பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மக்கள் உரிமைப் பட்டயம்

மக்கள் உரிமைப் பட்டயம் / மக்கள் சாசனம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தேவை

மக்கள் உரிமைப் பட்டயம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மக்களுக்கு ஆற்றும் பணிகளுக்கானத் தரத்தையும் தரநிலையையும் வரையறுக்கிறது.

பட்டயத்தின் நோக்கங்கள்

  • நிறுவனத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மக்கள் முன்வைத்தல்
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆற்றும் பணிகளை அறிமுகம் செய்தல்
  • பணிகளின் தரநிலைகளை எடுத்துக் கூறல்

தமிழ்நாடு மின்சார வாரியம் - ஒரு கண்ணோட்டம்

முந்தைய சென்னை அரசாங்க மின்சாரத் துறைக்கு மாற்றாக அத்துறையின் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற 1948 ஆண்டின் மின் வழங்கல் சட்டத்தின் அடிப்படையில் 01.07.1957 ஆம் நாளன்று தமிழ் நாடு மின்சார வாரியம் என்ற அரசு சார் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. தற்பொழுது மின்சார சட்டம் 2003-ன்படி, நிகர்நிலை பகிர்மான உரிமைதாரராகவும் மற்றும் மின் செலுத்துதல் நிறுவனமாகவும் இருந்து வருகிறது.

மின் ஆக்கம்

இந்தியா விடுதலை பெற்ற தொடக்க நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மொத்த நிறுவு திறனாக 156 மெகா வாட்டையும் மொத்த ஆண்டு மின்னாக்கமும் கொள்முதலும் செய்த ஆற்றல் அளவாக 630 மில்லியன் மின் அலகுகளையும் கொண்டு எளிய பாங்கில் மக்களுக்கானத் தனது பணியைத் தொடங்கியது. தற்போது (31.3.07 அன்று வரை) 10098 மெகாவாட் நிறுவு திறனளவுக்கு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2006-07 ஆண்டு வாரியம் 63,038 மில்லியன் மின் அலகுகள் அளவுக்கு மின் ஆற்றலை உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் செய்தது.

மின் செலுத்தமும் பகிர்வும்

தமிழ் நாடு மின்வாரியம் 185.82 இலட்சம் நுகர்வாளர்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. வாரிய மின் கட்டமைப்பில் 1,54,104 கிலோ மீட்டர் (கி.மீ) நீளச் சுற்றமைப்புகள் கொண்ட உயர்வழுத்த மின் தொடர்கள், 5.02 லட்சம் கிலோ மீட்டர் தாழ்வழுத்த மின் தொடர்கள் மேலும் 1148 துணை மின் நிலையங்களும் உள்ளன. 1,73,053 பகிர்மான மின் மாற்றிகளும் தற்போது இயக்கத்தில் உள்ளன. ஊரக மின் வழங்கல் பணியில் 31.3.07-ஆம் நாளையக் கணக்கெடுப்பின்படி 63,956 ஊர்களும், சிற்றுார்களும் மற்றும் கிராமங்களும் மின்சார இணைப்புப் பெற்றுள்ளன. இதோடன்றி 18.02 இலட்சம் வேளாண்மை நீர்உந்து அணிகளும் (Agricultural Pumpsets) 10,20,509 குடிசைகளும் மின் இணைப்புப் பெற்றுள்ளன.

நலமிக்க பணிபுரிவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்திரத் தொகுதிகள், கருவி, தளவாடங்கள் போன்றவற்றை மட்டும் புதுமைப் படுத்தித் தரமுயர்த்துவதோடு நிற்கவில்லை, பணியாளர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களது பணிசெய்யும் தரத்தையும் மேம்படுத்தப் பாடுபட்டு வருகிறது.

பணிகளின் தரநிலைகள்

மக்களுக்கு உயர்ந்த தரநிலையில் பணிபுரிய உறுதிபூண்டு பணிபுரிந்து வருகிறது. இந்த உரிமைப் பட்டயம் பணிகளின் தர நிலைகளை வரையறுக்கிறது.

பணி செந்தரங்கள் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்டவை)

மின் இணைப்பு வழங்கல்

தாழ்வழுத்த மின் இணைப்பு

வகையினம்

கால அட்டவணை

அ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்துதல் இல்லாமல் மின்னிணைப்பு அளித்தல்.

பொதுவாக 1 வாரத்திற்குள் ஆனால் 30 நாட்களுக்கு மேல் மிகாமல்

ஆ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின் மாற்றி இல்லாமல் மின்னிணைப்பு அளித்தல்

60 நாட்கள்

இ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின் மாற்றி வைத்து மின்னிணைப்பு அளித்தல்

90 நாட்கள்

உயர்மின்னழுத்த மின் இணைப்பு

வகையினம்

கால அட்டவணை

உயர் மின்அழுத்தம்

அதிக உயர் மின்அழுத்தம்

(அ) மின் நீட்டிப்பு மற்றும் மேம்படுத்தலுடன் மின்னிணைப்பு அளித்தல்

60 நாட்கள்

150 நாட்கள்

(ஆ) மின் மாற்றி திறன் மிகைப்படுத்துதல் / கூடுதல் மின்மாற்றி வைத்து மின் இணைப்பு அளித்தல்

120 நாட்கள்

180 நாட்கள்

(இ) துணை மின் நிலையம் அமைத்து மின் இணைப்பு அளித்தல்

180 நாட்கள்

270 நாட்கள்

குறிப்பு: கூடுதல் மின்சுமைகள் தரவும் இக்கால அட்டவணைகள் பொருந்தும். விவசாயம் மற்றும் குடிசை மின் இணைப்புகளுக்கு, தேசிய மின்சார கொள்கையில் வகுக்கப்படும் வழிகாட்டுதலின் படியும், மாநில அரசு வகுக்கும் நெறிமுறைகளின்படியும் அவ்வப்போது தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.

தற்காலிக மின் வழங்கல்

விழாக்களுக்கு ஒளியூட்டவோ, உறைவதற்கான வீடுகளுக்கோ, அடுக்கு வீடுகளுக்கோ, வணிக வளாகங்களுக்கோ, தொழிலக இருப்பிடங்களுக்கோ தேவைப்படும் கட்டுமானப் பணிகள் செய்யவோ மற்றும் பிறவற்றுக்காகவோ அத்தகைய விருப்பம் உள்ள நுகர்வோர்கள் தற்காலிக மின்னிணைப்புகள் தேவையெனக் கோரினால், அத்தகைய தற்காலிக மின்னிணைப்புகளையும் புது மின்னிணைப்பு மற்றும் கூடுதல் சுமை வழங்கக் குறிப்பிடப்பட்டுள்ள அதே கால தவணை அட்டவணையின்படி தரப்படும்.

மின் இணைப்பு இட மாற்றம், மின் தொடர்களின் தட மாற்றம், சாதனங்களின் இட மாற்றம்

பின்வரும் கால அட்டவணையைப் பின்பற்றப்படும்.

1. மின் அளவி / மின்னிணைப்பு இடமாற்றம் : 25 நாட்கள்

2. தாழ்வழுத்த / உயர் அழுத்த மின் தொடர் தடமாற்றம் : 60 நாட்கள்

3. மின் மாற்றிக் கட்டமைப்பு இடமாற்றம் : 90 நாட்கள்

மேல்குறிப்பிட்ட பணிகளை அதற்குண்டான செலவினங்களை பெற்ற பின் செய்து முடிக்கப்படும்.

மின் இணைப்பு பெயர் மாற்றம்

முழுமையான விண்ணப்பத்தைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும்.

கட்டண வீத மாற்றம்

விண்ணப்பம் பெற்ற தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் கட்டண வீத மாற்றம் செய்யப்படும்.

வேளாண்மை மின்னிணைப்புக் கட்டண வீதமில்லாத தாழ்வழுத்த மின்னிணைப்பு எதையும் எந்தவொரு நுகர்வோரும் வேளாண்மை சார்ந்த தாழ்வழுத்த மின்னிணைப்புக் கட்டண வீதத்துக்கு மாற்ற அனுமதியில்லை.

பட்டியல் சம்மந்தப்பட்ட முறையீடுகள்

நுகர்வோரிடமிருந்து பட்டியல் சம்மந்தப்பட்ட பிழையைப் பற்றிய எந்த முறையீடுகளும், கட்டணம் செலுத்த வேண்டிய கெடுநாளுக்கு முன்பே பெறப்பட்டால் அடுத்தப்பட்டியலிடும் முன்பு தீர்க்கப்படும். எண்ணிக்கையில் தவறு போன்ற முறையீடுகள், கட்டணம் செலுத்த வேண்டிய கெடு நாளுக்கு மூன்று நாட்கள் முன்பு பெறப்பட்டால், அந்தக் கெடுநாட்களுக்குள்ளேயே சரிசெய்யப்படும். என்றாலும், கட்டணம் சரியில்லாமையைச் காரணமாகக் கொண்டு, நுகர்வோர், செலுத்த வேண்டிய கட்டணத்தின் எப்பகுதியையும் கட்டாமல் நிறுத்தி வைக்கக் கூடாது.

மின்னளவி மாற்றி வைத்தல்

முறையீடுகள் வழியாகவோ அல்லது மின்னளவி ஆய்வின் போதோ, ஒரு மின்னிணைப்பில் உள்ள மின்னளவி பழுதுற்றோ, எரிந்தோ, அளவு சரியில்லாமலோ இருப்பதாக அறிந்தால், அத்தகைய மின்னளவியை, உரிய கட்டணங்களை வசூலித்து முப்பது நாட்களுக்குள் சரியான வேறு மின்னளவி கொண்டு மாற்றி வைக்கப்படும்.

மின்வழங்கலில் நேரும் மின்தடங்கல்/மீட்பு காலம்

மின் தடங்கல் ஏற்படும் நிகழ்வுகளில் கீழ்க்காணும் அட்டவணைப்படி மின் வழங்கலை மீட்டுத்தரப்படும்.

மின்தடங்களின் காரணம்

மின் வழங்கல் மீட்பு நேரம்

பெருநகரம்

நகரம்/நகராட்சி

ஊரகம்

மலைப்பகுதி

உயர் அழுத்த மின் வழங்கல் பொய்த்தல்

1 மணி

3 மணி

6 மணி

12 மணி

கம்பப் பெட்டியில் அல்லது மின் மாற்றிக் கட்டமைப்பில் பிழை

2 மணி

4 மணி

6 மணி

12 மணி

பகிர்மான மின் மாற்றிப் பிழை

24 மணி

48 மணி

48 மணி

48 மணி

தனி மின்னிணைப்பு பிழை

3 மணி

9 மணி

12 மணி

24 மணி

மாநகராட்சி எல்லைக்குள் இல்லாத நகரிய மற்றும் ஊரக நுகர்வோர்களிடமிருந்து இரவு நேரங்களில் பெறப்படும் மின் தடங்கல்கள் / மின் பொய்த்தல்கள் பற்றிய முறையீடுகளைப் பொறுத்தவரையில் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் பணிபுரிந்து மின்வழங்கலை மீட்டுத் தரப்படும்.

திட்டமிட்ட மின்வழங்கலை நிறுத்தல்

மின்பகிர்மான அமைப்பை மேம்படுத்திச் செம்மையான முறையில் மக்களுக்குப் பணிபுரியவோ, புது மின்னிணைப்புத் தரவோ திட்டமிட்டே மின்சாரத்தினை நிறுத்திட அவ்வப்போது மின்தடங்கல் ஏற்படும். இப்படித் திட்டமிட்டே மின்சாரத்தை நிறுத்தும் போது இத்தகவல் செய்தித்தாள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

மின்னிணைப்புகளின் மீளிணைப்பு

மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுதல். இந்நிலையில் நீங்கள் நிலுவையுடன் நடப்பு மின்கட்டணத்தையும் செலுத்தியதும் உங்களது மின்னிணைப்பு மீள இணைத்து மின்சாரம் வழங்கப்படும்.

உங்களது குறைகளைக் களையும் வழிமுறைகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்யும் பணிகளில் உங்களுக்குக் குறையோ வேறு சிக்கலோ இருந்தால் நேரடியாக வந்தோ, தொலைபேசி வழியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ உரிய பிரிவு அலுவலரிடம் அல்லது உட்கோட்ட அலுவலரிடம் முறையிடலாம். மேலும் கூடுதல் அதிகாரமுள்ள அலுவலருக்கு முறையிடவேண்டுமென நீங்கள் கருதினால், உரிய கோட்டப் பொறியாளரிடமோ அல்லது மேற்பார்வைப் பொறியாளரிடமோ அல்லது தலைமைப் பொறியாளரிடமோ முறையிடலாம். அல்லது பணி நாட்களில் அவர்களது அலுவலகத்துக்குச் சென்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலான பார்வை நேரத்தில் நேரடியாகவும் முறையிடலாம். நீங்கள் சென்னை - 600 002, அண்ணாசாலை, 144 இலக்கத்தில் உள்ள தலைமையக உயர்நிலை அலுவலர்களிடம், அதாவது வாரிய உறுப்பினர் (மின்பகிர்மானம்) அல்லது வாரியத்தலைவரிடம், முறையிட்டுத் தங்களது குறைகளைக் களைந்திடலாம்.

மேற்கூறும் முறைகளில் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க உங்கள் பகிர்மான வட்டக் கோட்ட அலுவலகத்துக்கு மாதமொருமுறை மேற்பார்வைப் பொறியாளர் குறைதீர்ப்பு நாளில் வருவார். இந்தக் குறைதீர்ப்பு நாளின் தேதி முன் கூட்டியே கோட்ட அலுவலக விளம்பரப் பலகையில் அறிவிக்கப்படும். என்று குறைதீர்ப்பு நாள் என்பதைத் தொலைபேசி மூலம் மின்சார வாரிய அலுவலகங்களில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். குறைதீர்ப்பு நாளில் கோட்ட அலுவலகத்துக்கு வந்து முறையிட்டு உங்களது குறைகளை எளிதில் களையலாம்.

அனைத்து மின் பகிர்மான வட்ட அலுவலகங்களிலும் ஒரு மக்கள் தொடர்பு அலுவலர் பணிபுரிகிறார். அவர் உங்களது குறைகளைக் கேட்டு அவற்றைக் களையத் தக்க ஏற்பாடுகளைச் செய்வார். மேலும் சென்னைத் தலைமையகத்திலும் ஒரு தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் பணிபுரிகிறார் (தொ.பே.எண்: 28520902). இவரை அணுகினால் இவரும் தங்களுக்கு வழிகாட்டுவார்.

மின்பகிர்மான மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் நுகர்வாளர் அமைப்புகளுடன் கருத்துப் பரிமாற்றக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். உங்கள் வட்டாரத்துக்கானப் பொதுவான சிக்கல்கள் குறித்து அந்தக் கூட்டங்களில் நீங்கள் அறிவிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் பகுதியில் அடிக்கடி தாழ் மின்னழுத்தம் ஏற்பட்டால் அதைப் பற்றிய தகவல் பெற்றதும் மின்சார வாரியம் உங்கள் பகுதியில் அமைந்த மின் சுற்றமைப்புகளில் எப்படிச் சுமை பரவியுள்ளது என ஆய்வு செய்து தேவைப்பட்டால் புதுத் துணைநிலையமோ/புது மின்மாற்றிக் கட்டமைப்புகளோ அமைக்க ஏற்பாடு செய்யும். அல்லது மின்சாரம் வழங்கும் தாழ்/உயர் மின்னழுத்தத் தொடர்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும். இதனால் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் தாழ் மின்னழுத்தக் குறைபாடு தீர்க்கப்படும்.

கணினிமயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நுகர்வோர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மின் தடை புகார்களை 155333 என்ற 6 இலக்க தொலைபேசி எண்ணில் எங்கிருந்தும் பதிவு செய்யலாம். மின் தடை நீக்கும் மையத்தில், நுகர்வோரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டு புகார் எண் நுகர்வோருக்கு கொடுக்கப்படும்.

மின்நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்டவை) ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட அலுவலுகங்களிலும் தொடங்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மின் நுகர்வோர் தங்களது குறைகளை தீர்க்க மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் மன்றத்தை அணுகலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

2.96078431373
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top