பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / தொிந்து கொள்ள வேண்டியவை / எலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

எலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்

எலெக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மனிதனின் அன்றாடத் தேவை

இன்றைய சூழலில் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது மின்சாரம் ஆகும். மின்சாரப் பற்றாக்குறையினால் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. மின்சாரப் பற்றாக்குறையினால் பல பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் ஏற்றத் தாழ்வுகளுக்கு உள்ளாயினர். இதற்கு மாற்று வழி என்று யோசித்தால் அதற்கு ஒரே தீர்வு “சூரிய ஒளி மின்சாரம்” (சோலார்) மட்டுமே.

மேலும் அன்றாடத் தேவைகளுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களில் பெட்ரோல் விலையும் அண்டை நாடுகளை விட நம் நாட்டில் இரு மடங்காக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இப்பிரச்சனைக்குத் தீர்வு கான சூரிய ஒளியைப் பயன்படுத்தி “பேட்டரி” சார்ஜ் மூலம் எலக்ட்ரானிக் கார், ஸ்கூட்டர், பைக் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

நாம் பெரும்பாலும் பகல் நேரங்களில் அதிகமாக வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே பகல் நேரங்களில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி அதிகமான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நாம் வீடுகளில் அலுவலகங்களில் பவர் பாயின்ட் மூலம் அதிகமான மின்சாரத்தைப் பெறுகிறோம். சூரிய ஒளி மின்சாரம் (Solar) பயன்படுத்தினால் அதிக அளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மேலும் சுற்றுப் புறச் சூழலையும் பாதுகாக்கிறது. மேலும் வண்டிகள் எவ்வித இடையூறும் இன்றி மிருதுவாகச் செல்கின்றன. வண்டியிலிருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவையும் குறைக்கிறது.

சோலார் பயன்பாடு

இந்தியாவில் வோல்ட், சேவல்ட், நிசால், லீப், டெல்டா போன்ற உயர்தர வாகனங்கள் வந்து விட்டாலும் அதற்குத் தகுந்த அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் போய்விட்டன. மேலும் சூரிய ஒளி மின்சாரத்தின் தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தும் போது அந்நிய செலவாணி குறையும் வாய்ப்புள்ளது. எனவே மீதம் உள்ள மின்சாரத்தை அலுவலகங்களோ, கல்விக்கூடங்களோ, பொதுத்துறை நிறுவனங்களோ பயன்படுத்தலாம். சூரிய ஒளி மின்சாரத்திற்கு அரசு (மத்தியும், மாநிலமும்) இன்றைய நிலை விட அதிக சலுகைகள் தர முன் வரும் நிலையில் அதிக மின்சாரம் எளிய விலையில் கிட்டும்.

வெளிநாடுகளில் சூரிய ஒளி மின்சாரம்

சீனா போன்ற நாடுகளில் 15 கோடியை செலவிட்டு எலக்ட்ரிக் கார், பைக் போன்ற வாகனங்களில் (சோலார்) சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் மின்சாரம் அவர்களுக்குச் சேமிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பருவ காலங்களில் போதிய அளவு மழை இல்லை. காற்றாலை உள்ள பகுதிகளிலும் அதிகமாக காற்று இல்லை. நீர், காற்று போன்றவைகளின் மூலம் குறிப்பிட்ட மின்சாரத்தை மட்டுமே பெற முடிகிறது. வெளி நாடுகளில் அதிகமாக சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கின்றனர். மேலும் சூரிய ஒளி மின்சாரம் (சோலார்) எலக்ட்ரானிக் கார், எலக்ட்ரானிக் பைக், எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் போன்றவற்றிற்கும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நம் நாட்டில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.

இதன்படி வாட்டர் பம்பு, செல்லுலார் டவர், குக்கிங் ஸ்டவ்ஸ், போன்றவற்றிற்கும் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அன்றாடத் தேவைகளில் ஒன்றான வாகனங்களுக்கு நாம் பெரிதும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். வண்டியில் இதைப் பொருத்துவதால் அதிக அளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மேலும் வண்டியின் உள்ளே எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழ்நாட்டில் 6% சூரிய ஒளி மின்சாரம் முழுமை அடைய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போன்ற மற்ற மாநிலங்களில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. மற்ற மாநிலங்களும் இதைப்போன்று அமைத்தால் அதிக அளவு மின்சாரமும் சேமிக்கப்படலாம்.

சார்ஜர் ஸ்டேஷன் (நிலையம்)

சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது அதற்குத் தகுந்த சார்ஜன் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதன் மூலம் நம் தேவைக்கேற்ப பேட்டரியின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இவை அலுவலகங்கள், கல்லூரிகள், பஸ்நிலையம், விடுதிகள், ஹோட்டல்கள், நீதிமன்றங்கள் போன்றவற்றிலும் சார்ஜ் ஸ்டேஷனை அமைக்கலாம். வரும் எதிர்காலங்களில் சூரிய ஒளி மின்சாரம் (சோலார்) விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ட்ராபிக் சிக்னல்களில் வண்டியை நிறுத்தும்போது அதிக அளவு புகையைக் குறைக்கலாம். மேலும் சூரிய ஒளியைப் பயன்படுத்துவதால் அதிக அளவு பணம் சேமிக்கப்படுகிறது. மேலும் நாட்டின் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கியத் தீர்வாக அமைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டைப் போன்ற மற்ற மாநிலங்களும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தினால் நமது நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். நமது நாடு வல்லரசு என்ற கனவை நனவாக்குவோம்.

எலக்ட்ரிக் பயன்பாடும் சூரிய ஒளியின் தேவையும்

எலக்ட்ரிக் வாகனங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50-லிருந்து 60கிலோ மீட்டர் வரை செல்ல முடியும். ஒரு முழு சார்ஜ் செய்ய 6 மணி முதல் 8 மணி வரை ஆகும்.. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஸ்டன் போன்றவைகள் தேவை இல்லை. இதன் பவர் 250 வாட்ஸ் திறன் கொண்டது. இதற்கு வரி 5% உள்ளது. 18 வயது வந்தவுடனே லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது. ஆனால் 14வது மற்றும் 15 வயதிலே இந்த வண்டியை ஓட்டி கற்பவர்கள் எளிதாக 18 வயதிலே அனைத்து விதமான வண்டிகளையும் ஓட்டலாம். எனவே லைசென்ஸ் பெற இவ்வித வண்டிகளை குறைந்தபட்ச 2 வருடம் ஓட்டியிருக்க வேண்டும் என ஒருவிதிமுறை இருந்தால் இதன் நன்மைகள் அனைத்தும் பெறலாம்.

சந்தையில் தற்போது உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள்

கோவை சந்தையில் தற்போது நான்கு நிறுவனங்கள் இரண்டு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வழங்குகின்றனர்.

இதில் ஒரே ஒரு மாடல் மட்டும் உண்டு. வண்டியின் விலை ரூ.37,000 மட்டுமே பேட்டரியின் விலை ரு.10,000 மட்டுமே. இதன் சர்வீஸ் முதல் ஆறு மாதத்திற்கு மூன்று முறை இலவசம். அடுத்த ஆறு மாதத்திற்கு ரூ.600 ஆகும். இரண்டாவது வருடத்திலிருந்து ரூ.300 ஆகும், வருடத்திற்கு மூன்று சர்வீஸ் முதல் நான்கு மாதம் ரு.1200க்கு சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

இதற்காகவே தனி பாதை (track) போடப்பட்டுள்ளது. சீனாவில் 2010ம்ஆண்டில் 12 கோடி எலக்ட்ரிக் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் இது போன்ற மார்கெட்டிங் இல்லை. போதிய விழிப்புணர்வு இல்லை. போதுமான பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.

கிரீன் வெகிக்கிள்

கிரீன் வெகிக்கிளை ஜெம் எக்யூப்மென்ஸ்ட் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மாடல்கள் உண்டு, வின்ஸ், பிலேம்ஸ் இதற்கு 20 டீலர்கள் உண்டு (தென் இந்தியாவில்) இந்நிறுவனம் சிங்காநல்லூரில் தற்போது செயல்பட்டு வருகிறது. வண்டியின் விலை ரூ.30000 லிருந்து 40000 வரை, இதன் டீலர்கள் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா என அனைத்து ஊர்களிலும் உள்ளனர். இதனுடைய வண்டியின் பாகங்களுக்கு வாட் 14.5% உள்ளது. இதற்கு மானியம் 2011/2012 ஆம் ஆண்டு கொடுத்ததாகவும், அது 2012 / 2013 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை ஊனமுற்றோருக்கு அரசு வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. பேட்டரியின் ஆயுட் காலம் ஒன்றறை வருடம் முதல் 3 வருடம் ஆகும். தொடர்ந்து பேட்டரி சார்ஜ் செய்தால் அதன் முழு திறனையும் இழக்கும் நிலை உள்ளது. மேலும் இதற்கு சாலை வரி தேவையில்லை.

ஹீரோ எலக்ட்ரிக்

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்திச் செய்யும் ஹீரோ எலக்ட்ரிக் குழுமமானது தனது தயாரிப்புகளான எலக்ட்ரிக் வாகனங்கள் ஏழு ரகங்கள் உள்ளடக்கியதாகும். இந்த 5 மாடல்களில் 250 வாட்ஸ் பவர் திறன் குறைவாக உள்ள வாகனங்களுக்கு லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் தேவைப்படாது. 250 வாட்ஸ் பவர் திறன் அதிகமாக உள்ள (2 மாடல்கள்) வாகனங்களுக்கு லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ் கட்டாயமாக சட்டப்படி தேவைப்படும். இவற்றில் உள்ள இரண்டு ரகங்கள் அதிக பவர் கொண்டதால் அதிக வேகம் செல்லக் கூடியதனால் அதன் பேட்டரி அதிக விலை ரூ,15,000மாக உள்ளது. (சிறிய வண்டி / ரூ,10,000). எலக்ட்ரிக் வாகனங்களில் மொத்தம் ஏழு மாடல்கள் உள்ளன. இவற்றில் முதல் ஐந்து மாடல்கள் 25கி.மீ வேகத்தில் செல்லக் கூடியவை. Maxi, Zion, Cruz, Optima, Wave DX இவற்றிற்கு லைசன்ஸ் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டாயமில்லை. அடுத்த இரண்டு வண்டிகள் E-Sprint,Photon அதிக வேகம் 45 கி.மீ – 50 கி.மீ வரை செல்லக்கூடிவை, அதிக பவர் கொண்டவை.

ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 50 கி.மீ முதல் 60 கி,மீ வரை செல்ல முடியும். ஒரு முழு சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். E-Sprint,Photon வாகனங்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் தேவைப்படும். இந்த பேட்டரி சர்வீஸ் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். இதற்கு வாரண்டி உண்டு. இதன் பேட்டரியில் தண்ணீரோ, ஆசிட்டோ நிரப்பத் தேவையில்லை.

8 மணி நேரம் சார்ஜ் செய்தால் 25 மைல் முதல் 30 மைல் வரை செல்ல முடியும். இதனுடைய வேகம் 20 கிலோமீட்டர் மட்டுமே. ஆஸ்திரேலியா நாடுகளில் இதனுடைய வாட்ஸ் 200 ஆக உள்ளது. கனடா போன்ற பகுதிகளில் 500 வாட்ஸ். கொடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் ஓட்டுவதற்கு வயது வரம்பு இல்லை. இதனால் போதிய அளவு விபத்துகளைத் தவிர்க்கலாம்.

குளிர்ப் பிரதேசங்களில் பெரும்பாலும் சூரிய ஒளி இருப்பதில்லை. ஆனால் நம் நாட்டில் அதிகமாகச் சூரியஒளி காணப்படுகிறது. அத்தகைய சூரிய ஒளியைப் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில், சோலார் பயன்படுத்தி அதிகமான மின்சாரத்தைச் சேமிக்கிறார்கள்.

முக்கியத்துவம்

 • விலை குறைவு.
 • அதிக எடை இல்லை.
 • வண்டி ஓட்டுவதற்கு எளிதாக இருக்கும்.
 • பராமரிப்புச் செலவு குறைவு.
 • பெட்ரோல் வண்டியில் (Starting Trouble) பிரச்சினை ஏற்படும், ஆனால் இந்த வண்டியில் அந்தப் பிரச்சினை ஏற்படாது.
 • பெட்ரோல் தேவையில்லை.
 • இரைச்சல் ஏற்படாது.
 • சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும்.
 • கியர் கிடையாது.
 • கிக் ஸ்டார்ட் கிடையாது.
 • ஸ்விட்சு ஆன், ஆஃப் உண்டு.

பராமரிப்புச் செலவு

மின் சாகனத்தில் கியர், கிலட்ச், கார்பரேட்டர் போன்ற பாகங்கள் இல்லாததால் பெட்ரோல் பைக்கிற்கு ஆகும் பராமரிப்பு செலவில் 10% தான் மின் வாகனத்திற்கு ஆகும்.

ஓட்டுமானச் செலவு

பெட்ரோல் பைக்கிற்கு ஆகும் செலவில் 10% தான் மின் வாகனத்திற்கு ஆகும்.

மேலும் விரைவில் இதற்கு சார்ஜிங் நிலையம் (Charging Station) அமைக்கப்பட உள்ளது. இதில் வண்டியின் (NEMPP 2020) “நேஷனல் எலக்ட்ரிக் மொபைலிட்டி மிஷின் பிளான்” எனும் இந்தத் திட்டத்தின் படி அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, அரசு ஊக்கத் தொகை வழங்க முன் வந்துள்ளது.

ஆதாரம் : தேசிய உற்பத்தி திறன் குழு

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top