பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

க்ளாமைடியா செல்கள்

க்ளாமைடியா செல்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

க்ளாமைடியா பேரினம் செல்களுக்குள்ளே வசிக்கும் ஒரு கட்டாய ஒட்டுண்ணியாகும். இவை கிராம் நெகடிவ் பாக்டீரியாவை ஒத்திருக்கும். விலங்கினத்தில் காணப்படும் பொதுவான ஒட்டுண்ணியாகும். நான்கு சிற்றினங்கள் இதிலுண்டு.

 1. க்ளாமைடியா டிராக்கோமேட்டிஸ்
 2. க்ளாமைடியா சிட்டாசி
 3. க்ளாமைடியா நியுமோனியே
 4. க்ளாமைடியா பெக்கோரம்

க்ளாமைடியாவின் பொதுவான பண்புகள்

இவை நகர முடியாத, கிராம் நெகடிவ், செல்லினுள்ளே வாழும் கட்டாய ஒட்டுண்ணியாகும். இவற்றின் அளவு 250 முதல் 500 am ஆகும். இவற்றின் பெருக்கம் மற்ற நுண்ணியிரிகளைக் காட்டிலும் தனிப்பட்ட (unique) வாழ்க்கை சுழற்சி மூலம் நடைபெறுகிறது. இவை ஓம்புனரின் செல் சைட்டோபிளாசிற்குள் பிரிந்து குறிப்பிட்ட தன்மையுள்ள உள்ளடக்கிய பொருட்களை (inclusion bodies) உண்டாக்குகின்றன.

இந்த பொருள்கள் ஒளி நுண்ணோக்கி மூலம் காண இயலும். இவை ஆர்.என்.ஏ, டி.என்.ஏ. வைக் கொண்டு வைரஸ்களிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றன. இவற்றின் செல்சுவர் கிராம் நெகடிவ் பாக்டீரியாவை ஒத்திருக்கும். இவை நுண்ணியிர் எதிர்ப்பு பொருள்களான சல்பானோமைடு, குளோராம்பினிகால், டெட்ராசைக்ளின் இவற்றினால் எளிதில் பாதிக்கப்படுபவை. மேலும் இவை பல நொதிகளைச் சுரந்து வரம்புக்குட்பட்ட வளர்சிதை மாற்றங்களையுடையதாய் காணப்படுகின்றன. இந்த வளர் சிதை மாற்றங்கள் ஆற்றல் தருபவை அல்ல எனவே இவை ஆற்றல் ஒட்டுண்ணி எனப்படும். இவை ஓம்புனரில் இருந்து விருந்தோம்பியில் வெளியாகும் ஆற்றலைக் கொண்டு தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும். க்ளாமைடியா குறிப்பிட்ட ஆன்டிஜென்கள் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தனி உயிரியும், பல்வேறு ஓம்புனரிடம் அவை காட்டும் வீரியத்தன்மை. குறிப்பிட்ட ஆன்டிஜென்கள் மற்றும் நோய் உண்டாக்கும் தன்மையைப் பொறுத்து அடையாளம் காணப்படுகின்றன

வகைபாடு வரிசை

 • க்ளாமைடியேல்ஸ் குடும்பம்
 • க்ளாமைடியேசியே பேரினம்

பேகோசைட்ஸ்

இது ஆரம்ப நிலை உறுப்பாகும். இதன் அளவு 0.3um ஆகும். இதில் அடர்த்தி மிகுந்த நியூக்ளியாய்டு உள்ளது. இவை ஓம்புனரின் செல்லுக்குள் செல் விழுங்குதல் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். ஓம்புனரின் செல்சவ்விலிருந்து குமிழ் உருவாகி சிறிய ஆரம்ப பொருளைச் சுற்றிக் காணப்படும்.

சிறிய ஆரம்ப செல், இப்போது பெரியதாய் காணப்படும். இது தொடக்க உறுப்பு (Initial body) எனப்படும். அது 0.5pum அளவுள்ளது. இதில் அடர்த்தி மிகுந்த நியூக்ளியாய்டு இல்லை. ரெக்குலேட் பொருள் என்றும் அழைக்கப்படும்.

க்ளாமைடியா செல்லின் புற அமைப்பும், வேதியியல் அமைப்பும்

தூய்மைப்படுத்தப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் வெளியானவை:

 • செல் சுவர் : செல்சுவர் லிப்பிட் அதிகம் கொண்டதாய் கிராம் நெகடிவ் பாக்டீரியாவின் செல்சுவரை ஒத்திருக்கும். செல்சுவர் கடினமானது. டெட்ராபெப்டைடு இணைந்த மாட்ரிக்ஸ் காணப்படும். பென்சிலினை இணைக்கும் புரதங்கள் காணப்படும். செல்சுவர் உருவாகுதல், பென்சிலின் மற்றும் சைக்ளோசெரின் இவற்றினால் தடுக்கப்படும். க்ளைமைடியா செல் சுவர் லைசோசைமினால் பாதிப்படையாது.

சைட்டோபிளாசத்தில் உள்ள உள்ளடக்கிய பொருள்

 • நியுக்ளிக் அமிலம் ஆர்.என்.ஏ. டி.என்.ஏ. இவை இரண்டும் ஆரம்ப செல்லிலும், தொடக்க செல்லிலும் காணப்படும்.
 • டி.என்.ஏ. : ஆரம்ப செல்லில் டி.என்.ஏ. அடர்த்தியாகக் காணப்படும். தொடக்க செல்லில் சைட்டோபிளாசம் முழுவதும் பரவிக் காணப்படும்.
 • ஆர்.என்.ஏ. : ஆர்.என்.ஏ. சைட்டோபிளாசத்தில் உள்ள ரைபோசோமில் காணப்படும். பெரிய தொடக்க செல்லில் டி.என்.ஏவைப் போன்று நான்கு மடங்கு ஆர்.என்.ஏ. காணப்படும். க்ளாமைடியாவில், பாக்டீரியா குரோமோசோம் போன்று வட்டவடிவ டி.என்.ஏ. காணப்படும். அதிக அளவு லிப்பிட் பாஸ்போலிபிட்டாக காணப்படும்.
 • நச்சு : நோய்த் தொற்று செய்யும் க்ளாமைடியாவில் நச்சு தன்மை காணப்படும். 108 அதிகமான இப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்துவதினால் எலி இறந்துவிடும். நச்சுத் தன்மை வெப்பத்தினால் அழிக்கப்பட்டுவிடுமேயன்றி தீவிர ஊதாக்கதிர்கள் ஒளியால் அழிக்கப்படமாட்டாது.

க்ளாமைடியாவிலுள்ள பொருள்கள்

சைட்டோபிளாசத்தில் நன்கு உருவாகிய நுண்பொருள்கள் காணப்படும். இந்த நுண்பொருள்கள் நெருக்கமாக உட்கரு அருகில் காணப்படும். இவை ஜீம்சா நிறமேற்றியில் ஊதா நிறத்திலும் ட்ரக்கோமா, கன்ஜங்ட்டிவைட்டிஸ், எல்.ஜி.வியில் நுண்ணுறுப்புகள் கூட்டமாக வேறு வேறு அளவுகளில் காணப்படும்.

ட்ரக்கோமா : க்ளாமைடியா டிரக்கோமாட்டிஸ், கெரட்டோ கன்ஜங்டைவிடிஸ் (டிரக்கோமா) நோயை உண்டாக்கும். இதனால் பாதி அல்லது முழுவதுமாக கண்பார்வை போகும். நோய் தாக்கும் குறிப்பிட்ட இடங்களில், நோய்கடுமையாக இருக்கும்.

நோய் காரணி : இது க்ளாமைடியா ட்ராக்கோமாட்டிஸ் சீரோ வகை, A, B, B, C. யினால் உண்டாக்கப்படும்.

ட்ரக்கோமாவின் பரவுதலும் கட்டுப்பாடும்

ட்ராக்கோமா உலகம் முழுவதும் காணப்படுகிறது. இவற்றின் பரவுதலுக்கும் தட்பவெப்ப நிலை, இனம் இவற்றிற்கும் தொடர்பு இல்லை. ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவில் கடுமையான பொது ஆரோக்கியத்திற்கு பிரச்சினையாக உள்ளது. இந்நோய் கண்ணிலிருந்து கண்ணிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பரவும். கண் தவிர இனப்பெருக்க உறுப்புகளிலும் இந்நோய் காணப்படுகிறது. நுண்ணுயிரிகள் இனப்பெருக்க உறுப்பில் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தைக்கு நோய் உண்டாகும். உள்ளடக்கிய கஞ்சங்க்டினைட்டிஸ் நோய் போன்று நோய் உருவாகும்.

குறிப்பிட்ட இடங்களில் நோய் பரவும் போது நோயின் கடுமை, நோய் காலம், நோய் திரும்ப வருதல், மீண்டும் தொற்றுதல் இவற்றினால் பாதிக்கப்படும். ஹீமோபில்லஸ் மற்றும் மொரெக்ஸலா இவற்றின் தொடர்பினால் நோய் சிக்கலாகும். பொதுவான துண்டு பயன்படுத்துதல். கண் அழகு சாதனம், துணி துவைக்க பயன்படுத்தும் நீரின் அசுத்த தன்மை, ஈ காணப்படுதல் ஆகியவை நோய் தொற்றுதலை பரப்பும்

ட்ரக்கோமா நோய் தோற்றமும் நோய்க்குறியும்

நோய்த்தொற்று முதலில் கண்ணின் மேல் இமை வெளிப்படலத்தில் துவங்குகிறது. அது இரத்தம் படர்ந்த நிலையில் தோன்றி பின்னர் இரத்தசதைக் காம்புகளாக மாறுகிறது. லிம்பாய்ட் கூட்டங்களும் ஏற்படும். மேல் அல்லது கீழ் அல்லது இரண்டு கண் இமைகளும் பாதிக்கப்படலாம். முக்கியமாக மேல் இமையின் கடைசி பாகம் பாதிக்கப்படுகிறது. பின்னர் லிம்பாய்ட் கூட்டங்கள் அழுகுவதால் புண் தழும்பு ஏற்படுகிறது. பரவலாக செல்கள் ஊடுருவுகின்றன. அதே நேரத்தில் அந்த இடத்தில் நார்ப்பொருளாதல் (Fibrosis) ஏற்படுகிறது. புண்ணடைந்த பகுதி இழுத்துச் சுருங்குவதால், மேல் இமையின் தோற்றம் மாறுகிறது.

பின்னர் இது இமை உள்நோக்கி திரும்பி இருக்கும் கோளாறை ஏற்படுத்தி கொஞ்சம் அல்லது முழுமையான குருட்டை விளைவிக்கும். விழிவெண் படலத்தின் (Corraea) மேல் பகுதியில் செல்கள் ஊடுருவுதலும், புது இரத்தக் குழாய்கள் தோன்றுதலும் காணப்படும். (இது மேற்பகுதியில் இருந்து பின்னர் கீழ்ப்பகுதிக்கும் படரும்). மேலார்ந்த விழி வெண்படல அழற்சியும் ஏற்படும் ஊடுருவலில் ஏற்படும் செல்களும் நீரும் உள் உறிஞ்சப்படுவதால் பின்னர் சிறு குழிகள் தோன்றும் இவற்றிற்கு ஹெர்பட் குழிகள் என்று பெயர். விழி வெண் படலத்தில் ஒளி ஊடுருவாத் தன்மை ஏற்பட்டு புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கண் அல்லாத மற்ற இடங்களில் கிளாமைடியாவின் நோய்த் தொற்று உண்டாகும் போது, அது பாலுறுப்பு வெளிக் குழாய் மற்றும் கருப்பையின் கழுத்துப் பகுதியில் உள் சீழ்சவ்வுகளில் லிம்போசைட் கூட்டங்களைத் தோற்றுவிக்கும்.

நோய் ஆய்வுறுதி (Diagnosis)

நோய் திணையின் முறைப்பட்ட இடங்களில் கீழ்க்கண்ட குறிகள் நோக்கப்படவேண்டும்.

அவையாவன

 • விழி வெண்படலத்தின் மேற்பகுதியில் லிம்பாய்ட் கூட்டங்கள். விழி வெண் படலத்தில் ஊடுறுவல், புது இரத்தக் குழாய்கள் தோன்றுதல் ஆகும்.
 • மேல் இமை வெளிப்படலத்தில் புண் தழும்புகளும், அதன் அமைப்பினில் மாற்றங்களும் மற்ற பண்புகள் ஆகும்.

ஆய்வகத்தில் ட்ரக்கோமா நோயை கண்டறிதல்

மாதிரிகள் : கன்ஜக்ட்டைவா அல்லது கார்னியாவிலிருந்து சிறு சுரண்டிய பகுதி. மற்ற க்ளாமைடியா தொற்றுதலை ஆய்வகத்தில் கண்டறிதல். மாதிரிகளை சேகரித்தல் நோயின் வெளிப்பாட்டைப் பொறுத்தது.

ஆய்வகத்திற்கு கொண்டு செல்லுதல்

மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சுக்ரோஸ் பாஸ்பேட்டுடன் மாடுகளின் சீரம் சேர்ந்த ஊடகம் அல்லது சுக்ரோஸ் பாஸ்பேட் குளுக்கோனேட்டுடன் மாடுகளின் சீரம் சேர்ந்து அனுப்பப்படும். உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு 40°C - 60°C. குளிர் வெப்பநிலையில் வைக்கப்படும்.

நோய் கண்டறியும் முறைகள்

(1) செல்லியல் (சைட்டாலஜி),

(2) வளர்ப்பு

(3) ஆன்டிஜென் கண்டுபிடிப்பு,

நேரிடையான விளக்கம் : உயிர்கள் அல்லது நுண்பொருள்கள் இருப்பதை கீழ்கண்ட சாயப்பொருள்கள் மூலம் விளக்கலாம்

ஜீம்சாசாயம், ஜிம்மெனெஸ் சாயம், மாக்கிவில்லோ சாயம், அயோடின் சாயம் மற்றும் இமயுனோ ப்ளுரசன்ஸ்.

உயிரிகளைத் தனிமைப்படுத்துதல்

 • உயிரிகளை முட்டை, மஞ்சள் கரு அல்லது திசு கல்சரில் வளர்த்து, இந்த வளர்ப்பிலிருந்து நுண்பொருள்களை சாயமேற்றுத்தல் அல்லது இம்யுனோ ஃபுளுரஸன்ஸ் மூலம் கண்டறியலாம். சீரம், கண்ணீரில் குறிப்பிட்ட எதிர்பொருள் (ஆன்டிபாடி) இருப்பதை கண்டறியலாம்.
 • சிகிச்சை முறை : டெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின், ஆகிய. மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.95238095238
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top