை உருவாக்கியது. இந்த கமிட்டி பிரச்சினையை விவரமாக ஆய்வு செய்து, நீண்ட காலம் பயனளிக்கக்கூடிய சில பாிந்துரைகளை செய்தது. வறுமை நிலை என்பது நீடிக்கும் வரையில் குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்குவது என்பது கடினம். ஆகவே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க நினைப்பது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனையாக இருக்காது என்பது இந்த கமிட்டியன் கருத்து. இத்தகையை சூழ்நிலையில், உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடைசெய்வதும், மற்ற இடங்களில் முறையான கட்டுப்பாடுகளையும், வேலை செய்யும் சூழ்நிலையை நல்ல விதமாக மாற்றம் செய்வதே இப்பிரச்சனையை கையாள மாற்று வழிகளாகும் என்று பாிந்துரைத்தது. பணிபுரியும் குழந்தைகள் பிரச்சினைகளை அணுகும் முறையில் பன்முனைக் கொள்கைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று இந்தக் கமிட்டி சிபாரிசு செய்தது.

குருபாதசாமி கமிட்டியின் அறிக்கையின் பேரில், 1986ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை-சீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற தடைவிதித்தும் மற்ற தொழில்களில், பணிச்சூழ்நிலைகள் சீரமைக்கப்படவேண்டும் என்றும் இந்த சட்டம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி குழந்தைத் தொழிலாளர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் உருவாக்கப்பட்டது. இக்குழுமத்தின் ஆலோசனைப்படி, குழந்தைத் தொழிலாளர்களுக்கு உடல் நலக் கேடு விளைவிக்கும் பணிகள், செயல்பாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது.

மேற்படி அணுகுமுறையின் அடிப்படையில், 1987ம் ஆண்டு, குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையின்படி, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய பணிகளில் மற்றும் ஆபத்தான செயல்முறைகளில் வேலை செய்யக் கூடிய குழந்தைத் தொழிலாளர்களை எவ்வாறு சீராக தொடர்ந்து செயல்பட்டு விடுவித்து, மறுவாழ்வளிப்பது என்பது பற்றி வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக் கல்வி

எம்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு ஒரு நூதனமான விதத்தில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை அணுகியுள்ளது. இந்த அமைப்பானது, பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நின்றவர்கள், பள்ளிக் கல்வி கற்க இயலாத குழந்தைகள், ஒரு காலகட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்தவர்கள் ஆகியோருக்கென்று தங்கிப்படிக்கும் ஒரு தொடர்புக் கல்வி முறையை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்தக் கல்வி திட்டத்தில் பயின்றவர்கள், அவரவர்களின் வயதிற்குக் தக்கவாறு, பள்ளிகளில் சேர்ந்து கல்வியைத் தொடரலாம். இந்த கல்வி முறையானது, பணியில் ஈடுபட்டு இருந்த குழந்தைத் தொழிலாளர்களை கல்வி கற்கும் மனநிலைக்கு மாற்றுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த முறையை, ஆந்திரப்பிரதேச அரசும், அரசு சாரா அமைப்புகளான பிரதாம், சிஐஎன்ஐ - ஆஷா, லோக் ஜம்பிஷ் மற்றும் பல அமைப்புகள் ஏற்றுக் கொண்டு அமல்படுத்த தொடங்கியுள்ளன.

ஆதாரத்திற்கு தொடர்பு வலைதளங்கள்

http://labour.nic.in/child-women-labour

http://www.india.gov.in/spotlight/spotlight.php

http://www.pratham.org/contact/indian_inter.php

http://www.cini-india.org/asha.asp#childline

குழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்பு - ஆந்திரப் பிரதேசம்


1971 - 1627492

1981 - 1951312

1991 - 166940

2001 - 1363339

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் (ஏபிஎஸ்பிபி) கொண்ட இந்த திட்டமானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டமாக உருவானது. பிரிட்டிஷ் அரசின் சர்வதேச வளர்ச்சித்துறை மற்றும் வட அயர்லாந்து இவற்றுடன் ஐஎல்ஓ, புதுடில்லி ஆகியவற்றின் அலுவலகங்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திட்டமாக உருவானது. இந்த திட்டத்தின் முதல் கட்டம், நவம்பர் 2000 முதல் மார்ச் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தயவர்களாவர். 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உத்திரப் பிரதேசத்திற்குப் பிறகு ஆந்திராவில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையாவனவர்கள், பெண் குழந்தைகள். இது மட்டுமின்றி இத்தகைய தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்தான் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான அணுகுமுறைகளை, அம்மாநிலத்தின் சமூகப், பொருளாதார மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைத்தல் அவசியம் என்பது ஆந்திர திட்ட செயல்பாட்டிலிருந்து பெற்ற அனுபவமாகும்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத்திட்டம் செயல்படும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்

அனந்தப்பூர், சித்தூர், கடப்பா, கிழக்கு கோதாவரி, குண்டூர், ஹைதராபாத், கரீம்நகர், கர்னூல், மேதக், நல்கோண்டா, கம்மம், நெல்லூர், நிஜாம்பாத், பிரகாசம், ரங்காரெட்டி, ஸ்ரீகாகுலம், விஜயநகரம், விசாகப்பட்டினம், வாரங்கல், மேற்கு கோதாவரி, மெகபூப்நகர், அடிலாபாத் மற்றும் கிருஷ்ணா.

குழந்தைத் தொழிலாளர் (தடை - சீரமைப்பு) சட்டம், 1986

விவரங்கள் 2003 2004 (முதல் காலாண்டு)
நடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கை 29355 5211
சட்டமீறல்களின் எண்ணிக்கை 16395 2749
வாபஸ் வாங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 0 7
வசூலிக்கப்பட்ட தொகை 0 ரூ. 1212/-

பதிவான வழக்குகளின் எண்ணிக்கை

4,870 423

குற்றம் நிரூபிக்கப்பட்ட வழகுகளின் எண்ணிக்கை

2658 538
வசூலான அபராதம் தொகை ரூ 2,05,340 ரூ 37,750
திறக்கப்பட்ட பள்ளிகள் 242 173

மறுவாழ்வு பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை

15627 3640

தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் கணக்கு விவரம்

1971 - 713305

1981 - 975055

1991 - 578889

2001 - 418801

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம் 1986 என்பது, குழந்தைத்தொழிலாளர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதைத் தடுப்பது, மற்றும் ஆபத்தற்ற தொழில்களில் வேலை செய்பவர்களின் நிலையை சீரமைப்பதற்காக அமல்படுத்தப்படும் சட்டமாகும்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் செயல்படும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள்

சிதம்பரனார் (தூத்துக்குடி) கோயம்புத்தூர், தர்மபுரி, வேலுார், புதுக்கோட்டை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, திண்டுக்கல், மற்றும் தேனி.

ராஜஸ்தான் குழந்தை தொழிலாளர் பற்றி கணக்கு விவரம்

1971 - 587389

1981 - 819605

1991 - 7714199

2001 - 126570

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படும் ராஜஸ்தானில் உள்ள மாவட்டங்கள்

ஜெய்ப்பூர், உதய்ப்பூர், டோங்க், ஜோத்ப்ூா, அஜ்மீர், ஆள்வார், ஜலூர், சுரு, நாகெளர், சிட்டுர்கர், பணிஸ்வாரா, தெளல்புர், சிகார், துங்க்ாாபூர், பரத்பூர், பிகாநர், ஜுன்ஜுனு, பண்டி, ஜாலாவார், பாலி, பில்வாரா, கங்காநகர் மற்றும் பார்மர்

உபயோகமுள்ள ஆதாரத் தகவலுக்கான இணையதள தொடர்பு

http://rajlabour.nic.in/childlabour.htm

Filed under:
3.06060606061
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top