பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / விவசாயத்தில் எரிசக்தி சேமிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாயத்தில் எரிசக்தி சேமிப்பு

விவசாயத்தில் எரிசக்தி சேமிக்கும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

எரிசக்தியைச் சேமிக்கும் முறைகள்

 • ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பம்புகள் பயன் படுத்துவதன் மூலம் சிறியதும் பெரியதுமான பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பம்பின் திறனை 25% லிருந்து 35% வரை மேம் படுத்தலாம்
 • பெரிய வால்வு போடுவதால் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கக் குறைவான எரிபொருளும், மின்சக்தியுமே தேவைப்படும் என்பதால் மின்சார, டீசல் உபயோகம் குறையும்.
 • குழாய்களில் வளைவுகளும் இணைப்பான்களும் எந்த அளவிற்குக் குறைவாக உள்ளனவோ அந்த அளவுக்கு மின்சக்தியை அதிகமாகச் சேமிக்க முடியும்.
 • குழாய்களில் சாதாரணமான வளைவுகளைக் காட்டிலும் கூர்மையான வளைவுகளால் தேய்மானம் 70% அதிகமாகும்.
 • குழாயின் நீளத்தை 2 மீட்டர் குறைத்தால் ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலைச் சேமிக்க முடியும்.
 • கிணற்றின் நீர்மட்டத்திற்கு மேல் 10 அடியைத் தாண்டாதவாறு பம்ப் பொருத்தப்பட்டால் அதன் திறன் அதிகரிக்கும்.
 • தரமான பிவிசி உறிஞ்சு குழாயைப் பயன்படுத்துவதன் மூலம் 20% எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.
 • உற்பத்தி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி பம்ப்செட்டில் எண்ணெய் அல்லது கிரீஸைத் தொடர்ந்து உபயோகித்துவர வேண்டும்.
 • மின்சக்தி உபயோகம், மற்றும் வோல்டேஜின் சரியான பயன்பாடு ஆகியவற்றிற்காக, ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட சரியான அளவிலான ஷண்ட் கெபாசிடர் மற்றும் மோட்டரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.
 • பம்ப்செட் அருகில் இருக்கும் விளக்கைப் பகல் நேரங்களில் அணைத்து வையுங்கள்

மூலம் : எரிசக்தி சேமிப்பு பணி

தொடர்புடைய வளங்கள்

 1. NREDCAP
3.04705882353
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top