பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / உயிரினப்பன்மை / பல்லுயிர் சமநிலையின் ஆபத்துகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பல்லுயிர் சமநிலையின் ஆபத்துகள்

பல்லுயிர் சமநிலையின் ஆபத்துகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்திய பண்பாட்டைப்போல எந்தவொரு பண்பாட்டிலும் சுற்றுச்சூழல் சார்ந்த நன் நெறிகள் வலியுறுத்தப்படவில்லை. “இந்த பூமி, நம்முடைய தாய்” என்று உணர்த்திய சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவான பூமி புத்ரோஹம் பிரிதிவ்ய" என்று அதர்வ வேதத்தில் கூறப்படுகிறது. நியாயமான விருப்பங்களையும் அடைய நாம் எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் வளத்தைக் காண நாம் அவரின் வாழ்த்துக்களை வேண்டுகிறோம். ஒன்றோடு ஒன்று சார்ந்த நம் வாழ்க்கையின் ஆதாரமாக ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் உள்ளன.

இயற்கையை கொண்டாடுவதே ரிக் வேதம், அதன் கதாநாயகன் மழைக்கான கடவுளாகும் என்று ரிக் வேதத்தில் இயற்கை இப்படி அழகாக வருணிக்கப்பட்டுள்ளது:

“இயற்கையின் அழகு கடவுளின் கலைவண்ணம்” என்பதைதான் நாம் பல்லுயிர் சமநிலை என்கிறோம். மற்றொரு வகையில் பார்க்கும் போது பல்லுயிர் சமநிலை என்பதை உலகத்தில் காணப்படும் விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிர்கள், அவைகள் உருவாக்கி நடைமுறைப்படுத்தும் மரபணுசார் வேறுபாடுகள், ஒவ்வொரு உயிரின் இடையே வேறுபாடுகள் மற்றும் உயிரின சுற்றுச்சூழலில் தாவரங்கள், உள்ள அனைத்து வேறுபாடுகளையும் உள்ளடக்கியதே என்றும் கூறலாம். பூமி, ஆகாயம் மற்றும் நீர் ஆகியவற்றில் காணும் எல்லா உயிர்களின் பல விதங்களும், வேறுபாடுகளும், அவைகள் உருவாக்கும் உயிரின சுற்றுச்சூழல் சூழ்நிலையை பல்லுயிர் சமநிலை என்று கொள்ளலாம்.

ஆகவே, அடிப்படையில் எல்லா உயிர்களையும் உள்ளடக்கியது பல்லுயிர் சமநிலை என்று சொல்லலாம்.

பல்லுயிர் சமநிலை மையங்கள்

உலகிலேயே மிகப்பெரிய பல்லுயிர் சமநிலை மையங்களைக் கொண்டது இந்தியா. உலகெங்கிலும் உள்ள 18 ‘பல்லுயிர் சமநிலை துடிப்பு மிக்க இடங்களில் இரண்டு இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கிழக்கு இமய மலைப்பகுதிகளிலும் உள்ளன. இங்குள்ள அடர்த்தியான காட்டுப்பகுதிகள் மிகவும் பலதரப்பட்ட உயிர்களைக் கொண்டவைகளாகவும் பேரழகு மிக்கவைகளாகவும், நம்ப முடியாத பலவித பொருட்களைக் கொண்டதாகவும் உள்ளன. இந்த பல்லுயிர் சமநிலை செழிப்பாக இருப்பது மனித நலத்திற்கு மிகவும் அவசியமாகும். அது ஒரு உயிரின் உணர்வு, மற்றொரு உயிரை சார்ந்திருக்கிறது என்பதின் அடிப்படையில் அமைந்ததாகும். ஒவ்வொரு உயிரும் மற்றவற்றை சார்ந்தே உள்ளது. இது மனிதர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது

உலகப்பொருளாதாரத்தின் 40 சதவிகிதம் பங்கு உயிரி வளங்களிலிருந்தே கிடைக்கிறது. பல்லுயிர் இருந்தால் நமக்கு அதிக அளவில் உணவு பாதுகாப்பும், சமநிலை வளமாக பொருளாதார மேம்பாட்டிற்கு வாய்ப்புகளும், புதிய மருந்துகளுக்கும், மருத்துவம் சார்ந்த முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கும். பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க பல்லுயிர் நன்றாக செயல்படும் சுற்றுப்புற சூழலும் கருதப்படுகிறது. இன்று உலகளவில் பல்லுயிர் சமநிலையும் பருவ சமநிலை வளமும், உயிரினம்சார் அவசியம் என்று நிலை மாற்றமும் மிகப்பெரிய கவலைதரும் நிலைமைகளாக உள்ளன. அவைகள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உலகின் வாழும் எல்லா உயிர்களையும் பாதிக்கின்றன. ஆகவே, இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளது என்று இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

உயிரின சுற்றுச்சூழல் மாற்றங்கள்

உலகச் சரித்திரத்தில் நெடுங்காலமாக பருவ நிலையால் உயிரின சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. உயிரினங்கள் பல மறைந்தும், புதியவை தோன்றியும் உள்ளன. பருவ நிலை பெருமளவு மாறுபடும் போது உயிரின சுற்றச் சூழலும், உயிரினங்கள் மாற்றங்களை சகித்துக்கொள்ளும் திறமையும் பாதிக்கப்பட்டு, பல்லுயிர் சமநிலையில் இழப்புகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றத்தால் பல்லுயிர் சமநிலை பாதிக்கப்பட்டு மக்கள் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.

தாவரங்கள் உயிரினங்களின் பன்முகத் தன்மையில் பல அற்புதங்களை கொண்டது இவ்வுலகு. பருவநிலை, பூகோள அமைப்பு, அங்கு வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிகளிலும் சில உயிரினங்கள் அமைகின்றன. உதாரணமாக சிறுத்தைகளுக்கு சிறந்த இடமாக கருதப்படும் சவானா புல், ஆர்டிக் பகுதிகளில் காணப்படும் துருவ கரடிகளையும் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் உலகப்பரப்பில் காணப்படும் தாவர உயிரின வகைகளின் நிலைமையை வெளியிடும் இயற்கையை பராமரிக்கும் பன்னாட்டு குழுமம் (IUCN) அவைகளை அழிந்துவிட்ட, அழியக்கூடிய நிலையில் அச்சுறுத்தப்பட்டுள்ள பாதிப்படையக்கூடிய அலட்சியப்படுத்தப்பட்டுள்ள என்ற வகை களில் பிரித்து அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பூமியிலிருந்து கிட்டத்தட்ட 140 உயிரினங்கள் மறைந்து விடுகின்றன.

பருவநிலை மாற்றம்

பல்லுயிர் சமநிலை வளம் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் மற்ற இடங்களைக் காட்டிலும் மூன்று பகுதிகள் மட்டுமே பல்லுயிர் சமநிலை கொண்ட வளமான பகுதிகளாக உள்ளன. (வடகிழக்கு இமயமலைப்பகுதி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்.) இந்தியாவின் இந்த பகுதிகளிலும் காடுகள் அழிப்பு மற்றும் பருவநிலை மாற்றங்களால் பெருமளவு பாதிப்பை நாம் பார்க்கிறோம். காட்டை அழிப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான ஹெக்டேர்கள் கொண்ட காட்டுப்பகுதிகள் குறுகிய காலத்தில் மறைந்து விடுகின்றன. அதனால் அந்த பகுதி வாழ் தாவர மற்றும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காடு அழிப்பால் பருவ மாற்றமும் ஏற்படுகிறது. ஆகவே, பல்லுயிர் பகுதிகளை திறம்பட பாதுகாத்து தொடர்ந்து வைத்திருப்பதன் மூலம் நாம் பருவ மாற்றத்தை சமாளிக்க முடியும்.

பசுமை பண்ணைகளால் வெளியாகும் வாயுக்கள் பூமியின் மீது தாழ்ந்து நிலைப்பதால் நச்சு வாயு நிலைத்து நிற்கிறது. சூரிய ஒளி பூமி மீது பாயும் போது அவற்றை இந்த வாயுக்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதனால், உலகளாவிய வெப்பம் கூடுகிறது. கடந்த 150 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சரா சரியாக வெப்பம் 0.85 செல்சியஸ் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் தொடாந்து உயர்ந்து வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக கறைந்து வருகின்றன.

பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் பல்லுயிர் சமநிலை பாதிப்புகள்

 • பூமியின் காற்று மண்டலம் கரியமில வாயு, வெப்பம், மழை அளவு அவைகளின் மாறுபாட்டால் தாவர, மற்ற உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது, உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொண்டும் உயிர் நிலைத்து வருகின்றன. அவைகள் வாழ்ந்து வந்த பகுதிகள் குறைந்து போன நிலையிலும் உயிர் நிலைத்து வருகின்றன.
 • உயிரினம் தோன்றி செழித்து வரும் தற்போதைய கால கட்டத்திற்கு முன்பு மிக அதிகபட்ச வெப்ப உயர்வால் உயிரின சுற்றுசூழல் பெருமளவு பாதிக்கப்பட்டது.
 • மனித நடவடிக்கைகளால் பல்லுயிர் சமநிலை பாதிக்கப்பட்டு மனித நல்வாழ்வுக்கு தேவையான பல பொருட்களும் அழிந்து போவது வேகமாக உள்ளது..
 • பசுமை பண்ணை விவசாயத்தால் நச்சு வாயுக்களின் வெளிப்பாட்டின் அளவு மாற்றத்திற்கு ஏற்ப பருவ நிலை மாற்றங்களின் அளவும் மாறுபடுகின்றன. இதனால், பல்லுயிர் சமநிலை நேரடியாகவும் மற்ற காரணங்களோடு இணைந்தும் பாதிக்கப்படுகிறது.

பல்லுயிர் சமநிலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்புகள்

பருவநிலை மாற்றத்தால் பல்லுயிர் சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிரின சுற்றுச்சூழல் ஆய்வின்படி, இந்த நூற்றாண்டில் பருவ நிலை மாற்றத்தால் பல்லுயிர் பாதிப்புக்கு வாய்ப்புள்ளது என்று அறியப் படுகிறது.

பல்லுயிர் சமநிலை பாதிக்கப்பட்டு அங்கு வாழும் உயிர்கள் வேறிடங்களுக்கு இடம் பெயர்ந்தோ, அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொண்டோ அல்லது புதிய வாழ்வு முறைகளை உருவாக்கிக் கொண்டோ நிலைமைக்கு ஏற்பவாறு உயிர் நிலைத்து வருகின்றன.

பல்லுயிர் சமநிலை இலக்குகள் பேரவையின்படி பருவநிலை மாற்றம்சார் கூட்டு குடிநீர் மற்றும் கடல்சார் உயிரின சுற்றுசூழல்களை பாதுகாப்பதும், சீரழிந்த உயிரின சுற்றுச்சூழல் நிலைப்பாட்டை (அவைகளின் மரபணு மற்றும் உயிரின பல்லுயிர் தன்மை உட்பட) புனரமைப்பதும் அவசியமாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகில் கரியமில வாயு காலவட்டம் நிலைக்கவும், பருவநிலை மாற்றங்களை ஏற்று வாழவும், உயிரின சுற்றுச்சூழல் முக்கியமான ஒன்றாக உள்ளது. மனித நலன்களுக்கு தேவையான பல சேவைகளை அளிப்பதிலும் இந்நூற்றாண்டின் மேம்பாட்டு இலக்குகளை அடையவும் உயிரின சுற்றுச்சூழல் பயனளிக்கிறது. பருவ மாற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை குறைப்பதிலும் பல்லுயிர் சமநிலை ஏற்படும். பாதுகாக்கப்பட்ட அல்லது புனரமைக்கப்பட்ட வாழும் இடங்களால் காற்று வெளியில் உள்ள கரியமில வாயுவை குறைக்க முடியும். இதனால், காடுகளை அழிப்பதை தடுப்பதன் மூலம் கரியம் சேமிக்கப்பட்டு பருவ மாறுதல்களால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடிகிறது.

இந்தியாவில் ஏற்படும் பல்லுயிர் சமநிலை பாதிப்பு

 • விவசாயம், சுகாதாரம், காடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தீய விளைவுகள்.
 • 21வது நூற்றாண்டு இறுதியில் வெப்பம் மூன்று முதல் நான்கு செல்சியஸ் வரை உயரக்கூடும்.
 • அரிசி கோதுமை உற்பத்திகுறைவு மற்றும் மழை பெய்யும் விதங்களிலும், அளவுகளிலும் ஏற்படும் மாற்றங்கள்.
 • வறட்சி காலத்தில் பெருமளவில் மாறுபட்டும், சில சமயம் மத்திய இந்திய பகுதிகளில் அதிக மழையும், வடகிழக்கில் குறைந்த அளவும், கங்கை, கோதாவரி, கிருஷ்ணா நதிப்பகுதிகளில் தீவிர மழையும் ஏற்படும்.
 • கங்கை ஆற்றுப்பகுதிகளிலும், இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் மழை நாட்களின் எண்ணிக்கை குறையலாம்.
 • பயிர் நிலங்களில் 70 சதவிகிதத்தில் மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
 • விலங்குகள் மற்றும் இதர உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

பருவநிலை மாற்றத்தால் காடுகளுக்கு ஏற்படும் தாக்கங்கள்

 • மரம், செடி, கொடி வகைகளின் எல்லைகள் மாறலாம், உதாரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஈரமான காட்டு பகுதிகள் கிழக்கு நோக்கி நகர்கின்றன.
 • கீழ் உயரத்தில் உள்ள செடி, கொடி, மரங்கள் மேல் உயரத்திற்கு பரவுதல்.
 • மழை இல்லாக் காலங்களில் காய்ந்த காட்டுப் பகுதிகளில் அதிகமான தீ விபத்துக்கள் ஏற்படலாம்.

மொத்தத்தில் வளர்ச்சி விகித மாற்றமும், மனித முறைகளும் பயமளிக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை சுருக்கமாக சொன்னால் எளிதாக வாழ் - பூமியில் மற்றவைகளையும் வாழ விடு. இதுவே, வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும். பூமியில் உள்ள மற்ற உயிரினங்களை நாம் மறந்து அவைகளை அழிக்க நினைத்தால் விரைவில் அவை மனிதர்களை அழித்து விடும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

டாக்டர் வினிதா ஆப்தே, ஆலோசகர், ஐ.நா. பாதுகாப்பான பூமி பிரச்சார இயக்கம், ஜெனிவா.

3.08695652174
மகாலெட்சுமி May 30, 2020 09:13 PM

பல்லுயிர் தன்மை என்றால் என்ன?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top