பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அனல் மின் நிலையங்கள்

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எண்ணுார் அனல் மின்நிலையம்

 • எண்ணுார் அனல் மின் நிலையத்தின் மொத்த நிறுவுதிறன் 450 மெகாவாட் ஆகும். மொத்தமுள்ள ஐந்து பிரிவுகளில் I & II ஆகிய இரண்டு பிரிவுகள் 60 மெகாவாட் திறனிலும் III, IV & V ஆம் பிரிவுகள் 10 மெகாவாட் திறனிலும் நிறுவப்பட்டுள்ளது.
 • எண்ணுார் அனல் மின் நிலையத்தின் மொத்த திட்ட செலவு ரூ.270 கோடிகளாகும்.
 • அனைத்து பிரிவுகளும் நிலக்கரியினால் இயக்கப்படுகின்றன.
 • எண்ணுார் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரிசாவிலுள்ள மகாநதி நிலக்கரி களம் (தால்ச்சர் மற்றும் ஐபி வேலி) மற்றும் மேற்கு வங்காளம், ராணிகெஞ்ச்-ல் உள்ள கிழக்கத்திய நிலக்கரி களம் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
 • அனைத்து பிரிவுகளும் முப்பது வருடங்களுக்கு மேல் செயல்பட்டிருப்பதால், புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் அனைத்து பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

நிலையத்தின் விலாசம்/விவரம்

பிரிவுகள்

திறன் மெகாவாட்

இயக்கத் தொடங்கிய நாள்

எண்ணுார் அனல் மின்நிலையம்,  எண்ணுார், சென்னை-600 057. தொலைபேசி-044-25750404. தொலைபேசி நகலனுப்பி- O44-25751978. இமெயில் – ceetps@tnebnet.org

I

60

31.03.1970

II

60

14.02.1971

III

110

17.05.1972

IV

110

26.05.1973

V

110

02.12.1975

விருதுகளும், சாதனைகளும்

எண்ணுார் அனல் மின் நிலையம் பண ஊக்கமளிப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து அதிக உற்பத்தி மற்றும் குறைந்த எரிபொருள் எண்ணெயின் பயன்பாடு ஆகியவற்றிற்காக பணமுடிப்பு விருதுகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளது.

மேலும், பாதுகாப்பு விருதுகளை தொழிற்சாலை ஆய்வகம், தமிழ்நாடு அரசிடம் இருந்து எண்ணுார் அனல் மின்நிலையம் பெற்றுள்ளது.

மேட்டூர் அனல் மின்நிலையம்

 • மேட்டூர் அனல் மின் நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 • இதுவே தமிழ்நாடு மின் வாரியத்தின் முதல் நாட்டின் உட்பகுதியில் நிறுவப்பட்ட அனல் மின்நிலையமாகும்.
 • முதல் கட்டத்தில் 210 மெகாவாட் திறனுடைய I மற்றும் IIஆம் பிரிவுகள் சுமார் ரூ.384.30 கோடி செலவில் நிறுவப்பட்டது.
 • இரண்டாம் கட்டத்தில் 210 மெகாவாட் திறனுடைய III மற்றும் IVஆம் பிரிவுகள் சுமார் ரூ.351.76 கோடி செலவில் நிறுவப்பட்டது.
 • அனைத்து பிரிவுகளும் நிலக்கரியினால் இயக்கப்படுகின்றன.
 • மேட்டுர் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரிசாவிலுள்ள மகாநதி நிலக்கரி களம் மற்றும் மேற்கு வங்காளம், ராணிகெஞ்ச்-ல் உள்ள கிழக்கத்திய நிலக்கரி களம் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

நிலையத்தின் விலாசம்/விவரம்

சுட்டம்

பிரிவுகள்

திறன் மெகாவாட்

இயக்கத் தொடங்கிய நாள்

மேட்டுர் அனல் மின் நிலையம், மேட்டுர் அணை, சேலம் மாவட்டம் – 636406. தொலைபேசி - 04298-240390, தொலைபேசி நகலனுப்பி - 04298-240011. இமெயில் – cemtps@tnebnet.org

I

1

210

07.01.1987

2

210

01.12.1987

II

3

210

22.03.1989

4

210

27.03.1990

விருதுகளும், சாதனைகளும்

மேட்டுர் மின் நிலையமானது அதிக உற்பத்திக்காகவும், உபரி மின் பயனீட்டளவை குறைத்ததற்காகவும் மற்றும் எரிபொருள் எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்ததற்காகவும், பணமுடிப்பு விருதுகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மின் நிலையங்களுக்கான பண ஊக்கமளிப்பு பரிசு திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.

சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கான பரிசு திட்டத்தின் கீழ் மேட்டூர் அனல் மின் நிலையம் தொடர்ந்து நான்கு வருடங்களாக அதாவது 2000-01 முதல் 2003-04 வரை சிறந்த உச்ச கால உற்பத்தி செய்ததற்கு மத்திய அரசிடமிருந்து தங்க கேடயத்தை பரிசாகப் பெற்றது.

2004-05ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த மாற்றியமைக்கப்பட்ட விரிவான செயல்பாடு பரிசுத் திட்டத்தின் கீழ் மேட்டுர் அனல் மின் நிலையம் 2005-06ஆம் வருடத்திற்கு வெண்கல கேடயத்தை மத்திய அரசிடமிருந்து பரிசாகப் பெற்றது.

2005ஆம் ஆண்டு உதிரி சாம்பல் பயன்பாட்டிற்காக மேட்டூர் அனல் மின் நிலையம் மத்திய அரசிடமிருந்து இரண்டாம் பரிசைப் பெற்றது.

வடசென்னை அனல் மின்நிலையம்

 • வடசென்னை அனல் மின் நிலையம் சென்னையிலிருந்து வடக்கே சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 • வடசென்னை அனல் மின் நிலையத்தின் மொத்த நிறுவுதிறன் 630 மெகாவாட் ஆகும். மொத்தமுள்ள மூன்று பிரிவுகளும் தலா 210 மெகாவாட் திறனில் நிறுவப்பட்டுள்ளது.
 • வடசென்னை அனல் மின் நிலையத்தின் மொத்த திட்டச் செலவு ரூ.1792 கோடிகளாகும்.
 • அனைத்து பிரிவுகளும் நிலக்கரியினால் இயக்கப்படுகின்றன.
 • வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரிசாவிலுள்ள மகாநதி நிலக்கரி களம் மற்றும் மேற்கு வங்காளம், ராணிகெஞ்ச்-ல் உள்ள கிழக்கத்திய நிலக்கரி களம் ஆகியவற்றில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

நிலையத்தின் விலாசம்/விவரம்

பிரிவுகள்

திறன் மெகாவாட்

இயக்கத் தொடங்கிய நாள்

வடசென்னை அனல் மின் நிலையம், அத்திப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்-600120. தொலைபேசி-044-27950061. தொலைபேசி நகலனுப்பி-044-27950074. இமெயில் – cenctps@tnebnet.org

I

210

25.10.1994

II

210

27.03.1995

III

210

24.02.1996

விருதுகளும், சாதனைகளும்

வடசென்னை அனல் மின் நிலையம் அதிக உற்பத்தி, குறைந்த உபரி மின் பயனீட்டளவு மற்றும் குறைந்த எரிபொருள் எண்ணெயின் பயன்பாடு ஆகியவற்றிற்காக பணமுடிப்பு விருதுகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அனல் மின் நிலையங்களுக்கான பண ஊக்கமளிப்பு பரிசு திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.

சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கான பரிசு திட்டத்தின் கீழ் வடசென்னை அனல் மின் நிலையம் தொடர்ந்து நான்கு வருடங்களாக அதாவது 2001-02 & 2002-03ஆம் வருடங்களில் தங்க கேடயங்களையும் 2000-01 & 2003-04 ஆகிய வருடங்களில் வெள்ளி கேடயங்களையும் சிறந்த உச்ச கால உற்பத்தி செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து பரிசாகப் பெற்றது.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

தூத்துக்குடி புதிய துறைமுகத்தின் அருகே வங்க கடற்கரையில் சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் மொத்த நிறுவு திறன் 1050மெகாவாட் ஆகும். மொத்தமுள்ள ஐந்து பிரிவுகளும் தலா 210 மெகாவாட் திறனில் நிறுவப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையமானது மொத்தம் மூன்று கட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது.

 • முதற்கட்டத்தில் I & II ஆம் பிரிவுகள் சுமார் ரூ.178 கோடி செலவில் நிறுவப்பட்டது.
 • இரண்டாம் கட்டத்தில் III ஆம் பிரிவு சுமார் ரூ.89 கோடி செலவில் நிறுவப்பட்டது.
 • மூன்றாம் கட்டத்தில் IV & V ஆம் பிரிவுகள் சுமார் ரூ.804 கோடி செலவில் நிறுவப்பட்டது.

அனைத்து பிரிவுகளும் நிலக்கரியினால் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஹாலடியா, பரதீப், விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

நிலையத்தின் விலாசம்/விவரம்

கட்டம்

பிரிவுகள்

திறன் மெகாவாட்

இயக்கத் தொடங்கிய நாள்

தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் - 628OO4. தொலைபேசி- 0461 – 2352521. தொலைபேசி நகலனுப்பி - O461-2352457. இமெயில் – cettps@tnebnet.org

I

1

210

09.07.1979

2

210

17.12.1980

II

3

210

16.04.1982

III

4

210

11.02.1992

5

210

31.03.1991

விருதுகளும் சாதனைகளும்

தூத்துக்குடி அனல் மின் நிலையம் அதிக உற்பத்தி, குறைந்த உபரி மின பயணீட்டளவு மற்றும் குறைந்த எரிபொருள் எண்ணெயின் பயன்பாடு ஆகியவற்றிற்காக பணமுடிப்பு விருதுகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அனல் மின் நிலையங்களுக்கான பண ஊக்கமளிப்பு பரிசு திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.

சிறந்த முறையில் உற்பத்தி செய்வதற்கான பரிசுதிட்டத்தின் கீழ் தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடர்ந்து நான்கு வருடங்களாக அதாவது 2000-2001 முதல் 2003-2004 வரை சிறந்த உச்ச கால உற்பத்தி செய்ததற்கு மத்திய அரசிடமிருந்து தங்க கேடயத்தை பரிசாகப் பெற்றுள்ளது.

2004-2005 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்த மாற்றியமைக்கப்பட்ட விரிவான செயல்பாடு பரிசு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அனல் மின் நிலையம் 2004-2005 வருடத்திற்கு வெண்கல கேடயத்தை மத்திய அரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

2.88235294118
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top