பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய படங்கள்

சூரிய படங்களின் பயன்கள் மற்றும் மாதிரிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

உவர்ப்பு நீர் மட்டுமே கிடைக்கும் பகுதிகளில் வாழும் கிராமபுற மகளிர் குடிநீர் சேகரிப்பதற்கும் பின்னர் அதை குடிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கும் மிகவும் கடினப்படுகின்றனர். சூரிய ஒளியைக் கொண்டு உவர்ப்பு நீரை நன்னீராக மாற்றும் சூரிய ஸ்டில் ஆனது ஓரு எளிய, மலிவான மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றலைக் கொண்ட நிரந்தரமான தொழில்நுட்பமாகும்.

கட்டமைப்பு

சிறிய ஆழமற்ற நீர்த் தேக்க தொட்டியை, உள்ளுரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு விருப்பான கொள்ளளவுடன் உருவாக்கலாம். தொட்டியின் அடிப்பகுதியில் கருப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும். தொட்டியில் மேல்புறம் கூரை போன்ற அமைப்புடன் கூடிய கண்ணாடி தகடுகளால் மூடப்பட்டிருக்கும். கண்ணாடி தகடுகள் தொட்டியின் மத்திய பகுதியில் உயரமாகவும், தொட்டியின் பக்க சுவற்றில் ஒட்டியிருக்குமாறும் வைக்கப்பட்டிருக்கும்

செயல்பாடு

நீரை ஆவியாக்கி மற்றும் மீண்டும் குளிரவைத்தல் என்னும் விதியைக் கொண்ட இந்த சூரிய ஸ்டில்களில், சூரிய ஒளியால் உவர்ப்பு நீர் நீராவியாக மாறி ,பின்னர் நீராவி குளிர்ந்து நன்னீர் கிடைக்கிறது. தொட்டியில் உவர்ப்பு நீரைத் தேக்கி சூரிய ஒளியில் வைக்க வேண்டும். தொட்டியின் கறுப்பு வண்ண அடிப்பகுதி சூரியவெப்பத்தை உறிஞ்சி, நீரை ஆவியாக்கும். பின்னர் ஆவியான நீர் கண்ணாடி தகடுகளில் படிந்து சுத்தமான நீராகும். இவ்வாறு சுத்தமான நீர் சேகரிக்கப்பட்டு, குழாய்க்கு அனுப்பப்படும். இதனால் குழாயை திறந்தவுடன், தூய்மையான, சுகாதாரமான நீர் கிடைக்கும். அதனை சேகரித்து வைத்து பிறகு குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரு சதுர மீட்டர் சூரிய ஸ்டிலில் இருந்து சராசரியாக 2-3 லிட்டர் நீர் கிடைக்கும்.

மூலம் : மத்திய உப்பு மற்றும் கடல் வேதிப்பொருள் ஆராய்ச்சி நிலையம், (CSMCRI), கிசுபாய், பாவ்நகர்- 364 002, குஜராத்.

2.9387755102
ரேவதி May 31, 2015 08:31 PM

மிகவும் குறைவாக கிடைக்கிறதே.. எவ்வளவு செலவாகும்?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top