பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / சூரிய ஆற்றல் / வேளாண்மைக்கான சூரிய ஒளி தயாரிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைக்கான சூரிய ஒளி தயாரிப்புகள்

வேளாண்மையில் சூரிய ஒளியால் செயல்படும் தயாரிப்புகள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.

சூரிய ஒளியால் செயல்படும் மூன்று பயன்களை ஒன்றாகக் கொண்ட கருவி

இந்த தனித்தன்மை வாய்ந்த சூரிய ஒளி உபகரணம் குளிர் காலங்களில் தண்ணீரை சூடாக்கவும், மழையில்லாத நாட்களில் சூரிய ஒளியினை உபயோகிக்கும் குக்கராகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளை உலரவைக்கும் சூரிய ஒளியால் செயல்படும் உலர்த்தியாகவும் பயன்படுகிறது. குளிர்காலங்களில் கிடைக்கும் குறைந்த அளவு சூரிய ஒளியினைப் பயன்படுத்தி இந்த உபகரணம் 50 லிட்டர் தண்ணீரை 50-60 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கும் தன்மை படைத்தது. இது தவிர சூரிய ஒளி குக்கராக உபயோகிக்கும்போது ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் உணவினை 2-3 மணி நேரங்களில் சமைக்கவும் வல்லது. உலர்ப்பானாக பயன்படும்போது பழங்களையும், காய்கறிகளையும் ஒரே வெப்பநிலையில் இரவு நேரங்களிலிலும் சீராக உலர வைக்கவும் பயன்படுகிறது.

பிவி வின்னோவர் மற்றும் உலர்த்தி

இந்த உபகரணம் காற்று வீசாத சமயங்களில் தானியங்களை தூற்றப் பயன்படுகிறது. மேலும் ஒரே சீராக காற்றை சுழல வைப்பதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகளை உலர்த்தவும் பயன்படுகிறது. இந்த உபகரணத்தில் ஒரு சோலார் பேனல், சிறிய தூற்றான் போன்றவற்றுடன் அதிக காற்றினை சூடாக்கக்கூடிய குழாய் போன்ற ஒரு பகுதியும், பொருட்களை உலர வைக்க பெட்டி போன்ற அமைப்பும் இந்த கருவிக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூற்றானின் விசிறி உலர்த்தும் பகுதியுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளதால் உலர்த்தப்படும் பொருட்களுக்குள் சீராக காற்றோட்டம் காணப்படும். இந்த உபகரணத்தில் உள்ள தூற்றும் பகுதியினைக் கொண்டு ஒரு மணி நேரத்தில் சுமார் 35-50 கிலோ தானியங்களை அல்லது விதைகளை தூற்ற முடியும்.

இது தவிர வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வெயிலில் உலர்த்த ஆகும் நேரத்தில் பாதி நேரம் முன்னதாகவே இக்கருவியினைப் பயன்படுத்தி பழங்களையும் காய்கறிகளையும் உலர்த்த முடியும். அதிக வெப்பம் கடத்தும் தன்மையுடனும், அதிக விசிறி வேகத்துடனும், சீரான வெப்பநிலையில் இந்த உபகரணம் செயல்படுவதால் காற்று செல்லும் குழாயில் உள்ளே செல்லும் காற்று முன்பே சூடாக்கப்பட்டு, உலர்த்தும் பகுதியிலுள்ள வெப்பநிலையினை குறைத்து விடுகிறது. இவ்வுபகரணத்தினைப் பயன்படுத்தி உலர்த்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அவற்றின் நிறம் மற்றும் வாசனை மாறாமல் இருப்பதால் அவற்றின் தரம் உயர்ந்ததாக இருக்கிறது. இந்த உபகரணத்தில் பேட்டரி பொருத்தப்பட்டு, அதில் சார்ஜ் ரெகுலேட்டரும் இணைக்கப்பட்டுள்ளதால், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்து வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஆண்டு முழுவதும் உபயோகப்படுத்தலாம்.

பழத்தோட்டங்களுக்குப் பயன்படும் பிவி ஜெனரேட்டர்

இந்த உபகரணம், சூரிய ஒளி மூலம் இயங்கும் பிவி பம்பு இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் ஒரு சொட்டு நீர்ப் பாசன முறையாகும். இந்தக் கருவியில் 900 வாட்ஸ் சோலார் பேனலுடன் 800 வாட் டி.சி. மோட்டார் பம்பும், OLPC சொட்டு நீர் பாசன உபகரணமும் இருக்கும். இதனால் தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதுடன், அதிகப்படியான தண்ணீர் பாய்ச்சப்படும் போது ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தவிர்த்து விடுவதால் பழத்தோட்டங்களின் நீர்ப்பாசன மேலாண்மைக்கு இந்தக் கருவி மிகவும் ஏற்றது. இந்த நீர்ப்பாசன முறை தாவரத்தின் தண்ணீர் தேவைக்கேற்றவாறும், இயக்கத்தேவைப்படும், மின்சாரத்திற்கேற்றவாறும், வடிவமைக்கப்பட வேண்டும். செலவு:லாபம் விகிதம் 2 என்ற அளவில் 4-5 ஹெக்டேர் அளவிலான மாதுளை தோட்டத்திற்கு இந்த உபகரணத்தினைப் பயன்படுத்தி தண்ணீர் பாசன மேலாண்மை செய்யமுடியும். எனவே இக்கருவி மின்சார வசதி இல்லாத இடங்களில் தண்ணீர் பாசன வசதி மற்றும் நிலம் மட்டும் கொண்ட விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.

மேற்கூறிய சூரிய ஒளி பிவி நீர்ப்பாசனத்திற்கு பயன்படும் கருவியுடன் தற்பொழுது DC-DC மாற்றி, மின்சாரத்தினை சேமிக்கும் பேட்டரிகள், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றை கூடுதலாக இணைக்கப்பட்டு ஜெனரேட்டராக பயன்படுகிறது. இந்த ஜெனரேட்டர் தண்ணீர்ப் பாசனத்திற்குப் பயன்படும் பம்ப் ஆகவும், பயிர்களின் அறுவடைக்குப் பின் உபயோகிக்கப்படும் சிறிய கருவிகளை இயக்கப் பயன்படும் ஜெனரேட்டராகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சூரிய ஒளி பவி டஸ்டர்

விவசாயத்தின் முக்கிய அங்கம் பயிர் பாதுகாப்பு ஆகும். சூரிய ஒளி பிவி டஸ்டர் கருவி பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தூளை தெளிக்கப் பயன்படுகிறது. இதில் ஒரு பிவி தூக்கி, சக்தி சேமிக்கும் பேட்டரி, தனியாக வடிவமைக்கப்பட்ட தூள் தெளிக்கும் கருவி போன்றவை உள்ளன. பிவி தூக்கி பூச்சிக்கொல்லியினை தெளிப்பவரின் தலையில் பொருத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நிழலாகவும் பயன்படுகிறது. அதே சமயத்தில் மருந்து தெளிப்பானை செயல்பட வைக்க பேட்டரி சார்ஜ் செய்து கொள்ளவும் பயன்படுகிறது. இது மட்டுமன்றி எல்.இ.டி எனப்படும் ஒளிரும் பல்புகளை இயக்கி வெளிச்சம் தரவும் இக்கருவி பயன்படுகிறது. வருடம் முழுவதும் இக்கருவி வீடுகளுக்கு வெளிச்சம் தரவும், தேவைப்படும் போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பானாவும் பயன்படுகிறது.

நகரும் (மோபைல்) பிவி கருவி

தன்னைத்தானே முன்னே நகர்த்திக்கொள்ளும் பிவி நகரும் கருவி விவசாயத்திற்கும், பொதுமக்களின் உபயோகத்திற்கும், நகர்ப்புறங்களிலிருந்து விலகி தனியாக இருக்கும் ஊரகப்பகுதிகளில் பயன்படும் வெவ்வெறு விதமான செயல்பாடுகளுக்கும் பயன்படுகிறது. குறிப்பாக வறண்ட பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் இக்கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தக் கருவியில் இரண்டு 70 வாட் பாலிகிரிஸ்டலின் எனப்படும் பொருளாலான பிவி கருவிகள் சார்ஜ் ரெகுலேட்டருடனும் உள்ளது. பிவி அமைப்புகளை மடக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் தானாகவே பூட்டிக்கொள்ளும் வசதி இருப்பதால் தகுந்த கோணத்தில் சோலர் பேனலை வைத்துக்கொள்ள எளிதாக இருக்கிறது. இது தவிர ஒரு இண்வெர்ட்டர் மற்றும் டிசி மோட்டார் மூலம் செயல்படும் இணைப்பும் உள்ளது. எனவே இந்தக் கருவியினைக் கொண்டு ஏசி மற்றும் டிசி லோடுகளையும் இயக்கமுடியும். இந்தக்கருவி வெண்ணை எடுக்கும் கருவி, காற்று வீசும் உபகரணம், தானியங்களைத் தூற்றும் கருவி, கற்றாழை பிரித்தெடுக்கும் கருவி போன்றவற்றில் வெற்றிகரமாக சோதனை செய்யபட்டுள்ளது. இந்த கருவி கிராம அளவில் வாடகைக்கு கிடைப்பதன் மூலமும் பயன்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

வறண்ட பகுதிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிலையம், ஜோட்பூர் - 342 003, ராஜஸ்தான் (இந்தியா), தொலைபேசி எண் +91 291 2786584, பேக்ஸ் - +91 291 2788706.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top