பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்

கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் (Sea Turtle – Conservation Program) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நமது பூகோள அமைப்பில் பூமியின் பெரும் பகுதி நீரினால் சூழ்ந்து மூன்றில் ஒரு பகுதியே நிலப்பரப்பாக அமைந்துள்ளது. நிலபரப்பில் காணப்படும் பலவகையான உயிரினங்களை பொதுமக்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்தும், அதன் பாதுகாப்பு அவசியத்தை உணர்ந்து வருகின்றனர். ஆனால் கடலில் காணப்படும் உயிரினங்களை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என உணரமுடிகிறது.

அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் செயல்பட்டு வரும் கடல் ஆமை பாதுகாப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது. கடலோர மாவட்ட மக்களிடையே மட்டும் இருந்த இந்த எழுச்சி தற்போது மாநிலம் முழுவதும் காணமுடிகிறது. இதற்கு வனத்துறையினரும் தனியார் தொண்டு நிருவனத்தினரும் தொடர்ந்து எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையே காரணமாகிறது.

தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் மற்றும் கடலில் வாழும் ஆமைகள் மீனவ மக்களுக்கு குலதெய்வம் என்றே கூறலாம். ஏனெனில் தங்களின் மின்பிடி சதவிகிதம் அதிகரிக்க ஆமைகள் வலசை போகும் வழியை நம்பி செயல்படுகிறனர்.

இதனால் அதிக அளவில் மீன் கிடைப்பதால்,  ஆமைகள் தங்கள் வாழ்க்கையை உயர்த்தி வளம் சேர்க்கும் தெய்வமாக கருதுகிறார்கள். இந்த நிதர்சனமான உண்மையை அறிந்துதான், இலக்கியங்களும், நமது கலாச்சாரமும் கடல் ஆமையினங்களுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கோவில்கள், மக்கள் ஒன்று சேரும் சுற்றுலாதளங்கலில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு கடல் ஆமைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

சமீபகாலமாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மீன்பிடி சாதனங்களை விஞ்ஞானபூர்வமாக (Scientific approach) வடிவமைத்துள்ளனர். மீனவர்கள் மீன்களினால் வருமானம் பெருகும் என்றாலும் தங்கள் அசாத்தியமான வலைகளின் வடிவமைப்பு கடல் ஆமைகள் இறப்பதற்கு காரணமகின்றன என்பதையறிந்து அரசு எடுக்கும் கடல் ஆமைகள் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

ஆமைகளின் வகைகள்

 1. பங்குனி ஆமை - Olive Ridley Turtle
 2. அலுங்காமை - Hawksbill Turtle
 3. பெருந்தலை ஆமை - Loggerhead Turtle
 4. ஏழுவரி ஆமை  (or)  தோனி ஆமை - Leather back Turtle
 5. ஒங்கில் ஆமை - Green Turtle
 6. கெம்பஸ்ரிட்லி - Kemp’s Ridley
 7. தட்டைமுதுகு ஆமை - Flat back Turtle

ஆமைகளின் அதிசய குணங்கள்

 1. நமது கோவில் சிற்பங்கள் ஆமைகளை வாகனங்களாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
 2. நூறு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் அதிசய உயிரினம்ஆகும்
 3. தண்ணீரில் எளிதாக நீந்தும் வண்ணமுள்ள துடுப்பு போன்ற சாதனங்கள் அதிசயமானது.
 4. ஆபத்து நேரங்களில் எதிரியிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளகூடிய உயர்ந்த பண்பை உடையது.
 5. இனவிருத்திக்காக பல ஆயிரம் மையில்கள் நீந்திவரும் குணமுடையது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரிசா கடற்கரைக்கு முட்டையிட வருகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளன.
 6. ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட்ட அதே இடத்திற்கு மீண்டும் வரும் அதிசய குணம்.
 7. முட்டையிலிருந்து வெளிவந்த சிறு குஞ்சுகளும் (Instinctive behavior – பிறவிக் குணத்தை கொண்டு) தனித்தனியாக கடலிற்கு சென்று பல உயிரினங்களிடமிருந்து தன்னை பாதுகாத்து தப்பித்து வாழும் சிறப்பு குணமுடையது.

ஆமைகளைப் பற்றிய ஆராய்ச்சி (Sea Turtle Research Organization)

இந்தியாவில், உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள W.I.I. என்ற நிறுவனத்தினரால் செயற்கைக்கோள் உதவியுடன் ஆமைகளை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஆமைகள் வலசைபோகுதல், ஆமைகள் செயல்பாடு, இனப்பெருக்கம், பழக்கவழக்கம், வலசைபோதலில் ஏற்படும் இடற்பாடுகள், இனப்பெருக்கம் செய்ய தேர்வு செய்யும் இடம், இனப்பெருக்க காலங்களில் பெண் ஆமையின் கடுமையான முயற்சி போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பற்றி ஆய்வு மேற்க்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள கடல் உயிரினங்கள் பாதுகாப்புத் திட்ட அலுவலகங்கள் பட்டியல் கிழே கொடுக்கப்படுள்ளது.

 1. வன உயிரினக் கோட்டம், சென்னை
 2. வளைகுடா உயிர்கோளகாப்பக அறக்கட்டளை – இராமநாதபுரம்
 3. தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் – தூத்துக்குடி
 4. சென்னை முதலைப் பண்ணை நிறுவனம் – மகாபலிபுரம், சென்னை
 5. மாணவர்கள் ஆமைகள் பாதுகாப்பு நிறுவனம் – கோட்டூர்புரம், சென்னை
 6. ‘’ட்ரீ’’ தொண்டு நிறுவனம்  (Tree Foundation) - சென்னை

ஆதாரம் : தமிழ்நாடு வனத்துறை, பல்லுயிர் மற்றும் பசுமையாக்கல் திட்டம்

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top