பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / ஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்

மின்சக்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் பிற அம்சங்கள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.

ஒரு கிராமம் எப்பொழுது மின்சக்தியை பெற்ற கிராமம் என அழைக்கப்படும்

1997 அக்டோபர்க்கு முன்

எந்த நோக்கத்திற்காகவும் அக்கிராமத்தின் வருவாய் பகுதிக்குள் பயன்படுத்தினால் அது மின் இனைப்பை பெற்ற கிராமமாகும்.

1997 அக்டோபர்க்கு பின்

எந்த நோக்கத்திற்காகவும் அக்கிராமத்தின் வருவாய் பகுதிக்குள் வசிப்பிடத்தில் பயன்படுத்தப்பட்டால் அது மின் இனைப்பை பெற்ற கிராமமாககருத்ப்படும்.

2004-2005 ல் நடைமுறைக்கு வந்த கிராம மின்சாரத்திற்கான புதிய வரையறை

(பிப்ரவரி 2004ல் மின்சார அமைச்சகத்தின் ஒப்புதல் கடித்ததின் படி ,கடித என்: 42/1/2001-டி(ஆர்.ஈ) 17 பிப்ரவரி 2004ல் முன்அனுப்பப்பட்ட கடிதத்தின் திருத்தத்திற்கு மறுமுறை அனுப்பிய கடிதம் என் :42/1/2001-டி(ஆர்.ஈ)

 1. புதிய வரையறைப்படி மின்சாரம் விநியோகிக்கும் டிரான்பார்மர் மற்றும் விநியோகம் செய்வதற்கான இணைப்புகள் ஆகியவை உள்ளூர் வசிப்பிடங்களில் இருத்தல் வேண்டும்.இதில் குக்கிராமமும் இந்த வரையறைக்கு உட்பட்டது ஆகும்.
 2. பொதுஇடங்களான பள்ளிகள், பஞ்சாயத்துஅலுவலகம், சமூக மையங்கள் மற்றும் சுகாதார மையங்கள் ஆகியவற்றிற்கு அளித்திருக்கவேண்டும்.
 3. கிராமத்தின் ஒட்டுமொத்த தொகையில் 10 % சதவிகித வீடுகளாவது மிண்இனைப்பு பெற்றதாக இருக்கவேண்டும்.

மூலம் : மின்சாரஅமைச்சகம்

தேசிய மின்சாரக் கொள்கை 2005

தேசிய மின்சாரக் கொள்கை, கீழ்க்கண்ட நோக்கங்களை அடைவதை இலக்காக கொண்டுள்ளது.

 • மின்சாரம் எளிதில் கிடைத்தல் - எல்லா குடியிருப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரம் கிடைக்கச் செய்தல்
 • ஆற்றல் கிடைத்தல் - 2012 ஆம் ஆண்டுக்குள், அற்றல் தேவையை முழுவதும் அடைய வழிவகை செய்தல். அதிக தேவை நேரத்தில் ஆற்றல் பற்றாக்குறையை போக்கி, உபரி ஆற்றல் இருக்க வழிவகை செய்தல்
 • நம்பகமாகவும், தரமாகவும் குறிப்பிட்ட தர நிர்ணயத்தில் ஆற்றலை முறையாக, நியாயமான விலைக்கு வழங்குதல்
 • 2012 ஆம் ஆண்டிற்குள், ஒரு தனி நபருக்கு கிடைக்கக்கூடிய மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டுகள் என்ற அளவுக்கு அதிகரித்தல்.
 • 2012 ஆண்டில், மின்சார உபயோகம், ஒரு நாளில், ஒரு வீட்டுக்கு, ஒரு யூனிட் என்ற அளவில் அரசாங்க சலுகையாக வழங்குதல்
 • நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாத்தல்

மூலம்: http://mnre.gov.in//

தேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006

முக்கிய சுருக்கம்
இதன் நோக்கங்கள் ஆவது;

 • 2009-க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
 • நியாயமான விலையில், தரமான மற்றும் இடர்பாடு அற்ற மின்சார விநியோகம்
 • 2012-க்குள் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு யூனிட் என்ற விகிதம் மின்சார விநியோகம்

எந்த கிராமங்களில் அல்லது குடியிருப்புகளில் மின் கட்டமைப்பு வசதி இல்லையோ, அந்த பகுதிகளுக்கு, தனித்து இயங்கும் எரிசக்தி ஆற்றல் கொண்டு மின்சாரம் வழங்கப்படும். இவைகளும் சாத்தியம் இல்லாத நிலையில், சூரிய ஒளி மின் அமைப்புகள் உபயோகிக்கப்படும். இருப்பினும் இப்படிப்பட்ட தொலைதூர கிராமங்கள் மின்சாரமயமாக்கப்பட்டது என கருதப்படமாட்டாது.

மாநில அரசானது, 6 மாதத்திற்குள் ஊரக மின்மயமாக்கல் திட்டத்தை, தகுந்த வரைபடத்துடனும், விரிவாக மின்சார விநியோக முறையுடனும் தயாரித்து அறிவிக்க வேண்டும். இந்த திட்டங்கள் மாவட்ட மேம்பாட்டு திட்டத்துடன் இணைத்தும், ஒருங்கிணைக்கவும் பட வேண்டும். இந்த திட்டத்தை, அதற்குரிய இயக்கத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

கிராமங்கள் மின்சாரமயமாக்கப்பட்ட தகுதி பெற்றவுடன், கிராம பஞ்சாயத்து, முதல் சான்றிதழை அளிக்கும். பின்னர், மின்சாரமயமாக்கப்பட்ட கிராமங்களின் கிராம பஞ்சாயத்து 31 மார்ச் முடிவில், ஒவ்வொரு வருடமும் சான்றை அளிக்கும்.

மாநில அரசானது, ஜில்லா பஞ்சாயத்து தலைவரை, தலைவராக கொண்ட குழுவை மாவட்ட அளவில், 3 மாதத்திற்குள அமைக்க வேண்டும். இதில் மாவட்ட அளவிலான நிறுவனங்கள், நுகர்வோர் குழுமம், முக்கிய பயனாளிகள் மற்றும் போதுமான மகளிர் பிரதிநிதிகள இடம் பெறுவர்.

இந்த மாவட்ட குழு மின்சாரமயமாக்கலை ஒருங்கிணைப்பது, மேலும் விரிவுபடுத்துவது, நுகர்வோர் திருப்தி போன்றவற்றை கண்காணிக்கும்.

கிராம மின்மயமாக்கல் மேற்பார்வை மற்றும் ஆலோசனை வழங்குதலை  பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும்.

புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆற்றல் சார்ந்த மின்சார அமைப்புகளில், திடீர் பழுது ஏற்படும் போது மின்சார விநியோகம், மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை மாநில அரசு கவனித்து கொள்ள வேண்டும்.

மூலம் : http://mnre.gov.in/

தொலைதூரக் கிராமங்களை மின்சாரமயமாக்கும் திட்டம்

இந்த திட்டத்தின் நோக்கமானது, மரபுசாரா ஆற்றல் வளங்களான சூரியசக்தி, நீர் ஆற்றல், காற்று சக்தி ஆகியவற்றைக் கொண்டு தொலைதூரக் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை மின்சாரமயமாக்குதல் ஆகும்.

இத்திட்டத்தினால் மின்சார வசதி இல்லாத  கிராமங்களை மற்றும் குக்கிராமங்களை மின்சாரமயமாக்குவதன் மூலம், நாட்டின் மிகவும் பிற்படுத்தப்பட்ட  மற்றும் சலுகை வழங்கப்படாத பகுதிகளில் வாழ் மக்களுக்கு, மின்சாரத்தின் பயனை எடுத்துச் செல்ல முடியும்.

நோக்கம்

இத்திட்டத்தின் கீழ் வருவன;

 • 2007-க்குள் கணக்கிடப்பட்ட மின்சாரமயமாக்கப்படாத  தொலைதூர கிராமங்களை மின்சாரமயமாக்குதல்
 • 2012-க்குள் கணக்கிடப்பட்ட மின்சாரமயமாக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குக்கிராமங்களை மின்சாரமயமாக்குதல்
 • 2012-க்குள், கணக்கிடப்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள வீடுகளை மின்சாரமயமாக்குதல்

மரபு சார்ந்த மின்சாரம் மூலம், பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவிற்குள் (2012) மின்சாரமயமாக்கபடாமல், அந்த பகுதியின் மின்சார துறையாலோ, அல்லது மாநில மின்வாரியத்தாலோ சான்றளிக்கப்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் மின்சார மயமாக்கப்பட்ட  கிராமத்தின் மின்சார மயமாக்கப்படாத குக்கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ்வரும்.

இத்திட்டத்திற்கான மத்திய நிதியுதவி

புதுப்பிக்கவல்ல ஆற்றலை உற்பத்தி செய்யவல்ல அனைத்து கருவிகளுக்கு, அதன் விலையில் 90% மானியத்தை (உச்சவரம்புக்கு உட்பட்டது) மத்திய அமைச்சகம் அளிக்கிறது. மேலும், ஊக்குவிப்பு தொகை மற்றும் சேவைக்கான தொகைகளை, மாநிலத்தின் நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தை செயல்படுத்த அளிக்கிறது.

மூலம் : http://mnre.gov.in/

இராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா (RGGVY)

 • RGGVY திட்டமானது, நடப்பில் உள்ள அனைத்து திட்டங்களையும் இணைத்து, ஏப்ரல் 2005ல் தொடங்கப்பட்டது.
 • இந்த திட்டத்தில், 70% நிதியுதவியை இந்திய அரசும், 10%- ஐ கிராமப்புற மின்மயமாக்கல் கழகமும் (REC), கடனாக மாநில அரசுக்கு அளிக்கும்.
 • கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் இந்த திட்டத்தின் முக்கிய நிறுவனம் ஆகும்.
கிராம மின்சாரமயமாக்கம் என்றால் என்ன?
 • ஒரு கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருக்கும் குக்கிராமங்களிலும், அடிப்படை கட்டமைப்புகளான விநியோக மின் மாற்றி மற்றும் விநியோக மின்சார கம்பி ஆகியன, அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள், சுகாதார மையங்கள், மருந்தகங்கள், சமுதாய மையங்கள் போன்ற பொது இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்
 • கிராமத்தின் மொத்த வீடுகளில் 10% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேற்கூறிய வசதிகள் இருக்கும் கிராமமே மின்சாரமயமாக்கப்பட்ட கிராமமாகும்

RGGVY-ன் நோக்கங்களாவன

 • மேற்கூறியவாறு கிராமப்புறங்களையும் மற்றும் குடியேற்றங்களை மின்சாரமயமாக்குதல்
 • அனைத்து கிராமப்புற இல்லங்களும் மின்சாரத்தை பயன்படுத்துதல்
 • வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக மின்சாரம் வழங்குதல்
RGGVY -ன் உள்கட்டமைப்பு
 • கிராம மின்சார வினியோக அடிப்படை (REDB) யின் கீழ் மின்சார துணை மின் நிலையம் இல்லாத எல்லா வட்டங்களுக்கும், 33/11 KV அல்லது 66/11 KV திறன் கொண்ட மின்சார துணை மின் நிலையம் அமைத்தல்
 • எல்லா கிராமங்களுக்கும் அல்லது மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் போதுமான திறன் கொண்ட விநியோக மின்மாற்றியினை கிராம மின்சார மயமாக்கும் கட்டமைப்பின்  கீழ் வழங்குதல்
 • மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா சக்திகளிலிருந்து எங்கெங்கு கிரிட் மூலம் மின்சார விநியோகம் சாத்தியம் இல்லையோ அங்கு மின்சாரம் அளித்தல்
RGGVY திட்டம் நிறைவேற்றும் முறை மற்றும் நிபந்தனைகள்
 • நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான, விரிவான திட்டறிக்கை தயாரித்தல்
 • மத்திய மின் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
 • மின்சார மயமாக்கப்பட்ட கிராமத்திற்கு அதற்குரிய கிராம பஞ்சாயத்திடமிருந்து சான்று பெறுதல்
 • சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கும் மற்றும் மின் இழப்பினை குறைப்பதற்கும், கிராமப்புற விநியோக மேலாண்மைக்கும் நிறுவனங்களை நியமித்தல்
 • RGGVY திட்டத்திற்குள் வரும் கிராமங்களுக்கு, குறைந்தபட்சம் 6-8 மணி நேரமாவது மின்சாரம் வழங்குவதற்கு மாநில அரசுகளிடமிருந்து ஒப்புதல் பெறுதல்.
 • மாநில அரசிடமிருந்து போதுமான மானியம் கிடைக்கப் பெறுதல்
 • 11வது 5வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்வரும் திட்டங்களுக்கு 3 அடுக்கு தர கண்காணிப்பு அமைத்தலை கட்டாயமாக்குதல்
 • திட்டத்தின் முன்னேற்றத்தினை வலைத்தளம் மூலம் கண்காணித்தல்.
 • முன்திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்பட்ட  திட்டங்களுக்கு நிதி வழங்குதல்
 • ஒப்பந்தகாரர் வரை நிதியை மின்னணு நிதி மாற்றல் மூலம் அளித்தல்.
 • மாநில அரசு மூலம் கிராம மின்சார மயமாக்கும் திட்டங்களை மக்களுக்கு தெரிவித்தல்.

ஜனத்தொகை 100க்கும் மேல் உள்ள குடியேற்றப்பகுதிகள் இத்திட்டத்தின் கீழ் வரும். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 49,383 கிராமங்களை மின்சார மயமாக்கவும், 162 லட்ச மின் இணைப்புகளை தருவதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 327 திட்டங்களுக்கு 16,268 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு, டெல்லி, கோவா, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி  RGGVY  திட்டத்தில் பங்கு பெறவில்லை.

மேலும் தகவலுக்கு, http://rggvy.gov.in/rggvy/rggvyportal/index.html என்ற தொடர்பை பார்க்கவும்

3.046875
ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 06, 2018 06:33 AM

மன்வாரியத்தில் மின்சாரம் பற்றாக்குறை என்பதை விட மின்பணியாளர்கள் பற்றாக்குறை என்பதே நிதர்சன உண்மை ஏன் வாரியம் இதை கண்டு கொள்வது இல்லை,இதையும் அரசின் கொள்கை முடிவு என புறம் தள்ளி விடவேண்டாம்,நிர்வாக வசதிக்காக அலுவலகத்தை பிரிக்கும் நம் அரசு ஆட்களை போடாமல் இருப்பது எப்படி என்றால் கோவிலை கட்டி வைத்துவிட்டு சாமியை பக்கத்து கோவிலில் இருக்கும் சாமியை போய் கூம்பிடுங்கள் என சட்டம் போட்ட கதையாகி விட்டது,இனியாவது படித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பட்டாதாரிகளையும், அதற்கான படிப்பை படித்தவர்களுக்கும் வேலையை கொடுக்க பணிகள் தொய்வின்றி நடக்க ஆவன செய்யுபடி பதித்திருக்கும் மமாணாக்கள் சார்பாகவும், ஆட்கள் பற்றாக்குறையால் பாதித்த மக்களின் சார்பில் வேண்டுகிறேன் By. ஈசநத்தம் .R, செல்வராஜ் கைபேசி எண்: 94*****25

ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 06, 2018 06:28 AM

திட்டங்கள் பற்றிய ஆய்வுகள், திட்டம் உருவாக்கம் நிகழ்வுக்கு ஆர்வர்களையும் உடன் சேர்த்தி.கொள்ள வேண்டுகிறேன்

ஈசநத்தம் R . செல்வராஜ் Mar 06, 2018 06:20 AM

விவசாயத்திற்கான மின்சார இணைப்புத்தான் வெகு காலமாக காத்திருக்க வேண்டியதுல்லது, அதற்கு துரித நடவடிக்கை எடுத்து ஏழை விவசாயிகளும் பயனடையும் வகையில் திட்டங்களை கொண்டு வரவேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top