பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / சூரிய ஆற்றல் / சூரிய ஒளி சக்தி மூலம் வீடுகளுக்கு ஒளியேற்றுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய ஒளி சக்தி மூலம் வீடுகளுக்கு ஒளியேற்றுதல்

சூரிய ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றும் செல்களை பயன்படுத்தி வீடுகளுக்கு ஒளியேற்றும் செயல்முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சூரிய ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றும் செல்களை பயன்படுத்தி வீடுகளுக்கு ஒளியேற்ற முடியும். இந்த மின் சக்தியை கொள்கலன்களில் (batteries) சேமித்து வைத்து தேவைப்படும்போது ஒளி உண்டாக்க முடியும்.

இதை எங்கெல்லாம் பயன்படுத்த முடியும்?

  • மின் வசதி இல்லாத கிராமப்பகுதிகள்
  • வீடுகள் மற்றும் வியாபார இடங்களில் அவசரகால உபயோக விளக்காக

சூரிய ஒளி அமைப்பின் பகுதிகள் மற்றும் செயலாக்கும் முறை

சூரிய ஒளி அமைப்பு, வீடுகளில் பயன்பாட்டுக்காக நிலையாக நிறுவப்படும்.

இதில் கீழ்கண்ட பகுதிகள் இருக்கும்:

  • சூரிய ஒளித்தகடு மற்றும் செல்கள்
  • மின்னேற்ற கட்டுப்பாட்டுக் கருவி
  • மின்கலம்
  • ஒளிப்பான்

வீட்டு ஒளி அமைப்பின் மாதிரி வரைபடம் கீழே வழங்கப்பட்டுள்ளது. சூரிய செல்கள், கூரைகளில்\மாடிகளில் சூரிய ஒளி படும் வகையில் நிறுவப்படும். மின்னேற்ற கட்டுப்பாட்டுக் கருவி (charge controller) மற்றும் மின்கலம் (battery) ஆகியவை, வீட்டின் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்படும். நல்ல முறையில் செயல்பட, சூரிய செல்களில் படியும் குப்பையை அடிக்கடி துடைக்க வேண்டும்.

செயல்படுத்தும் நேரம்

இது, திறனை பொறுத்து அமையும். எனினும், பெரும்பாலானவை, முழுக்க சார்ஜ ஆன மின்கலம் மூலம் தினசரி 3 முதல் 4 மணி நேரம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெயில் இல்லாத, மேகம் சூழ்ந்த நாட்களில், 2 முதல் 3 நாட்கள் வேலை செய்யும் வகையில், இவை கூடுதல் சார்ஜ் கொண்டிருக்கும்.

சூரிய ஆற்றலைக்கொண்டு கிராம்புற இந்தியாவை ஒளியூட்டுதல்

கிராமங்களை ஒளியூட்டுதல் கிராமப்புற முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். இது மட்டுமன்றி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதியுமாகும். கிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் மண்னெண்ணய், மாட்டு சாண வரட்டி மற்றும் விறகுகளை ஒளி உற்பத்திக்காக உபயோகப்படுத்துகின்றனர்.

நூறு கோடி குடும்பங்களை ஒளிமயமாக்கும் திட்டம், TERI நிறுவனம் முலம்  தொடங்கப்பட்ட இயக்கமாகும். தற்பொழுது, மண்ணெண்ணய் உபயோகப்படுத்தும் கிராமப்புற சமூகங்களை, சுத்தமான, நவீனமான, நம்பகத்தகுந்த ஒளி ஆதாரங்களை உபயோகப்படுத்த வைப்பதை முக்கியமான நோக்கமாக கொண்டு இவ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற குடும்பங்களுக்கும் மற்றும் இதர தொழில்நிலையங்களுக்கும், சூரிய இராந்தல்களைக் மற்றும் இதர அத்தியாவச சேவைகளான மொபைல் போன்களை சார்ஜ் செய்வது, பேட்டரிகளை சார்ஜ் செய்தல், தண்ணீர் சுத்தம் செய்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவை நியாயமான கட்டண அடிப்படையில் சேவையாக அளிக்கப்படுகிறது. TERI, நூறு கோடி குடும்பங்களை ஒளி மயமாக்கும் திட்டத்தின் பங்குதாரர்கள் (சேவை அமைப்புகள்) மற்றும் கிராமப்புற அரசு நிறுவனம் ஆகியோருடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துகிறது. விற்பனைக்குப் பின் சிறந்த சேவையை அளிப்பதற்காக, இத்திட்டம் தொழில் நுட்ப ஆதார வலை அமைப்புகளை அமைக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு http://labl.teriin.org இணைய தளத்தினை பார்க்கவும்.


சூரிய மேற்கூரை

ஆதாரம் : http://geda.gujarat.gov.in/

3.04255319149
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top