பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நுண்ணுயிரிகளும் நோய்களும்

நுண்ணுயிரிகளின் நோய்களைப் பற்றிய குறிப்புகள்.

நுண்ணுயிரிகளும் நோய்களும்

மனிதர்களுக்கு நுண்ணோக்கியினால் மட்டுமே பார்க்ககூடிய சிறிய எதிரிகள் இருக்கின்றன. இந்த எதிரிகள் நுண்ணுயிரிகள் எனப்படுகின்றன. நுண்ணுயிரிகள் நமது உடலில் மிகப்பெரிய அளவில் வாழுகின்றன. இந்த நுண்ணுயிரிகளில் சில நம் உடலின் பல்வேறு பணிகளை செய்கின்றன. பல நுண்ணுயிர்கள் நமக்கு பயன்படுகின்ற போதிலும் சில நுண்ணுயிரிகள் தீவர நோய்களை ஏற்படுத்தும் தன்மை உடையவையாக உள்ளன. பாக்டீரியாக்கள் பூஞ்சைகள் வைரஸ்கள் மற்றும் ஓரணு போன்ற நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் நாம் பயன்படுத்தும் உணவு மற்றும் தண்ணீர் மூச்சுக்காற்று தோல் தொடர்புகள் மற்றும் பாலியல் தொடர்புகள் மற்றும் புண்கள் மூலம் நமது உடலில் நுழைகின்றன.

இந்த சிறிய கட்டுரை நுண்ணுயிரிகள் மூலம் ஏற்படுகின்ற காசநோய் பற்றியும் அதன் காரணங்கள் அறிகுறிகள் தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கிறது.

காரணங்கள்

காசநோய் ஒரு பொதுவான தொற்று நோய் ஆகும். அது ‘மைகோபேக்டீரியா’ என்ற சிறிய காற்றுவழியில் பரவக்கூடிய அசையும் தன்மை இலலாத பேசில்லஸ் பாக்டீரியா இனங்களால் ஏற்படுகிறது. காசநோய் பொதுவாக நுரையீரலைத் தாக்கும். ஆனால் இது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும். இது காசநோய் உள்ள மக்களின் தும்மல் இருமல் அல்லது சுவாவ மைக்கோநுண்ணுயிர் மனித உடலில் நுழையும் போது பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்று நடக்கலாம்.

  1. நம் உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் இந்த பாக்டீரியா அழிக்கப்படலாம்.(அ).
  2. பாக்டீரியா உடலில் நுழைந்து முதல் மறைந்தே இருக்கும். நோயாளிக்கு எந்த அறிகுறியும் இருக்காது மேலும் பிற மக்களுக்கு அதை பரப்பவும் முடியாது(அ)
  3. நோய்வாய்ப்படுவர்

 

அறிகுறிகள்

காய்ச்சல், குளிர் இரவில், வியர்த்தல், பசியின்மை, எடை குறைதல் மற்றும் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகள். சில நேரங்களில் குறிப்பிடத்தக்க விரல் ஒட்டுதல் ஏற்படலாம். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களாக நீடிக்கும் இருமல், இருமும்போது இரத்தம் வருவது, மார்புவலி, இருமும்போது வலி போன்றவை நுரையீரர் சம்பந்தப்பட்ட அறிகுறிகள்.

தடுப்பு முறைகள்

  • ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதன் மூலம் காசநோய் பாதிப்பை தடுக்க முடியும். மேலும் நோய் பரவாமலும் தடுக்கலாம். நுரையீரல் பாதிப்புக்குள்ளான காசநோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சகிச்சை பெற வேண்டும்.
  • கிருமிகள் ஒரு நபரின் உடல் எதிர்ப்பு சக்தி குறையும் போது நுரையீரலைத் தாக்கும். எனவே நம்மை பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த முயற்சி செய்ய வேண்டும். அதற்காக போதுமான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு மற்றும் தூக்கம், சீரான உணவு, புகைபிடித்தல் மற்றும் மது தவிர்ப்பு, சுத்தமான காற்று, நல்ல உட்புற காற்றோட்டம் பராமரித்தல் மற்றும் தனிப்பட்ட சகாதாரமும் மேற்கொள்ள வேண்டும்.

ஆதாரம் : சுற்றுச்சூழல் தகவல் (ENVIS) மையம் கிண்டி சென்னை

Filed under:
2.97101449275
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கண்ணன் Jan 16, 2020 08:39 PM

மிகவும் நல்லது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top