பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / வன உயிரினப் பாதுகாப்புச்சட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வன உயிரினப் பாதுகாப்புச்சட்டங்கள்

அபாய நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாப்பதற்கான சில முக்கிய சட்டதிட்டங்கள்

வன உயிரினப் பாதுகாப்புச்சட்டங்கள்

அபாய நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாப்பதற்கான சில முக்கிய சட்டதிட்டங்கள்.

அபாய நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாக்கவும், பல்லுயிர் வளங்களை பாதுகாக்கவும், தேசிய மற்றும் உலகளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அழிவுநிலையிலுள்ள வனவாழ் தாவர விலங்கினங்களின் உலகளாவிய வர்த்தகரீதியிலான ஒப்பந்தம், (1973) மேற்கூறிய நோக்கத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. இவ்வொப்பந்தத்தில் வனவாழ் தாவர, விலங்கினங்களை அவற்றின் வாழிடங்களில் வைத்து பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதோடு அவற்றின் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் மற்றுமொரு மைல்கல்லாகும்.

1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உயிர் பாதுகாப்பு சட்டம் தேசிய அளவிலான ஒரு முயற்சியாகும். வன உயிர் சரணாலயங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு வாரியம் ஏற்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் குறிப்பிடுகிறது. அழியும் தருவாயிலும், அபாய கட்டத்திலுமுள்ள உயிரினங்களையும், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டதிட்டம் வழிவகை செய்கிறது.

சில முக்கிய வன உயிரினச் பாதுகாப்புச்சட்டங்கள்

 • 1873ம் வருடத்திய மதராஸ் யானைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1879ம் வருடத்திய யானைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1887ம் வருடத்திய பறவைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1897ம் வருடத்திய இந்திய மீன்வள பாதுகாப்புச்சட்டம்.
 • 1912ம் வருடத்திய வன விலங்குகள் மற்றும் பாதுகாப்புச்சட்டம்.
 • 1927ம் வருடத்திய இந்திய காடுகள் பாதுகாப்புச்சட்டம்
 • 1932ம் வருடத்திய வங்காள காண்டாமிருக பாதுகாப்புச்சட்டம்.
 • 1951ம் வருடத்திய பம்பாய் வன விலங்குகள் மற்றும்
 • வன பறவைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1960ம் வருடத்திய பிராணிகள் வதைத் தடுப்புச்சட்டம்.
 • 1970ம் வருடத்திய காப்புரிமை சட்டம்
 • 1972ம் வருடத்திய வன விலங்கு பாதுகாப்புச்சட்டம்
 • 1980ம் வருடத்திய காடுகள் பாதுகாப்புச்சட்டம்
 • 1991ம் வருடத்திய (திருத்தப்பட்ட வன உயிரினங்கள் பாதுகாப்புச்சட்டம்,)
 • 1992ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க மாநாட்டு தீர்மானம்
 • 1994ம் வருடத்திய காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
 • 2002ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க சட்டம்
 • 2004ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க விதிகள்
 • 2005ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) சட்டம்
 • 2005ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) விதிகள்
 • 2006ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) விதிகள்

பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002

இச்சட்டம் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பற்றி எடுத்துரைக்கின்றது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

 • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு.
 • பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பகுதிகளை புராதான பகுதிகளாக அறிவித்தல்.
 • அச்சுறுத்தப்படும் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்
 • இச்சட்டத்தை செயல்படுத்துவதில் கிராம மக்களின் பங்கேற்பு.
 • பல்லுயிர் பெருக்கம் சார்ந்த கிராம மக்களின் பாரம்பரிய அறிவை பாதுகாத்தல்.
 • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பெறுவதை ஒழுங்குமுறைபடுத்துதல்.
 • இந்திய அரசாங்கம், இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தை நிர்ணயித்துள்ளது.

பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் உலகளாவிய சட்டங்களும்

உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க பல மாநாட்டுத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை கீழ்கண்டவாறு,

 • 1971-ம் வருடத்திய ஈரப்புலங்கள் குறித்த ராம்சர் ஒப்பந்தம்.
 • 1972-ம் வருடத்திய உலக கலாச்சாரம் மற்றும் புராதான சின்னங்கள்-ஒப்பந்தம்
 • 1973-ம் வருடத்திய உலகளாவிய அழிந்துவரும் வன உயிரினங்கள் வாணிபம் பற்றிய ஒப்பந்தம்.
 • 1979-ம் வருடத்திய ஐரோப்பிய வன உயிரினங்கள் மற்றும் இயற்கை வாழ்விடங்கள் பற்றிய ஒப்பந்தம்.
 • 1980-ம் வருடத்திய உலக பாதுகாப்பு கொள்கைகள்
 • 1992-ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம்.

வன உயிரினங்களை காப்பதற்கான பாதுகாப்புக்கல்வி

மக்களின் பங்கு: உலகம் முழுவதும் வன உயிரினங்களை பாதுகாக்க ஒவ்வொரு அரசாங்கமும் கிராம மக்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். ஏனென்றால் கிராம மக்கள் பாரம்பரிய அறிவை பெற்றிருப்பதால் பாதுகாப்பு செயல்பாடுகளை எளிமையாக செயல்படுத்த முடியும் மற்றும் பயன்பகிர்வும் இருப்பதால் கிராம மக்கள் பயனடைகிறார்கள்.

இத்தகைய பயன்பகிர்வு கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரோக்ய பச்சை என்ற மருத்துவ தாவரத்தின் பயனை காணி இன மக்களும் வெப்ப மண்டல தாவரவியல் பூங்கா ஆராய்ச்சி நிறுவனமும்(ஜிஙிநிஸிமி) பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் மலைவாழ் மக்கள் ஊக்குவிக்கப்பட்டு இயற்கை பாதுகாப்பு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வன உயிரினங்களை பாதுகாப்பதில் விழிப்புணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. கிராம மக்கள், மாணவர்கள், பெண்கள் போன்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

வன உயிரினங்களைப் பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானதாகும்.

வன உயிரினங்களை, செல்லப்பிராணிகளாக வளர்க்காமல் தவிர்த்தல்

 • மிகவும் மோசமான சூழலில் உயிரினங்களை வைத்து விற்பனை செய்யும் கடைகளுக்கு ஆதாரவளிப்பதை தவிர்த்தல்.
 • கம்பளி உரோமம், யானை தந்தம், காண்டா மிருகக் கொம்பு, சிப்பிகள்,
 • பவளப்பாறை போன்ற உயிரின பாகங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்,
 • வன உயிரினங்களை வாங்குதல் மற்றும் விற்பதை தவிர்த்தல்.
 • அளவுக்கதிமான இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை தவிர்த்தல்.
 • வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களில் இராசயனம் கலக்காமல் பார்த்துக் கொள்ளுதல்.

தனி நபரின் பங்கு: அநேக மக்கள் போதுமான பாதுகாப்பு விழிப்புணர்வை பெற்றிருக்கவில்லை. சட்டங்களை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வை எளிமையாக பெற முடியும். ஆதலால் வன உயிரின பாதுகாப்பை செயல்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் நம் நாட்டின் வன உயிரின வளத்தை பாதுகாப்போம்.

கேள்வி பதில்

1. வனவிலங்குகளினால் விவசாய நிலங்களில் சேதாரம் ஏற்படும் போது அவற்றை வலை வைத்தோ வெடி வைத்தோ விரட்டுவது சரியா? தவறா?

தவறு. எல்லா வனவிலங்குகளும் இந்திய வனவிலங்குச் சட்டம் - 1972 - ன் கீழ் வரும். வெடி வைத்து விலங்குகளை விரட்டுவது சட்டப்படி குற்றமாகும்.

2. வனவிலங்குகளினால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வனவிலங்குகளோ, பறவைகளோ பயிர்களுக்கு சேதாரம் ஏற்படுத்தினால் வனத்துறைக்கு தகவல் சொல்ல வேண்டும். அவர்கள் விலங்குகளை திரும்ப காட்டுக்குள் அனுப்ப வழி செய்வார்கள்.

3.17073170732
சிவராமகிருஷ்ணன் Dec 29, 2015 08:11 AM

ஐயா தங்களுக்கு முதற்கண் வணக்கம்.நான் வறை ஆடு வளர்க்க விரும்புகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top