பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் முறை உருவான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உற்பத்திக்கான ஊக்கத் தொகை செயல்முறையின் முலம் சூரிய சக்தி மின்நிலையங்களை நிலைநாட்டுதல்

2009-ம் ஆண்டு உற்பத்திக்கான ஊக்கத்தொகை செயல்முறையின் முலம் மின் கட்டமைப்பில் இணைக்க சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அறிவித்தது.

மேற்கூறிய செயல்முறையின் முலம் பெறப்படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரு.15 என்றானது.

மேற்கூறிய செயல் முறையின் முலம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும் நிறுவனத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தனியார் சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ரு.4.50 யூனிட் வாங்கப்படும். அதாவது ரு.15.0 - ரு.4.50 = ரு.10.50, ரு.4.50 என்பது தமிழ்நாடு எரிசக்தி மேலாண்மை கழகத்தால் வகுக்கப்பட்ட அடிப்படை கட்டணம். ரு.10. என்பது மின்சாரம் வாங்கும் நிறுவனத்திற்கு எரிசக்தி அமைச்சகம் தரும் ஊக்கத்தொகை. மேற்கூறிய செயல்முறையில், தனியார் சூரிய சக்தி மின் நிலையமான சபையர் நிறுவனம் எரிசக்தி அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரெட்டைபிள்ளை ஐயனார் குளம், புது கள்ளத்தூர், சிவகங்கா மாவட்டத்தில் நிறுவப்பட்டது.

ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி அமைப்பு (JNNSM)

இவ்வமைப்பு புதிய மற்றும் மரபு சாரா எரிசக்தி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, 2022-க்குள் சூரிய சக்தியின் முலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவை சுமார் 20,000 மெ.வாட் அளவிற்கு கொண்டு செல்லும் குறிக்கோளுடனும், அச்செயல்பாட்டை மூன்று கட்டங்களாக நிறைவேற்றியுள்ளது.

முதல் கட்டம் - 2012 -13

இரண்டாம் கட்டம் - 2013 -17

முன்றாம் கட்டம் - 2017 -22

மின் வட்டப் பாதையில் இணைக்கப்படும் சூரிய சக்தி மின் நிலையங்கள் இரு வகைப்படும்.

(1)என்விவிஎன் செயல்முறை: (என்டிபிசி வித்யூத் வியாப்பர் நிகாம்லிட்)

இச்செயல் முறையில் ,மின்சாரத்தை சூரிய ஒளி மின் நிலையங்களில் இருந்து வாங்க என்டிபிசி வித்யூத் வியாப்பர் நிகாம் லிட் (NVVN) ஒரு செயலாண்மையகமாக இவ்வமைப்பால் (JNNSM) அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இச்செயல்முறையில் சூரிய ஒளி மின் நிலையங்கள் 33 கி.வோ. அல்லது அதற்குமேல் உள்ள மின்வட்டப்பாதையில் இணைக்கப்படும். இத்திட்டத்தில் CCCI (CCCL INFRASTRUCTURE) என்ற தனியார் நிறுவனம் 5MW திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு 29.03.12 அன்று மின்வட்டப்பாதையில் இணைக்கப்பட்டது.

(2) ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி திட்டம்: (கூறைகளில் சூரியத் தகடுகளை பொருத்தி சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்கும் செயல்பாடு)

இத்திட்டத்தில், சூரிய சக்திமின் உற்பத்தி நிலையங்களை தேர்ந்தெடுக்கும் செயலாண்மையகமாக இந்திய மரபு சாரா எரிசக்தி துறை (IREDA) இவ்வமைப்பால் (JNNSM) அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் சூரிய ஒளி மின் நிலையங்கள் 33 கி.வோ-ற்கு கீழே உள்ள மின் வட்டப்பாதையில் இணைக்கப்படும். இத்திட்டத்தில் 7 தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

(1) ஆர்எல் க்ளீன் பவர் - (1 மெ.வாட்)

(2) பிஅண்டு ஜிசோலார் - (1 மெ.வாட்)

(3) கிரேட்ஷைன் ஹோடிங்ஸ் - (1 மெ.வாட்)

(4) ஜெமினிஜயோஸ் - (1 மெ.வாட்)

(5) ஆம்சன்ஸ் - (1 மெ.வாட்)

(6)ஹாரிசன்ஸ் - (1 மெ.வாட்)

(7)நோயல் - (1 மெ.வாட்)

REC செயல்முறை

இச்செயல் முறையின் மூலம் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைப்பதற்கு மனுவும், ஆவணங்களும் நேரிடையாக தலைமைப் பொறியாளர்/மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை-2 அலுவலகத்தில் பெறப்படுகிறது. இச்செயல் முறையின் மூலம் நிறுவப்படும் சூரிய சக்தி மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சராசரி ஒட்டு மொத்த மின்சாரம் வாங்கும் விலையான ரூ.2.37/யூனிட்டிற்கு வாங்கப்படுகிறது. தயாரிக்கப்படும் ஒவ்வொரு 1000 யூனிட் மின்சாரத்திற்கும், மின் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு சான்றிதழ் (RE Certificate) வழங்கப்படும்.

இச்செயல் முறையின் மூலம் நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், 1 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் 09.05.12 அன்று குப்பேபாளையம் கிராமம், கோயமுத்தூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

இந்திய அரசின் மரபு எரிசக்தி துறை ஏற்கனவே மானியம் அளித்துள்ள போதிலும் அதிக மூலதன செலவு தேவைப்படுவதால் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிக அளவில் செயல்பாட்டில் இல்லை. தனியாக செயல்பட்டு வரும் சிறிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் கூரையில் அமைப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு இடங்களில் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. தற்போது அனல் மற்றும் வெப்ப சக்தி தேவைப்படும் இடங்களில் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டு வரும் திட்டம் வியாபார ரீதியாக வெற்றியடைந்துள்ளது.

மத்திய அரசு வகுத்துள்ள கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டமைப்புடன் இணைந்து செயல்படும் சூரிய ஒளி மின் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

3.03448275862
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top