অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பாதுகாப்பு குறிப்புகள்

பாதுகாப்பு குறிப்புகள்

செய்யக்கூடியவை

  • ஐ.எஸ்.ஐ (SI) முத்திரை பொறிக்கப்பட்ட மின்பொருட்களை,  சான்றளிக்கப்பட்ட எலக்டீரிஷியன் மூலம் மட்டுமே பொருத்தவும்.
  • வீட்டில் உள்ள ஒயரிங்கை, அவ்வப்பொழுது சரி பார்த்து, பழுது இருந்தால் உடனுக்குடன் சரி செய்யவும்.
  • வெளியே செல்லும் பொழுது, அறுந்து கிடக்கும் மின்கம்பியினைக் கண்டால், அதனருகில் செல்லாமல், உடனே அருகிலிருக்கும் மின் அலுவலகத்திற்கு தெரிவிக்கவும்.
  • குழந்தைகள் காற்றாடி கொண்டு விளையாடும் பொழுது, மேல் நிலை மின்கம்பிகள் செல்லும் இடத்திற்கருகில் செல்லாமல் கண்காணிக்கவும்.
  • கோவில் தேர் திருவிழா சமயத்தில், தேரானது மின்சார கம்பிகளில் பட்டு விபத்து ஏற்படாமல் தடுக்க, பொது மக்கள் மற்றும் விழா நடத்தும் கோவில் நிர்வாகிகள் தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழகத்திற்குட்பட்ட பிரிவு/உபகோட்டம்/ கோட்டம்/வட்டம் மின் அலுவலகத்தில் முன்னமே தெரிவித்தால், தேர் செல்லும் பாதையில் மின்சாரத்தை துண்டித்து விபத்து நடப்பதை தடுக்கலாம்.
  • வேறு வேலைகளுக்காக பூமிக்கடியில் தோண்டும்போது மின் புதைவடங்கள் செல்வதை கவனித்து வேலை செய்யவும்.
  • 5 கி.வாட் மற்றும் அதற்கு மேல் மின்பளு உபயோகிப்பவர்கள் எர்த் லீகேஜ் ப்ரோடெக்‌ஷன் (Earth leakage protection device) கருவியை ஒவ்வொரு மின்சாதனத்திலும் பொருத்தவும்.

செய்யக்கூடாதன

  • மின்கம்பிகளில் ஈர துணிகளை உலர்த்தக்கூடாது, உலர்த்தினால் உயிரிழக்க நேரிடும்.
  • மழைக்காலங்களில் மின்கம்பம், மின்கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பி, வேலி ஆகியவற்றின் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்கவும்.
  • மின்கம்பங்களை, பந்தல் போடும் மற்றும் விளம்பரம் செய்யும் துாணாக பயன்படுத்த வேண்டாம்.
  • மின்கம்பங்கள் அல்லது மின்கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பிகளில் பண்ணை/வீட்டு விலங்கினங்களை கட்டக்கூடாது.
  • மேல் நிலை மின்கம்பிகள் அருகில் வீடு கட்டக்கூடாது. வீடு கட்டுவதற்கு முன்பு அருகில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தின் ஆலோசனையை பெற்று தீர்மானிக்கவும்.
  • மின்மாற்றி மற்றும் துணை மின் நிலையங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிகளை அசுத்தம் செய்ய வேண்டாம்.
  • லாரி போன்ற வாகனங்களை மேல் நிலை மின்கம்பிகள் செல்லும் இடங்களில் நிறுத்தவோ (ம) பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ செய்யக்கூடாது.
  • மேல் நிலை மின்கம்பியின் மின் வில் (Arcing Distance) துாரத்தின் அருகில் ஏணி போன்ற உயரமான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தவிர்க்கவும்.
  • மின்வேலி அமைத்தல் உயிர் பலிக்கு வித்திடும். மின்வேலி அமைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது.
  • தகாத மின் வேலைகளை தரமற்ற மின்பொருட்களை கொண்டு செய்யக்கூடாது மற்றும் உரிய அனுமதியில்லாமல் வேறு கட்டிடங்களுக்கு மினசாரம் கொண்டு செல்லக்கூடாது.
  • உங்களுடைய வசதிக்காக, மின் நிலை நிறுத்திகளை வெட்டவோ, நசப்படுத்தவோ கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate