பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கொள்முதல் கொள்கை

தமிழ்நாடு மின்சார வாரிய கொள்முதல் கொள்கை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் வாங்கும் முறை

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வாங்கப்படும் பொருட்கள் ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வாங்கப்படுகின்றன.

1) திறந்த ஒப்பந்தப்புள்ளி:

ஒப்பந்தப்புள்ளிகள் தின செய்தித்தாள்களின் விளம்பரம் மூலம் மற்றும் த.உ.ம.ப.கழகம், அரசு இணையதளங்கள் மூலம் கோரப்படுகின்றன.

2) வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி:

ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி திறந்தமுறை ஒப்பந்தப்புள்ளி கோருவது சிக்கனமாகவோ, பலனுள்ளதாகவோ இல்லை என்று கருதினால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறை மூலமாக நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோரலாம்.

3) தனி ஒப்பந்தப்புள்ளி:

பொருட்கள் வாங்குவது உடனடி உபயோகத்திற்கு தேவைப்படுவதாலும், வாங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டுமே வாங்கப்படும் பொருள் விற்பனைக்கு இருந்தாலோ தனி ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் பொருட்கள் வாங்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் ஒப்பந்தப்புள்ளி குறிப்பீட்டில் உள்ள விதிமுறைகளின்படி தங்களின் விலையினை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் விலை சமர்ப்பிக்கும் போது குறிப்பீட்டில் உள்ளபடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். அல்லது முன் வைப்பு தொகை செலுத்துவதிலிருந்து விலக்கப்படுவதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பொதுவாகவே முன் வைப்பு தொகையின் அளவு பொருட்களின் மொத்த விலையில் 1% என்ற அளவில் இருக்கும்.

ஒரு பகுதி முறை

இதில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று ஒப்பந்தப்புள்ளிகாரர்களின் விலையும், மற்ற விவரங்களும் படிக்கப்படும்.

இரு பகுதி முறை

இதில் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் இரண்டு மூடப்பட்ட உறைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு உறையில் பொருட்கள் விலை குறித்த விபரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும், மற்றோர் உறையில் ஒப்பந்தப்புள்ளி குறித்த இதர விவரங்கள் மற்றும் முன்வைப்பு தொகை இணைக்கப்பட வேண்டும். முன் வைப்பு தொகை தனியாகவும் சமர்ப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று பொருட்களின் விலை நீங்கலாக ஒப்பந்தப்புள்ளி விபரங்கள் மட்டுமே படிக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளிகாரர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் குறிப்பிட்ட பிறிதொரு நாளில் படிக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பில் குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் பெயரும், முன் வைப்பு தொகை விவரம், ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் பொருட்களின் விலை விவரங்கள் ஒரு பகுதி முறையில் அன்றே படிக்கப்படும். பொருட்களின் விலையில் விவரங்கள் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு அதற்கான குழுவினரால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்க்கப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகாரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.

இருபகுதிமுறை ஒப்பந்தப்புள்ளியில், முன்வைப்பு தொகை ஏற்கப்பட்டால் மட்டும் வணிகம் சார்ந்த விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளில் படிக்கப்படும். பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் குறிப்பிட்ட நாளில் அது திறக்கப்படும் வரையில் தகுதியான அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்படும்.

ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிக்காரர்களின் வணிக விவரங்களை ஏற்றால் குறிப்பிட்ட நாளில் மற்றும் நேரத்தில் அவர்களின் பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் திறக்கப்படும். பொருட்களின் விலையில் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு தகுதியான குழுவால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்கப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.

முன்வைப்பு தொகை

ஒருவர் மட்டுமே உள்ள ஒப்பந்தப்புள்ளி தவிர மற்ற ஒப்பந்தப்புள்ளிகளுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இது கொள்முதல் செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். முன்வைப்புத் தொகை கேட்பு வரைவோலையாகவோ வங்கியின் பணம் செலுத்தும் உத்தரவாகவோ இருக்க வேண்டும்.

நிரந்தர முன்வைப்புத் தொகை

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் கீழ்கண்ட முன்வைப்புத் தொகையை நிரந்தர முன்வைப்பு தொகையாக செலுத்தலாம்.

நிரந்தர முன்வைப்பு தொகை

ஒப்பந்தப்புள்ளி மதிப்பு

ரூ. 10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்)

ரூபாய் 10 கோடி வரை

 

ரூ. 20,00,000 (ரூபாய் இருபது லட்சம் மட்டும்)

ரூபாய் 50 கோடி வரை

ரூ. 50,00,000 (ரூபாய் ஐம்பது லட்சம் மட்டும்)

வரையறையில்லை  அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகை, இவை இரண்டில் எது அதிகமோ அத்தொகை செலுத்தப்படவேண்டும்.

வாரியத்தில் நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்திய ஒப்பந்ததாரர்கள், விற்பனை, வேலை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு தலைமையகத்தில் முடிவு செய்யப்படும் ஒப்பந்தப்புள்ளியில் தனியே முன்வைப்பு தொகை கட்டாமல் மேற்கூறிய எல்லைக்கு உட்பட்டு பங்கு பெறலாம். ஒப்பந்தப்புள்ளியில் பங்கு பெறுபவர்கள் தங்கள் கோரிக்கையின்படி தனித்தனியே நிரந்தர முன்வைப்பு தொகையை மேலே குறிப்பிட்டவாறு தக்க தலைமை பொறியாளர்/பகிர்மான மண்டலம், அனல், புனல் மற்றும் இதர மின் திட்டங்கள்/நிலையங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் செலுத்தி தக்க தலைமை பொறியாளர்களின் அனைத்து ஒப்பந்தங்களிலும் தனித்தனியே ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் முன்வைப்பு தொகை செலுத்தாமல், மேற்குறிப்பிட்ட வரையறைக்குள் பங்கு பெறலாம். மேலும், மண்டலம்/திட்டம்/புனல்/அனல் இதர மின் உற்பத்தி நிலையங்களின் ஒப்பந்தப்புள்ளியில் நிரந்தர முன்வைப்பு தொகை செலுத்திய விவரங்களை குறிப்பிட்டு ஒப்பந்ததத்தில் முறையே பங்கு பெறலாம்.

தலைமை பொறியாளரின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள, தனியாக முன்வைப்பு தொகை அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்

3.3
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top