பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீர் சேமிப்பதற்கு மிக எளிய சிறந்த முறையைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

 

மழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீர் சேமிப்பதற்கு மிக எளிய சிறந்த முறையாகும்.  தற்போதைய புள்ளிவிவரப்படி, வீடுகளின் மேற்கூரை,  திறந்தவெளி,  மற்றும் சாலைகளில் விழக்கூடிய மழைநீரானது கழிவுநீர் மற்றும் வெள்ள நீர்க் கால்வாய்கள் மூலமாக இறுதியில் ஆறு அல்லது கடலை சென்றடைகிறது.  இந்த மழைநீரை வடிகட்டியபின் மறுசெரிவுக் கிணறு அல்லது நிலத்தடி நீர்தொட்டிகளில் சேமித்து வைக்கலாம்.

110 செ.மீ. மழை பெறக்கூடிய 100 சதுரமீட்டர் நிலப்பரப்பானது, 66,000 லிட்டர் நீரை தேக்கிவைக்கக் கூடிய திறன் கொண்டது.  இந்த நீர் சராசரியாக 4 நபர்கள் கொண்ட குடும்பத்தின் வருடாந்திர நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது.

வாழ்க்கையெனும் ஒரு சிக்கலான வலை

கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரிகள் முதல் மிகப்பெரிய டைனோசர்கள் வரை ஒரு காலத்தில் இப்பூமியில் உலவித் திரிந்த அனைத்து உயிரினங்களும், இரைகளாகவும் வேட்டையாடி உண்ணும் விலங்குகளாகவும், மகரந்த துகள்களை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு கடத்தும் உயிரினங்களாகவும் சூழலியலில் தங்களுக்கென்ற இருந்த பணியை சிறப்பாக செய்து வந்திருக்கின்றன.  இந்த நுண்ணிய சிக்கலான வலை அமைப்பை உற்று நோக்கும்பொழுது சூழலியலில் ஒவ்வொரு சிற்றினமும் மற்றொன்றை சார்ந்தோ அல்லது வேறொரு உயிரினத்திற்கு உணவாகவோ இருந்து வந்திருக்கிறது.

ஒருசிறிய சிற்றினத்தின் அழிவு கூட அதனைக் சார்ந்துள்ள மற்ற உயிரினங்களையோ அல்ல அது சார்ந்துள்ள உயிரினங்களையோ மிகப்பெரிய  அளவில் பாதிக்கக்கூடும்.

இயற்கை என்னும் பண்டக சாலை

ஒரு சூழல் அமைப்பில் உள்ள ஒரு சிற்றினத்திலேயே அதன் தோற்றத்திலோ அல்லது அதன் பண்புகளிலோ சிறு சிறு மாற்றங்கள் கொண்ட பல உயிரினங்களைக் காணமுடியும்.  இவை அனைத்தும் தங்கள் சூழலில் இணைந்து வாழ்வதற்கும், எதிரிகளிடமிருந்தும், பல்வேறு அபாயங்களிலிருந்தும் தங்களைக் காத்துகொள்ளும் வகையிலும் இயற்கை அவற்றை படைத்திருக்கிறது.  இவற்றையே பல்லுயிர் வளம் என்கிறோம்.

உலகத்தில் வெப்பமண்டல மழைக்காடுகளில் மூன்றில் ஒரு பாகம் பிரேசில் நாட்டில் உள்ளது.  இதுவே உலக நிலப்பரப்பில் ஏழில் ஒரு சதவீதம் ஆகும்.  இத்தகைய காடுகளைக் கொண்டு உலக உயிரினங்கள் அனைத்தும் பயன்பெறுகின்றன. 80% அதிகமான இவ்வகை காடுகள் உலகின் தென்பகுதியில் காணப்படுகின்றன.


மழைநீர் சேகரிப்பு

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

Filed under:
2.83870967742
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top