பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பல்வகைமை

பல்வகைமை குறித்த பல தகவல்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பயன்கள்

பல்வகைமையானது இயற்கை சூழிடத்தின் பல்வேறு செயல்கள் மற்றும் பணிகளுக்கு உறுதுணை புரிகிறது. சமூகத்திற்கு  நன்மை பயக்கும் செயல்களில் சில காற்றின் தரம், சுற்றுச்சூழல் (உலகளவு மற்றும் உள்நாட்டின் கார்பன் சேகரிப்பு) நீர் தூய்மை, நோய் கட்டுப்பாடு, உயிரிமுறை பூச்சிகள் கட்டுப்பாடு மகரந்த சேகரிக்கை மற்றும் மண்ணரிப்பு தடுப்பு ஆகியவையாகும். பல்வகைமையானது சூழிலடத்தின் ஒரு நிலையான தன்மையை பெற உதவுகிறது. இதன் மூலம் இச்சூழிலடங்கள் தங்களின் பணியை தடங்கலில்லாமல் செய்ய வழிவகுக்கிறது.

பொருட்கள் அல்லாத பயன்களாக ஆன்மீக மற்றும் பொழுதுபோக்கு அறிவுத்திறன் வளர்ச்சி மற்றும் கல்வி ஆகியவையும் சூழிலடத்திலிருந்து பெறப்படுகின்றது. பல்வகைமையானது சூழ்நிலைமையை வேதாந்தத்திற்கும் மையமாக விளங்குகிறது.

வேளாண்மை

பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்த காட்டு இரகங்கள் மற்றும் உள்நாட்டு நில இரகங்கள் ஆகியவற்றில் மரபணு கூறின் மதிப்பு மிகவும் முக்கியமாகும். சில மரபணு கூறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட சில முக்கிய பயிர்கள் உருளைக்கிழங்கு மற்றும் காபி ஆகியவை ஆகும். கடந்த 250 வருடங்களாக பயிர் செடிகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது அவற்றின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு இரகங்களின் மரபணு பல்வகைமையை உபயோகித்ததே காரணமாகும். பசுமைக்புரட்சியின் காரணமாக கடந்த 50 வருடங்களில் ஏற்பட்டு இரட்டிப்பு பயிர் உற்பத்தியானது பல்வேறு பயனுள்ள மரபணு கூறுகளை உள்பயிர்பெருக்கம் மூலம் பயிர்களுக்குள் செலுத்தியதால் தான் ஏற்பட்டதாகும்.

முதன்மை பயிர் ஒரு நோயினால் தாக்கப்படும்பொழுது அதனிலிருந்து மீள்வதற்கு  பயிர் பல்வகைமை உதவி செய்கிறது.

  • ஐரிஷ் உருளைக்கிழங்கு கருகல் நோய் தாக்கிய 1846 ம் வருடம் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்ததும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்ததும் ஏற்பட்டது. இந்நோய் தாக்கக்கூடிய இரு உருளைக்கிழங்கு இரகங்களை பயிரிட்டதே இதற்கு காரணமாகும்.
  • 1970 ல் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவிற்கு நெல் புல் தழைகுட்டை வைரஸ் நோய் பரவியது. 6273 இரகங்கள் இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாயின. ஒரு இந்திய இரகம் (1966 ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது) இந்நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டிருந்ததால் அது பிரபலமாகி பின்னர் அந்த இரகமே வளர்க்கப்பட்டது.
  • 1970 ம் வருடம் இலங்கை, ப்ரேசில் மற்றும் மத்திய அமெரிக்காவின் காபி தோட்டங்களில் காபி துரு நோய் தாக்கியது. எத்தியோபியாவில் ஒரு எதிர்ப்பு சக்தி கொண்ட இரகம் இதற்கு கண்டுபிடிக்கபட்டது.

மனிதர்களுக்கு தேவையான உணவினை பல்வகைமை அளிக்கின்றது. நமக்கு தேவையான சதவிகித உணவு 20 வகை பயிர் தாவரங்களிடமிருந்து கிடைக்கின்றது. இதனில் 40,000 வகைகளை மனிதர்கள் பல்வேறு முறையில் உபயோகிக்கின்றனர். தங்களது உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ள இவைகளை நம்புகின்றனர் மனிதர்கள். தற்போதுள்ள இயற்கை அழிவுகளை கட்டுப்படுத்தினால் மனிதர்கள் இன்றும் இயற்கையின் உபயோகப்படுத்தாத திறன்களையும் அதிகரித்து உணவுப் பொருட்களையும் பெருக்கலாம்.

மனித ஆரோக்கியம்

பல்வகைமையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மனித ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தற்போது சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுற்றுச்சூழல் மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய இடர்களும் பல்வகைமையுடன் தொடர்புடையவையாகும் (எ.கா. மக்கள் தொகை மாற்றம், நோய் பரவும் முறைகள், தூய தண்ணீர் தட்டுப்பாடு, வேளாண் பல்வகைமை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை). மனிதர்களின் உணவு மற்றும் சத்துக் குறைபாடு நோய்த் தாக்குதல் மருத்துவ துறை சமூக மற்றும் மன ஆரோக்கியம் ஆன்மீக நலன் ஆகியவை பல்வகைமையினால் தாக்கப்படுபவை. பல்வகைமையானது பேரழிவின் இடர்களை நீக்குவதோடு அல்லாமல் அதன் பின்னர் வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பல்வகைமையுடன் தொடர்புடைய முக்கியமான ஆரோக்கியம் சம்பந்தமானது மருந்துகளின் கண்டுபிடிப்பும் மருத்துவ ஆதாரங்களும் கிடைக்கப்பெறுதலே ஆகும். தற்போதுள்ள மருந்துகளில் ஒரு கணிசமான அளவு இயற்கையிலிருந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பெறப்பட்டதாகும். சிவியன் மற்றும் பெர்ன்ஸ்டின் என்ற வல்லுநர்கள் கூறுகையில் ஐக்கிய அமெரிக்காவின் சந்தையில் உள்ள 50 சதவிகிதம் மருந்துகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும் என்கின்றனர். மேலும் உலக மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் தங்களின் ஆரோக்கியத்திற்காக இயற்கையை சார்ந்தே உள்ளனர்.

வியாபாரம் மற்றும் தொழிற்சாலை

தொழிற்சாலைகளுக்கு தேவையான அதிகமான பொருள்கள் உயிரியல் ஆதாரங்களிலிருந்தே எடுக்கப்படுகின்றன. இதனில் கட்டுமான பொருள்கள், நார்பொருள்கள், சாயங்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கும். பல்வேறு உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களை நிலையாக உபயோகப்படுத்தும் முறைகளின் ஆராய்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் பல்வகைமை மற்றும் சூழிடம் பொருள்கள் மற்றும் பணிகள் ஆரோக்கியமான பொருளாதார வாழ்விற்கு வழிவகுக்கும்.

பல்வகைமையின் துணையினால் வியாபாரத்திற்கு ஏற்படும் நன்மைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். எனினும் ஆதாரங்களை பாதுகாப்பதில் (நீர் அளவு மற்றும் தரம், மரக்கட்டைகள், பேப்பர் மற்றும் அட்டைகள் உணவு மற்றும் மருந்து ஆதாரங்கள் போன்றவை) அவற்றின் முக்கியத்துவம் உலகளவில் உணரப்பட்டுள்ளது. ஆதலால் பல்வகைமையின் இழப்பு வியாபார வளர்ச்சிக்கு தடை செய்யும் ஒரு இடர் காரணியாகவும் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆபத்தாகவும் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் கூறும் அத்தகைய இடர்களை பற்றிய கட்டுரைகளை உலக ஆதார நிலையம் (world resource institute) தற்போது தொகுத்து வழங்கியுள்ளது.

பிற சூழிலியல் பணிகள்

பல்வகைமை பல சூழலியல் பணிகளை கண்களுக்கு புலப்படாத வகையில் செய்கின்றது. இந்த வளி மண்டலத்தின் வேதியியல் மற்றும் நீர் நிலைகளை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கின்றது. பல்வகைமையானது நேரிடையாக நீர் தூய்மைபடுத்துதல் சத்துகளை மீன்சுழற்சி செய்து வளமான மண்ணை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. கட்டுப்பாடான சூழல்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி மனிதர்கள் சூழிடத்தினை தாங்களாகவே அமைத்துக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ளனர்.

(எ.கா) பூச்சி மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுவதை மனிதர்களால் போலியாக செயல்படுத்தும் பொழுது பில்லியன் டாலர்கள் செலவாகும்.

பொழுதுபோக்கு கலாச்சாரம் மற்றும் ரசனை அம்சங்கள்

பலர் பல்வகைமையிலிருந்து பொழுதுபோக்கு அம்சங்களான மலையேற்றம்,பறவைகள் காணுதல், மற்றும் இயற்கை எழிலை படிப்பது போன்றவற்றை மேற்கொள்வர். பல்வகைமையினால் இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர். கலாச்சார குழுக்கள் தங்களை இயற்கையின் ஒரு அங்கமாக நினைத்து கொண்டு உயிரினங்களுக்கு மரியாதை செலுத்துவர். 
பூங்கா அமைப்பு, மீன் தொட்டி வளர்ப்பு மற்றும் பட்டாம்பூச்சிகள் சேகரிப்பு போன்ற அனைத்தும் பல்வகைமையை சார்ந்தே உள்ளது. இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுத்தப்படுவது ஆயிரத்தில் பத்து வகை சிற்றினங்கள் மட்டுமே. மற்றவை முக்கிய பகுதியில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

கழுகு பாறை, ஒரிகன் மலையேற்றம்

இத்தகைய இயற்கை சூழலுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவானது மிகவும் புரிந்து கொள்ளப்படவில்லை, ஆயினும் பொது மக்கள் எப்பொழுதும் புதிய மற்றும் அரிய உயிரினங்களுக்கு மதிப்பு கொடுத்து அங்கீகரிப்பனர். தாவரவியல் பூங்கா (அ) மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் செல்வது கல்வி நோக்குக்கு ஈடான பொழுதுபோக்கு அம்சமாகும்.

வேதாந்த முறைப்படி விவாதம் செய்தால் உயிரியல் பல்வகைமையானது தனக்குண்டான பொழுது போக்கு மற்றும் ஆன்மீக மதிப்பினை மனிதர்களுக்கும் தனக்கும் கொண்டுள்ளது. இந்த ஆலோசனையின் படி எடுத்துக்கொண்டால் வெப்ப மண்டல காடுகள் மற்றும் பிற சூழலியல் உண்மை நிலைகள போன்றவை முக்கியமான மருந்துகள் மற்றும் பொருட்களை கொண்டுள்ளதால் பாதுகாக்கப்படவேண்டியவை ஆகும்.

ஆதாரம் :தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
2.93203883495
Nathiyaparathaman Oct 04, 2018 05:50 AM

This is very useful for me. Tq

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top