பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி

சர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தியின் கொள்முதல் விலை, மின் சுழற்சி, மின் சேமிப்பு கொள்கை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முகவுரை

அ. சில தொழிற்சாலைகளில் நீராவியானது தொழிற்சாலையின் இயக்குதலுக்கும், உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றம் செய்யப்படுகிறது. இம்முறையில் தொழில் சாலையின் இயங்கும் திறன் குறைவதுடன் வெப்பமும் வீணாக்கப்படுகிறது. இந்த நீராவியை மின் உற்பத்திக்கு பயன்படுத்தும்போது, தொழிற்சாலையின் இயங்கும் திறன் அதிகரிப்பதுடன் மின் உற்பத்திக்கும் ஆதாரமாக இருக்கிறது. இம்முறையானது இணை மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. தமிழ்நாடு அரசும், மின் வாரியமும் சரியான கொள்முதல் விலையினை இணைமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரிய மின் கட்டமைப்பில் சேர்ப்பதற்கு தேவைப்படும் மின் தொடர் மற்றும் அதனைசார்ந்த உபகரணங்கள் ஆகியவற்றை நிறுவிட தேவைப்படும் தொகையை சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடமிருந்து வசூல் செய்யப்பட்டு வாரியமே அந்த வேலைகளைச் செய்து வருகிறது. மின்குறைப்பு இல்லாமல் மொத்த மின் உற்பத்தியும் கொள்முதல் செய்யப்படும். மேற்கண்ட நிலைப்பாட்டினால் அதிக அளவு இணைமின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இ. கரும்பைப் பிழிவதால் கிடைக்கப் பெறும் கரும்பு சக்கையைக் கொண்டு கரும்பு ஆலைகளில் இயங்கும் இணைமின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வாரியமின் கட்டமைப்புகளில் சேர்க்கப்படுகிறது. தற்போது மொத்தம் 659.4 மெகா வாட் திறனுள்ள 29 இணை மின்உற்பத்தி நிலையங்கள் இயக்கத்தில் உள்ளன. பொதுவாக கரும்பு உற்பத்தி அதிகமுள்ள காலங்களில் இந்த மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈ. தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 12 கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகள் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தி அதன் முலம் கரும்பு சக்கை மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி 183 மகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த வேலைகள் நடைபெற்றுவருகிறது.

கொள்முதல் விலை

பழைய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு ரு. 3.15. 15.05.2006-க்கு பின் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு ரு. 3.836 முதல் ரு. 4.491 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சுழற்சி (Wheeling)

இணைமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் உற்பத்தியாளருக்கு சொந்தமான/சார்ந்துள்ள தொழிற் சாலைகளுக்கு மின்சுழற்சி செய்யும்போது 5 விழுக்காடு மின்சுழற்சி கட்டணமாக மின்உற்பத்தியாளரிடம் கழித்துக் கொள்ளப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

3.10344827586
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top