பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / சூரிய ஆற்றல் / சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் கருவி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் கருவி

நீர் இறைப்பதற்கான சூரிய பயன்பாடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இக்கருவி நீர் இறைக்க சூரிய ஒளியைப் பயன்படுத்துகிறது.

கருவியின் பாகங்கள்

 • போட்டோ வொல்டாயிக் தட்டுகள் (தட்டையான சூரிய ஒளியை சேகரிக்கும் பகுதி)
 • சூரியஒளி தட்டுகள் மூலம் பெறப்படும் மின்னாற்றலில் இயங்கக்கூடிய கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வகை பம்புசெட் :
  • மேல்தளத்தில் வைக்ககூடிய சென்ட்ரிஃப்யுகல் பம்புசெட்
  • நீருக்கடியில் இயங்கக்கூடிய பம்புசெட்
  • மிதக்கக்கூடிய பம்புசெட்
  • மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தால் (எம்.என்.ஆர்.ஈ) அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வகை மோட்டார் பம்புசெட்
 • குழாய்கள்

செயல்படும் முறை

போட்டோ வோல்டாயிக் தட்டுகள் (PV பிவி தட்டுகள்) சேகரிக்கும் சூரிய சக்தியிலிருந்து ஆற்றல் பெறப்பட்டு, இக்கருவி இயக்கப்படுகிறது. அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ள இத்தட்டுகள், சூரிய சக்தியை மின்னாற்றலாக மாற்றுகின்றன. இதன்மூலம் பம்புசெட் இயங்குகின்றது. இம்முறையில் இயங்கும் பம்புசெட் மூலம் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, ஓடை, குளம், கால்வாய் முதலியவற்றிலிருந்து நீர் எடுக்கலாம். இக்கருவியில் சூரியஒளியை சேகரிக்கும் தட்டுகளை வைக்க நிழல்படாத பகுதி அவசியம்.

பயன்பாடு

2 குதிரைத்திறன் (HP) சக்தி கொண்ட பம்புசெட் மற்றும் 1800 வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரியஒளி தட்டுகள் கொண்டுள்ள இக்கருவியின் மூலம் 6 முதல் 7 மீட்டர் ஆழத்திலிருந்து ஒரு நாளைக்கு 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர் இறைக்க முடியும். இதன்மூலம் பலவகையான பயிர்களுக்கு 5 முதல் 8 ஏக்கர் நிலம் வரை பாசன வசதி ஏற்படுத்த முடியும்.

தோராயமான விலை

கருவியின் மொத்த விலை - Rs. 4,50,000/-

எம்.என்.ஆர்.ஈ மூலம் அளிக்கப்படும் மத்திய அரசு மானியம - Rs. 1,80,000/-

ஆதாயங்கள்

 • சூரியஓளி இலவசம் என்பதால் எரிபொருள் செலவு இல்லை.
 • மின்சாரம் தேவைப்படாது.
 • நீண்டநாள் செயல்பாட்டுத் திறன்.
 • நம்பகமானது மற்றும் அதிக உழைக்கும் திறன்.
 • பராமரிப்பதும் இயக்குவதும் எளிது.
 • சுற்றுச்சுழல் நலனிற்கு ஏற்றது.

மூலம் : www.hareda.gov.in

2.77941176471
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top