பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / ஃபிரிட்ஜ் பராமரிப்பு முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஃபிரிட்ஜ் பராமரிப்பு முறைகள்

ஃபிரிட்ஜ் பராமரிப்பு முறைகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • ஃபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். ஃபிரிட்ஜின் உள்ளே குறைந்த பொருட்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
 • ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர்ந்தபின்தான் வைக்க வேண்டும்.
 • வாழைப் பழத்தை எக்காரணம் கொண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
 • பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
 • ஃபிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
 • ஃபிரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில்  தண்ணீர் படக் கூடாது. ஃபிரிட்ஜின் பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
 • ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகைப்பட்டு ஃபிரிட்ஜின் நிறம் சீக்கிரத்தில் மங்கிவிடும்.
 • ஃபிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகுநாள் காய்கறிகள் அழுகிப் போகாமல் இருக்கும்.
 • ஃபிரிட்ஜுக்கு கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
 • ஃபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையோ, அடுப்புக் கரித்துண்டுகளையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ தோலையோ போட்டு வைக்கலாம்.
 • அதிக ஸ்டார்கள் உள்ள ஃபிரிட்ஜை வாங்கினால் மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தலாம்.

ஆதாரம் : சென்னை நலத்தகவல்

2.86
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top