பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்

மாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம் பற்றிய குறிப்புகளை இங்கு காணலாம்

முகவுரை

1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய வனக் கொள்கையானது, உயிரின வாழ்க்கை சூழலின் சமநிலை பராமரிக்கப்படுவதையும் சுற்றுச்சூழலின் நிலைத் தன்மை உறுதி செய்யப்படுவதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இது அனைத்து வாழ்வினங்கள், மனிதன், விலங்கு மற்றும் தாவர வகைகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக விளங்குவதோடு, இந்த முதன்மை நோக்கத்திற்கு அடுத்தபடியாக, வனங்களிலிருந்து நேரடியாக பொருளாதாரப் பயன்களைப் பெறுவதற்கு வகை செய்கிறது. மேற்சொன்ன இந்த கொள்கையானது, மொத்த நிலப்பரப்பில், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பிலேனும், மொத்தமுள்ள மலைப்பகுதியில் பரப்பில் குறைந்தது மூன்றில் இரு பங்கு நிலப்பரப்பிலேனும், மரங்களை வளர்த்து வனப்பகுதியை ஏற்படுத்துவதன் வாயிலாக, மேற்சொன்ன நோக்கத்தை எய்த விழைகிறது.

தமிழ்நாடு அரசு, 2014-ஆம் ஆண்டில், உட்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான உத்தி சார்ந்த திட்டத்துடன் கூடிய தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. "பாரம்பரியச் சிறப்பினை பேணி வளர்ப்பதும்” “உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதும்" தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகும். இது ஏனையவற்றுடன், வனப்பரப்பினை அதிகரிப்பது, நன்செய் நிலங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளைப் பாதுகாப்பது, கடலோர மண்டலங்கள் மற்றும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் விலங்கியல் மற்றும் தாவரவியல் இனங்களின் பல்வேறு வகைப்பாட்டுத் தொகுதியைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட புவியியல், தட்பவெப்பம், உயிரின வாழ்க்கைச் சூழல், மக்கள் தொகை ஆகியவை பின்வருவனவற்றின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது

நீண்ட நெடுங் கடலோரப்பகுதி கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்திருப்பது மற்றும் அவற்றின் சங்கமம். அதனால் ஏற்படுகிற விளைபயன். நீர்பிடிப்புப் பகுதிகளில் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் வறண்ட பருவ நிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியிலும், மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க வேண்டிய அவசியம், வனப்பகுதியின் குறைந்தளவு நபர் வாரி வனப்பரப்பு ஆகியன இம்மாநிலத்திற்கு தனித்த வனக்கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியத்தை நியாயப்படுத்துகிறது.

தேசிய வனக்கொள்கையின் நோக்கங்கள் மற்றும் தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்ட ஆவணத்தில் வகுக்கப்பட்ட தொலை நோக்கங்களையும் எய்துவதற்கு இன்றியமையாததாக உள்ளது. எனவே, இந்தக்கொள்கை அவசியமாகிறது. மாநிலத்திலுள்ள இயற்கை வள ஆதாரங்களின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதை கீழ்க்காணும் மாநில வனக்கொள்கை தெளிவுபடுத்துகிறது.

அடிப்படை நோக்கங்கள்

மாநில வனக்கொள்கையின் முக்கியமான அம்சங்களில், இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பேணிக்காத்தல், உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறை மற்றும் அதன் மரபியல் பண்புகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல், வனப்பகுதிகளின் விளைப்பொருட்களை அதிகரிக்கச் செய்தல், வனப்பகுதிகளிலுள்ள நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், மாநிலம் முழுவதிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல் ஆகியவையும் அடங்கும்.

தமிழ்நாடு வனக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்

 • மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.
 • பல்வகை உயிரின, தாவரத் தொகுதி, வனவிலங்கு மற்றும் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்.
 • அழிந்துவிட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்து மீண்டும் வளர்த்தல்.
 • கடலோரப் பகுதிகளின் உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்து வன ஆதார நிருவாகம் மற்றும் பெருக்கத்திற்கான வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்.
 • நீடித்த நிலையான வன மேலாண்மை .
 • வாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள நிலப்பரப்புகளிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல்.
 • வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை வாயிலாக, நீர் வளத்தைப் பெருக்குதல்.
 • வனப்பகுதிகளைச் சார்ந்திருக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் மற்றும்
 • வன மேலாண்மையில் குறிப்பிடத்தக்க வகையில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பளிப்பதை உறுதி செய்தல்.
 • பொருளாதார வளத்தையும், உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையையும், உறுதி செய்வதன் வாயிலாக பழங்குடியினர் நலனை மேம்படுத்துதல்.
 • அறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஆதரவு அளித்தல். –
 • வனவிலங்கு மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரிப்பதற்காக வனப்பகுதிகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல் மற்றும் வனப்பகுதியை பற்றி அறிவுறுத்துதல்.
 • ஊரக எரிசக்தி பாதுகாப்பிற்குரிய மரங்களை வளர்த்தல்.
 • வனப்பாதுகாப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உயிரின வாழ்க்கைச் சூழல் சுற்றுலா மேற்கொள்ளுதல்.
 • வன மேலாண்மைக்குரிய மனித வளத்தை மேம்படுத்துதல்.
 • பருவநிலை மாற்றங்களைத் தணித்தல்.

பின்பற்றப்பட வேண்டிய உத்திகள்

மேற்சொன்ன நோக்கங்களை எய்துவதற்கு, பின்வரும் உத்திகளை பின்பற்றப்பட வேண்டியுள்ளது:

மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின் வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.

மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக மரத்தின் தழை நிறைந்த உயரமான பகுதியாகத் திகழும் சுமார் 8,676 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப்பகுதிகள் நிருவகிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமாகும். வனப்பகுதிகளின் உயரளவு பாதுகாப்பை உறுதி செய்து, இதன்மூலம் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்பு முறை, மற்றும் அவற்றின் மரபியல் வளத்தை பேணிக் காப்பதற்கு, வனச்சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். பறவைகள், தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் முதலிய மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற உள்நாட்டு இனங்களைக் கொண்டு, இயற்கை மற்றும் செயற்கையாக தாவரங்களை மீண்டும் துளிர்க்கச் செய்வதன் வாயிலாக, வேற்றுவகை தாவரங்களைக் கொண்டு இயற்கை வனப்பகுதிகளாக மாற்றப்படும். இப்பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில், தேவையான மண் வளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இயற்கை வனப்பகுதிகளாக மாற்றுவதை விரைவுபடுத்தும் செயல்நோக்கத்திற்காக, அப்பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படும் வேற்றுவகை தாவரங்களை களையெடுக்கும் நடவடிக்கை அனுமதிக்கப்படும்.

குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள இனங்களைப் பேணிக்காப்பதற்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அறிவியல் சார்ந்த மேலாண்மை செயல் திட்டங்கள் பின்பற்றப்படுவதன் வாயிலாக, உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.”

பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி, வனவிலங்கு மற்றும் மரபியல் ஆதார பாதுகாப்பு

இந்த மாநிலத்தில், ஏறக்குறைய 26.01 சதவீத நிலப்பரப்பானது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம், உலகளாவிய பல்வகை உயிரினத் தாவரத் தொகுதிகள் கொண்ட ஓர் பகுதியாக குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த பூச்செடிகள் மற்றும் விலங்கினங்கள் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியைக் கொண்டுள்ளது.

நாளதுவரையில், இம்மாநிலத்தில், 15 வன விலங்கு உய்விடங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க்கோள் காப்பகங்கள், 2 பாதுகாக்கப்பட்ட சேமக் காப்பகங்கள், 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் 1 மரபியல் சார்ந்த தொகுப்பு தோட்டம் உள்ளன. மேலும், இம்மாநிலம், வளமான சதுப்பு நிலப்பகுதி மற்றும் அது தொடர்புடைய காடு வகைகள் கொண்ட தனிச்சிறப்புடைய கடலோரப் பகுதிகளையும் கொண்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரும் இம்மாநிலத்திற்குரிய பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி வளங்களைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும், மூலிகை மருந்து தயாரிக்க உதவும் பல்வகையான உயிரினத் தாவரத் தொகுதி வளமும் நிறைந்துள்ளது.

பரந்துபட்ட இந்த தாவரங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு '5' 77 அவ்வப்போது மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளிலும், தேசிய வனவிலங்கு செயல் திட்டத்திலும், வகை செய்யப்பட்டவாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதி வலுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.

பெருவழிகளைக் கையகப்படுத்துவதன் மூலமாகவும், இயற்கையான வசிப்பிடங்களை விரிவுபடுத்துவதன் மூலமாகவும் பாதுகாப்புப் பகுதியை அதிகரிக்கக் கருதியுள்ள நடவடிக்கையானது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளை, காப்புக்காடுகளுடன் இணைக்கவும், வன் விலங்குகளுக்கு பரந்த வசிப்பிடப் பகுதிகளை வகை செய்யவும் உதவும். இது, மரபியல் உயிர்ப்பன்மைகளின் பெருக்கத்தை உறுதி செய்யும்.

முக்கிய தாவரத் தொகுதி மேலாண்மை, பலவகையான பாதுகாப்பு அணுகுமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் வாயிலாக, உயிரின வசிப்பிடங்கள் செழுமையடையும்.

சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவை உள்ளபகுதிகளில் வசிக்கும் வனவாசிகளுக்கு, உரிய இடமாற்ற வசதியும், இழப்பீடும் வழங்குவதன் வாயிலாக, அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுதல்.

பாதுகாப்பு தேவைப்படும் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு உகந்த பகுதிகளை, உயிரின வாழ்க்கைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகக் கண்டறிந்து, அறிவித்தல்.

உள்ளூர் மக்கள் செயல்படுத்தும் துறை மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகள் அல்லது சங்கங்கள் ஆகியவற்றின் பங்கேற்புடன், வனவிலங்கு பெருவழியை பாதுகாப்பாக மேலாண்மை செய்வதன் வாயிலாக, மனிதன் - வனவிலங்கு மோதல் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வனவிலங்கு பகுதியை பேணுவதற்கும் அவை பலசிறு பகுதிகளாகத் துண்டாடப்படுவதைத் தடுப்பதற்கும் முழுமையான அணுகுமுறை பின்பற்றப்படும்.

வனவிலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்பு மற்றும் பயிர்சேதத்திற்கு குறித்த காலத்தில் இழப்பீடு வழங்குவது உறுதி செய்யப்படும்.

அதே இடத்தில் பாதுகாப்பு அளிப்பதற்கு, வலுவான வெளிப்புற மற்றும் உட்புற இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு அளிப்பதில் வெற்றி பெறுவகம் பெறுவதற்காக, இத்தகைய இணைப்பு வசதிகளை ஏற்படுத்துகிற பொறுப்பு, பெரிய மற்றும் சிறிய உயிரியியல் பூங்காக்கள், மரபணு தொகுப்பு தோட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்.

மூலிகைச் செடிகள் பாதுகாப்புப் பகுதிகள் வாயிலாக காடுகளிலுள்ள மூலிகைச் செடிகள் பாதுகாக்கப்படும். சமுதாயத்தினர் பயனடைவதற்காக, மூலிகைச் செடிகள் மேம்பாட்டு பகுதிகள் வாயிலாக மூலிகைத் தாவரவள ஆதாரங்களை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

மரபியல் ஆதாரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், வெப்ப மண்டலத் தாவரங்களின் தொகுப்புகளை கொண்டுள்ள தனித்துவம் மிக்க கூடலூரின் மரபணு பூங்கா உள்ளிட்ட வெளிப்புற மற்றும் உட்புற மரபணுதொகுப்பு சேகரிப்புகள் பராமரிக்கப்படும். "

அழிந்துபட்ட காடுகளைச் சீரமைத்தல் மற்றும் மீண்டும் வளர்த்தல் காடுகளை மீண்டும் வளர்ப்பதில் உள்ளூர் மக்களின் தன்னார்வப் பங்கேற்பைக் கோருவதன் மூலமாகவும், இத்தகைய காடுகள் மூலம் கிடைக்கும் நீடித்த பயன்களை அம்மக்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும், 40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தியைக் கொண்டுள்ள திறந்தவெளி வன நிலங்கள் நிருவகிக்கப்படும். காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கிராம வனக் குழுக்களை ஏற்படுத்துவதன் மூலம், கூட்டு வன நிருவாகத்தின் வாயிலாக இந்த முயற்சியில் மக்களின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும்.

ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில், 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் மர அடர்த்தியுடன், கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ள வனங்கள், அழிக்கப்பட்டுவிடக்கூடும். எனவே, இந்த வனங்களும், கூட்டு வன நிருவாகத் திட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படும்.

உயிரின வாழ்க்கைச் சூழல் அச்சுறுத்தலுக்கு இலக்காகுகிற இடங்களில், தோப்புகளை இயற்கைவனமாக, மீண்டும் மாற்றுவது உறுதி செய்யப்படும். பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் இசைவு பெறப்படும். மிலாறு (Wattle) மற்றும் தைலமரங்கள் முதலியன போன்ற அயல்நாட்டு இனங்களை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து அகற்றி, உள்ளூர் இனங்களை படிப்படியாக வளர்க்க வேண்டும்.

கடலோர உயிரின் வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பும், நிருவாகமும் சதுப்பு நிலக்காடுகள், நன்செய் நிலங்கள் மற்றும் கடல்சார் தேசிய பூங்காக்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, கடலோரப் பகுதிகளின் நுட்பமான உயிரின வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையை நிருவகிப்பதற்காக, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

கடலோர உயிரின வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையில், அவற்றின் முக்கியமான பங்கு பணியைக் கருத்திற்கொண்டு, சாத்தியமாகக் கூடிய இடங்களில், அழிந்துபட்ட சதுப்புநிலக்காடுகளுக்குப் புத்துயிரளிக்கப்படும்.

மாநில வனத்துறை, நமது மாநிலத்தில், கடலோரப் பகுதி நெடுகிலும், உயிரின பாதுகாப்பு அரணாக, சதுப்பு நிலக்காடுகளை வளர்த்து, மேம்படுத்தும்.

காற்றினால் ஏற்படுகிற மண்ணரிப்பைக் குறைப்பதற்காகவும், சுனாமி, புயல், அலையேற்றங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உட்பட இயற்கையின் போக்குகளுக்கு எதிராக, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதற்காகவும், காற்றின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கடலோர இடைநிலப் பகுதியில் தோட்டங்கள் வளர்க்கப்படும்.

செயல்படுத்தும் துறைகளை ஒருங்கிணைத்தல் வாயிலாகவும் சமுதாய பங்கேற்பு, அறிவியல் சார்ந்த நிருவாகக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பின்பற்றுதல் வாயிலாகவும், கடல்சார் உயிரி பல்வகை தாவரத் தொகுதியைப் பாதுகாக்க, மன்னார்வளைகுடா உயிரின வாழ்க்கைச்சூழல் காப்பு வனம் உதவும்.

பொதுவாக, நகர்ப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள நன்செய் நிலங்கள் மற்றும் ஏரிகள், வண்டல் படிவு மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நன்செய் நிலங்களும், ஏரிகளும் பலவகையான உயிரின வாழ்க்கைச் சூழல் செயல்களை செய்து வருகின்றன. இவை, உயிரி பல்வகை தாவரத் தொகுதி செறிந்தவையாக இருப்பதுடன் நிலத்தடி நீரைச் செறிவூட்டி, பல விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் புகலிடமளிக்கின்றன.

இவை, தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பயன்களை தொடர்ந்து அளித்திட ஏதுவாக, இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழி முகத்துவாரங்களில், கடலோரப்பகுதி நெடுகிலும் அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகளில், அறிவிக்கையிடப்படாத பல பகுதிகள் உள்ளன. இத்தகைய பகுதிகளை, வனத்துறை ஏற்கெனவே மேம்படுத்தியுள்ளது. இத்தகைய பகுதிகள், அறிவிக்கையிடப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இவ்விவகாரம் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.

வள ஆதார மேலாண்மை மற்றும் பெருக்கத்திற்காக வனங்களைப் பாதுகாத்தல் ஆரோக்கியமான உயிரின வாழ்க்கைச் சூழல் மேலாண்மை இன்றியமையாததாகும். அதற்காக கடுமையான பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் நடவடிக்கைகள் அவசியமாகும். தீ, சட்டவிரோதமான மேய்ச்சல், ஆக்கிரமிப்பு, மரங்களை சட்ட விரோதமாக வெட்டுதல், கஞ்சா பயிர் சாகுபடி, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணிகள், மாநிலத்திற்குள் அமைந்துள்ள இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இத்தகைய அச்சுறுத்தல்களைத் தணிப்பதற்கு, பாதுகாப்பு பணியாளரமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். மாநிலத்திற்கு, மதிப்பு வாய்ந்த வெட்டு மரங்களும், மூலிகைச் செடிகளும், வனவிலங்குகளும் அருட்கொடையாக அமைந்துள்ளன.

காப்பு வனங்களின் உள்ளே அனுமதியற்ற வகையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வனப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பினை முறைப்படுத்தக்கூடாது. வனப்பகுதியின் நாற்புற எல்லைகளைக் குறிப்பதற்கு, உயர் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவையான பணியாளர்களைத் திரட்டுவதன் மூலமாகவும், செயல்படுத்தும் அம்துறைகளின் உதவியைப் பட்டியலிடுவதன் மூலமகாவும், வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள், வன செட்டில்மென்ட் தொகைக் கோரிக்கைகளை விரைவில் தீர்வு செய்வதற்கு, பணிகளை முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வனப்பாதுகாப்புப் பணியாளர்கள், தங்களுடைய பணிகளை முனைப்புடன் மேற்கொள்வதற்கு, ஆயுதங்கள், தகவல் தொடர்பு வசதி மற்றும் வண்டிகள் உட்பட போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பில் நவீன முறைகளைப் பின்பற்றுவதற்காக, வன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். வேட்டையாடுதலைத் தடுக்கும் சிறப்புப்படையினர் ஆயுதங்களுடன் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து அறியும்படி செய்யப்படுவர். சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவோர் உரிய சட்ட அமைப்பின் வாயிலாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசு தரப்பும் வலுப்படுத்தப்படும். வேட்டையாடுதலை தடுக்கும் நடவடிக்கைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு முகவரமைப்புகளின் ஒத்துழைப்பும் பெறப்படும்.

காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, கிராம மக்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காட்டுத் தீயைக்கண்டறிவதற்காகவும், அதை அணைப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதால் துறையின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்கமான நடைமுறையாக, ஒவ்வொரு பருவத்திலும் தீயைப் பற்ற வைக்கிற நடவடிக்கையில் ஈடுபடுகிற நபர்கள் உரிய புதுவாழ்வு தொகுப்புத் திட்டங்களின் மூலம் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையை மறந்து கைவிடும்படி செய்யப்படும்.

இயற்கை வனங்களையும், நிலத்தின் உடைமை உரிமையைக் கருதிப்பாராமல் தனியார் நிலங்களில் உள்ள விலங்கு மற்றும் தாவரங்களுக்கு அபாயம் ஏற்படுத்துகிற தாவர வகைகள் இயற்கையாக செழித்து வளருகிற இடங்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, தனியார் நிலங்கள், வனம் சாராத நோக்கங்களுக்காக, கள்ளத் தனமாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து தடுத்தல்.

சாகுபடி முறையை மாற்றுவது சுற்றுச்சூழலையும் நிலத்தின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. சாகுபடி முறையை மாற்றுவதைத் தவிர்ப்பதற்காக, சரியான நிலப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்திசைவான வருமானத்திற்கான மாற்று வழிவகைகள் உருவாக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட வேளாண் நடைமுறைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிக்குள் இத்தகைய சாகுபடியைத் தடுப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமூகக் காடுவளர்ப்பு மற்றும் எரிசக்தி மர வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் இத்தகைய சாகுபடியால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிக்கு புத்துயிரளிக்கப்படும்.

உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பிற்காக, தற்போதுள்ள வனப்பகுதியைப் பாதுகாப்பதற்காக, வனப்பாதுகாப்புச் சட்டம், கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்றவாறு, வன நிலங்களை, வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள், பரிசீலிக்கப்படும் வனங்களுக்குள், வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்படும். வணிக நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

அங்கு வாழும் மக்கள் சமூகத்தை ஈடுபடுத்தி வனப்பகுதிகளில் மேய்ச்சலை முறைப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சிறு மலைத்தோட்டங்கள் மற்றும் நாற்றங்கால் பகுதிகள் மேய்ச்சலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். வனப்பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மக்கள் அவசியமற்ற கால்நடைகளை பெரிய மந்தைகளாக வைத்து பராமரிப்பதற்கு ஊக்குவிக்கப்படமாட்டார்கள். வனவிலங்குகள் வாழ்பகுதியில் தொற்றுநோய்கள் பரவுவதை தடுப்பதற்கு கால்நடைகளை வளர்க்கும் உள்ளூர் மக்கள் மற்றும் செயல்படுத்தும் துறைகளின் ஒத்துழைப்பு பெறப்படும்.

வனச்சாலைகள் மற்றும் மரம் வளர்த்தல்

வனப்பாதுகாப்பை வலுப்படுத்த வனச்சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கவும், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு குறைந்தளவு அடிப்படை வசதிகள் அளிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உள்ளூர் மக்கள் வனச்சாலைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் வரி மற்றும் கட்டுப்பாடுகள் முதலியன நீக்கப்படும். இருப்பினும், மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் 1-53 குறிப்பாக, யானை வாழ் பகுதிகளில் மற்றும் உயிரின வாழ்க்கை சூழலியலால் எளிதில் பாதிக்கப்படும் பகுதிகளில் புதுசாலைகள் அமைப்பது பொதுவாக ஊக்குவிக்கப்பட மாட்டாது.

பாதுகாப்பாக வாழ்க்கைத் தொழில் புரிவதற்கு ஏதுவாக காடுகளுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் 3.71 1988 ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கையானது, நாட்டின் மொத்த பூகோளப்பகுதியில் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்கப்படவேண்டும் என வகைசெய்கிறது. தற்போது மொத்த பூகோளப் பகுதியில் 21.76 சதவீதமாக உள்ள வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு மாநில அரசு புதுமையான உத்திகளை வகுக்க வேண்டும்.

வனப்பகுதிகளுக்கு வெளியேயான சமுதாய நிலங்கள், தரிசு நிலங்கள், ஊராட்சிக்கு சொந்தமான நிலங்கள், வருவாய் நிலங்கள் மற்றும் பண்ணை நிலங்களில் பெரியளவிலான காடு வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக மட்டுமே இப்பணித்திட்டம் நிறைவேற்றப்படும். எனவே, அரசு ஊராட்சிகள், சமுதாயம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏனையோர் தரப்பில் ஒட்டு மொத்த முயற்சிகளுக்கு இது வகை செய்கிறது.

பல்வகை பொறுப்பாளர், பங்குதாரர்கள் மற்றும் பொது தனியார் கூட்டு முயற்சிகளால் இதை நிறைவேற்ற முடியும். நம் இதில் பல்வகை பொறுப்பாளர்கள், குறிப்பாக ஊரகப்பகுதி மக்கள் அதிலும் பெண்கள் ஈடுபுத்தப்படுவர். இந்த கட்டளையை நிறைவேற்ற பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைப்பது மிகவும் உறுதுணையாயிருக்கும். ஊக்க மரத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலகங்கள், விற்பனை நிறுவனங்கள் முதலியவற்றை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதன் வாயிலாக, மரம் வளர்க்கும் சமுதாயத்தினரால் வாழ்வாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இது உதவும். ஊரக மரத்தொழிற்சாலைகள், மற்றும் விற்பனை யுத்திகள் போன்றவை மூலம் உறுதிபடுத்திக்கொள்ள இயலும்.

அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதற்கான காடு வளர்ப்பு விரிவாக்கம், வனவிலங்கு மேலாண்மை ஆதரவுக்கான செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கற்பித்தல், வனங்களுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் தேவையை கருதி, மாநிலத்தில் வலுவான விரிவாக்க பணிகளை கட்டமைப்பதும் மரம் நடுதலை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. காடுவளர்ப்பு விரிவாக்கப் பிரிவு, வனம் மற்றும் மரங்களின் எண்ணிக்கையை சதவித இலக்கை எய்துவதற்கு மிகப்பெரிய அளவில் பணி ஆற்ற வேண்டியுள்ளது. மாவட்ட அளவிலான விரிவாக்க மையங்கள் வட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தான் மரங்கள், மரங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார உத்திகள் குறித்த தகவல்கள் ஊரகப் பகுதிவாழ் மக்களால் அறியப்பட்டு பாராட்டவும் படுகின்றன. விரிவாக்க மையங்கள் மரம் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்திற்கு உறுதுணையாயிருக்கும்.

மரம் வளர்ப்பினை, முக்கிய திட்டக் கூறுகளில் ஒன்றாக கொண்ட ஒருங்கிணைந்த நீர்வரத்து அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதற்கு ஊரக சமுதாயங்களிடையே வாய்ப்பினையும் சென்றடைவதையும் உறுதிசெய்வதற்கு பலதரப்பட்ட முக்கிய தரப்பினர் ஈடுபடுத்தப்படுவர்."

இந்த முயற்சியில் தொழில் நுட்ப உதவியை அளிக்க வனத் துறையினர் ஆயத்தப்படுத்தப்படுவர். மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்குவதற்கு, மரம் வளர்ப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மரவிற்பனையில் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்கின்ற நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளை தளர்த்த வேண்டியது அவசியமாகிறது. மரம் நடுவதில் உள்ள இடைஞ்சல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை களைய, அச்சட்டத்தில் மற்றும் விதிகளில் தேவையான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் அவசியமெனில் சட்டங்கள் மற்றும் விதிகளின் தேவையான விதித்துறைகளை திருத்தியமைப்பதன் வாயிலாக மாநில அரசு தொடர்ந்து பாடுபடும்.

சந்தனமரம், செம்மரக்கட்டைகள் முதலியன போன்று வனப்பகுதிகளில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் காணப்படுகின்ற அத்தகைய அழிந்து வருகின்ற மதிப்பு மிக்க மரங்கள், தனியார் இடங்களில் அவற்றை வெட்டுவதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்படலாம்.

அழிந்துவருகின்ற மற்றும் அட்டவணையிடப்பட்ட இனவகைகளுக்கு மட்டுமே கொண்டு செல்வதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்படலாம்.

தமிழ்நாடு 1949ஆம் ஆண்டு தனியார் வனங்களை பாதுகாக்கும் சட்டம் மற்றும் தமிழ்நாடு 1955ஆம் ஆண்டு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வருகிற பகுதிகள் நீங்கலாக, தனியாரிடமுள்ள ஏனைய மரழி இனங்களை வெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் யாதொரு கட்டுப்பாடும் இல்லை.

நகர்ப்புற காடு வளர்ப்பு

தகுந்த மரங்களை சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் துணையுடன் வனத்துறையால் நடப்படும்.

வனம் சார்ந்த தொழிலகங்கள்

வனம் சார்ந்த தொழிலகங்களை அமைப்பது மற்றும் அவற்றுக்கு மூலப்பொருள்கள் வழங்கப்படுவதை நிருவகிக்கின்ற முக்கிய கருத்துக்கள் வருமாறு:

தனியார் நிலங்களில் மரங்கள் வளர்ந்து திரும்ப வாங்கி கொள்ளும் வசதியுடன் அவற்றை வளர்ப்பதற்கான ஒப்பந்த பண்ணைத் தொழிலை மேம்படுத்த வனம் சார்ந்த தொழிலகங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். மரங்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு மரம் 9 டிஆர் வளர்க்கும் உழவர்கள் வங்கிதாரர்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளல் வேண்டும்.

விவசாயிகள் குறிப்பாக சிறு மற்றும் குறுவிவசாயிகள் அவர்களின் குறு மற்றும் அழிந்துபட்ட நிலங்களில் தொழிலகங்களுக்கு தேவையான மர இனங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். மக்களின் ஒப்புதலுடன் இத்தகைய மரங்கள், எரிபொருள் மற்றும் - தீவன இரகங்களுடன் சமுதாய நிலங்களில் வளர்க்கப்படலாம்.

தொழிலாக செயல்நோக்கங்களுக்காக மரம் வளர்த்தலை வனக்கழகங்கள் மற்றும் தனியார் நிலங்களில் மட்டும் வரையறுக்கப்படலாம்.

நீர்வரத்து மேலாண்மை

சூழலில் சமன்பாட்டை கொண்டுவர இயற்கை காடுகள் செயற்படுகின்றன. எனவே, இத்தகைய காடுகளில் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மரங்கள் நடுதல் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. "காடு படுபொருள், சலுகைவீதத்தில் தொழிலகங்களுக்கு வழங்கப்படக்கூடாது.

நாட்டின் பிறபகுதிகள் அல்லது வெளிநாட்டிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்தல் உட்பட மூலப்பொருளுக்கான மாற்று வள ஆதாரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும்.

வனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர்வள பெருக்கம் மேட்டு நிலங்களில் அமையப்பெற்றுள்ள காடுகளினால்தான் தற்போது முப்பத்திரண்டு ஆற்றுப்படுகைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான நீர்தேக்கங்கள், ஏரிகள் ஆகியன உள்ளன.

காடுகளில் உள்ள எண்ணற்ற நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவிலான மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வாயிலாக பாதுகாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மையின் தற்போதைய அணுகுமுறை, அனைத்து பொறுப்பாளர்களும் முனைப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதன் வாயிலாக மேலும் வலுப்படுத்தப்படும். பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு ஏனைய செயல்படுத்தும் துறைகளுடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்படும். தமிழ்நாடு நீர்வரத்து மேம்பாட்டு முகவரமைப்பால் வனப்பகுதிகளின் மேட்டுநிலங்களில், ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை திட்டம், செயல்படுத்தப்படுகிறது. பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு, வனத்துறையின் ஒருங்கிணைப்புடன், பெரியளவிலான மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் வாயிலாக பாதுகாக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு அதிகளவில் முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

வனம் சார்ந்திருக்கின்ற பெண்களின் நிலையை உயர்த்துவிட்டன் வன மேலாண்மையில் அவர்களின் முக்கியப் பங்கினை உறுதி செய்தல் தற்போதைய வழிகாட்டி குறிப்புகளின் படி, கிராம வன மன்றங்களில் சரிபாதியாகவும், செயற்குழுக்களில் மூன்றில் ஒரு பங்கும் மகளிர் இடம் வகிக்கின்றனர். அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிப்பதற்கும், மகளிர் தலைமையிலான மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காப்பு மண்டலம் மற்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகள் வாயிலாக, மகளிர் அதிகாரப் பகிர்வு குறித்த தற்போதைய முக்கியத்துவத்திற்கு வலுவூட்டப்படும். நுண்கடன் துறையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவுகின்ற தற்போதைய நடைமுறை தொடரப்படும். மகளிரின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும், குடும்பத்தில் முடிவுகளை எடுக்கின்ற அவர்களுடைய பங்கினை உயர்த்துவதற்கும், மகளிருக்கு, பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்யப்படும்.

பழங்குடியினர் மேம்பாடு

மாநிலத்திலுள்ள வனங்களில், பழங்குடியினர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார வளத்திற்கு வகை செய்கின்ற போது, வனப்பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த நோக்கத்துடன் வாழ்வாதார வாய்ப்புகள் வாயிலாக, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு, சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெற்றுதருவதற்கு துறை முயற்சி செய்யும். வனங்களை பாதுகாப்பதற்கும், மீண்டும் உருவாக்குவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும் பழங்குடியினரின் உயரிய பாரம்பரிய நுண்ணறிவு முனைப்புடன் பயன்படுத்தப்படும். அவ்வாறு செய்கின்றபோது, போதுமான அங்காடி வாய்ப்புகளுடன் மரத்துண்டுகள் அல்லாத வனப்பொருட்கள் வசூல், விற்பனை உரிமைகள் ஆகியவற்றுக்கு வகை செய்வதன் வாயிலாக, அவர்களின் வழக்கமான உரிமைகளும் தனியுரிமைகளும் பாதுகாக்கப்படும். வனங்கள் மற்றும் வனங்களுக்கு அருகாமையிலுள்ள பழங்குடியினர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறு செயல்படுத்தும் துறைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும்.

பழங்குடியினரின் சமூக, கலாச்சார, பொருளாதார சூழலில் மேம்பாட்டு நிலைகளுக்காக வன உரிமைச் சட்டம் ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலனில் அறிவார்ந்த சமநிலை எய்தப்பட வேண்டும். அவர்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதும் சிறந்த வாய்ப்புகளுக்கு வகை செய்வதும், வாழ்வாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் பெறுவதையும் இலக்காக கொள்ளப்படும்.

அறிவியல் ரீதியான வனமேலாண்மைக்கான தொழில்நுட்ப ஆதரவு - ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

இந்த ஆராய்ச்சியானது, செயல் திட்டங்கள் / நிருவாகத் திட்டங்கள் தயாரிப்பதற்கு வழிகாட்டுகின்ற வளமான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வாயிலாக உயிரின வாழ்க்கைச் சூழலை பாதுகாப்பதற்கு வனங்கள் மற்றும் வன விலங்கு நிருவாகத்தை நெறிபடுத்தும்.

பல்வகை உயிரின தாவரத் தொகுதி பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள், அமைப்பிற்குள்ளேயே இருக்கின்ற ஆராய்ச்சிப் பிரிவு / வன விலங்கு பிரிவு வாயிலாக, புகழ்பெற்ற ஆராய்ச்சி / வனவிலங்கு அமைப்புகளுடன் கூட்டாகவும், மேற்கொள்ளப்படவேண்டும்.

மாநிலத்தில், வேளாண் - காடு வளர்ப்பிற்கு தொழில்நுட்ப ஆதரவுக்கு வகைசெய்யவும், சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை ஊக்கப்படுத்தவும், வனத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும், இந்த ஆராய்ச்சி வகை செய்யும். இது, காடு வளர்ப்பு விரிவாக்கத்திற்கு உதவுவதுடன் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் பின்பற்றத்தக்க நிருவாக நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு களப்பணியாளருக்கு பயிற்சியளித்து வழிகாட்டும்.

வன ஆராய்ச்சியின்போது, அழிந்து வருகின்ற தாவர மற்றும் விலங்குகளை பாதுகாத்தல், அழிந்துபோகும் உயிரின வாழ்க்கைச் சூழல்களை மீட்டெடுத்தல், மரம் வளர்ப்பு மற்றும் மேம்பாடு, வேளாண்மை காடு வளர்ப்பு, நீர் வரத்து மேலாண்மை, கடலோர காடு வளர்ப்பு, பயன்பாடு மற்றும் விற்பனை, மண் ஊட்டச்சத்து மற்றும் சிக்கலான வன மேலாண்மை, சமூக பொருளாதார ஆராய்ச்சி உள்ளிட்ட உயிரின வாழ்க்கைச் சூழல் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வனத்துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான உள்ளீட்டிற்கு வகை செய்வதற்கு, மாநில வன ஆராய்ச்சி நிறுவனம் சிறப்புத் தகுதி மையமாக மேம்படுத்தப்படும்.

உலக அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நேர்விற்கும் தனித்தனியாகக் கருதப்பட்டு, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்படும். உள்ளூர் நடைமுறைகள் மேற்கொண்டும் ஆய்வுசெய்யப்பட்டு, அவற்றின் பயனை அங்கீகரிக்கும் வகையில் குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கப்படும். மேலும் உயிரியல் பூங்காக்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுடன் இணைந்த கூட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும். வனம் மற்றும் வன உயிரினங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் பின்பற்றப்படும் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காக்கப்படுவதுடன், பன்னாட்டு ஒத்துழைப்பை நாடுவதன் வாயிலாக, வன மேலாண்மையின் தரம் மேம்படுத்தப்படும்.

வனம் குறித்த தரவுத்தளம் காடு வளர்ப்பு வன ஆதாரங்கள் மற்றும் வன மேலாண்மை குறித்த தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தரவினை விரைவில் மீண்டும் பெறக்கூடிய வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை பயன்படுத்தி அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு குறித்த கால அளவிற்கொருமுறை நாளதுவரை ஆக்கப்பட வேண்டும். இந்த செயல்நோக்கத்திற்காக, தொலையுணர்வு முற்றும் புவியில் தகவல் பொறியமைவு, மேலாண்மைத் தகவல் பொறியமைவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகள் பயன்படுத்தப்படும். இத்தகைய நவீன செயல்பாடுகள், ஆதார் இருப்புக் கணக்கெடுப்பு, நில அளவை மற்றும் எல்லை வரையறை செய்தல், விவரித்தல், முக்கிய மதிப்பீடு, இடைவெளி பகுப்பாய்வு, தாவரங்கள் இயற்கையாகச் செழித்து வளரும் இடம் குறித்த மதிப்பீடு, தாவர வகைகளின் நீண்டகால கண்காணிப்பு, வனவிலங்கு, தீத்தடுப்பு, துயர்தணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். மேலும், உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றில், கிடைக்கப்பெறும் வளிமண்டலவியல் அமைப்புகளுடன் இணைந்து வானிலை முன்னறிவிப்பு, குறிப்பாக, இயல்பிற்கு மாறான மழைப்பெழிவு, புயல், ஆழிப்பேரலை மற்றும் ஏனைய இயற்கைச் சீற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகள் வழங்கப்படும்.

மேலாண்மை விவரங்கள் குறித்த உள்ளீடுகளுக்கு வகை செய்வதற்கு, புவியியல் தகவல் பொறியமைவு ஆய்வு கூடம் ஏற்படுத்தப்படும்.

வனத்துறையின் தரவுத்தளம் மற்றும் துறை வல்லுநர்கள், வருவாய், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் போன்ற துறைகளுக்கும் பகிரப்பட்டு, அத்துறைகளின் தரவுத்தளம் மறுசீரமைக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட வன நிலப் பகுதிகள் காலமுறைதோறும் மறுஆய்வு செய்யப்படும். ஒரு சிறப்புக் கொள்கை முயற்சியாக, இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் போன்றவைஏற்பட்ட பின்னர் நிவாரணம் மற்றும் மறுசீரமைத்தல் நடவடிக்கைகளுக்காக, தொகுப்பு நிதி ஒன்று பராமரிக்கப்படும். இத்தொகுப்பு நிதிக்கான பங்களிப்புகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் பசுமைச் சுற்றுலா வாயிலாகக் கிடைக்கப்பெறும் வருவாய், மாநில மற்றும் மத்திய அரசுகள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகளிலிருந்து பெறப்படும் நிதியின் ஒரு பகுதி ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

மின் - ஆளுகை

அன்றாட நிர்வாக நடவடிக்கைகளுக்காக அனைத்து கோட்டங்களும் / வட்டங்களும் இணையதளம் உள் இணையம் வாயிலாக இணைக்கப்படும். திட்டப் பணிகள் குறித்து சிறந்த முறையில் தகவல் தெரிவிப்பதற்கும், அனுப்புவதற்கும், ஆய்வு செய்வதற்கும் கோட்ட / வட்ட அளவிலான அலுவலகங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்தப்படும்.

பயிற்சி மற்றும் தகவலை பரப்புவதற்காக கல்வி சார்ந்த செயற்கைகோள் இணைப்பு வசதி வாயிலாக கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை அணையிலுள்ள தமிழ்நாடு வனவியல் கல்லூரி, அனைத்து விரிவாக்க மையங்கள் ஆகியவற்றில் மெய்நிகர் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். வனம் மற்றும் வனவிலங்கு மேலாண்மை, தீ எச்சரிக்கை, குற்றக் கண்காணிப்பு, வனவிலங்கு நடமாட்டம், ஆகியவற்றுக்காக இணையம் வழி புவியியல் தகவல் பொறியமைவு வசதியுடன் அடிப்படை அளவில் பரிமாற்றத்திற்காக தனிவழி இலக்கமுறை உதவிக்கு (Personal Digital Assistant) வகை செய்யப்படும்.

வனவிலங்கு பாதுகாப்பு கல்வி செயல்பாடு

மாநிலத்தில், உயிரியல் பூங்காக்களிலும், பாதுகாக்கப்பட்ட பகுதி கட்டமைப்புகளிலும், (தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள்) கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாக வனவிலங்கு குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தப்பட வேண்டும். மனித - வன உயிரின மோதலை தவிர்க்கவும் இயற்கையுடன் நல்லிணக்கத்தை பேணவும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை பொதுமக்களிடையே பரப்புவதற்கு, உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுடன் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். வனங்களை மக்களின் அருகாமைக்கு கொண்டுவருவதற்காக பொருள் விளக்க மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் இலக்கு பயன்பாட்டு குழுக்களுக்கான செயல்பாட்டு நடவடிக்கைகள், பயிற்சி அலகுகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் மேம்படுத்தப்படும்.

ஊரக எரிசக்தி பாதுகாப்பிற்கு காடு வளர்த்தல்

மாநிலத்தின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதில் வனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. எரிபொருளுக்கான கூள எரிசக்தியை அதிகரிப்பதற்கும், புங்கன் போன்ற எண்ணெய் வித்து மரங்களை தனியார் மற்றும் சமுதாய நிலங்களில், உரிய கொள்கை நடவடிக்கைகள், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் விரிவாக்க ஆதரவு வாயிலாக வளர்ப்பதற்கு மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மரத்தை அடிப்படையாக கொண்ட எண்ணெய் வித்து நிறுவனங்களுக்கு காடு வளர்ப்பு துறையால் ஆதரவளிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்புக்கு ஆதரவான பசுமைச்சுற்றுலா

பசுமைச் சுற்றுலா என்பது, உள்ளூர் பகுதி மக்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்கும்போது, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதையும், முழுமையான சுற்றுச்சூழலுக்கு மாற்று இல்லை என்பதால், சுற்றுச்சூழல் குறித்த பண்பாடு மற்றும் இயற்கை வரலாற்றைப் புரிந்துக்கொண்டு கவனம் செலுத்துவது என்ற பயனுள்ள பயணமாக வரையறை செய்கிறது. சுருங்கக் கூறின், இது இயற்கை அடிப்படையிலும், உள்ளூர் பகுதி மக்களுக்கான பயன்கள் குறித்த முதன்மைத் திட்டக் கூறுகள் உட்பட முனைப்பான கல்வி, பொருள் விளக்கங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்குகந்த சுற்றுச்சூழலியல் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.

பசுமைச் சுற்றுலா நிருவாகம் பின்வருவன குறித்து ஆர்வமுடன் செயலாற்றும் வனம் சார்ந்த சுற்றுச்சூழல் முறையில், பழமை மாறாத இயற்கைத் தன்மையை எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுதல்.

உள்ளூர் பகுதி மக்களின் வளமை மற்றும் நன்னிலைக்காக பசுமைக் சுற்றுலாவில் அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்தல்.

பண்படுத்தப்படாத நிலங்களை சுற்றுச்சூழலுக்குகந்தனவாக மாற்றி அளித்தல், கல்வி, பொழுதுபோக்கு ரீதியிலான அனுபவ அறிவை அளித்தல்.

பசுமைச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உத்திகள்

அனைத்து வனப்பகுதிகள் குறித்தும் நாளதுவரையிலான திறன் மற்றும் அறிவு அவசியமாகிறது. பல்வகை உயிரின தாவரத்தொகுதிக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுடன், கடினமான அறைகூவல்களை எதிர்கொள்வதற்கு, வனத்துறை பணியாளர்களிடையே, வன மேலாண்மை சம்மந்தப்பட்ட அண்மை தொழில்நுட்பங்கள், கூட்டு வன மேலாண்மை, (JFM) மனிதவள மேம்பாடு ஆகியவை இன்றியமையாததாகும்.

 • வனப்பாதுகாப்புப்படையில், குறிப்பாக வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் மகளிரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.'
 • வனத்துறைப் பணியாளர்களுக்கு அவசியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு, தற்போதுள்ள கோயம்புத்தூர், தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை தமிழ்நாடு வனவியல் கல்லூரி ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டும்.
 • புகழ்பெற்ற தேசிய, பன்னாட்டு நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்கள் மூலம், வன மேலாண்மையின் போக்குகளை துறைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும்.
 • தொழில் வல்லமையுடன் பயிர் செய்யும் பொருட்டு, நிலத்தைப் பண்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு, வனவியல் பயிற்சி நிறுவனங்களும் வலுவூட்டப்படவேண்டும்.
 • பயிற்சி உட்பட மேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய திறனை மேம்படுத்துவதற்கு, வனத்துறையின் அமைப்பு ரீதியிலான தேவைகள் மற்றும் பணியாளர்களின் தேவைகள் குறித்து ஆராயப்படவேண்டும்.
 • துறையின் மேம்பாட்டுத் திட்டத்தில், அனைத்துப் பணியாளர்களின் பணி முன்னேற வாய்ப்பு வளம் குறித்து தனி முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வனத்துறையின் நிதியுதவி

கணிசமான நிதி முதலீடு, ஏனைய ஆதாரங்கள் முதலீடு ஆகியவற்றால் மட்டுமே வனத்துறை கொள்கையின் நோக்கங்களை எய்த இயலும். காடுகளை வருவாய் ஆதாரங்களாக மட்டுமே பார்க்காமல், புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆதாரங்களாவும் கருதப்படவேண்டும். காடுகள் தேசியச் சொத்தாக இருப்பதுடன், மக்களுக்கும், மாநிலத்திற்கும் நலம் பயப்பதாக உள்ளதால் அவை நிலைத்திருக்கக்கூடிய வகையில் பாதுகாக்கப்பட்டு அதிகரிக்கப்பட வேண்டும்.

எனவே, காடு வளர்ப்பில், பொதுநிதி முதலீட்டினை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். தேசிய காடு வளர்ப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டில் காடுகளையும், வன உயிரிகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும், மரம் வளர்த்தலை அதிகரிக்கவேண்டும் என்பதற்கும் வரவு செலவு திட்டத்தில் குறைந்தது 2.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசு பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை

3.04
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top