பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

RGGLV திட்டம்

எரிசக்தி தொடர்பான பிற பயனுள்ள அரசாங்க உதவிகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

இராஜீவ் காந்தி கிராமிய எரிவாயுத் (LPG) வினியோகத் திட்டம் (RGGLV)

இத்திட்டம் 2009 அக்டோபர் மாதம் 16ம் தேதி துவக்கப்பட்டது. இதன் நோக்கம் உள்ளார்ந்த கிராமங்களிலும், எரிவாயு சிலின்டர்கள் சென்று அடைய, சிறு எரிவாயு வினியோகஸ்தர்களை உருவாக்க வேண்டும் என்பதே. இதன் மூலம், கிராம பகுதிகளிலும், குறைவான உபயோகத்திறனுள்ள (அதாவது, ஒரு மாதத்திற்கு 600 எரிவாயு சிலின்டர்கள் (வாடிக்கையாளர்களுக்கு தீர்ந்த சிலின்டர்களுக்கான மாற்றம்) விற்பனைத்திறன் உள்ள இடங்கள்) இடங்களிலும் எரிவாயு சென்றடையும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகள்

இத்திட்டம் துவக்கமாக, 8 மாநிலங்களில் 1200 இடங்களில், அதாவது எரிவாயு சிலின்டர்கள் குறைவாக சென்றடைந்துள்ள பகுதிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. அவையாயன,

வ.
எண்

மாநிலம்

திட்டம் துவக்கப்பட்ட
இடங்களின் எண்ணிக்கை

1

மத்தியபிரதேசம்

97

2

உத்திரபிரதேசம்

290

3

இராஜஸ்தான்

192

4

மேற்கு வங்காளம்

175

5

பீகார்

251

6

ஜார்க்கண்ட்

80

7

சட்டீஸ்கர்

39

8

ஒரிசா

101

(RGGLV) திட்டத்தின் சிறப்பம்சங்கள்

 • இந்த திட்டத்தின் வினியோகஸ்தர்கள் சிறிய அளவிலான வினியோகஸ்தர்களாக அடிப்படைத் தேவைகளும், முதலீடும் குறைந்தளவு தேவைப்படும் அளவில் இருக்கும். மேலும், தற்போது வினியோகஸ்தர்கள் லாபம் அடைய தேவைப்படும் மாதம் 2500 எரிவாயு சிலின்டர்கள் விற்பனைக்கு மாறாக, ஒரு மாதத்திற்கு 600 எரிவாயு சிலின்டர்கள் விற்பனை செய்தால் லாபகரமானதாக காணக்கூடிய வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இச்சிறு வினியோகஸ்தர்கள், தங்கள் சேவையை, இருக்கக்கூடிய பெரிய வினியோகஸ்தர்கள் சென்றடைய விரும்பாத பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். RGGLV வினியோகஸ்தருக்கு அவர்களது சேவை பகுதியில் 1500 வாடிக்கையாளர்கள் இருந்தால் லாபகரமாக இருக்கும்.
 • இந்த வினியோகஸ்தர்கள்,  குடும்ப அங்கத்தினர்களின் உதவி மற்றும் ஒன்று அல்லது இரண்டு வேலையாட்களைக் கொண்டும் இயங்குவர்.
 • சிலின்டர்களை வீடுகளில் வினியோகிக்கும் முறை இருக்காது.
 • கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், வினியோகஸ்தரின் வயது வரம்பு 21 முதல் 45 வரை வைக்கப்பட்டுள்ளது.
 • வினியோகஸ்தர் அந்தப் பகுதி அல்லது அந்த கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 • இந்தத் திட்டத்தில் நிறுவனமானது, கணவர், மனைவி இருவரின் பெயரிலும் இயங்கும். தனியாக இருப்பவராக இருந்தால், திருமணம் நடைபெற்ற பிறகு அவருடைய வாழ்க்கைத் துணையும் அந்நிறுவனத்தின் பங்குதாரராக ஆகிவிடுவார் என ஒரு உத்தரவாதம் எழுதி கொடுக்க வேண்டும். இது கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக அமையும்.
 • RGGLV, வினியோக உரிமைப்பெற தேவைப்படும் மூலதனம் 3.21 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்நிறுவனத்திற்காக அடிமனை 20 மீட்டர் x 24 மீட்டர் அளவுடைய நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 • வினியோகஸ்தர், அவர் போட்ட மூலதனத்தை பெற, 1800 புதிய எரிவாயு இணைப்பு கொடுக்க வேண்டும். வினியோகஸ்தருக்கு மாதம் ஒரு முறை நிகர வருமானமாக,  ரூ 7500 கிடைக்கும்.
 • இத்திட்டத்தின் முக்கியத்துவமானது, வினியோகஸ்தரை தேர்ந்தெடுக்க எவ்வித நேர்முகத் தேர்வும் நடத்தப்படமாட்டாது. வினியோக உரிமை பெற, அதிக நபர்கள் விண்ணப்பித்திருந்தால், கல்வித் தகுதியிலும், பணம் முதலீடு செய்வதிலும் 80 சதம் மதிப்பெண் பெற்றுள்ள நபர்களில்  ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
 • அந்தந்த மாநிலங்களில், மொத்த பகுதிகளில், 25 சதவிகித வினியோக உரிமை ஷெட்யூல்ட் பிரிவினருக்கு ஒதுக்கப்படும். 25 சதவிகித உரிமை, முன்னாள் இராணுவத்தினர் / இராணுவம் சார்ந்த துறையினர்/ உடல் ஊனமுற்றோர்/ விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியோருக்கு வழங்கப்படும். இப்பிரிவில் ஒருவரும் தகுதியோடில்லாமலிருந்தால் அடுத்த முறை விளம்பரப்படுத்தும்போது அந்த பகுதி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top