பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரையோஃபைட்டுகள் – ஓர் அறிமுகம்

பிரையோஃபைட்டுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூவாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே நிலப்பசும் பாசிகள் (சயனோபாக்டிரியங்கள்) இருந்ததற்கும் ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே யூகேரியோட்டிக் உயிரினங்கள் வாழ்ந்ததற்கும் தொல்லுயிர் படிம ஆதாரங்கள் (fossal records) உள்ளன. ஆனால் முதன் முதலாக 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் மேம்பாடு அடையாத தாவரங்கள் நில சூழ்நிலையில் தோன்றின. நீர் சூழ்நிலையிலிருந்து நில சூழ்நிலைக்கு மாறும் போது அவைகளுக்கு ஏற்பட்ட முதல் குறிப்பிடத்தக்க சிரமம் வறண்டு போதல் ஆகும். மெழுகுப் பூச்சு (Cuticle) போன்ற சில சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருக்காவிட்டால் இவை வறண்டு, விரைவில் இறந்து போவது உறுதி.

பிரையோஃபைட்டுகளின் சிறப்புப் பண்புகள்

மிக எளிமையான, மேம்பாடு அடையாத நிலவாழ்த் தாவரங்கள் பிரையோஃபைட்டுகள் ஆகும். நிலத்தில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகளை மிகச் சொற்பமாகவேக் கொண்டிருப்பதால் இவை இன்னமும் ஈரப்பசை நிரம்பிய, நிழலான பகுதிகளிலேயே காணப்படுகின்றன. வாழ்க்கைச் சுழற்சியை முழுமையாக்க இன்னமும் ஈரத்தை நம்பி வாழும், வாஸ்குலார் திசுக்களற்ற (வாஸ்குலார் திசுக்களான சைலம், ஃபுளோயம் கிடையாது) நில வாழ் தாவரங்களே பிரையோஃபைட்டுகள். எனவே இவை தாவர உலகின் நீர் நில வாழ்வன (Amphibians) என்றழைக்கப்படுகின்றன.

சிறப்பான உறுப்புகளைக் கொண்டுள்ளதால் இவை ஆல்காக்களைக் காட்டிலும் மேம்பாடு அடைந்தவை எனக் கூறலாம். ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆந்தரிடியம் என்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆர்க்கிகோனியம் என்றும் அழைக்கப்படுகின்றன. பிரையோஃபைட்டுகளின் வாழ்க்கை சுழற்சியில் தெளிவான சந்ததி மாற்றம் காணப்படுகிறது. மாஸ்கன், ஈரல் (Liverworts) மற்றும் கொம்பு பிரையோஃபைட்டுகள் (Hornworts) பிரையோஃபைட்டுகளில் அடங்கும்.

 • இவை சிறிய நில வாழ்த் தாவரங்கள் ஆகும்.
 • தனியான வேர்த்தொகுப்பை பெற்றிருக்காவிட்டாலும் இவை தண்டிலிருந்து தோன்றும் மெல்லிய இழைபோன்ற ரைசாய்டுகள் மூலம் வளர்தளத்தில் ஊன்றப்பட்டுள்ளன.
 • நீரும் கனிம உப்புக்களும் ரைசாய்டுகள் உட்பட்ட முழு தாவர உடலத்தால் உறிஞ்சப்படுகின்றன. எனவே ரைசாய்டுகளின் இன்றியமையாத பணி ஊன்றுதலே ஆகும். உண்மையான வேர்களின் இன்றியமையாத பணி உறிஞ்சுதல் ஆகும். (மேலும் உண்மையான வேர்கள், தண்டு, இலைகளைப் போல வாஸ்குலார் திசுக்களைப் பெற்றிருக்கும்). எனவே சில பிரையோஃபைட்டுகளின் "தண்டுகள்” மற்றும் "இலைகள்” வாஸ்குலார் தாவரங்களின் தண்டுகள் மற்றும் இலைகளுக்கு ஒப்பாக கருதப்பட மாட்டாது. தாவர உடலம் தாலஸ் என்றழைக்கப்படுகிறது.
 • பாலுறுப்புகள் பல செல்களால் ஆனவை. இவை மலட்டு செல்களால் ஆன ஒரு பாதுகாப்பு உறையுடன் கூடியவை.
 • பாலினப் பெருக்கம் ஊகேமஸ் வகையைச் சார்ந்தவை.
 • வாழ்க்கைச் சுழற்சியில் கேமிட்டோஃபைட்டு சந்ததியும் ஸ்போரோஃபைட்டு சந்ததியும் தெளிவாக மாறி மாறி வரும்.
 • கேமிட்டோஃபைட்டு சந்ததி ஓங்கிய தன்மை உடையது. தனிச்சையானது.
 • ஸ்போரோஃபைட்டு சந்ததி மிகச் சிறியது, நுண்ணோக்கியில் மட்டுமே காணவல்லது.

சந்ததி மாற்றம் அனைத்து நில வாழ்த் தாவரங்கள், மற்றும் சில மேம்பாடு அடைந்த லாமினேரியா போன்ற சில ஆல்காக்களைப் போன்றே பிரையோஃபைட்டுகள் திரும்புகிறது. ஒற்றைமய ஸ்போர்கள் கேமிட்டோஃபைட் சந்ததியை உருவாக்குகின்றன.

இரண்டு சந்ததிகளில் ஒரு சந்ததி மிகவும் ஓங்கியதாகவும், வாழ்க்கை சுழற்சியில் பெரும்பகுதியை ஆக்ரமித்தும் உள்ளது. அனைத்து பிரையோஃபைட்டுகளிலும் கேமிட்டோஃபைட்டு சந்ததி ஓங்கிய தன்மை உடையது. மற்ற நிலவாழ்த் தாவரங்களில் ஸ்போரோஃபைட்டு சந்ததியே ஓங்கியதாக உள்ளது.

கேமீட்டுகளின் உருவாக்கத்தின் போது விலங்குகளின் மயோஸிஸ் பகுப்பு நிகழ்வது போன்றில்லாமல் பிரையோஃபைட்டுகளில் மைட்டாஸிஸ் பகுப்பே நிகழ்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்போர்களின் உருவாக்கத்திற்கு முன்பே மயோஸிஸ் நடைபெறுகிறது.

வகைபாடு

பிரையோஃபைட்டுகள் மூன்று முக்கிய வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 1. ஹெப்பாட்டிக்கே
 2. ஆந்தோசெரோட்டே (ஈரல் வடிவ) (கொம்பு வடிவ) எ.கா. ரிக்ஸியா எ.கா. ஆந்தோசெராஸ்
 3. மஸ்ஸை (மாஸ்கள்) எ.கா. ஃபியூனேரியா

வகுப்பு ஹெப்பாட்டிக்கே (Hepaticae)

இவை பிரையோஃபைட்டுகளில் மிகவும் பின்தங்கியவை. மாஸ்களை விட மிக எளிமையான அமைப்பை உடையன. ஈரம் நிறைந்த நிழல் பகுதிகளில் மட்டுமே வளர்பவை வேறுபாடு இல்லாத தாலஸ் அமைப்பை உடையவை. புரோட்டோனீமா நிலை கிடையாது ஸ்போரோஃபைட்டு சந்ததி மிகவும் எளிமையானது. குறுகிய காலமே வாழ்பவை. பேரினங்களில் ஸ்போரோஃபைட்டு பாதம், சீட்டா, கேப்சூல் என்று பிரித்தறிய முடிகிறது. (எ.கா.) மார்கன்ஷியா. சிலவற்றில், பாதம், சீட்டா ஆகியவை கிடையாது எ.கா. ரிக்ஸியா.

வகுப்பு ஆந்தோசெரோட்டே (Anthocerotae)

 1. கேமிட்டோஃபைட்டு வேறுபாடு அடையாத தாலஸ் ஆகும். ரைசாய்டுகள் ஒரு செல்லால் ஆனவை. கிளைகள் அற்றவை. புரோட்டோனீமா நிலை கிடையாது. ஸ்போரோஃபைட்டு பாதம் மற்றும் கேப்சூலை உடையவை.
 2. சீட்டா கிடையாது எ.கா. ஆந்தோசீராஸ் வகுப்பு மஸ்ஸை (Musci) ஈரல் பிரையோஃபைட்டுகளைக் காட்டிலும் இவை வேறுபாடு அடைந்த அமைப்பை உடையவை. அடர்த்தியான திண்டு போன்ற அமைப்பில் தோன்றுகின்றன. இவை மேம்பாடு அடைந்து, கேமிட்டோஃபைட்டு, "தண்டு” மற்றும் "இலை” போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது. தண்டு ஆரச்சமச்சீர் உடையது. ரைசாய்டுகள் பல செல்களால் ஆனவை, கிளைத்தவை. புரோட்டோனீமா நிலை உள்ளது. ஸ்போரோஃபைட்டு பாதம், சீட்டா மற்றும் கேப்சூலை உடையது.  எ.கா. ஃபியூனேரியா

ஃபியூனேரியா பொருளாதார முக்கியத்துவம்

 1. பிரையோஃபைட்டுகள் தரையின் மீது அடர்ந்து, திண்டுகள் போன்று உள்ளதால் இவை மண் அரிப்பைத் தடுக்கின்றன.
 2. ஸ்பேக்னம் (Sphagnum) அதிக அளவு நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் உடையது. நர்சரிகளில் நாற்றுக்களையும், வெட்டப்பட்ட தாவரப் பகுதிகளையும் ஈரமாக வைத்திருக்க இந்த தாவரம் (ஸ்பேக்னம்) தோட்டக்காரர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.
 3. கரியைப் போன்று பீட் (Peat) எனப்படுவது விலை மதிப்பற்ற எரிபொருளாகப் பயன்படுகிறது. ஸ்பேக்னம் போன்ற சில மாஸ்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டு, தொல்லுயிர் படிமமாக மாறிப் பின்பு பீட்டாக மாறுகிறது
 4. மலைப் பிரதேசங்களில் மாஸ்கள் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
2.85
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Dheenadhayalan Apr 07, 2019 07:00 PM

புரோட்டோனீமா நிலை என்றால் என்ன

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top