பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீடிப்புத்திறன் மற்றும் உயிரினப்பன்மை - அறிமுகம்

விப்ரோவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான நீடிப்புத்திறன் கல்வி திட்டம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

அறிமுகம்

புவியன் (Earthian) என்பது விப்ரோவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான நீடிப்புத்திறன் கல்வி திட்டமாகும். இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளிகளில் அர்த்தமுள்ள நீடிப்புத்திறனை உருவாக்க உதவுகின்றனர். இந்த திட்டத்தின் நோக்கம், பன்முக கண்ணோட்டம் மற்றும் பலதரப்பட்ட ஒழுக்கங்கள், கல்வி மற்றும் வாழ்க்கையில் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை புரிந்துகொள்ளுதலாகும். கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர், வாழ்வு மற்றும் சமூகத்தில் தகவலறிந்து விருப்பத்தெரிவு செய்ய இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தின் கருப்பொருள் "உயிரினப்பன்மை" ஆகும். புவயன் விருதுக்கு பள்ளி மற்றும் கல்லூரி சமர்ப்பிப்புகளில் சிறந்தது தேர்ந்தெடுக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட காலம், விருது வாங்கிய பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உதவியுடன் முழுமையான வழியில் நீடிப்புத்திறன் கல்வியை ஒருங்கிணைக்க உதவுகின்றனர்.

ஏன் உயிரினப்பன்மை

இந்த பூமி, உயிரினப்பன்மையினால்தான் வாழும் கிரகம் என அழைக்கப்படுகிறது. நீர் போன்று உயிரினப்பன்மையும் உயிர்கள் வாழ அவசியமானது. சூழ்நிலையமைப்பு உருவாக மற்றும் மாற்றமடைய, பூமி மற்றும் உயிரினங்களுக்கிடையே உள்ள சிக்கலான மற்றும் மாறும் தொடர்பு காரணமாயுள்ளது. இந்த வாழ்க்கை வலையை கூர்ந்து கவனித்தால்தான் அதை புரிந்துகொள்ள முடியும். எண்ணற்ற உயிர்கள், பல கண்ணுக்கு தெரியாமல், மற்றும் அவை வாழும் முறையினால் புலப்படாமல், புவிக்கு சேவை புரிபவர்கள் என வாழ்கின்றன. சூழ்நிலையமைப்பின் நலம் மற்றும் உயிர்களின் பன்முகத்தன்மைக்கு உயிர்கள் மிக அவசியமாகும். ஆகவே நீடிப்புத்திறன் மற்றும் உயிரினப்பன்மை மிக நெருங்கிய தொடர்புடையவை.

உயிரினப்பன்மையின் மூன்று நிலைகள்

சூழ்நிலையமைப்பு வேறுபாடு

பூமியில் குளங்கள், காடுகள், சதுப்பு நிலக்காடுகள், வயல்வெளிகள் மற்றும் பல விதமான சூழ்நிலையமைப்புகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட இயற்கை பகுதியில் பல வித பண்புகள் இருப்பதால் அங்கே பல சூழ்நிலையமைப்பு தொகுப்புகள் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு மலையில் காடுகள், நீர்நிலைகள், புல்வெளிகள் என பல சூழ்நிலையமைப்புகள் இருக்கும். சூழ்நிலையமைப்புகள் புரியும் பல சேவைகள் உயிரினப்பன்மையை பாதிக்கும்.

பல சிற்றினங்கள் பல குறுகிய சூழ்நிலையமைப்புகளில் மட்டும் காணப்படுகிறது. ஆகையால் இந்த வேறுபாட்டை அறிந்துக்கொள்வது மிக அவசியமானதாகிறது. இந்த சிற்றினங்களை இடத்திற்குரிய சிற்றினங்கள் என அழைக்கலாம். உயிர் வாழ ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லைப் பகுதியை நம்பி வாழும் இடத்திற்குரிய சிற்றினங்கள், கண்டிப்பாக சூழ்நிலைகளை பாதுகாக்காவிட்டால் அழிந்துவிடும். இந்த நிலையில், எந்த உயிர்களை காப்பது மற்றும் அவற்றை எப்படி பாதுகாப்பது என முடிவெடுக்க, சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான சங்கம், எல்லா உயிர்களையும் மிக அருகிவரும், அருகிவரும், பாதிப்படைந்த, அச்சுறுத்தலுக்குட்பட்ட, தரவு இல்லாத, குறைந்த அக்கறையுடைய மற்றும் மதிப்பிடாத என ஏழு பிரிவுகளாக பிரித்துள்ளது.

இந்த தகவலை சிவப்பு பட்டியல் என வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள முதல் மூன்று பிரிவுகளில் உயிரினங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சர்வதேச இயற்கை பாதுகாப்புக்கான சங்கம் தற்போது சூழ்நிலையமைப்புகளின் சிவப்பு பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளது. மேலே கூறிய ஏழு பிரிவுகளுடன் எட்டாவதாக குளைந்த சூழ்நிலையமைப்பு என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

சிற்றின வேறுபாடு

சூழ்நிலையமைப்புகளின் நடத்தையில் சிறு வித்தியாசங்களுடன் பல்வேறு உயிர்கள் இருக்கும் மற்றும் அவற்றின் பரவல் இடத்திற்கேற்றார் போல் மாறுபடும், சில நேரங்களில் ஒரு குறுகிய பகுதியிலேயே இது புலப்படும். எடுத்துக்காட்டாக, சாணத்தை நம்பி வாழும் சாண வண்டு, இவற்றில் சில சாணத்தை பந்துகளாக உருட்டும், சில சுரங்கப்பாதை அமைத்து அதில் சாணத்தை புதைக்கும், சில சாணத்தில் வாசம் செய்யும். சாண உருட்டிகளான வண்டுகளின் இடையே அவற்றின் அமைப்பு, நடத்தை மற்றும் சாண விருப்பு வேறுபடும். ஆகவே எல்லா உயிரினங்களும் ஒரு சூழ்நிலையில் தங்களுக்கு ஏற்ற சிறப்பு இடங்களில் வாழ்ந்து, அந்த இடத்திற்கேற்றார் போல் சிறப்பு பண்புகள், நடத்தைகள் கொண்டு வாழும். உயிர்களிடையே காணக்கூடிய வேற்றுமையை சிற்றின வேறுபாடு என அழைக்கலாம்.

தாவரங்களிலும் அதிக அளவில் வேறுபாடு காணப்படுகிறது. பொதுவாக தோட்டங்களில் காணக்கூடிய, தாவரவியலில் எடுத்துக்காட்டாக பயிலக்கூடிய காசி தும்பை தாவரம். இதன் தாவரவியல் பெயர் இம்பேஷியன்ஸ் பால்சாமினா ஆகும். வெப்ப மண்டல மழைக்காடுகளில் இன்னும் கண்டறியாத இம்பேஷியன்ஸ் பேரினத்தில் பல தாவரங்கள் இருக்கிறது. அங்கு கண்டறியப்பட்டுள்ள இம்பேஷியன்ஸ் தாவரங்களில் கிட்டத்தட்ட 169 சிற்றுனங்கள் இடத்திற்குரிய சிற்றினமாக உள்ளது.

முன்னதாக சில இந்தியாவின் தாவர பேரினங்களின் இடத்திற்குரிய சிற்றினத்தின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உணவுச் சங்கிலியில் தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை கொடுக்கும் கணக்கில்லா பயன்கள் ஆகிய தகவல்கள் அவற்றை ஏன் பாதுகாக்கவேண்டும் என்பதை முன்னிலைபடுத்திக் காட்டுகிறது.

மரபணு வேறுபாடு

முன் கூறிய சாண வண்டுகளிடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் கீழ் காணும் அந்துப்பூச்சிகளிடையே உள்ள பல்வேறு வடிவம் மற்றும் வண்ணங்களிற்கு காரணம் எது? இதற்கு காரணம் மரபணு தொகுப்பாகும். இந்த வித்தியாசங்கள் மற்றும் உயிர்களின் வாழ்விற்கு, பெற்றோர் இனங்களிடமிருந்து பெறப்பட்ட மரபணுவில் குறியிடப்பட்டுள்ளது. மரபணு வேறுபாடு என்பது உயிரினங்களில் இருக்கக்கூடிய பல்வகை மரபணுக்களாகும். மரபணுக்கள் வேதிப் பொருளாகும். இது தொடர்ந்து மாற்றமடையும். இந்த மாற்றம் ஒரு புதிய சிற்றினம் பரிணாமமடைய, உயிர்கள் தொடர்ந்து வாழ மற்றும் அழிய முக்கிய காரணமாகிறது.

உயிர்களின் வேறுபாட்டை பயில மற்றும் புரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. மேற்கூறிய நிர்ணயிக்கப்பட்ட வகைப்பாட்டை மீறிய வகையில் நீங்கள் விவசாய வேறுபாடு, கால்நடை வேறுபாடு, உணவு வேறுபாடு, சிறு குளங்கள் மற்றும் மர தண்டு வேறுபாடு என பார்க்கலாம். உயிரினப்பன்மையை புரிந்துகொள்ள மற்றும் அவற்றை பற்றிய விழிப்புணர்வு மேம்படுத்த, மே மாதம் 22ந் தேதி சர்வதேச உயிரினப்பன்மை தினம் என கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் உயிரினப்பன்மை செறிவுப்பகுதி

இமயமலை, மேற்கு மலைத்தொடர்ச்சி, வட கிழக்கு இந்தியா மற்றும் நிகோபார் தீவுகள் ஆகியவை இந்தியாவில் உள்ள நான்கு உயிரினப்பன்மை செறிவுப்பகுதிகளாகும். இவை அனைத்தும் பல தனித்துவமுடைய சிற்றினங்களை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகம், 2012ல் அதிக இடத்திற்குரிய சிற்றினங்களை கொண்ட மேற்கு மலைத்தொடர்ச்சியை உலக பாரம்பரிய தளம் என அறிவித்தது. அவை மழைப்பொழிவு, ஊட்டச்சத்து சுழற்சி, பருவநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய கண்ணுக்கு புலப்படாத பல நன்மைகளை தருகின்றன. இவற்றை வளர்ச்சி என்ற பெயரில் அழிப்பதில் ஒரு நன்மையும் இல்லை.

சமுத்திரங்களும் புவியை நிலைப்படுத்தும் முக்கிய உயிரினப்பன்மை செறிவுப்பகுதியாகும். இந்திய அரசினால் மிகக் குறைந்த கவனத்தில் இருக்கக் கூடிய இயற்கை வளம் சமுத்திரங்களாகும். இராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி வரை 22 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா ஒரு உயிரினக்கோள வளங்காப்பகமாகும். இது கடற்பசு மற்றும் கடல் வெள்ளரி போன்ற பல பாதுகாக்கப்பட்ட சிற்றினங்களைக் கொண்ட களஞ்சியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையினால், பொற்கால சூழ்நிலையமைப்பு மதிப்பீட்டுத் திட்டம் 2001ல் துவக்கப்பட்டது. இந்த திட்டம், சூழ்நிலையமைப்பு மாற்றம் மனிதனின் நல்வாழ்வை எந்த அளவிற்கு பாதிக்கிறது என மதிப்பிடவும் மற்றும் சூழ்நிலையமைப்பை பாதுகாக்க மற்றும் நிலைப்படுத்த தேவையான அறிவியல் பூர்வத் தீர்வை கண்டறியவும் ஆரம்பிக்கப்பட்டது. மதிப்பீட்டின் இறுதி அறிக்கையில், நில சூழ்நிலையமைப்பின் உயிரினப்பன்மை அழியக் காரணமாயுள்ளது, நில உபயோகத்தின் மாற்றமே என தெரிவித்துள்ளனர்.

மனிதனின் தொடர்ச்சியான செயல்களினால் உலகின் அனைத்து சூழ்நிலையமைப்புகளும் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. அவை தொடர்ந்து வேளாண்மை மற்றும் பல உபயோகங்களுக்கு பயன்படுகிறது. புவியின் நிலப்பரப்பின் நான்கில் ஒரு பங்கு தற்போது, பயிரிடும் அமைப்பாக உள்ளது.

இந்த சூழ்நிலையமைப்பு மதிப்பீட்டுத் திட்டக் கல்வி, உயிரினப்பன்மை அழிவதற்கான காரணிகளை இரண்டு வகையாக விவரித்துள்ளனர் - நேரடி மற்றும் மறைமுக காரணி. வாழிடம் மற்றும் பருவநிலை மாற்றம், ஊடுறுவும் சிற்றினம், மிகைச்சுரண்டல் மற்றும் இயற்கை மாசுபாடு ஆகிய நேரடிக் காரணிகள். நேரடிக் காரணிகள், மறைமுகக் காரணிகளின் (பொருளாதாரச் செயல்பாடு, மக்கள் தொகையியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக-அரசியல் மற்றும் கலாச்சார காரணிகள்) விளைவாகும் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உயிரினப்பன்மை இழப்பு மற்றும் சூழ்நிலையமைப்பு சேவைகள் குறைவதினால் உடல்நல சீர்கேடு, உணவுப் பாதுகாப்பின்மை, பொருள் செல்வ மாற்றங்கள், சமூக உறவுகள் மோசமடைதல் மற்றும் தெரிவு செய்தல் மற்றும் செயல்திறன் சுதந்திரம் குறைதலை, பொற்கால சூழ்நிலையமைப்பு மதிப்பீட்டுத் திட்டம் கண்டறிந்துள்ளது.

உயிரினப்பன்மை பாதுகாத்தல் விழிப்புணர்வின் முக்கியத்துவம்

பொற்கால சூழ்நிலையமைப்பு மதரிப்பீட்டுத் தரிட்டத்தின் அறிக்கையின்படி உயிரினப்பன்மை இழப்பிற்கு 16 விதத்ததில் மறுமொழி கூறுதல் வழி அமைக்கப்பட்டுள்ளது. முதல் கருத்தாக அறிவு அணிததிரட்டுதலாகும். தேசிய உயிரினப்பன்மை திட்ட இலக்காக, 2020க்குள் மக்கள்தொகையில் ஒரு குறிப்பிடட பகுதி (குறிப்பாக இளைஞர் சமுதாயம்) உயிரினப்பன்மையின் மதிப்பை அறிய வேண்டும். அது மட்டுமின்றி அதை எப்படி பாதுகாப்பது மற்றும் அதன் நடிப்புதரிறன் அழியாமல் எப்படி பயன்படுத்துவது என அறிய வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநில பள்ளி குழுக்களிடமும் இதை பற்றிய உயிரினப்பன்மை அறிவு அணிதிரட்ட வலியுருத்தப்பட்டுள்ளது.

உயிரினப்பன்மை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு, தொண்டு மனப்பன்மை போல் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். பள்ளி, வீடு மற்றும் சமூகம் ஆகிய இடங்களில் உயிரினப்பன்மையை கண்டறிவது மற்றும் புரிந்து கொள்ளுதல் ஆகிய இரண்டு நிலையும் நம்முடைய நீடிப்புத்ததிறன் பற்றிய அறிவை பெருக்க உதவும்.

குறிக்கோள்கள் - ஏன் இந்த செயல்பாடுகளை செய்கிறீர்கள் மற்றும் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்

அறிவுறுத்தல்கள் - இந்த செயல்பாடுகளை எவ்வாறு செய்வது

வளம் - இந்த செயல்பாடுகளை செய்வதற்கான குறிப்புகள் மற்றும் உதவிகள் அளிப்பது. வளங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பை விருப்பமிருந்தால் உபயோகிக்கலாம். உங்கள் பாணியிலும் நீங்கள் தகவல் அளிப்பதும் வரவேற்கபடுகிறது; கண்டறியும் தகவல்களை பதிவு செய்தல் அவசியமாகும்.

சிந்தனைகள் - கற்றறிதல் மிகவும் முக்கியமாகும். கேள்விகளை உபயோகித்து விவாதிக்கவும், உடன் சூழல் மீறி தகவல்களை ஆராயவும். கீழ்வரும் பொதுவான கேள்விகளை பயன்படுத்தலாம்.

  • கண்டறியும் தகவல்களை ஆராய்தல்
  • வகுப்பன் பாடங்களுடன் இணைக்கவும்
  • ஆசிரியர்கள், வகுப்புத் தோழர்கள், நண்பர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், இயற்கை நிபுணர்கள், வரலாற்றறிஞன், வனத்துறை அதிகாரிகள், பெற்றோர்கள், பாட்டன் பாட்டிகள் மற்றும் அரசு மற்றும் பல்கலைக்கழக வல்லுனர்கள் ஆகிய பலதரப்பட்ட மக்களுடன் விவாதியுங்கள்

குறிப்பு - சிந்தனைகள் தங்களின் பகுதி அ மற்றும் ஆ வின் தெரிவு செயல்களை செய்ய உதவும். இது உங்கள் சமர்ப்பிப்பின் பகுதி ஆகாது. ஆவணங்களை நீங்கள் விருப்பப்படும் முறையில் (எழுத்து, ஒலி அல்லது ஒளி வடிவிலோ) சேகரிக்க ஊக்குவிப்பர். நீங்கள் விருப்பபட்டால் விப்ரோவுடன் பகிர்ந்துக் கொள்ளலாம், ஆனால் அது கட்டாயமல்ல.

கர்ப்பிப்புகளை மதிப்பிடுதல்

புவியன்-க்கு அளிக்கப்படும் சமர்ப்பிப்புகள் தீர்ப்பு சான்றாளர் குழுவின் பரந்த அணுகுமுறையிலே மதிப்பிடப்படும். எந்த அளவு உண்மைத்தன்மையுடனும் மற்றும் முழுமையுடனும் செய்யப்பட்டது, ஆவணங்களை சேகரிக்கும் செயலாக்கத்திறன் மற்றும் பரந்த தொடர்புகளை பார்த்து இழுக்கும் திறன் ஆகிய அடிப்படையில் மதிப்பிடப்படும்.

உங்களுக்கு திசையுணர்வு மற்றும் தெளிவு அளிக்க சில அடிப்படை மதிப்பீடு முறையை கீழே பட்டியலிடுகின்றனர். கண்மூடித்தனமாக இதை பின்பற்றாதீர்கள் மேலே கூறிய முறையில் கவனம் செலுத்தவும்.

  • செயல்முறையின் உண்மத்தண்மையை அறிய அளிக்கப்பட்ட விரிவான ஆவணங்கள், கண்காணிப்பு பதிவுகள், கொடுத்த தகவல்கள் மற்றும் செயல்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்கள்.
  • ஆவணங்கள் சேகரிக்க உபயோகப்படுத்தப்பட்ட படைப்பாற்றல். பல வடிவங்களின் பயன்பாடு மற்றும் அறிக்கை அளிக்கும் வழி மற்றும் முறையினை இணைத்து முழுதாக அளிக்கபட்ட முறை.
  • சேகரிக்கப்பட்ட தகவல் அளிப்பது மட்டுமின்றி அதன் உண்மையான பிரச்சினைகளை புரிந்துகொள்ளுதல் திறன் மிக அவசியமாகும்.
  • செய்த செயல்கள் அனைத்தும் எவ்வளவு நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்த இணைக்கப்பட்ட செயல்கள் மற்ற பிரச்சினைகளுடன் இணைந்து, எவ்வாறு நீடிப்புத்திறனை புரிந்துகொள்ள உதவுகிறது.
  • பகுதி ஆ வின் வித்தியாசமான கண்ணோட்டங்கள் கொண்ட பிரச்சினைகள் புரிந்துகொள்ளப்பட்டு, யோசிக்கப்பட்டு, நன்கு வழங்கப்பட்டுள்ளதா என அறிதல்.

ஆய்வுக்கு இணையத்தை உபயோகிக்கலாம் ஆனால் சமர்ப்பிப்புகளில் பதிவிரக்கப்பட்ட உரைகள், வார்த்தைகள் மற்றும் விளக்க வரைபடங்கள் இருக்கக்கூடாது. உங்களின் சொந்த வார்த்தைகள் மற்றும் மாணவர்களின் வரைந்த வரைபடங்கள் இருக்கலாம். கற்றலின் அளவைவிட தரம் மிக முக்கியமாகும். அனைத்து இணைக்கப்பட்ட செயல்கள், மற்ற பிரச்சினைகளுடன் இழைந்து, எவ்வாறு நீடிப்புத்திறனை புரிந்துகொள்ள உதவுகிறது.

பகுதி அ-வுக்கான குறிப்பான சுட்டிக்காட்டிகள்

பல விதமான கருவிகள் மற்றும் வடிவங்களில் காட்சியளிப்பு தந்து, கேளிக்கை மற்றும் ஈடுபாட்டுடன் பகுதி அ - வை கவரத்தக்கதாக்கலாம்.

கதை சொல்லல் - உங்கள் செயல்களின் கண்டறி பதிவு, தகவு மற்றும் பொதுவான அனுபவங்கள் ஆகியவற்றை கதை வடிவில் வழங்கலாம். எ.கா. உங்கள் செயல்பாட்டின் போது கண்டறிந்த ஏதாவது ஒரு உயிரினத்தை போன்று நீங்களும் மற்றும் வேறு யாராவது ஒருவர் வேறொரு உயிராக நடித்து உயிர்களின் இடையே இருக்கக்கூடிய தொடர்பு மற்றும் மாற்றங்களை வெளிப்படுத்தலாம். சூழ்நிலை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்பதை கதை வடிவில் கூறலாம்.

கவிதை - உங்கள் செயல்களின் கண்டறி பதிவு சிறு கவிதை, ஈரடி மற்றும் ஹைகூவாக வழங்கலாம்.

வரைந்து விளக்குதல் - பல வகை உருவரை, வரைபடங்கள், கேலிச்சித்திரம் மற்றும் ஒவியங்களை பயன்படுத்தி காண்பதற்கு சுவாரஸ்யமான வகையில் வழங்குவது.

நிழற்படம்/காணொலி - ஒளிப்படம், காணொலிசார் திரைச்சித்திரங்கள் எடுத்து அவற்றை தேவையான இடத்தில், தேவையான போது பயன்படுத்தலாம்.

தகவல் விளக்கப்படம்/வரைபடம் மற்றும் காட்சியமைப்புகள் - தகவல்களை கவரதக்கதாக வழங்க இந்த முறைகளை பயன்படுத்தலாம்.

வேறு ஏதாவது ஒரு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வ முறையை தேர்ந்தெடுத்து தங்கள் அறிக்கையை வழங்கலாம்.

பகுதி அ வில் உள்ள கட்டாய செயல்களையும் மற்றும் தெரிவுறு செயலில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக முடிக்கவேண்டும் என கோரப்படுகிறது.

பகுதி ஆ - வுக்கான குறிப்பான சுட்டிக்காட்டிகள்

பகுதி அ வைக் காட்டிலும் பகுதி ஆ விற்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படும். பகுதி ஆ வின் நோக்கம், பகுதி அ வில் கற்ற உள்ளூர் சூழலின் உயிரினப்பன்மையை வெளியிட சூழலுடன் இணைக்க உதவும். பகுதி ஆ வில் ஆராய அறிகுறி கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கற்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். கேட்கும் கேள்விகள் நேரடியாக பதில் கூற அல்லது பதில் அளிக்க கடினமாக இருக்கும். இந்த பயிற்சியை எளிதாக்க ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் முக்கிய பங்கு வகிப்பார். அணி, பரந்த கருத்துகளை உள்ளடக்க மற்றும் வாதங்களுக்கு ஆதரவாக போதுமான தகவு செய்திக்கூறு தர அவர்கள் உதவி செய்வார்கள்.

பகுதி ஆ வின் கேள்விகளுக்கு பதிலளிக்க இரண்டு அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். பிரிவை முழுதும் நன்றாகப் படித்து ஒன்று அல்லது பன்முக அணுகுமுறையில் இணைத்து சமர்ப்பிப்புகளை கட்டமைக்கலாம்.

ஆழம் - ஒரு குழு சூழ்நிலையமைப்பில் எந்த வகை சிற்றினத்தை (இடத்திற்குரிய / அயல் / ஊடுறுவிய / பிறப்பிட) முன்னிறுத்த வேண்டும் என்று குழு முடிவு செய்யலாம். அக்குழு அந்த சிற்றினத்தை, வரலாற்று நிகழ்வு, இடப்பெயற்ச்சி, போட்டி, வாழிட மாற்றம், மனிதனின் குறுக்கீட்டின் தாக்கம், பாதுகாக்கும் விதம், அதன் வெற்றி தோல்வியை வைத்து அராயலாம்.

அகலம் - ஒரு சிற்றினத்தின் சூழ்நிலையமைப்பு சேவைகள் மற்றும் உயிரினப்பன்மை சம்பந்தமான கேள்விகள். அந்த சிற்றினம் இருக்குமிடத்தை (கிராமம், நகரம், மாநகரம்) பொறுத்து அந்த சிற்றினத்தை நம்பி மனிதனின் பிழைப்பு, மக்கள் தொகை மற்றும் அதற்கேற்ற தேவை. உயிரினப்பன்மையின் பரந்த பயன்கள், பயன்களின் புள்ளியயல் விவரங்கள், பயன்பாடு, வருவாய் ஈட்டல், அதனுடன் ஒன்றிய சூழ்நிலைக் காரணிகள் (நீர் பற்றாக்குறை, வாழிட மாற்றம், பொருளாதார தாக்கம், கலாச்சாரம், பாரம்பரியம், ஊழல், மற்றும் பல) என பல்வேறு விதத்தில் இன்னொரு குழு ஆராயலாம்.

பகுதி ஆ வின் கேள்விகளுக்கான பதில்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கற்று தெரிந்து கொண்டது உங்களின் பதில்களை வைத்து கண்டறிய முடியாது. இந்த பயிற்சியினால் என்ன கற்று கொண்டீர்கள் என நீங்கள் ஒரு கட்டுரை மூலமாக தெரிவிக்க வேண்டும்.

ஆசிரியரின் பங்கு

குழுவுக்கு வழிகாட்டியாக

1. பொதுவான வழிகாட்டியாக விளங்குதல்

2. மாணவர்கள் இந்த பயிற்சியின் செயல்களை தங்கள் பாடத்துடன் இணைக்க கற்றுத்தருவது. கூட்டு முயற்சி, செயல்திறன் வளர்த்தல், விசாரிப்பு மற்றும் மற்றவர் உணர்வறிதல் ஆகியவற்றை பயிற்சியளித்தல்.

3. புரிந்துக் கொண்டதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள, கேள்வி எழுப்ப, அனைவரும் சேர்ந்து என்ன செய்வது என யோசிக்க, கலந்தாய்வு மற்றும் குழு பிரதிபலிப்பு அமர்வுகளுக்கு வசதி செய்ய வேண்டும்.

4. நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரிடமும் கலந்துரையாடி அவர்களின் கருத்துரைகளை பெற ஊக்குவித்தல்.

5. மாணவர்கள் ஆராய்ந்ததை, வகுப்பில் கற்ற பாடங்கள் மற்றும் தலைப்புகளுடன் பிணைத்து பார்க்க உதவ வேண்டும். இது அவர்களின் புரிந்துகொள்ளுதலை பலப்படுத்தி, மேலும் சிந்திக்க வழிவகுக்கிறது. மேலும் எளிதாக செயலாற்ற உதவும். மானவர்கள் அவர்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தி தானே அனைத்து வேலைகளை செய்ய ஆசானாகவும் மற்றும் வழிகாட்டியாகவும் ஆசிரியர்கள் திகழ வேண்டும். கண்டிப்பாக மாணவர்களுக்காக படம் வரையவோ அல்லது எழுதவோ கூடாது.

நினைவில் கொள்ள வேண்டியவை

1. ஆக்கப்பூர்வமாக ஆவணங்களை தயார் செய்யும் போது பகுதி அ மற்றும் ஆ விற்கு தேவையான மையப்பணிகளை மறக்க கூடாது.

2. இந்த சிற்றேட்டில் குறிக்கப்பட்ட தெரிவுறு செயல்களில் இரண்டில் ஒன்றை முயற்சி செய்ய வேண்டும்.

3. உங்கள் சிந்தனையிலிருந்து நிறைய தகவலை பெற மறவாதீர்கள்.

அடிக்கடி கேட்கும் கேள்விகள்

1. இந்த ஆய்விற்கு தேவையான காலம் யாது?

கண்டிப்பாக பகுதி அ வின் கீழ் உள்ள செயல்களை முடித்து ஆவணப்படுத்த தோராயமாக வாரத்திற்கு 2-3 மணி நேரம் என 6-8 வாரங்கள் தேவைப்படும். உரமாக்க செயல் செய்து முடித்து முடிவுகளை அறிய 4 வாரங்கள். இது நடைபெறும்போதே அடுத்த செயல்களை மற்றும் முடிந்த செயலுக்கான ஆவணப்படுத்தலை செய்யலாம். ஆசிரியர்கள் நேரம் கிடைக்கும் போது இந்த பணி செய்ய குழுக்களுக்கு உதவலாம். பாடம் இல்லாத வகுப்புகள் மற்றும் பள்ளி நேரத்திற்கு பிறகுள்ள நேரத்தில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன் சேர்ந்து ஆராய்ச்சி பணி செய்யலாம்.

2. இது எந்த வகையில் உதவும்?

இந்த திட்டம் கற்றலுக்கான செயல்திட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைப்புகள் வாடிக்கையான பள்ளி பாடத்திட்டத்துடன் இணைக்கலாம். இந்த பணி தொடர்ந்த மற்றும் முழுமையான மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் (CCE) பள்ளிப் பாடத்திட்டத்துடன் இணைத்து கொள்ளலாம். உயிரினப்பன்மையின் பல்வேறு அம்சங்களை, அறிவியல், சமூக அறிவியல் கருத்துக்கள் மற்றும் மொழி வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்கலாம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சி, நோக்கியறிதல், பதிவு செய்தல், ஆவணமாக்கல், ஆராய்ச்சி, பகுப்பாய்வு, கருத்து தொகுப்பு, பிரதிபலிப்பு, எழுதுதல், ஆக்கச்சிந்தனையுடன் எழுதுதல் மற்றும் வடிவமைத்தல் ஆகிய திறன்களை புவியன் (Earthian) அளிக்கிறது.

ஆதாரம் : விப்ரோ எர்தியன் - குழந்தைகளுக்கான நீடிப்புத்திறன் மற்றும் உயிரினப்பன்மை குறித்த கையேடு

3.02631578947
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top