பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சோலார் மேற்கூரைகளின் நவீன தொழிற்நுட்பம்

சோலார் மேற்கூரைகளின் நவீன தொழிற்நுட்பம் குறித்து இங்கே காணலாம்.

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம், கட்டுமான துறையை எளிமையாகவும், புதுமையாகவும் மாற்றி விட்டது. வருடக்   கணக்கில் நடக்கும் பணிகளையும் குறைத்து மாதக்கணக்குகளில் முடித்து விடுகிறது. வண்ணங்கள், கட்டுமான பொருட்கள், சிமெண்ட் மணல் கலவை என அனைத்தும் புதுவடிவம் பெற்றுள்ளன. அந்த வகையில் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடாக கட்டுமான சந்தைகளுக்கு வரவிருக்கிறது ‘மின்சார மேற்கூரைகள்’.

சோலார் தகடுகள் என்றழைக்கப்படும் இவை இதற்கு முன்னதாக கட்டுமான மேற்கூரைகளுக்கு மேற்புறமாக பாதிக்கும் வண்ணமே தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது மின்சார தகடுகளையே வீட்டின் மேற்கூரையாக பொருத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.

மின்சார தகடுகள்

மின்சார தகடுகள் நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே சந்தைகளில் கிடைக்கபெற்ற நவீன மின் உற்பத்தி சாதனங்கள். இவற்றை முழுமையாக கட்டிமுடித்த வீடுகளின் மேல்தளத்திலோ அல்லது கூரையிலோ பதித்து அதன் மூலம் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றி பயன்படுத்துவர்.

இது தற்போது நடைமுறையில் இருந்து வரும் பழக்கம். ஆனால் மின்சார கூரைகள் என்பது மின்சக்தியை அளிக்கும் பேனலாகவும், வீட்டின் மேற்கூரையாக பயன்படக்கூடிய அம்சமாக உருவாகி வருகிறது. இவை சோலார் பேனல்களை போலவே வீட்டிற்கு மின்சாரத்தை வழங்குகிறது. மேலும் வீட்டின் மேற்கூரையாக பயன்படுகின்றன.

உறுதி தன்மை

நவீன வகை மின்சார தகடுகள் வீட்டிற்கு பாதுகாப்பினை வழங்குவதுடன் அனைத்து கால நிலைகளுக்கும் ஈடுகொடுத்து கட்டிடத்துக்கு வலிமை சேர்ப்பதில் பங்கெடுத்து கொள்கின்றன. இந்த மின்சார கூரைகளால் வெப்பம் மேற்கூரைகள் வழியாக அறையின் உள்பகுதிக்குள் அதிகமாக நுழைவதில்லை.

இவை வீட்டிற்கு பாதுகாப்பினை வழங்குவதுடன் அனைத்து கால நிலைகளுக்கும் ஈடுகொடுத்து கட்டிடத்துக்கு வலிமை சேர்ப்பதில் பங்கெடுக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அறைக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதை தடுக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெப்ப தாக்கம்

இதில் மூன்று அடுக்குகளில் சூரிய சக்தி சேமிக்கப்படுவதால் வீட்டின் வெப்பநிலை கணிசமாக குறைக்கிறது. மேலும் இதன் மூன்றாம் அடுக்கில் வெப்பத்தை உள்செலுத்தாமல் இருக்க பிரத்தியேக வினைல் கோட்டிங் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் மின்சார கூரைகளின் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதில்லை.

இத்தகடுகளின் மேல் விழும் சூரிய வெப்ப கதிர்கள் மின்சக்தியாக மாற்றப்படுகின்றன. இதனால் கோடை காலங்களில் வீட்டுக்குள் வெப்பம் அதிக அளவில் உட்புகுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. அதன் தாக்கமாக அறைக்குள் வெப்பத்தின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அறைக்குள் வெப்ப சூழல் குறைந்து மிதமான குளுமை நிலவவும் மின்சார கூரைகள் உதவுகின்றன.

தகடு பதிப்பு முறை

இந்த மின்சார மேற்கூரை தகடுகள் பல்வேறு அளவுகளிலும், தடிமன்களிலும் சந்தையில் கிடைக்கின்றன. இதனால் வீட்டின் மேற்கூரை தளத்தின் அளவிற்கு ஏற்ப தகடுகளை வாங்கி எளிமையாக பொருத்திவிடலாம். அதற்கு சிமெண்ட் கலவை மற்றும் திருகு முனை ஆணிகள் தேவைப்படும். அவற்றை கொண்டு எளிதாக இணைத்துவிடலாம்.

இந்த மின்சார தகடுகள் பொருத்தப்படுவதினால் கோடை மற்றும் குளிர்க் காலத்தில் வீட்டில் நிலவும் தட்பவெட்ப நிலையானது தக்க வைக்கப்படுகிறது. மேலும் இத்தகடுகள் பொருத்துவதால் குளிர் காலங்களில் கான்கிரீட் நீர் கசிவு, நீர் பூத்துபோதல், தளங்களில் நீர் படிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

2.91666666667
சந்திரன் May 27, 2019 07:46 AM

இந்தக் கூரைத்தகடுகள் எங்கே கிடைக்கிறது குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த இடத்தில் கிடைக்கிறது என்று தெளிவுபடுத்தவும் ஏதாவது தொடர்பு எண் இருந்தால் கொடுக்கவும்
இதை அமைப்பதற்கு அவர்களை உதவுவார்களா இல்லை நாம் தான் பொருத்திக் கொள்ள வேண்டுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top