பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி திறன் / எரிசக்தி திறன் தொழில்நுட்பங்கள் / குறைந்த விலையில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குறைந்த விலையில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்

குறைந்த விலையில் அமைந்துள்ள சில பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குறைந்த செலவில் முட்டையினை பதப்படுத்தும் முறை

உப்பை பயன்படுத்தி முட்டைகளைக் கெடாமல் பதப்படுத்தும் எளிய முறை, எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி உப்பினைப் பயன்படுத்தி பதப்படுத்தும் ஒரு குறைந்த செலவிலான வழிமுறையாகும்.

தேவையான பொருட்கள்

செங்கல், சுத்தியல், சல்லடை, சமையல் உப்பு (கல் உப்பு), பாத்திரம், தண்ணீர்

செய்முறை

சுத்தியலைப் பயன்படுத்தி செங்கல்லை நன்றாக தூளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த தூளாக்கிய செங்கல் பொடியினை சல்லடை கொண்டு சலித்து, கிடைக்கும் நைசான தூளை எடுத்து தனியாக வைக்கவேண்டும். இதே போல கல் உப்பினை எடுத்துக்கொண்டு பொடியாக்கி, சலித்து உப்புத்தூளை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 2 பங்கு செங்கல் தூளுடன், ஒரு பங்கு சலித்த உப்புத்தூளைக் கலந்து இதனுடன் தண்ணீர் கலந்து மாவு போன்று பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்பொழுது, முட்டைகள் பதப்படுத்துவதற்கு ஏற்றவையாக இருக்கின்றனவா அல்லது ஏற்கெனவே அதில் கரு உருவாகிவிட்டதா என்று பரிசோதிக்க வேண்டும். இதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் முட்டையினைப் போடும்போது, முட்டை மிதந்தால் அது பதப்படுத்துவதற்கு ஏற்றதல்ல எனவும், முட்டை தண்ணீரில் மூழ்கினால் அது பதப்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறது என்றும் அறியலாம். இவ்வாறு பதப்படுத்துவதற்கு ஏற்ற முட்டைகளை தனியாக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தினை எடுத்து அதில் பதப்படுத்துவதற்காக தனியாக பிரித்து வைத்த முட்டைகளை வைக்க வேண்டும். இதன் மீது செங்கல் உப்பு கலவையினை போட்டு மூட வேண்டும்.

இந்த பாத்திரத்தினை நிழலில் 10 நாட்கள் வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது செங்கல் உப்புக் கலவை மீது அடிக்கடி தண்ணீர் தெளித்து ஈரப்பதம் காயாமல் காக்க வேண்டும். இவ்வாறு முட்டையினை 10 நாள் வரை வைத்திருக்கும் போது முட்டையினுள் உப்பு ஊடுருவி, முட்டைகள் கெடாமல் பாதுகாக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகு முட்டைகளை எடுத்து தனியாக சேமித்து வைக்கலாம்.

இந்த முறையின் நன்மைகள்

இம்முறையின் மூலம் சேமிக்கப்பட்ட முட்டைகள் நல்ல ருசியாக இருப்பதுடன் ஒன்றரை மாதம் வரை கெடாமலும் பாதுகாக்கலாம்.

ஜீரோ ஆற்றல் குளிர்விக்கும் அறை

தோட்டக்கலை உற்பத்திகளை சேமித்து வைப்பதற்கு ஒரு குறைந்த செலவு மாற்றுவழி ஜீரோ ஆற்றல் குளிர்விக்கும் அறை ஆகும். பசுமையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை சந்தைப்படுத்தும் காலத்தை நீட்டிப்பதற்கு பண்ணையிலியே சேமிப்பு அறையாக இது பயன்படுகிறது.

அதிக ஈரப்பதத்தைக் கொண்டுள்ள பழங்கள், காய்கறிகள் மிக குறுகிய வாழ்வினை கொண்டுள்ளது மற்றும் அழியக்கூடியது ஆகும். அது இல்லாமல், அவைகள் உயிருள்ள ஒரு கூறாக இருப்பதால், அறுவடைக்குப் பின்னரும் நீர்ம வெளியேற்றத்தை உண்டுபண்ணக்கூடியவையாகவும், சுவாசிக்கக் கூடியவையாகவும் மற்றும் கனிந்தவையாகவும் இருக்கிறது. சேமித்துவைக்கப்படும் உஷ்ணநிலையை குறைப்பதால், பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகுவதை கட்டுப்படுத்த முடியும்.

செங்கல், மணல், மூங்கில், வைக்கோல், சாக்கு பை இன்னும் பிறவற்றோடு எளிதாக ஜீரோ ஆற்றல் குளிர்விக்கும் அறையை அமைக்க முடியும். புறத்தில் இருக்கின்ற உஷ்ண நிலையை விட 10 – 15 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவான உஷ்ண நிலையை அறைக்குள் காணப்படும். மேலும் 90% ஈரப்பதத்தையும் பராமரிக்கும். வறண்ட பருவத்தில் மிகவும் பயன்விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

அமைக்கும் முறை

 • தண்ணீர் எளிதாக அருகாமையில் கிடைக்கும் மேட்டுப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • 165 செ.மீ x 115 செ.மீ அளவிற்கு செங்களால் தரையை உருவாக்க வேண்டும்.
 • இரட்டை சுவரு 67.5 செ.மீ உயரம், இரு சுவருக்கிடையே 7.5 செ.மீ இடவெளி உள்ளதாக கட்ட வேண்டும்.
 • தண்ணீரை கொண்டு அறையை முழுவதுமாக ஈரமாக்க வேண்டும்.
 • தண்ணீருடன் ஆற்று மணலை நனைக்க வேண்டும்.
 • ஈரமான மணலைக் கொண்டு இரட்டை சுவருக்கு இடையே உள்ள 7.5 செ.மீ உட்குடைவை நிரப்ப வேண்டும்.
 • மூங்கில் (165 செ.மீ.x 115 செ.மீ), வைக்கோல் அல்லது காய்ந்த வைக்கோல் இன்னும்பிறவற்றோடு மேல் மூடியின் விளிம்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்.
 • நேரடியான சூரிய ஒளி அல்லது மழையிலிருந்து இதை பாதுகாப்பதற்கு அவசியமாக அறையின் மேலே கூரை உருவாக்கவேண்டும்.

செயல்பாடு

 • மணல், செங்கல் மற்றும் அறையின் மேல்மூடி நீரைக் கொண்டு நனையுமாறு வைக்க வேண்டும்.
 • நீர் ஆதாரத்துடன் பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் சிறிய குழாய்களோடு சொட்டுநீர் முறையை பொருத்த வேண்டும் அல்லது அதற்குண்டான ஈரப்பதம் மற்றும் தேவையான உஷ்ணநிலையை அடைவதற்கு வேண்டி தினமும் நீரை இருமுறை செலுத்த வேண்டும்.
 • இந்த அறையில் துளைகள் கொண்ட பிளாஸ்டிக்கால் ஆன பெட்டிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைக்க வேண்டும்.
 • ஒரு பாலிதீன் விரிப்பைக்கொண்டு இந்த பிளாஸ்டிக் பெட்டிகளை மூடவேண்டும்.
 • பழைய செங்கல்களை மற்ற காரணத்திற்காக பயன்படுத்திக் கொண்டு புதிய செங்கல்களை பயன்படுத்தி 3 வருடத்திற்கு ஒருமுறை குளிர்விக்கும் அறையை மறு நிர்மாணம் செய்யவேண்டும்.
முன்னெச்சரிக்கை
 • காற்று வீசுகின்ற இடத்தில் இதனுடைய கட்டமைப்புகாக முயற்சிக்க வேண்டும்.
 • நீர் ஓரிடத்தில் தங்குவதை தவிர்ப்பதற்கு உயரமான ஒரு இடத்தில் கட்டவேண்டும்
 • தண்ணீரை நன்றாக உறிஞ்சக்கூடியவையோடு இருக்கும் சுத்தமான, சேதாரமற்ற செங்கல்களை பயன்படுத்த வேண்டும்.
 • சுத்தமான மணலாக இருக்க வேண்டும் மற்றும் இயற்கையான பொருள்களாலும், களிமண் இல்லாமலும் இருக்க வேண்டும்.
 • செங்கல் மற்றும் மணல் நீரில் ஊறியவாறு வைத்திருக்க வேண்டும்.
 • நேரடியான சூரிய ஒளியிலிருந்து தடுப்பதற்கு மேல் கூறை அமைக்கவேண்டும்.
 • சேம இருப்புக்காக பிளாஸ்டிக் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும், மூங்கில் கூடைகள், மரத்தினாலான/நுண்ணிழை பலகை / பெட்டிகள், கோணிப்பைகள் இன்னும் பிறவற்றை தவிர்க்க வேண்டும்.
 • சேமித்து வைக்கப்பட்ட பொருள்களை ஒரு தண்ணீர் சொட்டும் அடையாதபடி தடுக்க வேண்டும்
 • அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் கேடு விளைவிக்கும் காளான்கள், பூச்சி/அழிவு செய்யும் உயிரினம்,ஊர்வன இன விலங்குகளிலிருந்து அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி / காளான்கொல்லி / வேதிப்பொருள்களைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
நடைமுறைப்படுத்தும் பகுதிகள்
 • பசுமையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் குறுகிய கால சேமிப்பு.
 • வெள்ளை மொட்டு காளான்களின் வளர்ப்பு
 • கணிவதற்கு ஏற்ற நிலையில் உள்ள தக்காளி மற்றும் வாழைப்பழம்
 • தாய் தாவரத்திலிருந்து புதிய தாவரங்களை உருவாக்குதல்
 • பதனம் செய்யப்பட்ட பழப் பொருட்களின் சேமிப்பு

நன்மைகள்

 • பசுமையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் இக்கட்டு விற்பனை நிலையை தவிர்த்தல்.
 • குறிப்பிட்ட எல்லைக்குள் சந்தைப்படுத்துதலை விட தோட்டவள உற்பத்தியை பசுமையாக நன்கு சந்தைப்படுத்துதல்
 • ஊட்டவினை மதிப்புடன் பெறமுடியும்.
 • மாசற்ற, சுற்று சூழல் தோழமையுள்ள சேமிப்பு முறை

உற்பத்தி திறன்: 6-7 டன்/அறையின் சிறு சிறு மாற்றங்களின் பரப்பெல்லையோடு 100 கு/அறை

தேவையான உள்ளீடுகள்
 • கட்டிடம் : திறந்தவெளி கொட்டகை (காற்றோட்ட வசதியுள்ள)
 • நிலம் : 100 ச.மீ
 • நீர் : 25-50 லி/நாள் (இடத்திற்கு தகுந்தாற்போல்)
 • ஆட்கள் : 1 தொழில்நுட்பப் பணியாளர், 1 பயற்சிதிறனில்லாதவர் உள்பட மொத்தம் 2

தகவல் ஆதாரம்: மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், மைசூரு, கர்நாடகா

2.71875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top