பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தைகள் வன்கொடுமை

பாலியல் வன்முறை, உணர்வு ரீதியான அத்துமீறல் போன்ற குழந்தைகள் வன்கொடுமை குறித்த தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நல அமைச்சகம் குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றிய ஆய்வு 2007 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில்,  சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் குழந்தைகள் மீதான அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடல் ரீதியான அத்துமீறல்,  பாலியல் வன்முறை, உணர்வு ரீதியான அத்துமீறல் என்பவை குழந்தைகள்  சந்திக்கும் சில வகையான அத்துமீறுதல்களாகும்.  இவை பற்றிய சில உண்மைகளை இவ்வறிக்கை அளிக்கிறது.

உடல் ரீதியான அத்துமீறல்

  மூன்றில் இரண்டு குழந்தைகள் உடல்ரீதியான  அத்துமீறலுக்கு ஆளாகின்றனர்.

 • உடல்ரீதியான அத்துமீறலுக்கு ஆளாகின்ற குழந்தைகளில்,  55 சதவிகித பேர் சிறுவர்கள்
 • 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் ரீதியான அத்துமீறலுக்கு ஆளாக்ககப்படுகின்றனர்.
 • குடும்ப சூழலில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளில், 88.60 சதவிகிதம் பேர், தங்களுடைய பெற்றோர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.
 • ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிகளவு குழந்தைகள் மீதான அத்துமீறல் காணப்படுகிறது
 • 50.2 சதவிகிதம் குழந்தைகள் வாரம் முழுக்க 7 நாட்களும் வேலை செய்கின்றனர்.
 • பாலியல் வன்முறை
 • 53.2 சதவிகித குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் வன்முறைகட்கு ஆளாக்கப்படுகின்றனர்.
 • ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆண், பெண் குழந்தைகளிடையே அதிகளவு பாலியல் வன்முறை கண்டறியப்பட்டுள்ளது
 • 21.90 சதவிகிதம் குழந்தைகள் தங்களுக்கு மோசமான பாலியல் வன்முறை நடந்ததாகவும், 50.76% சதவிகிதம்  குழந்தைகள் மற்ற முறைகேடுகளுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 • ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், டெல்லி குழந்தைகள்தான் அதிகமான பாலியல் வன்முறைக்கும் துன்புறுத்துதலுக்கும் ஆளாவதாகக் கண்டறிந்துள்ளனர்.
 • 50 சதவிகித துன்புறுத்துதல் குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாலும், பொறுப்பாக நடந்துக் கொள்ள வேண்டியவர்களாலும் நடைபெறுகிறது.
 • உணர்வு ரீதியான அத்துமீறல் மற்றும் பெண்குழந்தை புறக்கணிக்கப்படுவது
 • ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும், உணர்வுரீதியான அத்துமீறலைச் சந்திப்பதாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • சிறுவர், சிறுமிகள் இருவரும், ஒரே அளவில், உணர்வு ரீதியான அத்துமீறலை எதிர் கொள்கின்றனர்.
 • 83 சதவிகிதக் குழந்தைகள் விஷயத்தில், பெற்றோர்களே வன்முறை செய்கிறவர்களாக இருக்கிறார்கள்.
 • 48.4 சதவிகித பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

“எங்களை அவமானப்படுத்தாதீர்கள்”: எச்.ஐ.வி தொற்று உள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறுகிறார்கள்

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கை, எச்.ஐ.வி தொற்று உள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல், அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் அவமானப்படுத்தப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாக கூறுகிறது. இந்த பொதுவிசாரணையில் 100-க்கு மேற்பட்ட எச்.ஐ.வி தொற்று உள்ள மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டார்கள், இவர்களுள் பெரும்பாலானோர் ஆதரவற்ற குழந்தைகள். இவர்கள் தங்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக தேசிய மற்றும் மாநில பொது விசாரணையில் உறுதிபடக் கூறினார்கள்.

தேசிய பொது விசாரணை பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்றது. இதில் குஜராத், ஒரிசா, மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து குழந்தைகள் கலந்து கொண்டு, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் திருமிகு. சாந்த சின்கா மற்றும் சட்ட நிபுணர் குழுவினர் முன் வாக்குமூலம் அளித்தார்கள். இந்த நிபுணர் குழுவில் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திருமிகு.தீபா தீட்சித், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையச் செயலாளர் திருமிகு. லவ் வர்மா, திரைப்பட இயக்குனர் திருமிகு. நந்திதாதாஸ், சமூக செயல்பாட்டாளர் திருமிகு.அஞ்சலி கோபாலன், நாஸ் பவுண்டேசன், ஊட்டச்சத்து நிபுணர் திருமிகு. வீணா சத்ருக்கனா மற்றும் குழந்தைகள் மருத்துவர் சிவானந்தா ஆகியோரும் இருந்தார்கள்.

எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வினித் கூறுகையில், ”எனக்கும், எனது தாயாருக்கும் எச்.ஐ.வி இருக்கிறது. எனது அப்பா இறந்துவிட்டார். எனது பள்ளியில் கடுமையான அவமானத்தை சந்திக்கிறேன். என் பள்ளி ஆசிரியர்கள் எனக்கு சிறப்புப் பாடம் (டியூசன்) எடுக்க மறுத்துவிட்டனர். நான் பயம் மற்றும் பலவீனம் உள்ளவனாக உணர்கிறேன்” என்றார்.

வினீத்தின் எதிர்பார்ப்பு முறையாக நிறைவேற்றப்படாவிடில், படிப்பில் சிறந்த இம்மாணவன் பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிடக்கூடும். விசாரணை அதிகாரிகள், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தினர் பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் உடனடியாக அணுகி, அரசின் ஆணையை விளக்கி, வினீத்தை எந்தவொரு அவமானத்திற்கும் உள்ளாக்காதவாறு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். பள்ளி நிர்வாகம் இந்த வழிகாட்டுதலை மீறினால், உடனடியாக பள்ளியை மூடும்படி உத்தரவிட்டனர்.

சந்திராணி என்ற 6 வயதான ஆதரவற்ற குழந்தைக்கு எச்.ஐ.வி இருக்கிறது. அவள் வயதான தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறாள். அவள் ART யில் பதிவு செய்திருந்த போதும், CD4 என்ற சிகிச்சைக்கான கருவி மருத்துவமனையில் பழுதுபட்டிருப்பதால், இன்னும் அவளால் CD4 சிகிச்சை பெற முடியவில்லை.
சந்திராணி சந்தர்ப்பவாத நோய்களாலும் துன்பப்படுகிறாள். இதனால், பள்ளி, குடும்பம் மற்றும் சமுதாயத்திடமிருந்து கடுமையான அவமானத்திற்கு உட்படுத்தப்படுகிறாள். இது அவளை மகிழ்ச்சியற்றவளாகவும், பலவீனம் உள்ளவளாகவும் உருவாக்கியது. அவளுடைய தாத்தா பாட்டிக்கு அவளைச் சரிவர கவனிக்க இயலாத்தால், ஏதேனும் ஒரு அமைப்பில் சேர்த்துவிட விரும்புகிறார்கள்.பொதுவிசாரணை நடத்திய நிபுணர் குழு, சந்திராணிக்கு CD4 சிகிச்சை மிக விரைவில் கிடைக்க உத்திரவாதப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் உள்ள CD4 சிகிச்சை கருவியின் பழுதை நீக்கவும் தேசிய எட்ய்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (NACO) உத்தரவிட்டது. சந்திராணி உடல்நிலையை பாதுகாக்கவும் மிக விரைவில் ART சிகிச்சையை ஆரம்பிக்கவும் சம்மந்தப்பட்ட மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நிபுணர் குழு உத்தரவிட்ட்து. மிக விரைவில் ஒரு அமைப்பில் இந்த 6 வயது சிறுமியை அனுமதிக்க பரிந்துரை செய்தது.

ஊட்டச்சத்து மிக்க உணவு, நலம் சார்ந்த வசதி வாய்ப்புக்கள், எச். ஐ.வி தொற்றால் குழந்தைகளும், குடும்பமும் பாகுபடுத்தப்படும் நிலை, தனிநபர் உரிமை மீதான அத்துமீறல்கள், பொதுமக்களின் விழிப்புணர்வின்மை ஆகிய கருத்துக்கள் இந்தப் பொதுவிசாரணையில் பேசப்பட்டன. மாநில அரசு அதிகாரிகள், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் (NACO) மற்றும் அதன் மாநிலப் பிரதிநிதிகள், இந்தப் பொதுவிசாரணையில் ஒவ்வொரு புகார்களின் மீதான கலந்துரையாடலையும் மற்றும் விளக்கமளிக்க ஏதுவான நிலையையும் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

Filed under:
2.95575221239
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top