பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சிறந்த செயல்முறைகள் / விரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’

விரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’ பற்றிய குறிப்புகள்

‘பயோ கான்கிரீட்’

கான்கிரீட் என்பது கட்டிடங்களின் முதுகெலும்பு. அதன் வலிமையால் தான் பெரிய கட்டிடங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. ஒரு வேளை அந்தக் கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டால்? பெரிய பிரச்சினைதான். விரிசல் வழியே நீர் உள்ளே நுழைந்தால் கசிவு ஏற்படும். இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்கும். கட்டிடத்துக்கே பெரிய ஆபத்தாக முடிந்துவிடும்.

இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்யக்கூடிய ஒரு லேட்டஸ்ட் உத்தி ‘பயோ கான்கிரீட்’ அதாவது உயிருள்ள கான்கிரீட். நிஜமாகவே இந்த கான்கிரீட்டுக்கு உயிர் இருக்கிறது. வழக்கமான கட்டுமானப் பொருட்களுடன் பேசிலஸ் என்கிற பாக்டீரியாவைச் சேர்த்து இதனை உருவாக்குகிறார்கள்.

கான்கிரீட் வலுவாக இருக்கும் வரை இந்த பாக்டீரியா செயலாற்றுவதில்லை. ஒருவேளை கான்கிரீட்டில் விரிசல் ஏற்பட்டு நீர் உள்ளே புகுந்தால் பாக்டீரியா அதனைச் சரி செய்து கொள்கிறது. விரிசல் விழும் சமயங்களில் பாக்டீரியாக்கள் கான்கிரீட்டில் ஒரு வகையான வேதிப்பொருளை  உண்டாக்குகின்றன.

ஆபத்தை தவிர்க்கலாம்

இப்படி பாக்டீரியா உருவாக்கும் வேதிப்பொருள் விரிசலை அடைக்கும் பொருளாக செயல்படுகிறது. சில வாரங்களில் விரிசல் விழுந்த கான்கிரீட்டை பாக்டீரியா ரிப்பேர் செய்து மீண்டும் பழையபடி வலுவாகி விடுகிறது. இதன்மூலம் கட்டிடங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை பெருமளவு தவிர்க்கலாம்.

இதன் கூடுதல் சிறப்பாக கான்கிரீட் உருவாக்கப்பட்டு பல வருடங்கள் ஆனபிறகும் இந்த பாக்டீரியா உயிரோடு இருக்கிறது. எனவே பழைய கட்டிடம் என்றாலும் கூட அங்குள்ள கான்கிரீட்டில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால் பாக்டீரியா உடனே அதனது வேலையை செய்ய தொடங்கி விடுகிறது.

இயற்கை வளங்கள்

தேவையான பொருளை உற்பத்தி செய்து உடனே அடைத்துவிடும். இந்தத் தொழில் நுட்பத்தை ஹெங்க் ஜோன்கர்ஸ் என்பவர் கண்டறிந்துள்ளார். செயற்கையை சீர்செய்யும் வகையில் இயற்கை வளங்கள் அதீதமாக இருக்கின்றன. அவற்றை நம்முடைய வழக்கமான கட்டுமானப் பொருட்களுடன் சேர்க்கும்போது இது போல் பல பிரச்சினைகளை சரி செய்ய இயலும்.

ஆதாரம் : தினத்தந்தி நாளிதழ்

3.0253164557
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top