பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஒரு நாள் மின் இணைப்பு திட்டம்

ஒரு நாள் மின் இணைப்பு திட்டம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தாழ்வழுத்த வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான ஒரு நாள் மின் இணைப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், மின்இணைப்பு கோரும் வீட்டுக்கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் (சிறப்பு மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் தவிர்த்து) மின்வாரியத்தின், மின்கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியிலிருந்து 100 அடிக்குள் இருந்தால், விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும். மின்இணைப்பு கோரும் வீடு மற்றும் வணிக இடமானது, புதைவடம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தால், விண்ணப்பம் அளித்த 48 மணி நேரத்திற்குள் மின்இணைப்பு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையதளத்தின் (WWW.tangedco.gov.in) வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பதாரர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்குண்டான ஆவணங்களின் நகலினை இணைத்து, இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பத்தை பதிவு செய்யும் பொழுதே முழுவதுமாக செலுத்திவிடலாம்.

வ.எண்

கட்டண விவரம்

வீட்டு உபயோகத்திற்காக

வணிக உபயோகத்திற்காக

ஒரு முனை மின்இணைப்பு

மும்முனை மின்இணைப்பு

ஒரு முனை மின்இணைப்பு

மும்முனை மின்இணைப்பு

1

பதிவு கட்டணம்

50/-

50/-

50/-

50/-

2

மின் இணைப்பு கட்டணம்

250/-

500/-

250/-

500/-

3

மின் அளவி காப்பீட்டு கட்டணம்

700/-

2500/-

700/-

2500/-

4

வளர்ச்சி கட்டணம்

400/-

1400/-

400/-

200/- ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும்

5

ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம்

200/-

600/- ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும்

200/-

600/- ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும்

 

மொத்த கட்டணம்

1600/-

4450/- மற்றும் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும் 600/- ரூபாய் வீதம்

1600/-

3050/- மற்றும் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும் 800/- ரூபாய் வீதம்

புதைவட பகுதியில் உள்ள மின்விண்ணப்பதாரர், மதிப்பீட்டு கட்டணம் ஏதாவது இருந்தால், அதை முதல் மின் பயன்பாட்டு கட்டணத்தோடு சேர்த்து கட்டவேண்டும். இந்த மதிப்பீட்டு கட்டணமானது விண்ணப்பதாரருக்கு அறிவிப்பு/மின் அஞ்சல்/குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

மேலும், விண்ணப்பதாரர் புதைவடம் மற்றும் இதர பொருட்களை மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரியத்திற்கு வழங்க தேவையில்லை. இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் மின்வாரிய அலுவலகத்திற்கு வராமல் அவருடைய இடத்திலிருந்தே விண்ணப்பித்து அதற்குண்டான கட்டணங்களை இணையதளம் மூலமாகவே செலுத்தி உடனடியாக மின் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இது சம்மந்தமாக ஏதாவது புகார் இருப்பின் விண்ணப்பதாரர் மின்வாரிய விழிப்பு பணி தலைவர் (DGP/Vigilance) அவர்களுக்கு கீழ்கண்ட முறையில் புகார்களை தெரிவிக்கலாம்.

மின் அஞ்சல் : adgp@tnebnet.org

தொலைபேசி : 044-28520416

தொலைநகல் : 044-28520749

ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

2.67857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top