பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / உபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்

உபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திட்டச்சுருக்கம்

காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணார் உபவடி நிலத்தை தட்பவெப்ப நிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டமானது, (Climate Adaptation in Vennar Sub-Basin in Cauvery Delta Project (CAVSCDP)) இந்திய அரசின் 2008- ம் ஆண்டின் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் பற்றிய தேசிய செயல் திட்டத்தையும் (NAPCC) மற்றும் அதன் தேசிய நீர் மிஷன் (NWM) ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணார் உபவடி நிலத்தைச் சேர்ந்த 6 ஆறுகளையும் அந்த 6 ஆறுகளினால் பயன் பெறும் 78,000 ஹெக்டேர் நிலங்களையும், அதன் உள்கட்டமைப்பு முதலீடுகள், நீர் வள மேலாண்மை மற்றும் வெள்ள ஆபத்து குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

திட்டம்

இத்திட்டம் புதிய வடிவமைப்பின் மூலம் பாசன அமைப்பை நவீனமயமாக்கவும், கட்டுமானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மேலாண்மை சார்ந்தும் ஏற்படுத்தபட்டுள்ளது.

இத்திட்டம் நதிகளையும் / கால்வாய்களையும் முறைப்படுத்தி அதன் கரைகளை வலுப்படுத்துவதும், ஆற்றில் படுகையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுவதும், தலைப்பு / குறுக்கு ரெகுலேட்டர்களையும், வடிகால் வெளியேற்ற புனரமைப்பு, பாசன உள்வரத்து மற்றும் வெளியேற்ற புனரமைப்பு முதலியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வெண்ணார் உபவடி நில ஆறுகளான ஹரிச்சந்திராநதி ஆறு, அடப்பார் ஆறு, பாண்டவையார் ஆறு, வெள்ளையார் ஆறு, வளவனார் ஆறு மற்றும் வேதாரண்யம் கால்வாய் ஆகியவற்றை நெறி படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டமானது மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளங்கள் மேம்படுத்திடவும் வெள்ள அபாயங்களையும் வெள்ள நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தி நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டமானது ஹரிச்சந்திராந்தி ஆற்றில் 42.92 கி.மீ., அடப்பார் ஆற்றில் 41.19 கி.மீ., பாண்டவையார் ஆற்றில் 38.75 கி.மீ., வெள்ளையார் ஆற்றில் 46.40 கி.மீ., வளவனார் ஆற்றில் 19.00 கி.மீ. மற்றும் வேதாரண்யம் கால்வாயில் 46.20 கி.மீ. உள்ளடங்கியது. மேலும் இத்திட்டத்தில் ஆற்றில் வண்டல் மண்ணை அகற்றி நதிகளை இயற்கை நிலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு நேரான நீர் அமைப்பின் மூலம் அதாவது வெள்ளையார் நேர் நிலை அமைப்பு நீளம் 4.47 கி.மீ., சக்களியார் வாய்க்கால் நேர் நீர் அமைப்பு நீளம் 6.25 கி.மீ., லாபோர்டு நேர் நீர் அமைப்பு நீளம் 4.35 கி.மீ., அடப்பார் ஆறு நேர் நீர் அமைப்பு நீளம் 6.25 கி.மீ., ஆக 18.31 கி.மீ. தூரத்தை சரிப்படுத்தி வலுப்படுத்த இத்திட்டம் மூலமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளையார் ஆறு, ஹரிச்சந்திராநதி ஆறு, அடப்பார் ஆறு மற்றும் வளவனார் ஆற்றில் நான்கு கடைநிலை ரெகுலேட்டர்ஸ் வைத்து கட்டவும், இதில் புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக 26 நீர் உந்தி நிலையங்கள் அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நிலகையகப்படுத்துதலும் இல்லை.

திட்ட பாதிப்புகள்

இத்திட்டமானது சமூக பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், வாழ்வாதார இடையூறுகளை கட்டடுப்படுத்தும் விதத்திலும் RoW -விற்குள் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நில கையகப்படுத்துதலும் இல்லை. எனினும் இத்திட்டத்திற்காக ஆறு, கால்வாய் மற்றும் வடிகால் கரைகளில் உள்ள அனைத்து வித ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டி உள்ளது. இத்திட்டம் செயல்படுத்த 3,225 தனியார் கட்டிடங்களை நீக்க வேண்டி உள்ளது. இதில் 2,642 குடியிருப்பு கட்டிடங்கள், 349 வணிக கட்டிடங்கள், 129 குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் மற்றும் 115 மாட்டுக்கொட்டகைகளும்/ குடில்களும் அடங்கும். மேலும் 157 பொது உபயோக கட்டிடங்களும் அடங்கும்.

CAVSCDP -க்கான மீள்குடியேற்றக்கொள்கை

இத்திட்டத்திற்கான மீள் குடியேற்றக் கொள்கைகள் கீழ்க்கண்ட கோட்பாடுகளையும் நோக்கங்களையும் அடிப்படையாக கொண்டவை.

 1. விருப்பமில்லா மீள் குடியேற்றம் (IR) மற்றும் எல்லா வாய்ப்புள்ள மாற்று ஏற்பாடுகள் மூலமாக கையாகப்படுத்தல் இல்லாமலும் அல்லது மிகக்குறைந்த அளவிலும்,
 2. எங்கே விருப்பமில்லா மீள் குடியேற்றம் (IR) மற்றும் நிலக்கையகப்படுத்துதல் தவிர்க்க இயலவில்லையோ அங்கே மீள் குடியேற்றம் மற்றும் இழப்பீடு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும்,
 3. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான ஆலோசனைகளை வழங்கி அவர்களை மீள் குடியேற்றம் இழப்பீடு திட்டம் பற்றி செயல்பாடுகளில் பங்கேற்க வைப்பதும்,
 4. பாதிக்கப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உதவுவதும், குறைந்த பட்சம் திட்டத்திற்கு முன்பு இருந்த அவர்களது வாழ்க்கைத்தரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்வதும்
 5. இத்திட்டமானது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும், இடம் பெயர்ந்த ஏழை மற்றும் வேறு வகை பாதிப்புள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வீடுகளை ஏற்பாடு செய்து கொடுத்தும், பாதுகாப்பான நிலத்தையும், சீரான வருமானம் மற்றும் வாழ்க்கை தேவைகளை பூர்த்திசெய்யவும்,
 6. இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் குடியேற்ற நேரத்தில் ஏற்பட கூடிய வேறு இட மாற்றங்களுக்கும் அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பிற்கும் இடையில் உள்ள கால அளவை குறைப்பதற்கும்
 7. இத்திட்டத்தினால் எங்கேங்கு தேவையோ அங்கு நிவாரணமும் மீள் குடியேற்ற மற்றும் மறு குடியமர்வு ஏற்பாடும் கையகப்படுத்தலுக்கு முன்பாக முழுமையாக செய்து கொடுத்திடவும், வருமானவகை உதவிகள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தியவுடன் செயல்படுத்தப்பட்டும் மேற்கூறிய அனைத்தும் இத்திட்டக்கொள்கையாக செயல்படுத்தப்படும்.

பொருந்தும் சட்டம்

The Right to Fair Compensation and Transparency in Land Acquisition Rehabilitation and Resettlement Act, 2013 (RTFCTLARR) என்ற சட்டம் இத்திட்டத்திற்கான நில எடுப்பு, இழப்பீடு அளவிடும் முறை, நில மற்றும் சொத்துக்களுக்கான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்று ஆகியவற்றை விவரிக்கும்.

இச்சட்டமானது அரசாங்க நிலத்தில் வாழும் நிலமற்றோருடைய சொத்துக்களையும், கட்டமைப்புகளையும் கருத்தில் கொள்வதில்லை. எனவே விருப்பமில்லா மீள் குடியேற்றத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பாதுகாப்பு கொள்கை அறிக்கை 2009-யையும் (RTFCTLARR) - யையும் ஒப்பிடுசெய்து புதிதாக ஒரு உரிமை வழங்கல் அட்டவணை தயார்செய்து அதனை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உள்ளது.

தகுதிவரம்பு

இத்திட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகும் இழப்பீடு பெற தகுதி உள்ளவர்களை மூன்று பறந்த பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி உள்ளனர். சட்டபூர்வமான நில உரிமை உள்ளவர்கள் ( இத்திட்டத்தில் நில கையகப்படுத்தும் நிலையில்லை) முறையான உரிமை பத்திரங்கள் இல்லாதவர்கள் ஆனால் யாருடைய கோரிக்கை அங்கீகரிக்கப்படக்கூடிய / தேசிய சட்டங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் . உதாரணம்: பரம்பரியமான முறையில் நிலம் கூட்டாக, பிரிக்கப்படாமல் வைத்து இருப்பவர்களும் ( பழங்குடியினர் போன்றவர்கள்) மற்றும் நில உரிமை இல்லாத மற்றும் மேற்கூறிய இரண்டு பிரிவுகளிலும் சேராதவர்கள் (அரசாங்க நிலத்தில் வசிப்பவர்கள்)

இறுதிநாள்

நில உரிமை இல்லாதவர்கள், புறம்போக்கு நிலத்தில் உள்ளவர்கள், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் இத்திட்டத்திற்க்காக ஒவ்வொரு ஆற்றின் கரைகளிலும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளே இத்திட்டத்தில் அனைவரையும் சேர்த்துக்கொள்ளக்கூடிய இறுதி நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் பாதிப்பு உள்ளாகும் பகுதியில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட அனைவரும் இழப்பீடும் மற்ற சலுகைகள் பெறவும் தகுதியுள்ளவர்கள். இந்த இழப்பீடு இடமாற்றச் செலவு வகையில் கணக்கீடு செய்யப்படும்.

மீள்குடியேற்றத்திட்டம்

 1. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் CAVSCDB-க்காக 6 ஆறுகளின் மீள் குடியேற்ற திட்டத்திற்கான வரையறை வகுக்கப்பட்டுள்ளது. அவை
 2. சுய விருப்பமற்ற மீள்குடியேற்றம்
 3. CAVSCDB-யின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை இந்த சுய விருப்பமற்ற மீள் குடியேற்றத்தில் பயன்படுத்தி தாக்கங்களை குறைக்க செய்தல்.
 4. தாக்க அளவுகளும் அதற்கான தணிக்கை நடவடிக்கைகளும், முன்மொழியப்பட்டுள்ள உரிம அட்டவணை அடிப்படையில் செய்தல்
 5. மேற்கூறிய பாதிப்புக்களும் அதற்கு முறையான மற்றும் பிரயோஜனமான இழப்பீடு மாற்று தொகைகளை முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர்க்க நிறுவன மற்றும் செயல்படுத்தும் ஏற்பாடுகள்
 6. ஆலோசனை நடவடிக்கைகள் செயல்படுத்தி அதனை வெளியிடுதல் இந்த திட்டத்தின் மீள் குடியேற்ற விவரங்களை கீழ் கண்ட இணைய தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். http://www.wrd.tn.gov.in/pdfs/ADBs Resettlement Plan.pdf

நிறுவனரீதியான செயல்பாடு ஏற்பாடுகள்

இந்த மீள் குடியேற்ற திட்டத்திற்கு திட்ட மேலாண்மை குழுவில் உள்ள நிர் ஆதாரத்துறையை சார்ந்த திருச்சி மண்டல அலுவலகத்தில் இருக்கும் உதவி செயற்பொறியாளர் (AEE) SDO - வாக பதவியில் இருப்பார். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த செயற்பொறியாளர்களும் (AEE) திட்ட செயல்பாட்டுக்குழுவின் உறுப்பினர்களாக இருந்து இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்த ஸ்பெசல் வருவாய் குழுவிலும் மற்றும் திட்ட செயல்பாடு ஆலோசகராக உள்ள சமூக முன்னேற்ற சிறப்பு பிரதிநிதி உதவியுடன் மற்றும் அரசு சாரா குழுவுடன் சேர்ந்து செயல்பட்டு இந்த மீள் குடியேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருப்பார்கள்.

குறைதீர்க்கும் குழு

இத்திட்டத்திற்கான குறை தீர்க்கும் அமைப்பு (GRM) சமுதாய, சுற்றுசூழல் பற்றிய மற்றும் திட்டத்தினால் ஏற்படக்கூடிய குறைகளை விசாரிக்க அமைப்பட்டுள்ளது. அவை இந்த மீள் குடியேற்ற திட்டத்தின் கீழ் விவரமாக கொடுக்கப்பட்டடுள்ளது. இதற்கு மூன்று அடுக்கு கொண்ட குறை தீர்க்கும் அமைப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஒரு நேரடி தொடர்பு இடமாக PIU அல்லது PMU இருக்கும் இரண்டாம் அடுக்கு திட்ட அலுவலக அளவிலும் மூன்றாம் அடுக்கு மாவட்ட அலுவலக அளவிலும் இருக்கும். பாதிக்கப்பட்ட நபர் அடுக்கு வாரியாக தொடர்பு கொண்டு அவரவர் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம்.

பிரச்சனைகள் உள்ளவர்கள் ஏற்படுத்தும் கோரிக்கைகளுக்கு PIU அல்லது PMU, எல்லா முயற்சிகளும் எடுத்து விரைவில் தீர்த்து வைக்க கடமைப்பட்டவர்கள் ஆவர்கள். புகார் கொடுக்கப்பட்ட மூன்று தினங்களுக்குள் PIU அல்லது PMU-வால் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர் இரண்டாம் அடுக்கை அவரவர் பிரச்சனையை தீர்க்க தொடர்புகொள்ளலாம்.

இரண்டாம் அடுக்கு GRM திட்ட அலுவலக அளவில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு இரண்டாம் அடுக்கு GRM - மும் குறை தீர்க்கும் கமிட்டியை கொண்டு இருக்கும். அதன் தலைவராக வட்டார வருவாய்த்துறை அலுவர் (RDO) மற்றும் இத்திட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஊரில் பெயர்பெற்ற பொது மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அடங்குவர். இந்த திட்டத்தின் செயற்பொறியாளரும் மற்றும் ஊரில் பெயர்பெற்ற பொது மனிதரும் புகார்களை பெற்று அதனை கமிட்டிக்கு அனுப்பிவைப்பார்கள்.

மூன்றாம் அடுக்கு GRM மாவட்ட அளவில் குறை தீர்க்கும் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரையும் இதன் உறுப்பினர்களாக இத்திட்டத்தின் செயற்பொறியாளர் (EE) மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவர் (DRO) மற்றும் மாவட்ட அளவில் உள்ள அலுவலர்கள் (குறைகளை பொருத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறுபடும்).

நடைமுறைப்படுத்தும் அட்டவணை

இந்த திட்டமானது 2016 - ம் ஆண்டு முதல் 2020 - ம் ஆண்டுக்குள் செயல்படுத்தி முடிக்கப்படும் மேலும் இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் வழங்கும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றவுடன் தொடங்கும். அதற்கும் முன் நடவடிக்கையாக நீர்வள ஆதாரத்துறை (WRD) PMU மற்றும் PIU -வை உருவாக்கி அரசு சாரா நிறுவனத்தை (NGO) பணியில் அமர்த்தி மீள் குடியேற்ற திட்டத்தை புதுப்பிக்கவும் சமூக வளர்ச்சி அலுவலர்களை பணியில் அமர்த்துவார்கள்.

மேற்படி கையகப்படுத்தும் நிலங்களை பகுதி பகுதியாக ஒப்பந்தரார் வசம் ஒப்படைப்பார்கள். எந்த பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லையோ அதை முதல் மைல் கல்லாக ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஒப்படைத்து விடுவார்கள். மீதம் உள்ள பகுதிகளில் எங்கெங்கு ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளார்களோ அங்கு அவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து அவர்களை மறு குடியமர்வு செய்த பிறகு அதனை ஒப்பந்தகாரரிடம் ஒப்படைப்பார்கள். இந்த இரண்டு திட்டங்களும் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே அங்குள்ள மக்கள் வசிக்காத பகுதிகளை ஒப்பந்தகாரர்கள் வசம் கட்டுமான பணிகளுக்காக ஒப்படைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அடப்பாரில் 51% , வெள்ளையாரில் 70%, ஹரிசந்திராவில் 70%, பாண்டவையாரில் 70%, வளவனார் மற்றும் வேதராண்யம் கால்வாயில் 90% பகுதிகளும் எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top