பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீட்டு விளக்குகள்

வீட்டு விளக்குகள் மூலம் எரிசக்தி சேமிப்பது பற்றி இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

வீடுகளின் ஒளிஅமைப்பு

  • தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்துவிடுங்கள்
  • குழாய் மின் விளக்குள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் அவை பொருத்தும் பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்
  • ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன் படுத்துங்கள்
  • குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்துங்கள்
  • சி.ஃஎப்.எல். களையே பயன்படுத்துங்கள்

எதனால் சிஃஎப்எல்களையே பயன்படுத்தவேண்டும்?

இன்கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாவதால் வெளிச்சம் தருகிற) விளக்குகளான பல்புகளை விட ‘காம்பாக்ட் புளூரசண்ட்’ பல்பு மூன்றில் ஒரு பங்கு குறைவாக மின்சக்தியை, எடுத்துக் கொள்கின்றன. வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை. காம்பாக்ட் புளூரசண்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும் வெளிச்சத்தைப் போலவே இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75% குறைவான மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.

சி.எஃப்.எல்.-கள் சற்றே விலை கூடுதலானவையாக இருந்தாலும், அவற்றுக்கான முதலீடு பயனுள்ளது. அவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சமும் கூடுதல் வண்ணத்தையும் தருபவை. சரியாகச் சொன்னால் 23 வாட் சக்தியுள்ள காம்பாக்ட் புளோரசென்ட் பல்பை 90 அல்லது 100 வாட் சக்தியுள்ள இன்கான்சென்ட் பல்பிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு 4 மணிநேரங்களுக்கு மேலாக எரியும் விளக்குகள் உள்ள இடங்களில் காம்பாக்ட் புளோரசண்ட் பல்புகளை உபயோகியுங்கள். 75 வாட் சக்தியுள்ள இரண்டு பல்புகளுக்கு பதிலாக இரண்டு 15 வாட் புளோரசண்ட் பல்புகளைப் பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்கு 18 கிலோ வாட் மணிநேர சக்தியை மிச்சம் பிடிக்கலாம்.

Source : Portal content team

2.76470588235
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top