பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நவீன சோலார் தொழில்நுட்பங்கள்

நவீன சோலார் தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள்

மோனோ க்ரிஸ்டலின் தகடுகள் (Mono Crystalline Panels)

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆரம்ப காலங்களில் மிக பிரபலமானதும். ஓரளவு இயக்குதிறன் கொண்டதும். ஓரளவு எளிய உற்பத்தி முறையாலும் இந்த வகையான சோலார் பேனல்கள் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின, செமி கண்டக்டர் (Semi Conductor Ex-Silicon)  என்று சொல்லப்படும் சிலிகனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.  உருவாக்கப்படும் பேனலில் உள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொருத்து அதன் திறன் மற்றும் வோல்டேஜ்  தீர்மானிக்கப்படுகிறது. இவை நேர் (DC) மின்சாரத்தை மட்டுமே வழங்குபவை.

பாலி க்ரிஸ்டலின் தகடுகள் ( Poly Crystalline Panels)

இதுதான் இன்று எல்லா இடங்களிலும் பெரும்பாலும்  பயன்படுத்தப்படுகின்ற சோலார்      பேனல்கள்.இதுவும் சிலிகனை அடிப்படையாகக் கொண்டுதான்   தயாரிக்கப்படுகிறது.  இவை 3 வாட் முதல் இன்று 245 வாட் வரை ஒரே பேனல்களாக தயாரிக்கப்படுகிறது.  இதை ஒரு கிரிட்(GRIT) கொண்டு இணைத்து மிக அதிக பட்ச மின் உற்பத்தியாக 600 மெகாவாட் வரை குஜராத்தில் சாதித்து காட்டி விட்டனர். எனவே சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் இத்தகைய சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.  இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் தைரியமாக முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய முடியும்.  இதை சரியான மின் பகிர்மான வசதிகளை அமைத்து அனைவருக்கும் விநியோகிக்கவும் முடியும்,  ஒவ்வொரு வீடுகளிலும் தேவைக்கேற்ப சூரிய மின்உற்பத்தி தகடுகளை நிறுவி அவரவர்களே உற்பத்தி செய்து கொண்டால் மின் ஆற்றல் தட்டுப்பாடு என்றுமே வராது.

CIGS சோலார் தகடுகள் ( CIGS Solar Panels)

சூரிய ஒளி மின் உற்பத்தியில் மிக முக்கியமான லேட்டஸ்ட் (2012) தகவல்  இந்த CIGS பேணல் கண்டுபிடிப்பே. இவை  சாதாரண பாலி கிரிஸ்டலின் தகடுகளை விட 17 % வரை அதிக மின் உற்பத்தியை அதே ஒளியில் தர கூடியது.

 

எனவே காலை 7 மணியிலிருந்தே மின் உற்பத்தி தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து குறைந்த சூரிய ஒளி செறிவிலும் மின்சாரம் உற்பத்தி ஆவது இதன் சிறப்பு. இவை காப்பர், இன்டியம், கேலிய்ம், (டை) செலனைடு தனிமங்களை கொண்டு தகுந்த உற்பத்தி முறைகளால் உருவாக்கபடுகிறது. இவை பாலி கிறிஸ்டலின் பேனல்களை விட 20% விலை அதிகம் என்றாலும் 25 வருடம் மின் உற்பத்தி திறனில் வெற்றிகரமான பேனலாக இருக்க போகிறது. இன்றைய நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த திறனுள்ள, அதாவது  60 வாட் முதல் 1000 வாட் வரை இந்த வகை  பேனல்களே மிகவும் சிறந்தவை என்பது எனது கருத்து.  இதை தயாரிப்பது சற்று சிரமமான விஷயம். ஏனென்றால் இதிலுள்ள அணைத்து தனிமங்களும் அதிக கடின தன்மை கொண்டவை. இதிலுள்ள செலினியம் வெளிச்சத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் குறைந்த ஒளியிலும் சிறப்பாக செயல்படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கான  சோலார் அமைப்புகள்

(HOUSE HOLD SOLAR SYSTEMS)

இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமான பிரச்சனையாக உருவெடுத்திருப்பது மின்சார பற்றாக்குறை,  என்னதான் பெரிய பெரிய மின் உற்பத்தி திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொறி் போன்ற கதையாகத்தான் இருக்கும்.  இதனை சமாளிக்க ஒவ்வொரு இந்தியனும் முழுக்க முழுக்க அரசையே மின்சாரத்திற்கு நம்பியிராமல் தனக்கு தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்யும் மனப்பக்குவத்தையும் அதற்கான தொழில் நுட்பத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அந்த வரிசையில் நிரந்தரமான மின் உற்பத்திக்கு பேருதவியாக இருக்கப் போவது சூரிய ஒளி மின்சாரமே என்று உறுதியாக கூறுவேன்.  தற்போதைய சூழ்நிலையில் அதை அமைப்பதற்கு சரியான வல்லுனர்கள் இல்லை.  அல்லது  இருக்கும் ஒரு சிலரோ யாருமே வாங்க முடியாத விலையைச் சொல்லி அனைவரையும் பயமுறுத்தி வருகின்றனர். உண்மையில் சூரிய ஒளி மின்சாதன அமைப்புகள் அனைவரும் வாங்கும் எளிய விலையில் என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக கூறுகிறேன்.  வெறும் 5 ஆயிரத்தில் தொடங்கி (10 Watt). 1.50,000- ரூபாய் (600 Watt) வரை அனைத்து தேவைகளுக்கும் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ள முடியும்.

அடுத்து மிக மிக முக்கியமான விசயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.  வீடுகளில் பயன்படுத்தப்படுவது மாறும் மின்சாரம் (Alternative Current), இதிலுள்ள மிக முக்கிய சிறப்பம்சம் இதை நீண்ட தூரங்களுக்கு எளிமையாக அனுப்ப முடியும்.  ஆனால் இதை உபயோகிப்பதில்  ஆற்றல் இழப்பு மிக அதிகம்.  ஆனால் இன்னொரு வகையான நேர்மின்சாரம் (Direct Current) நீண்ட தூரங்களுக்கு அனுப்ப முடியாவிட்டாலும் மிக குறைந்த ஆற்றலில் சக்தி விரயமின்றி வீட்டு உபயோக டிவி. கிரைண்டர். மின் விளக்குகள். கம்ப்யூட்டர் போன்றவற்றை மூன்று மடங்கு அதிக நேரம் இயக்க முடியும்.

அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிக குறைவே.  ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC  ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமேயன்றி ஏற்கனவே உங்களிடம் இருக்கும் AC மின்சாரத்தில் இயங்கும் விளக்குகள். மின் விசிறிகளை பயன்படுத்தினால் தேவையற்ற ஆற்றல் வீணடிக்கப்படுவதோடு. அதற்கான மின் உற்பத்தி சாதனங்களுக்கு அதிகமான முதலீடும் தேவைப்படும்.  வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள் பல மாடல்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, மிக உயர்ந்த தரத்தில் LED விளக்குகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் முழு உருவம் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. முக்கியமான விசயம் இவை அனைத்தும் என்னால் முழுமையாக தர சோதனை செய்யப்பட்டு முழு உத்திரவாதத்துடன் நானே வெளியிட்டுள்ளேன்.   உதாரணமாக AC மின்சாரத்தில் இயங்கும் ஒரு  டேபிள் பேன் 45 வாட் செலவழித்து வெளியிடும் காற்றை என்னுடைய DC 12 வாட் மின்விசிறி கொடுத்துவிடும்.  அதேபோல் சாதாரண 60 வாட் குண்டு பல்பின் வெளிச்சத்தை 5 வாட் LED பல்பு மிக எளிதாக கொடுத்துவிடும்.  ஒரே விசயம் தற்போது LED சாதனங்களின் விலை சற்று அதிகம்.  இதுவும் வரும் காலங்களில் குறைந்துவிட நிறைய சாத்தியங்கள் உள்ளன.

ஆதாரம் : காற்றாலை மின் தொழில்நுட்ப மையம், சென்னை

2.9
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
வினோத் May 14, 2020 07:25 AM

நாள் ஒன்றிற்கு 5 யூனிட் மின்சாரம் பிற எவ்வளவு செலவு ஆகிறது
தயவுசெய்து எங்களுக்கு பதில் கூறவும்

உமாபதி Apr 04, 2019 08:45 AM

கேரளாவில் இடுக்கில் இது சாத்தியம் ஆகுமா..20hp motor ஒட எவ்வளவு செலவு ஆகும்

ரமேஷ் Nov 12, 2018 05:04 PM

தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும்,
ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் CIGS சோலார் தகடுகள் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்க சரியான அளவு சேமிப்பு திறன் கொண்ட மின் தேக்கி சேர்த்து வாங்குவதானால், எவ்வளவு செலவாகும் ? சரியான விலையில் எங்கே கிடைக்கும் ?

கு.இராஜகுரு Aug 16, 2017 02:47 PM

ஐயா, பத்து வாட்ஸக்கு ஐந்தாயிரம் என்றால் ஒரு வீட்டில் எதை மட்டும் பயன்படுத்த முடியும். டிசியை பேட்டரியில் சேமித்து அதை தொழில் நுட்ப்பமாக கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா.

முருகானந்தம் Aug 09, 2017 01:09 PM

தமிழில் முழுவிவரம் வேண்டும் தர முடிந்தால் முருகானந்தம் 27 ராமதாசர் சாலை,திருவேற்காடு, சென்னை600077 தயவு செய்து அனுப்பவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top