பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பற்றிய அடிப்படை தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி

நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில, மத்திய மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுடன் 13,231.44 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது. இவைத் தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் சேர்த்து 8470.16 மெகாவாட் மின் நிறுவு திறன் அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் குறித்த அக்கறை

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நிலையங்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசினை தவிர்ப்பதற்கான அவசியத்தையும் தனது சமூக பொறுப்பையும் முற்றிலும் உணர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளை எல்லா மின் திட்டங்களின் தொடக்க நிலையிலிருந்து செயலாக்கம் வரையிலும் மற்றும் மின்நிலையங்களின் தினசரி இயக்கத்திலும் ஒருங்கிணைந்து கையாளுவதில் எவ்வித தொய்வுமின்றி மிகவும் முனைப்பாக உள்ளது. மின்உற்பத்தி, குறிப்பாக நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்கள் சுற்றுச்சூழலின் மீது எதிரான தாக்கத்தை கொண்டது. தற்போது தமிழ்நாடு மின் வாரியம் 2970 மெ.வா. மொத்த திறன் கொண்ட நான்கு நிலக்கரி மின் நிலையங்களையும் 516 மெ.வா. மொத்த திறன் கொண்ட நான்கு வாயு மின் நிலையங்களையும் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு மின்வாரியம் தனது தலைமையகத்தில் ஒரு சுற்றுச்சூழல் மேலாண்மை குழுமத்தை நிறுவியுள்ளது. இந்த குழுமத்தில் ஒரு செயற்பொறியாளர், 3 உதவி செயற்பொறியாளர்கள், ஒரு உதவி பொறியாளர் மற்றும் வேதியியலர் ஒருவரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இக்குழுமத்தின் செயல்பாடுகள் கீழ் வருமாறு,

  • மாநில மின் திட்டங்களுக்கு சட்டப்படி தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, சுற்றுச்சூழல் அனுமதி, கடலோர கட்டுப்பாடு அனுமதி, வான்பரப்பியல் அனுமதி போன்ற சட்டரீதியான முன் அனுமதிகளை சம்பந்தப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மாநில சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய வானூர்தி ஆணையம் ஆகியவற்றிடமிருந்து பெற்றுத்தருதல்.
  • எல்லா அனல் மின் நிலையங்களிலும் வருடாந்திர வாயு மண்டல காற்றின் தர ஆய்வு, புகைப்போக்கி சோதனை, நீர்ம கழிவின் பரிசோதனை மற்றும் சுற்றுச்சூழலின் பொதுவான நிலை குறித்த ஆய்வு ஆகியவற்றை நடத்துதல். இதற்க்காக பொறியாளர்கள் குழு ஒவ்வொரு அனல் மின் நிலையத்திலும் சுமார் 10 நாட்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஆய்வு அறிக்கையை தயார் செய்தல்.
  • இந்த அறிக்கையில், தற்போதைய சுற்றுச்சூழல் மாசு குறித்த விவரங்களும் அதற்கு தேவையான நிவர்த்தி நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டு மேல் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட மின் நிலையங்களுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்புதல்.
  • அனைத்து அனல் மின் நிலையங்களின் சுற்றுச்சூழல் சிக்கல்கள் மற்றும் அது குறித்த மேலாண்மை தீர்வுகள் காண்பது மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடனும் ஆணையங்களுடனும் ஒருங்கிணைத்து செயல்படுதல்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் பிற விதி அறிக்கைகள் குறித்து தொடர் நடவடிக்கைகள் எடுத்தல்.
  • புதிய மின் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை சுற்றுச்சூழல் விதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தேர்வு செய்தல்.

மரபு சாரா எரிசக்தி

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் பயன்படுத்தும் முன்னிலை நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக விளங்குகிறது. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிப்பதில் இந்தியாவிலுள்ள மற்ற மாநில மின்சார வாரியங்களை விட தமிழ்நாடு மின்சார வாரியம் தான் முன்னோடியாக விளங்குகிறது.

காற்றாலை மின்சக்தி

தமிழ்நாடுமின்சார வாரியம் முதன்முதலாக 50KW மின் காற்றாலையை ஜனவரி 1986ல் நிறுவியது.

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய காற்று கணவாய்கள்/மாவட்டங்கள் மற்றும் அதன் பகுதிகள்

காற்று கணவாய்களின் பெயர்/ மாவட்டங்கள்

பகுதிகள்

பாலக்காட்டு கணவாய்

கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல்

செங்கோட்டை கணவாய்

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

ஆரல்வாய்மொழி கணவாய்

கன்னியாக்குமரி, இராமநாதபுரம் மற்றும் முப்பந்தல்

கம்பன் கணவாய்

தேனி, கம்பம் மற்றும் ஆண்டிப்பட்டி

இராமேஸ்வரம்,முல்லைக்காடு கடலோர பகுதி

இராமேஸ்வரம், பூம்புகார் மற்றும் முல்லைக்காடு

தாவர சக்தி மூலம் மின் உற்பத்தி

தாவர சக்தி மூலம் மின் உற்பத்தியின் கொள்முதல் விலை, மின் சுழற்சி, மின் சேமிப்புக் கொள்கை

அ) தாவர எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களில் தாவர எரிபொருள்களான/கருவேலமுள், மரத்துண்டுகள், அரிசி உமி, கரும்பு தோகை, வேர்க்கடலைத் தோல், மரவள்ளிக் கிழங்கு வேர் (காய்ந்தது), மரத்தூள், குச்சி கழிவு மற்றும் சோளத்தட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் நார் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது.

ஆ) 23 தாவர எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தி நிலையங்கள் 175 மெ.வா மின்திறனுடன் நிறுவப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இ) தமிழ்நாடு மின்சாரவாரியம் பின்பற்றும் வாங்கும் விலை, மின் சுழற்சி, மின்சேமிப்பு மற்றும் மின் உற்பத்தியாளர்களை மின் வாரியத்தின் மின் கட்டமைப்பில் செயல் படவைத்தல் போன்ற உதவிகரமான கொள்கையால் தாவர எரிபொருள் சார்ந்த மின் திட்ட உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

I. கொள்முதல் விலை:

பழைய மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு ரு.3,15. 15.05.2006-க்கு பின் அமைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை யூனிட் ஒன்றிற்கு ரு.4,205 முதல் ரு.4.651 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

III. மின்சுழற்சி (Wheeling)

இணை மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் உற்பத்தியாளருக்கு சொந்தமான/சார்ந்துள்ள தொழிற் சாலைகளுக்கு மின்சுழற்சி செய்யும்போது 5 விழுக்காடு மின்சுழற்சி கட்டணமாக மின்உற்பத்தியாளரிடம் கழித்துக் கொள்ளப்படுகிறது.

III. மின் சக்தி வெளியேற்றம் (Power Evacuation):

உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் மின்வாரியத்திற்கே விற்பனை செய்யும் பட்சத்தில் தாவர எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தி நிலையத்தை மின்வாரிய கட்டமைப்பில் சேர்ந்து செயல்படவைப்பதற்கு தேவைப்படும் செலவை, வாரியமே ஏற்று அவ்வேலையை செய்துமுடிக்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

2.85365853659
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top