பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

ஆற்றுவடிநிலப் பகுதியில் சுற்றுச்சூழல் (தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆற்று நீர் படுகை

ஆற்று நீர் படுகை ஒரு பிரம்மிப்பான அமைப்பைக் கொண்டது, இந்நீரானது அணைகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய நீர் பிடிப்பு வழியாக முகத்துவாரங்களை அடைந்து பிறகு கடலில் கலக்கிறது. சரிவுகளில் விழும் அனைத்து மழைநீரும் ஆவியாகவோ நிலத்துடன் இணைந்தோ பல்வேறு இயற்கை மாற்றங்களுக்குட்பட்டு தாவரங்கள் மற்றும் பிற உயிரனங்களுக்குப் பயன்படுகின்றன. இந்நீரானது இறுதியில் ஆறுகளையே சென்றடைகிறது. எனவே ஆற்றுநீர் படுகை மனித வாழ்வுக்கு ஒரு இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளதை அறியலாம்.

நீர் நம் வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. இவ்வுலகில் உள்ள நீரில் 97.5 சதவிகிதம் உப்புநீராக கடலிலும் 2 சதவிகிதம் பனிக்கட்டிகளாகவும் எஞ்சியுள்ள 0.5 சதவிகிதம் நீர் நதிகளிலும் ஏரிகளிலும் மற்றும் நிலத்தடி நீர் போன்றவற்றிலும் நமது தேவைகளுக்கு நன்னீராக பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் 17 நீர்படுகைகள் உள்ளன. இவைகளிலிருந்து 75 சதவிகிதம் விவசாயத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. நாம் தேக்கியுள்ள நீரில் 30 சதவிகிதம் கால்வாய் மூலமாகவும், 21 சதவிகிதம் குளங்கள் மூலமாகவும் 49 சதவிகிதம் கிணறுகள் மூலமாகவும், எஞ்சியுள்ள பகுதிகள் நீரோடைகள் மற்றும் நீரூற்றுகள் ஆகிய ஆதாரங்கள் வழியாக பாசனம் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 5.5 மில்லியன் ஹெக்டர் நிலத்தில் 46 சதவிகித நிலம் நேரடி மழையை நம்பியே உள்ளது (வானம் பார்த்த பூமி) இதில் 25 சதவிகிதம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

தமிழக நதிநீர் படுகையை ஒட்டியுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்

 • கடல்நீர் ஊடுருவுவதால் நிலத்தடி நீர் வளம் குறைகிறது.
 • ஆற்றுப்பகுதியில் அதிக மணல் எடுத்தல்
 • கழிமுக பகுதிகளில் வண்டல் மண் படிவு அதிகரித்தல் மற்றும் தூர் வாராமை
 • களைச்செடிகள் வளர்த்தல்
 • நிலத்தடி நீரை அதிக அளவு பயன்படுத்துதல்
 • குப்பையை ஆற்றில் கொட்டுதல்
 • வீடு மற்றும் இதர நகரக்கழிவுகள் ஆற்றில் கலப்பு
 • தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலப்பு
 • கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் இல்லாமை

சமூகப் பிரச்சனைகள்

 • ஆக்கிரமிப்புகள்
 • குடிநீர் மாசுபடுதல்
 • சுகாதாரமின்மை (தோல் ஒவ்வாமை, கொசு இனப்பெருக்கம், யானைக்கால் நோய்)
 • கண்டறியப்படாத புதிய நோய்களால் கால்நடைகள் எண்ணிக்கை குறைவு
 • திடக்கழிவு குறைத்தல் பற்றிய விழிப்புணர்வின்மை மற்றும் கல்வியறிவின்மை

ஆறு மாசுபடுதலின் முக்கிய காரணங்கள்

குப்பைகள்

தொழிற்கழிவுகள்

சாக்கடைக்கழிவுகள்

விவசாயத்தினால் ஏற்படும் மாசு

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளினால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களைச்சுற்றி அதிக மழை பொழியும் போது அந்நிலங்களிலுள்ள இரசாயன பொருட்கள் நீரில் கரைந்து சுற்றியுள்ள நீரை மாசுபடுத்தி ஆறுகளையும் மாசுப்படுத்துகிறது.

தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றம்

தமிழ்நாட்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஆறு லட்சம் லிட்டர் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில் 85 விழுக்காடு பெரிய தொழிற்சாலைகளால் உருவாக்கப்படுகிறது. சுமார் 400 யூனிட் அளவு கழிவுகள் ஆறுகளில் கலக்கப்படுகிறது. ஈரோடு, வேலூர், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 1000 தோல் தொழிற்சாலைகள், கழிவுகளை பாலாற்றில் வெளியேற்றி மாசுபடுத்தி உள்ளது. திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அப்பட்டறையைச் சுற்றியுள்ள நீர்வளத்தை கெடுத்த்தோடல்லாமல் நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளும் மாசடைந்துள்ளது.

நீர் மாசடைவதால் விளைவுகள்

நீர் மாசுபாடு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இப்புவியிலுள்ள தாவரம் மற்றும் விலங்கினங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் குடிநீர் மாசுபாடு ஏற்படுகிறது. விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் மீன் போன்ற உயிரினங்கள் வாழ முடியாமல் இனப்பெருக்கம் குறைகிறது. தனிப்பட்ட மற்றும் சமுதாய அளவில் மாசுபடுதலை குறைக்க கழிவின் அளவை குறைக்கும் நவீன மேலாண்மை யுக்திகளை பயன்படுத்தி மாசுபடுதலை தடுக்க வேண்டும்.

ஆறு மாசுபடுதலை தடுக்கும் வழிகள்

 • பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை ஆற்றில் கொட்டாமல் இருத்தல்
 • மரம் வளர்த்தல்
 • தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலக்காமல் தொழிற்சாலைகளே பயன்படுத்திய நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.
 • நீரின் தூயமையைக் கெடுக்கும்படியான செயல்பாடுகளை தவிர்ப்பது குடிநீர் ஆதாரத்திற்கு நல்லது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைநீர் சேகரிப்பு

இந்திய நகரங்களில் வீடுகள் நடைபாதைகள் சாலைகள் அதிகமுள்ளதால் மழைநீர் நிலத்தடியில் ஊற வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் மழைநீர் எளிதில் அருகிலுள்ள ஆற்றை சென்றடைந்து நிலத்தடி நீர் ஊற வகை செய்கிறது. இன்றைய காலத்தில் நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முக்கியமாக பின்பற்றப்படுகிறது. தற்போது கட்டிடங்களை சுற்றி மழைநீர் சேமிப்பதன்மூலம் மழைநீர் எளிதில் பூமியில் ஊடுருவி நிலத்தடி நீர் அளவு அதிகரித்துள்ளது.

மழைநீர் சேமிப்பின் பலன்கள்

 • நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தல்
 • நீர் பற்றாக்குறை குறைதல்
 • நீரிலுள்ள ப்ளூரைடு, நைட்ரைட், உப்பின் அளவு குறைந்து நீரின் தரம் உயர்கிறது.
 • மண்ணரிப்பு, வெள்ளம் ஆகியவை தடுக்கப்படுகிறது
 • கட்டிடங்களை சுற்றி மழைநீர் சேமிப்பதின் மூலம் கட்டிட விரிசல்கள் குறைகிறது.

மறுசுழற்சி, மறுபயன்பாடு

பல்வேறு பொருட்களில் இருந்து வெளிப்படும் கழிவுகளை நாம் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதன் மூலம் குப்பையின் அளவு குறைகிறது. இத்துடன் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படுகிறது.

நன்மைகள்

 • புதிய மூலப் பொருட்களின் பயன்பாடு குறைதல்
 • வெளிப்படும் கழிவுகளின் அளவு குறைகிறது
 • பணம் சேமிக்கப்படுகிறது
 • சுற்றுச்சூழல் மேம்படுகிறது

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் என்பது நம் இந்தியாவின் பண்டைய காலம் தொட்டே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கட்கூடிய கழிவுகளை (விவசாய கழிவுகள், விலங்கு கழிவுகள், சாணம்) பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்கிறோம். இது மகசூலை பெருக்க உதவுகிறது. இயற்கை உரத்தால் பெறப்படும் உணவு பொருட்கள் சத்து மிக்க உடல் நலத்திற்கு உகந்த உணவாகும்.

மண்புழு உரம் மற்றும் பயன்பாடு

மண்புழுக்களால் வெளியேற்றப்படும் கழிவுகள் பயிர்களுக்கு ஊட்டச்சத்து தருகிறது. அதிக மண்புழுக்களை தொட்டிகளில் சேகரித்து நன்முறையில் 45 நாட்கள் பராமரித்து சத்துள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம்.

நன்மைகள்

 • வீரியமிக்க தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது
 • துர்நாற்றம் இல்லாத இவ்வுரம் எளிதில் கையாள்வதற்கு உகந்தது.
 • இந்த உரத்தினால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு மண்ணின் காற்றோட்டம், நீரோட்டம், நீர் உறிஞ்சும் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சி அதிகரிகப்படுகிறது.

மரம் வளர்ப்பின் அவசியம்

தட்பவெப்ப நிலையும் காடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இவை இயற்கை சூழலை சமன்படுத்துகிறது. மரம் வளர்ப்பதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். எனவே, நாம் அனைவரும் சொல்வதோடு மட்டுமல்லாமல் நேரடியாக செயலில் இறங்கி மரக்கன்றை நட்டு பராமரிக்க வேண்டும்.

நன்மைகள்

 • மண் அரிப்பை தடுக்கிறது
 • மண் வளம் மேம்படுகிறது
 • தட்பவெப்ப நிலையை சமன்படுத்துகிறது
 • அவ்விடத்திற்குரிய தாவரம் மற்றும் விலங்குகளை பாதுகாக்கிறது
 • காற்று மற்றும் ஒலி மாசினை குறைக்கிறது
 • பல்வேறு விலங்குகளுக்கு உறைவிடமாக உள்ளது
 • அதிக மழை பொழிவுக்கு காரணமாக அமைகிறது
 • நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கிறது

புகையிலை பயன்பாட்டின் தீமைகள்

உலகில் புகையிலை உபயோகிக்கும் பழக்கம் அதிக அளவில் பரவிக்கொண்டே வருகின்றது. இந்த புகையிலை பழக்கத்தால் மனிதனுக்கு புற்றுநோய், இருதயப்பிரச்சனைகள், வாதம், நீரிழிவு நோய், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பதால் கர்ப்ப்ப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுவாசக்கோளாறுகள், ஆஸ்த்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது 2030 ஆண்டில் 10 மில்லியனாக உயர வாய்ப்புள்ளாதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க புகையிலைப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி புகையில்லா சூழலை உருவாக்க வேண்டும்.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.93181818182
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top