பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவங்கள்

எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி சேமிப்பு

இந்த பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேண்டியவற்றைத் தருமே தவிர ஒவ்வொருவரின் பேராசையைத் திருப்திப் படுத்துமளவிற்கு அல்ல.

  • நாம் எரிசக்தியை உற்பத்தி செய்யும் வேகத்தைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் செலவழிக்கிறோம்-நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை மிகப்பெரும் அளவில் பயன்படும் வளஆதாரங்கள். இவை உருவாவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன
  • எரிசக்தி வள ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன-இந்தியாவில் உலக எரிசக்தி வள ஆதாரத்தில் 1% மட்டுமே இருக்கிறது. ஆனால் உலக மக்கள்தொகையில் 16% இந்தியாவில் உள்ளது.
  • நாம் பயன்படுத்தும் எரிசக்தி வள ஆதாரங்களில் பெரும்பாலானவை, மறுபடியும் பயன்படுத்தக் கூடியதாகவோ புதுப்பிக்கப்படக்கூடியதாகவோ இல்லை- மறுபடி புதுப்பிக்கப்பட முடியாத எரிசக்திதான் 80% எரிபொருளாகப் பயன்படுகிறது. நம்மிடமுள்ள எரிசக்தி வள ஆதாரங்கள் இன்றும் 40 வருடங்கள் வரையில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது
  • நாம் எரிசக்தியைச் சேமித்தால், நாட்டிற்காக பெரும் பணத்தைச் சேமிப்பதற்கு சமம்- நமது கச்சா எண்ணெய் (குரூட் ஆயில்) தேவையில் 75% இறக்குமதி மூலமே நிறைவேற்றப் படுகிறது. இதற்கான செலவு வருடத்திற்கு ரூ. 1,50,000 கோடி
  • நாம் எரிபொருளைச் சேமிப்பதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கிறோம்- உங்களது எல்பிஜி சிலிண்டர் ஒரு வாரம் அதிகமாகப் பயன்பட்டாலோ, உங்களது மின்சாரக் கட்டணம் குறைந்தாலோ, எந்த அளவுக்கு சேமிக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்
  • எரிசக்தியை சேமிப்பதன் மூலம் நமது சக்தியை நாம் சேமிக்கிறோம்.- நாம் விறகுகளை சிக்கனமான முறையில் எரிக்கப் பழகினால், அதைக் சேகரிக்கத் தேவையான வேலைபளு குறைவாகும்.
  • சேமிக்கப்பட்ட எரிசக்தி, எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமமாகும்- நாம் ஒரு யுனிட் மின்சாரத்தைச் சேமித்தால், அது 2 யூனிட்டுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம்.
  • சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க, எரிசக்தியை சேமியுங்கள் - எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியன, காற்று மாசுபடுவதற்கும் மிகப் பெரிய காரணிகள்

இந்தியப் பழமொழி ஒன்று சொல்வது போல, “இந்த பூமி, நீர், மற்றும் காற்று ஆகியன நமது பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்ற பரிசு அல்ல மாறாக, நமது குழந்தைகளிடமிருந்து நாம் பெற்ற கடன்”

மூலம்: எரிசக்தி சேமிப்பு பணி, ஐதராபாத்

தொடர்புடைய வளங்கள்

3.01111111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top