பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்

மழைநீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகள்

மழைநீர் சேகரிப்பு

மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துதல்

மழை சேகரிப்பு என்றால் என்ன?

 • மழை பெய்யக் கூடிய பகுதிகளில் வடியும் நீரைசேகரித்து, சேமித்தலே இதன் முக்கிய நோக்கமாகும்.
 • முன்பிருந்த பழைய முறையே இப்பொழுது புதிய வழியில் பின்பற்றப்படுகிறது.
 • பாலஸ்தீன் மற்றும் கீரிஸில் 4000 வருடங்களுக்கு முன்பே இந்த முறை வழக்கத்தில் இருந்தது.
 • பழங்கால ரோம் நகரத்தில், குடியிருப்புகளில் தனித்தனியாக நீர் பிடிப்பு குழிகள் கட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மழை நீரை சேகரித்து, பாசனத்திற்கு பயன்படுத்தினர்.
 • நிலத்தடி நீரை செயற்கை முறையில் அதிகப்படுத்துதல் என்பது நிலத்தடி நீர் மட்டத்தை இயற்கை சூழ்நிலையில் அதிகப்படுத்துவது. நீர்த்தேங்கக்கூடிய பகுதிகளில் மனிதனால்  ஏற்படுத்தபடுத்தப்பட்ட அமைப்பும் செயற்கை முறையில் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதாகும்.

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம்

 • நில மேற்பரப்பு நீர் நம்முடைய தேவைகளுக்கு போதுமானவையாக இல்லை. ஆகவே நாம் நிலத்தடி நீரை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.
 • நகரமயமாதலால், நிலத்தடி நீரின் அளவும் வேகமாக குறைகிறது. அதனால் நிலத்தடிநீரின் மட்டத்தை உயர்த்த வேண்டியுள்ளது.

மழைசேகரிக்கும் முறைகள்

முக்கியமான முறைகளில் மழை நீரை சேமிக்கலாம்

 1. நிலத்தின் மேல் வழிந்தோடும் நீரை எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்தல்
 2. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல்

வழிந்தோடும் மழைநீரை சேமித்தல் என்பது பராம்பரிய முறையாகும். நிலத்தடித் தொட்டிகள், குட்டைகள், தடுப்பணைகள் போன்றவை இதில் அடங்கும்

நிலத்தடி நீர் மட்டத்தை உயிர்த்துதல்

குழிகள்

தாழ்வான பகுதிகளில் 1-2 மீட்டர் அளவு அகலம் 3 மீ ஆழமுள்ள புதிய குழிகளை சிறு கற்கள் கொண்டு சுற்றியும் அடியில்  மணல் நிரப்பியும் அமைக்க வேண்டும்.

அகழிகள்

நீர் உட்செல்லும் போது, மிகக் குறைவான ஆழத்தில் அகிழிகள் அமைக்கப்படுகின்றன. இந்த அகிழிகள் நீரின் அளவை 0.5  பொறுத்து 1 மீ.அகலம், 1.5 மீ ஆழம், 10-20 மீ நீளம் என்ற அளவில் அமைக்கப்படுகின்றன.

கிணறுகள்

முன்பே இருக்கின்ற கிணறுகளை இதற்குப் பயன்படுத்தலாம். கிணற்றில் நீரை விடுவதற்கு முன் வடிகட்டியின் மூலம் செலுத்தி பிறகு விடவேண்டும்.

கைப்பம்புகள்

முன்பே இருக்கின்ற கைப்பம்புகளை நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். கைபம்பிற்கு நீரை விடுவதற்கு முன், நீரை வடிகட்டும் ஊடகம் வழியாக செலுத்தி, பின் கைப்பம்பில் விட வேண்டும்.

கூரை மற்றும் நிலப்பகுதிகளில் நீர் சேகரிக்கும் அமைப்பு

நோக்கம்

வழிந்தோடும் மழை நீரை சேகரிப்பதன் மூலம் கிணறுகளை (திறந்த குழாய் கிணறுகள்) குறிப்பாக பயன்படாத கிணறுகளை மறு ஊட்டம் செய்தல்.

சேமிக்கும் வசதி இருந்தால், சேகரிக்கப்பட்ட நீரை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளுதல்

சிற்பபியல்புகள்

 • ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொகுப்பாக உள்ள கட்டிடங்களிலிருந்து, பல விட்டங்களை உடைய பி.வி.சி. குழாய்கள் மூலம் சேகரிக்கலாம்.
 • கீழே படியும் வண்டல் மற்றும் இதர மாசுகளை அகற்றுவதற்காக கற்கள் மற்றம் கூழாங்கல் கொண்டு (2மீx2மீx2மீx) ஒரு வடிகட்டும் படுக்கை அமைத்தல்.
 • சரிவான நிலப் பகுதிகளில் திறந்த வாய்க்கால்கள்/ புற்கள் வளர்ந்த வாய்க்கால்கள் அமைத்தல்
 • நீராவியாதல் மிகவும் குறைவு.

விலை

வடிகட்டும் படுக்கை அமைக்க ஆகும் செலவு ரூ.3000/-

நீர் பரவல்

நீரோடைகள் / பள்ளங்களில் வழிந்தோடிய நீர் பின் அருகில் உள்ள நிலங்களுக்கு நீரோடைகளின் சிறிய குறுக்கே தடுப்புகள் / வரப்புகள் அமைத்து திருப்பி விடப்படுகிறது. இந்த மாதிரி திருப்பிவிடப்பட்ட நீரை பம்ப் மூலம் எடுத்தல் (அ) புவிஈர்ப்பு விசை மூலம் எடுக்கலாம். இதனால் அதிகப்படியாக வழிந்தோடும் நீரை திரும்பவும் அதே நீரோடைகளில் திருப்பிவிட்டு, வயல்களுக்கு நீர் பாய்ச்சலாம்.

தனியாக உள்ள கிணற்றை  மறு ஊட்டம் செய்தல்

 • வழிந்தோடும் நீரை வடிகட்டும் படுக்கை வழியாக பாயச்செய்து பின் கிணற்றில் விடுவதால் வண்டல் படிவதைத் தடுக்கலாம்.
 • திறந்த வெளி கிணற்றை மணல் மற்றும் சிறுகற்கள் கொண்டு துவாரங்கள் (அ) பள்ளங்களைச் சுற்றி நிரப்ப வேண்டும்.
 • ஆழ்துளைக் கிணறுகளில் தரைமட்டம் வரை கொண்டு செல்லப்படும்.
 • மழை வெள்ளநீரை மணல் கொண்டு நிரப்பிய திறந்த வெளிக் கிணற்றில் திருப்பிவிடப்படுகிறது.
 • பயன்படாத கிணறுகளில், 3மீ அளவு உள்ள சதுர வடிகட்டும் படுக்கையை 2.3 மீ ஆழத்திற்கு தோண்டி அருகில் உள்ள நீர் இறைக்கும் கிணற்றுக்கு, வடிகட்டும் படுக்கைக்கு கீழ் 300 மி.மீட்டர் விட்டம் கொண்ட குழாய் அமைத்து, அதன் வழியாக நீர் கொண்டு செல்லப்படுகிறது.

குழாய் கிணறுகளை மறுஊட்டம் செய்தல்

செயல்பாடுகள்

 • தரைமட்டத்திலிருந்து வழிந்தோடும் நேரடியாக இந்த குழாய்க் கிணற்றுக்கு திருப்பி விடுவதால், நீர் ஆவியாகாமல் எளிதாக மறு ஊட்டம் செய்ய முடியும்.
 • தேவைப்படும் ஆழத்திற்கு 10 செ.மீ விட்டம் கொண்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கலாம்.
 • கூண்டு போன்ற அமைப்பு உருவாக்கி, அதில் உள்ள துளைகள் வழியாக நீரை குழாய் கிணறுகளுக்கு கொண்டு செல்லலாம்.
 • மறுஊட்டம்  செய்யப்படும் குழாய் கிணற்றின் ஆழம் தற்போதுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் ஆழத்தைப் பொறுத்தது.
 • மறு ஊட்டம் செய்த குழாய் கிணறுகளின் அடிப்பகுதியானது நீர் மட்டத்திற்கு 30 மி.க்கு கீழே உள்ளது.
 • ஆழ்துறை மற்றும் குழாய்களுக்கு இடையே உள்ள இடத்தை சிறுகற்கள் கொண்டு நிரப்பி, சுத்தமான நீர் வரும் வரை காற்றழுத்த பகுதியுடன் இணைத்து அமைக்க வேண்டும்.
 • மழைநீரானது 3மீx3மீx3மீ அளவுள்ள மணல் வடிகட்டி மூலம் வழிந்தோடி வடிகட்டப்படுகிறது.
 • இரண்டாவது மணல் வடிகட்டி கிணற்றின் மேல் பகுதியில் உள்ள துளையிடப்பட்ட பகுதியை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள வண்டல்களும் இதில் வடிகட்டப்படுகிறது
 • நீரானது கிணற்றில் செல்லும் முன் தென்னை நார் கொண்டு முழுவதும் மூடப்பட்டுள்ளது.

தோராய விலை


முறைகள்

ஒருபகுதிக்குஆகும்விலை

திறந்தவெளிக் கிணறுகள்

ரூ.1350

கசிவுநீர்க் குழி

ரூ.650

ஆழ்துளையுடன் கசிவு நீர் குழி

ரூ.1200

மறுஊட்டம் செய்த அகழி

ரூ.650

ஆழ்துளையுடன் மறுஊட்டம் செய்த அகழி

ரூ.900

மறுஊட்டம் செய்யப்பட்ட கிணறு (ஆழமில்லாத /சிறிய)

ரூ.4100


மழைநீர் சேகரிப்பு

ஆதாரம் : பசுமை தாயகம்

2.86842105263
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top