பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)

ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS) பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,354 கோடி உட்பட மொத்தம் ரூ.32,612 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தை (IPDS) செயல்படுத்த 2014 நவம்பர் 20-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது செயல்பட்டு வரும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள்

  • நகர்ப்புறங்களில் துணை மின்கடத்துதல் மற்றும் விநியோக வசதிகளை பலப்படுத்துதல்.
  • நகர்ப்புறங்களில் நுகர்வோர் இணைப்புகளில் மட்டுமின்றி, விநியோக டிரான்ஸ்பார்மர்கள், ஃபீடர்களிலும் மின்சாரத்தை அளவிடுதல்.
  • மின் விநியோகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விரைவு எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தில் (R-APDRP) செயல்படுத்தப்பட்டு வரும் விநியோக வசதிகளை பலப்படுத்துவது.
  • மின் விநியோக நிறுவனங்கள், மாநில அரசுகளுடன் இணைந்து 12-வது மற்றும் 13-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் தடையற்ற, போதுமான மின்சாரம் வழங்கப்படும்.
  • இத்திட்டத்தை செயல்படுத்துவதால் ஒட்டுமொத்த, தொழில்நுட்ப, வர்த்தக செலவுகள் குறையும். கணக்கு மற்றும் கணக்குத் தணிக்கையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மீட்டர் அடிப்படையில் பணம் வசூலிக்கும் சேவை, பண வசூல் செயல்திறன் மேம்படுத்தப்படும்.
  • இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 2014-15: ரூ.645.26 கோடி (மறுசீரமைப்புத் திட்டம்: ரூ.595.25 கோடி + ஒருங்கிணைந்த திட்டம்: ரூ.50 கோடி) 2015-16: ரூ.6000 கோடி

ஆதாரம் : http://www.pib.nic.in/

2.8064516129
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top