பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என்றால் போதுமான மற்றும் நம்பகமான மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு வழங்குவது என்பது பொருளாகும்.

நிறுவன விவரம்

தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு ஆணை எண் 114 நாள் 08.10.2008ல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியமானது த.நா.மி.வா. நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என மின்சாரச் சட்டம் 2003-கீழ் தவிர்க்கலாகாத தேவையின் படி அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண் 38 நாள் 21.05.2009 ல் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் பதிவு செய்வதற்குண்டான (Tamil Nadu Transmission Corporation Limited) அனுமதியை தமிழக அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tamil Nadu Transmission Corporation Limited) 15.06.2009 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான நிறுவனமாக 14-12-2009லிருந்து செயல்படத் துவங்கியது. அரசு ஆணை எண் 100 நாள் 19-10-2010 ல் வெளியிடப்பட்ட மாறுதல் திட்டத்தின் படி தொடர்புடைய உரிமைகளும் பொறுப்புகளும் மாநில அரசால் மாற்றப்பட்டு திரும்பவும் 01-11-2010 ல் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டது.

வாரிய இயக்குநர்களின் குழு

வாரிய இயக்குநர்களின் குழு

 • தலைவர்
 • மேலாண்மை இயக்குநர்
 • இயக்குநர்/மின் தொடரமைப்பு திட்டங்கள்
 • இயக்குநர் இயக்குதல்
 • இயக்குநர் நிதி

பகுதி இயக்குநர்கள்

 • இயக்குநர்/வினியோகம்/தநாமிஉமபகநி
 • இயக்குநர்/மின் உற்பத்தி/தநாமிஉமபகநி

அலுவல் வழி இயக்குநர்கள்

 • முதன்மைச் செயலர் நிதி தலைமைச்செயலகம், தமிழக அரசு
 • முதன்மைச் செயலர் எரிசக்தி தலைமைச்செயலகம், தமிழக அரசு
 • முதன்மைச் செயலர் தொழில் தலைமைச் செயலகம்,தமிழக அரசு

நிறுவன கட்டமைப்பு

  நிர்வாக தலைவர்

 • நிர்வாக இயக்குநர்
 • இயக்குநர் மின்தொடரமைப்பு திட்டங்கள்
  • தலைமை பொறியாளர்/ மின் தொடரமைப்பு
  • தலைமை பொறியாளர்/சிவில்/மின் தொடரமைப்பு
  • தலைமை பொறியாளர்/மின் தொடரமைப்பு திட்டங்கள்-I/சென்னை
  • தலைமை பொறியாளர்/ மின் தொடரமைப்பு திட்டங்கள்-II/திருச்சி
 • இயக்குநர் இயக்குதல்
  • தலைமை பொறியாளர்/ கருவி காத்தல் மற்றும் தகவல் தொடர்பு
  • தலைமை பொறியாளர்/ கட்டமைப்பு இயக்கம்
  • தலைமை பொறியாளர்/ கட்டுமான இயக்கம் /சென்னை
  • தலைமை பொறியாளர்/ கட்டுமான இயக்கம் /திருச்சி
 • இயக்குநர் நிதி
  • தலைமை நிதி கட்டுப்பாட்டாளர்
 • செயலாளர்

ஆதாரம் : தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top