பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுச் சூழல் நுண்ணுயிரியல்

சுற்றுச் சூழல் நுண்ணுயிரியல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நுண்ணுயிரிகள் பற்றிய படிப்பு முன்காலத்திலிருந்தே அதன் முக்கியத்திற்காகவும், மருத்துவம் மற்றும் தொழில் துறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்காலத்தில், நுண்ணியிரியல் மிகவும் விரிவடைந்த ஒரு அறிவியல் பாடமாக மாறியுள்ளது. நுண்ணியிரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில் அவை மிகவும் மோசமான சுற்றுப்புற கேடுகளை உண்டாக்குகின்றன. மேலும் சுற்றுப்புற கேடிற்கு எதிராகப் போரிடும் வீரர்களாகவும், நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.

உயிரி அல்லது மக்கள் தொகை மீது ஒட்டு மொத்தமான வெளிபாதிப்புகள் சுற்றுச்சூழல் எனப்படும். சுற்றுச்சூழலில் தண்ணீர், காற்று, நிலம், மற்றும் அவற்றின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு மற்றும் இந்த தொடர்பு நீர், காற்று, ஆகாயம், உயிரினங்கள் அவற்றின் பண்புகள் ஆகியவற்றிற்கிடையே நடைபெறுகிறது. இந்திய இதிகாசங்கள் சுற்றுச்சூழலை பஞ்சமகா பூதங்கள் என்று அழைக்கின்றன. அவை ஆகாயம், காற்று, நீர், பூமி, நெருப்பு எனப்படும். அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று செயல்பட்டு, சுற்றுச்சூழலிலும், உயிரினங்களிலும் ஒரு சமநிலையை உண்டாக்குகின்றன. சுற்றுச்சூழலில், உயிர் வேதியியல் மாற்றங்கள் நுண்ணியிரிகளின் செய்கையினால் ஏற்படுகின்றன. முதல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் முன்னேற்றத்திற்கான மாநாடு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் 1972 ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் நாள் நடைபெற்றது. இதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஐந்தாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகில் முதன்முதலில் தோன்றியவை நுண்ணியிரிகள் தான். அவை எல்லா இடங்களிலும், அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒரு கிராம் மண் 100 மில்லியனை விட அதிகமான நுண்ணுயிர்களை பெற்றிருக்கும். அவை பரிணாம வளர்ச்சி பூமியின் மேற்பகுதியின் மாற்றங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சிக்கல்கள் முதலியவற்றில் ஆழமாக ஈடுபட்டுள்ளன. நுண்ணுயிரிகள் தொழிற்சாலைகளினாலும், அதிக மக்கள் தொகையினாலும் உற்பத்தியாகின்ற. குப்பைகளை அழித்து சிதைக்கும் தனி ஆற்றலைப் பெற்றவை.

நுண்ணுயிரிகள் உலக சுற்றுப்புற இயலில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

 1. மண், நீர் மற்றும் உயிர் மூலகங்களில், அங்கக மற்றும் அனங்கக பொருட்களில் நுண்ணுயிரிகள் செயல்பாடு உள்ளது. உணவுச் சங்கிலியிலும், பூமியின் மேற்பரப்பில் ஆற்றல் ஓட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 2. தானே உணவு தயாரிக்கும் நுண்ணுயிரிகள் தாவரங்களுடன் உணவு தயாரித்தலில் பங்கேற்கின்றன.
 3. நோயுண்டக்கிகளாகவும், இணைந்து வாழும் உயிரிகளாகவும் உள்ள நுண்ணுயிரிகளின் பங்கு உலக சுற்றுச் சூழலியலில் முக்கியமானதாகும்

நுண்ணுயிர் சூழலியல் மற்றும் சுற்றுப்புற நுண்ணுயிரியல் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய துறைகளாகும். நுண்ணுயிரி சூழலியில் என்பது இயற்கைச் சூழலில் நுண்யிரிகளில் செயல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழல் அல்லாத இயற்கை சூழலில், நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளைப்பற்றி அறியும் இயல் ஆகும். சமீபகாலமாக இது தனித் துறையாகவும் பயனுள்ள துறையாகவும் வளர்ந்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் கேடுகளுக்குத் தீர்வுகாணும் நுண்ணுயிரிகளின் பயன்பாட்டையும் பெற்றுள்ளது.

காற்று மாசு

மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு செய்யக்கூடிய ஒன்று அல்லது பல மாசுகள் காற்று மண்டலத்தில் சேர்வது காற்று மாசடைதல் எனப்படும். காற்றில் ஏற்படும் விரும்பத்தகாத இயல்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளின் மாற்றங்களே காற்று மாசுபடுதல் என்றும் கூறப்படுகிறது. இது உயிருள்ளவற்றிற்கும், உயிர் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

காற்றில் தேவைக்கு அதிகமான மாசு மனிதர்களின் செயல்களினால் சேர்வதால், இயக்க சமநிலை காற்று மண்டலத்தை பாதிக்கிறது. அது மனிதன் மற்றும் அவனுடைய சூழலைப் பாதிக்கின்றது.

காற்று மாசடைவதன் ஆதாரங்கள்

கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், நைடிரஜன் சல்பைடு, குளோரின், கார்பன் டை ஆக்ஸைடு, ஹைடிரோகார்பன் மற்றும் ஆக்ஸிடண்ட்கள் முதலியவை வாயுநிலையிலுள்ள காற்று மாசுகள் ஆகும். மற்ற காற்று மாசுகள் தூசு, காட்மியம், குரோமியம் போன்ற பளுவான உலோகங்கள் ஆகும். எரிபொருட்கள் முழுமையாக எரியாததினாலும், ஜெட் என்ஜின்கள் வெளியிடும் புகை பொருட்கள், ஊது உலைகள் மற்றும் புகைத்தல். போன்றவை, கார்பன் டை ஆக்ஸைடு மாசு வெளியாகக் காரணமாகின்றன. கரி எரிவதாலும், பெட்ரோலியம் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகள், ஆற்றல் மிக்க கந்தக அமில கூடங்கள், உலோகத் தொழிற் சாலைகள் போன்றவை காற்றில் சல்பர் டை ஆக்ஸைடு மாசு ஏற்பட காரணமாகின்றன. நைட்ரஜன் ஆக்ஸைடு மாசானது பொதுவாக வாகனப்புகை, பாய்லர்கள், வெடிமருந்து தொழிற்சாலைகள், நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் மரம், கழிவுகள் எரிவதாலும் ஏற்படுகிறது.

மனித ஆரோக்கியத்தில் காற்று மாசினால் பாதிப்பு

காற்றின் மாசு மனிதர்களைப் பெருமளவு பாதிக்கிறது. இந்த பாதிப்பில் நச்சுத்தன்மை , இரத்தத்தில் நச்சுசேருதல், விபத்துக்கள் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஸ்த்மா மற்றும் மூச்சுக்குழல் அழற்சி (bronchitis), போன்றவை அதிகரித்தல், நுரையீரல் செயல்பாடுகள் சீர்கேடு ஆதல், கண், மூக்கு, தொண்டையில் எரிச்சல், தலைவலி, சுவாச மண்டல் எரிச்சல் போன்றவை அடங்கும்.

காற்றின் மூலம் பரவும் நோய்கள்

காற்றிலுள்ள நுண்ணியிரிகளுக்கு மண், நீர், அழுகிய (மக்கிய) உடல்கள் மற்றும் நோயாளிகள் போன்றவையே ஆகும். காற்றினால் பரவும் நோய்க்கிருமிகளால் ஏராளமான நோய்கள் பரவுகின்றன. அவை பெரும்பாலும் காற்றில் காணப்படுகின்றன. காற்று முக்கியமான பாதைகளில் ஒன்று. மேலும் ஏராளமான நோய்கள் காற்றினால் பரவுவது அறியப்பட்டுள்ளன.

குடிநீரின் நுண்ணுயிரியல் தரம்

நீரின் தரத்தையும், குடிநீராகப் பயன்படுத்த அதன் தகுதியையும் அறிய 100 ml நீரில் உள்ள குடல் வாழ் நுண்ணுயிரியின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தியத் தரக் கட்டுப்பாடு (BIS - Bureau of Indian Standard) நீரில் இருக்க வேண்டிய தாங்கிக் கொள்ள இயன்ற ஏரோசால் நீர்நிலைகளிலிருந்து, ஏராளமான நுண்ணியிரிகளைக் கொண்ட, நீர்த் துளிகள் காற்றில் வெளியிடப்படுவதே ஏரோசால் எனப்படும். காற்றோட்டம், தாவரங்கள், விலங்குகளின் பரப்பிலிருந்து நுண்ணியிரிகளை காற்றுக்குக் கொண்டு வருகிறது.

நீர்த்துளி, நீர்த்துளி நியூக்ளியஸ்

தும் முதல், இருமுதல், பேசுதல் நீர்த்துளிகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொன்றும் உமிழ் நீர் மற்றும் சழியைப் (mulCus) பெற்றுள்ளது. மேலும் இந்த நீர்த்துளி நோயாளிகளிடமிருந்து பரவினால் ஆயிரக்கணக்கான நோயை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை உள்ளடக்கியுள்ளது. நோய்க்கிருமிகள் சுவாசக் குழாயை ஆதாரமாகக் கொண்டவை. நீர்த்துளி நியூக்ளியஸ் வெப்பமான உலர்ந்த காற்றுமண்டலத்தில் இந்த நீர்த்துளிகள் மிகத் துரிதமாக ஆவியாகி நீர்த்துளி நியூக்ளியஸாக மாறுகிறது. எனவே, நீர்த்துளி ஆவியாவதால் படிந்த திடப்பொருளின் மிச்சம் நீர்த்துளி நியூக்ளியஸ் ஆகும்.

இம்முறையில் மூழ்கி இருக்கின்ற, மிதக்கின்ற திடப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. கழிவு அகற்றப்படாத கழிவுநீர் பெரிய திறந்த தொட்டிகளுக்குச் செலுத்தப்பட்டு பின்னர் சல்லடைக் கழிப்பு வீழ்படிவு முறையில் சிறிய துணுக்குகள் தொட்டியில் வீழ்படியுமாறு செய்யப்பட்டு நீக்கப்படுகின்றன. இந்த திடப்பொருள் (ஸ்லட்ஜ்) நீக்கப்பட்டு அவை காற்றில்லா செரித்தலுக்காக நிலத்திலும், உரக்குழியிலும் சேகரிக்கப்படுகின்றன. நீர்ம பகுதி ஸ்லட்ஜ் தொட்டிக்கு செலுத்தப்படுகிறது. ஸ்லட்ஜ் தொட்டிகளில் அலுமினியம் சல்பேட் அல்லது மற்ற உறையைச் செய்யும் பொருட்களைப் பயன்படுத்தி, கூட்டு மற்றும் கரிம பொருட்களையும், நுண்ணியிரிகளையும் தங்கவைத்தல் நீரை சுத்தப்படுத்தும் செடிமெண்டேஷன் முறையினை ஒத்துள்ளது. முதன்மை கழிவு சிகிச்சை 30-40 சதவீதம் BODயை நீக்குகிறது. மேலும் BOD ஒப்புக்கொள்ளக் கூடிய அளவு குறைப்பிற்கு இரண்டாவது சிகிச்சை தேவைப்படுகிறது. .

மொத்த குடல் வாழ் நுண்ணயிரி மற்றும் மலக்கழிவு நுண்ணுயிரி இவற்றின் அளவை நிர்ணயித்துள்ளது. குடல் வாழ் உயிரி மட்டுமின்றி, குடல்வாழ்ஃபாஜ்கள், க்ளாஸ்ட்ரீடியங்கள், மனித குடல் வைரஸ்கள் போன்றவையும் குடிநீரில் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன, குடிநீரில் பயாலஜிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட் - (BOD) (இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு) அளவு 3 ppmக்குக் குறைவாகவும் அல்லது 3 mg/லிட்டராகவும் இருக்க வேண்டும்.

கிளாஸ்ட்ரீடியா

 • 19 சதவீதம் 5. மனிதக் குடல் வைரஸ்கள் 0.0 சதவீதம் BOD மிகி லிட்டர் (இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு) Adapted from Payment (1991) கழிவு நீர் சீரமைப்பும், வெளியேற்றமும் பயன்படுத்திய நீரும், மனிதக் கழிவிலிருக்கும் நீர், கழுவுநீர், மற்றும் தொழிற்சாலைகளிலிருந்தும், விவசாயத்திலிருந்தும் வரும் கழிவுகள் கழிவுநீர் நீர் நிலையை அடைகின்றன.
 • பொதுவாக, கழிவுநீரில் 95 சதவீதம் நீரும், 5 சதவீதம் கரிம மற்றும் கரிமமற்ற பொருட்களும் அடங்கியுள்ளன. நீரில் பாதி மூழ்கிய நிலையில் திடப்பொருள் உள்ளது. கழிவுநீரை சீரமைக்க பல முறைகள் உள்ளன. சிறிய அளவில் மலக்கழிவை வடிகட்டும் தொட்டி மற்றும் செப்டிக் டாங்குகள் போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • கழிவுநீர் சீரமைத்தல் என்பது நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுமாறு செய்தல் ஆகும்.
 • கழிவு நீரை வெளியேற்றுவதில் மூன்று முக்கியமான முறைகள் உள்ளன. அவை முதன்மை, இரண்டாவது மற்றும் மூன்றாவது சிகிச்சைகள் ஆகும்.

இரண்டாவது சிகிச்சை

இது உயிரியல் சிகிச்சை அல்லது நுண்ணியிர் சிதைவு எனப்படும். இம்முறையில் BOD இன் 90-95 சதவீதமும் பெருமளவு நோய்க்கிருமிகளும் நீக்கப்படுகின்றன. BOD யின் அளவு குறைவதற்கு சிகிச்சையில் பல வழிகள் உள்ளன. கரிமப் பொருளின் மிகச்சிறிய பகுதியை தாதுப் பொருளாக மாற்றுவதன் மூலமும், ஒருபகுதியை நீக்கக்கூடிய திடப்பொருளாக மாற்றுவதன் மூலமும் BOD குறைப்பு ஏற்படுகிறது. இரண்டாவது சிகிச்சையில் பல முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிகரணக் குளம்

ஆக்ஸிகரணக் குளம் அதிக கழிவு நீரில் அல்காக்களை வளரச் செய்கிறது. இது கிராமப்பகுதியிலும், தொழிற்சாலைகளிலும் இரண்டாவது சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஹெடிரோ ட்ரோபிக் பாக்டீரியாக்கள் (Heterotrophic bacteria) கரிமப்பொருட்களை எளிய பகுதிகளாக சிதைத்து, அவை பச்சை பாசியின் வளர்ச்சிக்கு உதவுமாறு செய்கின்றன. இந்த சத்துக்களை பச்சை பாசிகள் பயன்படுத்தி அதன் மொத்த எடையை அதிகரித்துக் கொள்கின்றன. காற்று ஆக்ஸிஜன் அளித்து கரிம பொருட்களை சிதைவடையச் செய்கிறது. இரண்டாவது சிகிச்சையில் கரிமப் பொருள் நிலைத்தும், BOD அளவு குறைக்கப்பட்டும் மாற்றமடைகிறது. இது தூண்டப்பட்ட ஸ்லட்ஜ் முறை எனப்படும்.

முதன்மை சிகிச்சை

கழிவு நீரில் உள்ள 20-30 சதவீதம் கரிமப் பொருட்கள் மற்றும் சிறு துகள்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் நீக்குதல் முதன்மை மூலம், கரிமப்பொருள் வாயுக்களாகவும், இதன் மிகச் சிறிய அளவு செல் எடை அதிகரிப்பிலும் சேர்கிறது. இந்த செயல் நுண்ணியிரிகளின் செயல்பாட்டைப் பொருத்துள்ளது. ஆகவே இதனை உயிரியல் சிகிச்சை (Biological treatment) என்றும் கூறலாம்.

சொட்டு வடிகட்டி

காற்று சூழலில் இரண்டாவது சிகிச்சைமுறை சொட்டு வடிகட்டி கொண்டும் நடைபெறுகிறது. இது மிக எளிய கழிவு சுத்திகரிப்பு முறையாகும். இதில் உடைக்கப்பட்ட கல், சரளைக்கல், செங்கல் கட்டிகள் அல்லது செயற்கைப் பொருட்கள் அடங்கிய வடிகால் கொண்ட படுக்கை, தொட்டியின் அடிப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு சொட்டு வடிகட்டியில் அடுக்காக கற்கள் உள்ளதால், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் மெதுவாக சொட்டும்படி செய்யப்படுகின்றன. நுண்துளைகள் அடங்கிய பொருட்கள் கொண்ட படுக்கையில், சுழலும் நீர் தெளிப்பான், அமைக்கப்பட்டு, நீர்ம கழிவை வழங்கி, வழிந்து வருவதை அடியில் சேகரிக்கிறது.

ஆக்டிவேட்டட் ஸ்லட்ஜ் முறை

இது மிகப்பரவலாகப் பயன்படுகிறது. காற்று சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. இதில் கழிவு நீரில் துரிதமான காற்றோட்டம் நிகழ்கிறது. கழிவானது முதன்மை படியும் தொட்டியிலிருந்து காற்றுத் தொட்டிக்குச் செலுத்தப்படுகிறது. கழிவு, வேகமாக சுழலும் அமைப்பு மூலம் காற்றோட்டம் செய்யப்படுகிறது. இவ்வாறு மிக துரிதமாக காற்றோட்டம் உண்டாக்கப்படுவதால், சிறுசிறு தொகுதிகள் (floc-formation) ஏற்படுகின்றன, கூழ் பொருட்கள் மற்றும் மிகச்சிறிய மூழ்கி மிதக்கக்கூடிய கழிவுப் பொருட்கள் ஒன்று சேர்ந்து தொகுதிகளாக தோன்றும். இவை சிறுசிறு தொகுதிகள் என்று (floccules) அழைக்கப்படுகின்றன. இவை தொட்டியில் தங்க விடப்படுகின்றன.

மூன்றாவது சிகிச்சை முறை

சிதைவுறாத கரிமப்பொருட்கள் பளுவான உலோகங்கள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவற்றை நீக்குவதற்குப் பயன்படுவது மூன்றாவது சிகிச்சை ஆகும். நைட்ரஜன் மற்றும் பாஸ்பரசின் உப்புக்கள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில் இவை யூட்ரோபிகேஷன் (eutrophication) உண்டாக்கக் கூடியவை. தூண்டப்பட்ட கார்பன் ஃபில்டர்களைப் பயன்படுத்தி கரிம மாசுபடுத்திகள் (Pollutants) அகற்றப்படுகின்றன. சுண்ணாம்பை சேர்ப்பதால், பாஸ்பரஸ் கால்சியம் பாஸ்பேட்டாக வீழ்ப்படிவாகிறது. உயர் pH ல் நைட்டிரஜன் ஆவியாகும் முறையில் அம்மோனியாவாகிறது. இவ்வாறு நைட்டிரஜனை அகற்ற முடிகிறது. குளோரினேஷன் மூலம், (குளோரின் வாயு) அம்மோனியா, டைக்குளோரமைன் ஆகவும், பின்னர் நைட்ரஜனாகவும் மாற்றப்படுகிறது. கழிவுநீர் சிகிச்சையில் இறுதி நிலை நுண்ணுயிர் நீக்கம் ஆகும். இதில் நோய் உண்டுபண்ணும் நுண்ணியிரிகளைக் கொல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. குளோரின் வாயு அல்லது ஹைடிரோகுளோரைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி குளோரினேஷன் மூலம் இந்த தொற்று தடை நடைபெறுகிறது. அவை நீருடன் வினைபுரிந்து ஹைப்போகுளோரஸ் அமிலமாக ஒரு வீரியமான ஆக்ஸிடண்ட் மற்றும் பாக்டீரியா எதிரியாக செயல்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தலாம். மூன்றாவது சிகிச்சை முறை மிகவும் செலவு அதிகமான முறையாகும்.

யூட்ரோஃபிகேஷன்

தேவையான சத்துக்கள், கரிம மற்றும் கரிமமற்ற சத்துக்கள் சேர்ந்த நீருக்கு யுட்ரோப்பி என்று பெயர். இவ்வாறு அதிகரிக்கப்பட்ட சத்துக்கள் பச்சை பாசி மற்றும் நீர்த்தாவரங்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. இதற்கு யூட்ரோஃபிகேஷன் என்று பெயர். இதனால் ஆக்ஸிஜன் குறைவு, சல்பேட்டுகள் தோன்றுதல், மற்றும் எதிர்ப்பு சக்தி அற்ற உயிரிகளின் இறப்பினாலும் துர்நாற்றம் போன்றவை ஏற்படுகின்றன. மேலும் நீர்த்தாவரங்களில் ஒரு குறிப்பிட்ட உயிரினங்களின் பெருக்கத்திற்கும் காரணமாகிறது. வண்டல் படிவு ஏற்பட்டு இறுதியில் எதிர்ப்பு திறன் பெற்ற உயிரினங்கள் உள்ளதாக மாறுகிறது.

கழிவு மறுசுழற்சி

 • கழிவு மறுசுழற்சி என்பது ஒரு முழுமையான முறை அல்ல. ஏனெனில் சட்டப்பூர்வமான, தொழில் ரீதியான மறுசுழற்சி பொருட்களை வியாபார தலங்களில் விற்பதற்கு திட்டங்கள் உண்டாக்கி அவை கழிவிலிருந்து கிடைக்கும் பொருட்களை பயனுள்ளதாக செய்தால் அதனால் பலனுண்டு.
 • எஃகு உற்பத்தியில் வெளியாகும் திடக்கழிவுகளை மறுபயனுக்கும் மறு சுழற்சிக்கும் உட்படுத்தலாம். சரியாக மேலாண்மை செய்யப்பட்டால், இது தொழிற்சாலைகளில் வெளியாகும் பொருட்களுக்கு ஒரு ஆதாரமாகவும், ஆற்றல் உற்பத்தியாவதற்கும் ஆதாரமாக உள்ளது. திடக்கழிவுகளை சிகிச்சை செய்யும் முறைகளில் மறுசுழற்சி என்பது மிகவும் இன்றியமையாததாகும். மறுசுழற்சியில், எளிய மற்றும் குறைந்த செலவில் திடக்கழிவுகளிலிருந்து, தீங்கு விளைவிக்கின்ற அல்லது நச்சுத் தன்மையுள்ள பொருட்களை பிரித்தெடுத்தல் நடைபெறுகிறது.
 • இவ்வாறு கிடைக்கின்ற திட அடர்வு சிறு கட்டிகளாகவோ அல்லது தூளாகவோ மின்சார உலையில் சேர்க்கப்படுகிறது. இது ஓரளவிற்கு கச்சாப் பொருட்களின் விலையைக் குறைக்கின்றது. தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நீக்கப்பட்ட பின்னர் கிடைக்கின்ற மீதிப் பொருளை (residue) மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது சூழல் நட்பு பொருளாக வெளியேற்றலாம். மீதிப் பொருட்களை கட்டிடப்பொருட்களாக மறுபடியும் பயன்படுத்தலாம்.

கலப்பு உரம் தயாரிக்கும் முறைகள்

சிதைக்கப்பட்ட, கரிமப்பொருள் மற்றும் எரு ஆகியவை சேர்ந்த கலவை மண்ணுடன் கலக்கப்பட்டு தாவரங்களின் வளர்ச்சிக்கு சேர்க்கப்படுகிறது. இதற்கு கலப்பு உரம் அல்லது மக்கிய உரம் என்று பெயர். பொதுவாக மக்கிய உரம் தயாரிக்க இரண்டு முறைகள் உள்ளன.

வீட்டினுள்ளே தயாரிக்கும் முறை

மாட்டுக்கொட்டகைக்கு அருகில் ஒரு உரக் குழி வெட்டப்படுகிறது. உரம் தயார் செய்ய பொதுவாக 3' x 6' x 6' அளவுள்ள குழிகள் அமைக்கப்படுகின்றன. தாவரத்தின் வேண்டாத பொருட்கள் மாடுகளுக்கு விரிப்பாக மாட்டுக் கொட்டகையில் போடப்படுகிறது. இதன்மூலம் தாவர பொருட்கள் மாடுகளின் கழிவுகளினால் ஈரமாகிறது. இவ்வாறு ஈரமான பொருட்கள் மாட்டுக் கொட்டகையிலிருந்து மற்ற கழிவுகளுடன் எடுக்கப்பட்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட கம்போஸ்ட் குழிகளில் பரப்பப்படுகின்றன. குழியின் அடியிலிருந்து 3 அடி உயரம் வரை கழிவுப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதன்மீது தேவையான அளவு மாட்டுச்சாணம் சேர்க்கப்பட்டு, நீர் தெளிக்கப்படுகிறது. தரை அளவுக்கு 1 அடி வரையில் மாட்டுச் சாணம் குழிகளில் சேர்க்கப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை இதனைச் சிறந்த முறையில் கிளறிவிட்டால் 8 வாரங்களில் தரமான மக்கிய உரம் கிடைக்கிறது. இது காற்றுச் சூழலில் தயாரிக்கும் முறையாகும்.

பங்களூர் முறை

இது மக்கிய உரம் தயாரிக்கும் மற்றொரு முறை ஆகும். இந்த முறையில் நகரத்தை விட்டு தொலைவிலுள்ள ஒரு நிலப்பரப்பு அல்லது தரிசு நிலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இம்முறையில் 4.5-10 மீட்டர் நீளமும், 1.5-2.5 மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் ஆழமும் உள்ள குழிகள் தோண்டப்படுகின்றன. இந்தக் குழிகளில் மாறி மாறி கருப்பு மண் நிரப்பப்படுகிறது. மேலே நிரப்பப்படும் கருப்பு மண்ணின் பருமன் 250 mm ஆக இருக்கவேண்டும். மேலும் கழிவுகளைக் கொண்டு நிரப்பவேண்டும். பிறகு இந்தக் கழிவுகள் 5 mm பருமன் கொண்ட அளவிற்கு கருப்புமண் கொண்டு மூடப்படுகிறது. நுண்ணுயிர்கள் கற்றில்லா சூழலில் செயல்படுவதால் கழிவுகளின் வெப்பநிலை ஏழுநாட்களில் 70°C ஆக உயருகிறது. இந்த வெப்பம் 2-3 வாரங்களுக்கு மக்கிய உரத் தொகுதியில் நிலைத்து இருக்கும். இந்த வெப்பம் கழிவுகள் காற்றில்லா சிதைவின் மூலம் மக்கிய உரமாக மாற உதவுகிறது. மேலும் கழிவிலுள்ள நோய் உண்டுபண்ணும் நுண்ணியிரிகளைச் கொல்லக்கூடியது. இதன் பயனாக, 4 மாதங்களில் சிறந்த தரமுள்ள மக்கிய உரம் கிடைக்கிறது.

சாண எரி வாயு உற்பத்தி

அங்ககப் பொருட்கள், காற்றில்லா நொதித்தல் முறையில் சாண எரி வாயு உருவாகிறது. சாண எரி வாயுவில் 55-70% மீதேனும் 3045% கார்பன்-டை-ஆக்ஸைடும், அம்மோனியா மற்றும் ஹைடிரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் சிறிதளவும் அடங்கியுள்ளன. காற்றில்லா செரிமானம் ஒரு காற்று புகாத உருளை வடிவ தொட்டியில் நடைபெறுகிறது. இந்த தொட்டிக்கு சாண எரிவாயு செரிமானத் தொட்டி என்று பெயர். கான்கிரீட் கற்களாலும், எஃகினாலும் இந்த தொட்டி உருவாக்கப்படுகிறது. வாயு சேமிப்பின் அளவுக்கு ஏற்ப, மேலும் கீழும் நகரக்கூடிய ஒரு எஃகினால் ஆன வாயு சேமிப்பு தொட்டி (gas holder) அமைந்துள்ளது. தொட்டியின் பக்கங்கள், களிமண் கலைவையில் இருக்குமாறு அமைந்துள்ளதால், வாயு கசிவு தடுக்கப்படுகிறது. இத்தகைய தொட்டி மிதக்கும் தொட்டி (floating drum) என்று அழைக்கப்படுகிறது.

உதாரணம் : KVIC (Khadi Village Industries Corporation) காதி கிராம தொழில் அமைப்பு.

சாண எரி வாயு அமைப்பின் செயல்பாடு

மாட்டுச்சாணம் சமமான நீருடன் சேர்க்கப்பட்டு கலவையாக மாற்றப்பட்டு, சாண எரிவாயு செரிமானத் தொட்டியின் உள்குழாய் வழியாக ஊற்றப்படுகிறது. இந்த செரிமானம், ஏறத்தாழ 35°Cஇல், pH மதிப்பு 6.8-7.5 ல் தேவைக்குறிய அளவு நைட்ரஜனும், பாஸ்பரஸும் இருக்கும்போது, தொடர்ந்து நடைபெறுகிறது. சாண எரி வாயு உருவாக 40-50 நாட்கள் ஆகின்றன. செரிமானக் கிணறில், உருவாகின்ற வாயு, எஃகு தொட்டியின் சேர்க்கப்பட்டு, எரிபொருளாக தொட்டியின் மேற்புறத்திலிருந்து வெளியாகிறது.

சாண எரி வாயு உருவாதல்

காற்று புகாத சூழலில், சாண எரிவாயு உருவாதல் மூன்று நிலைகளில் ஏற்படுகிறது. அவை நீர் கலந்த நொதித்தல் நிலை அஸிடோஜெனிக் மற்றும் மெத்தனோஜெனிக் நிலைகள் எனப்படுகின்றன.

நீர் கலந்த நொதித்தல் நிலை

இது ஒரு முதல் நிலையாகும். இதில் சாணம் (feed stock) நீரில் கரைக்கப்பட்டு, நொதிகளுடன் சேர்க்கப்படுகின்றன. சிக்கலான பகுதிகளை (polymer) கரிம அமிலங்களாகவும், ஆல்கஹாலாகவும் நீர்கலந்த நொதித்தல் முறையில் அதற்குரிய பாக்டீரியாக்களால் செய்யப்படுகின்றன. பாக்டீரியங்களின் முதல் தொகுதியில் பேசில்லஸ், செல்லுலோமோனாஸ், க்ளாஸ்ட்ரீடியம் மற்றும் ரூமினோகாக்கஸ் போன்றவை அடங்கியுள்ளன. இந்த பாக்டீரியங்கள், கார்போஹைடிரேட், செல்லுலோஸ், புரோட்டீன் மற்றும் கொழுப்பு முதலியவற்றை எளிய சர்க்கரையாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் சிதைவுறச் செய்கின்றன.

அஸிட்டோஜெனிக் நிலை

இந்த நிலையில் பாக்டீரியங்களின் இரண்டாவது தொகுதிகளான அஸிட்டோவிப்ரியோ செல்லுலோசால்வென்ஸ் பேக்டீராய்ட் செல்லுலோ சால்வென்ஸ் (ஃபேகல்டேடிவ் காற்றில்லா சூழல் பாக்டீரியா மற்றும் ஹைடிரஜன் உருவாக்குகின்ற அஸிட்டோஜீனிக் பாக்டீரியங்கள்) போன்றவை எளிய கரிமப்பொருட்களை, ஆக்ஸிக்கரண குறைத்தல் செயல்பாடுகள் மூலம் அசிடேட், ஹைடிரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. இந்த பொருட்கள் பாக்டீரியங்களின் இறுதி தொகுதிக்கு உணவாகப் பயன்படுகின்றன.

மெத்தனோஜெனிக் நிலை

காற்றில்லா செரித்தலில் இது ஒரு இறுதி நிலை. இதில் அசிடேட் ஹைடிரஜனும், கரியமில வாயுவும் கடுமையான காற்றற்ற சூழலில் வாழும் மீத்தேன் உருவாக்குகின்ற பாக்டீரியங்களின் மூலம் மீத்தேனாக (பயோகேஸ்)வும் கரியமில வாயுவாகவும் மற்றும் மற்ற வாயுக்களின் மிகமிகக் குறைந்த அளவுடனும் மாறுகின்றன. மெத்தனோஜெனிக் பாக்டீரியங்களில் மெத்தனோபாக்டீரியா ஃபார்மிகம், மெத்தனோ பாக்டீரியம் தெர்மோ ஆட்டோட்ராபிகம், மெத்தனோகாக்கஸ் வோல்டே மற்றும் மெத்தனோமைக்ரோபியம் மொபைல் போன்றவை அடங்கியுள்ளன

சாண எரிவாயுவின் பயன்கள்

சாண எரிவாயு ஒரு சிறந்த, செலவு குறைவான (மலிவான) எரிபொருளாக சமையல் செய்யவும், விளக்குகளிலும், இயந்திரங்களை இயக்கும் ஆற்றலுக்கும் பயன்படுகிறது. சாண எரிவாயு தயாரிக்கும் செயல், மனித மற்றும் விலங்குகளின் கழிவுகளை சுகாதாரமான முறையில் வெளியேற்ற சிறந்த வழி முறையாகும். புகையில்லாத எரிபொருளாக இருப்பதால், இது கண் மற்றும் நுரையீரல் நோய்களைக் குறைக்கிறது. கிராமப்புறங்களில் சாண எரிவாயு எரிபொருளாகப் பயன்படுவதால், மரம் எரிபொருளாக செலவழிவதைக் குறைக்கிறது. மேலும் காடுகளிலிருந்து மரம் எரிபொருளாக வழங்கப்படுவதையும் பெருமளவு குறைக்கிறது. சாண எரிவாயு செரித்தல் தொட்டியில் இருந்து செரிமானம் செய்யப்பட்ட கலவை சிறந்த செறிவூட்டப்பட்ட எருவாக மண் வளத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.

நினைவிற் கொள்ள வேண்டியவை

 1. காற்று மாசைப் பற்றியும், மனித நலத்தின் மீது அதன் மதிப்பைப் பற்றியும் புரிந்து கொள்ளுதல்
 2. காற்றினால் பரவக்கூடிய நோய்களைப் பற்றி அறிக குடிநீரின் தரத்தைப்பற்றி விழிப்புணர்வு கொள்ளுதல்
 3. கழிவுநீரை வெளியேற்றும் வெவ்வேறு வழிகளைப் பற்றி அறிதல்
 4. குளங்களில் யுட்ரோபிகேஷன் பற்றி புரிந்து கொள்ளுதல்.
 5. கழிவு மறுசுழற்சி மற்றும் சாண எரிவாயு உருவாதலின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளுதல்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.0
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top