பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மண் பானையில் ஸ்பைருலினா வளர்த்தல்

மண் பானையில் ஸ்பைருலினா வளர்ப்பதற்கான செய்முறைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பைருலினா எனப்படுவது ஒரு உண்ணக்கூடிய பசும் பாசியாகும். இதில் நச்சுப்பொருட்கள் ஏதும் இல்லை, ஆனால் அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும், அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. எளிய, குறைந்த செலவுடைய ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் ஊரக மகளிர் வீட்டிலேயே ஸ்பைருலினா பாசியினை வளர்க்கலாம். இதற்கு தேவைப்படும் இடம் மற்றும் செலவும் குறைவு. உலர்ந்த ஸ்பைருலினா பாசியினை விற்கும் போது வருமானம் கிடைக்கும் தொழிலாக ஸ்பைருலினா வளர்ப்பு இருக்கிறது.

தேவையான பொருட்கள்

35-40 லிட்டர் கொள்ளளவும், 25 சதுர சென்டிமீட்டர் வெளிப் பரப்பளவும் உடைய மூன்று மண் பானைகள், பாதுகாப்பான இடம் ஸ்பைருலினா வளர்ப்பதற்கான ஊடகம்

செய்முறை

சாண எரிவாயு கழிவு, 2-3 கிராம் கடல் உப்பு அல்லது ரசாயன உப்புகள் (பொட்டாசியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட், சமையல் சோடா, சோடியம் குளோரைடு), சுத்தமான ஸ்பைருலினா.

 1. மூன்று மண் பானைகளையும் அவற்றின் கழுத்தளவு மண்ணில் புதைத்துவிட வேண்டும். பிறகு ஊடகப் பொருட்களுடன் தண்ணீர் கலந்து மண் பானையில் ஊற்றவேண்டும். சாண எரிவாயு கழிவு ஸ்பைருலினா பாசி வளர்வதற்கு ஏற்ற செலவற்ற ஊடகமாகும்.
 2. சிறிய அளவிலான ஸ்பைருலினா பசும் பாசியினை எடுத்து அதனை ஊடகம் நிரப்பி வைத்திருக்கும் பானைக்குள் போடவேண்டும். (முதன் முதலில் ஸ்பைருலினா வளர்க்கும்போது அதற்கு தேவையான ஊடகத்தினை தயாரிப்பாளரிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம்).
 3. பானையிலுள்ள ஊடகத்தினை ஒரு நாளைக்கு 3-4 முறை கலக்கி விடவேண்டும், ஏனெனில் ஸ்பைருலினா பாசி கலங்காமல் அப்படியே இருக்கும் ஊடகத்தில் வளராது.
 4. ஸ்பைருலினா பாசி முதிர்ச்சி அடைய 3-4 நாட்களாகும் என்பதால் பானைகளை சூரிய ஒளி படுமாறு வைக்கவேண்டும்.
 5. நன்கு முதிர்ந்த ஸ்பைருலினா பாசியினை (வெளிர் நிறத்திலுள்ள ஊடகம் அடர் பச்சை நிறத்திற்கு மாறிய பின்பு) துணியில் வடிகட்டி அறுவடை செய்யலாம்.
 6. தூய தண்ணீரில் ஸ்பைருலினா பாசியினைக் கழுவி (பாசியுடன் ஒட்டியிருக்கும் ரசாயனங்களை நீக்குவதற்கு) பிறகு சப்பாத்தி மாவு, சட்னி, நூடுல்ஸ், காய்கறிகள் (2%) போன்றவற்றுடன் கலந்து உண்ணலாம். ஸ்பைருலினாவினை நிழலில் உலர்த்தி பதப்படுத்தலாம். ஆனால் அறுவடை செய்தவுடனே உலர்த்தி பதப்படுத்தினால் மட்டுமே அதன் தரமும், சத்துகளும் நிலைத்திருக்கும்.

நன்மைகள்

 1. 35-40 லிட்டர் கொள்ளளவு உள்ள மூன்று பானைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் ஸ்பைருலினா பாசி ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2 கிராம் என்ற அளவில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் 100% வைட்டமின் ‘ஏ’, 200% வைட்டமின் பி 12 சத்துகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய போதுமானது.
 2. உட்புறம் கான்கிரீட்டினால் செய்யப்பட்ட மண் பானைகள் மற்றும் பாலித்தீன் உறைகள் இட்ட குழிகளை விட மண் பானைகள் கையாளுவதற்கு ஏற்றவை.
 3. மண்பானைகள் சேதமடைந்து விட்டால் அவற்றை எளிதில் மாற்றிவிடலாம். மேலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் தூக்கி வைப்பதும் எளிது.
 4. மண்பானையில் வளர்க்கப்படும் பாசிகள், மாசு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கலாம்.
 5. கிராமப்புற மகளிரின் அதிக முயற்சியினால் அதிக அளவிலான ஸ்பைருலினா பாசியினை மண்பானைகளைக் கொண்டு உற்பத்தி செய்யலாம்.

ஆதாரம் : ஏ.எம்.எம் முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம், பாசிகள் பிரிவு, சவேரியார்புரம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு

3.26923076923
கி.வெங்கட் ஐயர் Nov 18, 2019 05:02 PM

ஐயா,நமது பகுதியில் சுருள் பாசி வளர்ப்பது மிகவும் சாதகமான இயற்கை இருக்கின்றது.தொழிலை சரியாக தெரியாமல் சுருள் நாசியின் உச்ச உற்பத்தியை கொண்டு வர முடியாது.மேற்கு ஐரோப்பாவில்,இதன் இறக்குமதி விலை ரூபாய் 1500/- கிலோ அளவாக உள்ளது.ஆனால் 90 சதவீதம் சிலிக்கா அளவு 5பிபிஎம் குறைவாக கொடுக்க முடியாத சூழலில் உள்ளார்கள்.தொழில் செய்வது பெரிதல்ல.அதனை தரமாக செய்ய கற்று கொள்ள வேண்டும்.பாசியை அதிக சூட்டில் பொசுங்கவிட்டதையும் சேர்த்து நெல்லில் பலரை சேர்த்து விற்பது போல நினைத்து தரத்தினை கெடுத்துவிடுகின்றனர்.தொழிலை தரத்துடன் செய்ய நினைத்தால் மட்டுமே தொழிலில் வெற்றி பெற முடியும்.உங்களின் சொந்த கண்காணிப்பு மிகவும் முக்கியம்

யோகாம்பிகை Nov 15, 2019 10:28 PM

நான் இலங்கையில் படிக்கிறேன். நீங்கள் எனக்கு இந்த கடல்பாசி விவசாயத்தை தொடங்குவதற்கு அறிவுரை கூற முடியுமா?? வளர்க்க தேவைப்படும்பாசி எங்கு கிடைக்கும்? அதன் முகவரி மற்றும் கூடுதல் தகவல் எனக்கு தேவைபடுகிறது. தயவுசெய்து எனக்கு தரவும்

ரேணுகா May 02, 2019 02:00 PM

அய்யா வணக்கம்.நான் நாகர்கோவிலில் வசிக்கிறேன்.
நான் சுருள்பாசி வளர்ப்பை சிறிய முதலீட்டில் துவங்க தங்களது ஆலோசனைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தொழிலை துவங்க இடம் மற்றும் முதலீடு எவ்வளவு தேவைபடும் என ஆலோசனை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

கந்தசாமி Oct 14, 2017 12:38 PM

ஐயா .நான் சிறிய முதலீடில் சுருள்பாசிவளர்க்க விருபுகிரேன் எனக்கு உதவி செய்ய முடியுமா

கோபாலகிருஷ்ணன்.M Oct 03, 2017 02:15 PM

அய்யா வணக்கம்.நான் ஈரோட்டில் வசிக்கிறேன்.
நான் சுருள்பாசி வளர்ப்பை சிறிய முதலீட்டில் துவங்க தங்களது ஆலோசனைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தொழிலை துவங்க இடம் மற்றும் முதலீடு எவ்வளவு தேவைபடும் என ஆலோசனை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top