অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மறுசுழற்சி (Recycle)

மறுசுழற்சி (Recycle)

கழிவுகள்

இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று,  அதிகரிக்கும் கழிவுகள். பெருகிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து தேவையற்றது என்று தூக்கிப் போடப்படும் குப்பை கூளங்கள் போன்றவற்றை ஒழிப்பது, முற்றுப் பெறாத பிரச்சினை.

மறுசுழற்சி முறைகள்

  • சில கழிவுகள் வேறொரு தொழிலுக்கு கச்சாப்பொருளாகப் பயன்படுகின்றன. உதரணமாக, கரும்புச் சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்க முடிகிறது. சில கழிவுகள் எரி பொருளாகப் பயன்படுகிறன்றன.
  • சில கழிவுப்பொருட்கள், அவை வெளிவரும் தொழிற்சாலையிலேயே மறுசுழற்சி முறையில் மீண்டும் உள்ளே அணுப்பப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. அல்லது அடர்த்தி, வீரியம், திடம் போன்றவை குறைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றன. பயிர்களுக்கு  உரமாக்கப்படுகின்றன.
  • இன்று வீடுகளில் பயன்படுத்துவதற்கு, தூக்கியெறிந்து விடக்கூடிய பேப்பர் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் தட்டு, கிண்ணம், டின்னில் அடைக்கப்பட்ட உணவு என்று வருகின்றன. குப்பைத் தொட்டியில் போடப்படும் இவற்றை மீண்டும் உபயோகத்துக்கு உரிய வேறு  பொருட்களாக்க முடியுமா?
  • முதலில் காகிதக் குப்பைக் கூளங்களைப் பார்ப்போம். செய்தித்தாள், குப்பைக் கூளங்கள் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, மேலும் பல ரசாயனங்களைக் கலந்து கூழாக்கி, அந்தக் கூழை உபயோகித்து மலிவைன காகிதம், அட்டைப் பெட்டிகள், காகிதப் பொம்மைகள், தட்டு, உறிஞ்சு குழாய்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
  • செய்தித்தாள் முதலில் அலசப்படும். பிறகு அச்சு மையை பிளிச் செய்வார்கள். அதன் பிறகு அட்டை போன்றவற்றைத் தயாரிப்பார்கள். ஆனால் இது செலவு அதிகமாக ஆகும் முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் காகிதம் சிறந்த எரிபொருள். அந்த வகையிலும் வீணான காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
  • உலோகங்கள் மறுசுழற்சி செய்வது, தகரம், இரும்பு ஆகியவை தூக்கியெரியப்பட்ட பொருளாக அதிக அளவில் கிடைக்கின்றன.    இவ்வாறு திரளும் பழைய இரும்பு பொருட்களை மின் அடுப்பில்  உறுக்குகிறார்கள். ஆக்சிஜன் அதில் ஊதப்பட்டு, இரும்பு ஆக்சைடு  கிடைக்கிறது. இதில் கரித்துண்டுகள் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன்  நீக்கம் நடைபெறுகிறது.     இவ்வாறு செய்யப்படும்போது கார்பன் மோனாக்சைடு குமிழிடுகிறது.  இம்முறையில் இளக்கப்பட்ட இரும்பு, தேவைக்கேற்ற வடிவங்களில்   வார்க்கப்பட்டோ, வளைக்கப்பட்டோ இரும்பு பொருளாகிறது.
  • உலோகங்களின் பண்புகள் அவற்றின் மறுசுழற்சி தனித்த நன்மைகளை அளிக்கின்றன. காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மற்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், போலன்றி, உலோகங்கள் மீண்டும் மீண்டும் கழிவு இல்லாமல் மறுசுழற்சி செய்ய முடியும். இரண்டாம் மூலங்களிலிருந்து மறுசுழற்சி உலோகங்கள் முதன்மையான மூலங்களில் இருந்து தயாரிக்கும் உலோகங்கள் போலவே உள்ளன. பண்டைய காலத்தில் இருந்தே ஸ்கிராப் உலோக மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது

ஸ்கிராப் உலோக மறுசுழற்சி முக்கிய பிரிவுகள்

  • முன்னணி / ஆசிட் பேட்டரி மறுசுழற்சி
  • நிக்கல் உள்ளடக்கம் பேட்டரி மறுசுழற்சி
  • மின்னணு ஸ்கிராப் மறுசுழற்சி
  • பயன்படுத்திய அயர்ன் & ஸ்டீல் மறுசுழற்சி
  • ஸ்கிராப் எஃகு மற்றும் இரும்பு மறுசுழற்சி
  • மில் தயாராக ஸ்டீல் ஸ்கிராப் மறுசுழற்சி
  • பிரேக்கிங் ரெயில் ஸ்கிராப் & கப்பல்
  • காப்பர் ஸ்கிராப் மறுசுழற்சி
  • வெண்கல மற்றும் பிராஸ் ஸ்கிராப் மறுசுழற்சி
  • அலுமினியம் ஸ்கிராப் மறுசுழற்சி
  • துத்தநாக ஸ்கிராப் மறுசுழற்சி
  • மெக்னீசியம் ஸ்கிராப் மறுசுழற்சி
  • டின் ஸ்கிராப் மறுசுழற்சி
  • முன்னணி ஸ்கிராப் மறுசுழற்சி
  • துருப்பிடிக்காத ஸ்டீல் உலோகம் ஸ்கிராப் மறுசுழற்சி
  • டைட்டானியம் ஸ்கிராப் மறுசுழற்சி
  • டங்க்ஸ்டன் ஸ்கிராப் மறுசுழற்சி
  • அயல்நாட்டு உலோகங்கள் மறுசுழற்சி ஸ்கிராப்
  • ஸ்கிராப் தங்கம் மீட்பு
  • வெள்ளி மீட்பு
  • ஸ்கிராப் பிளாட்டினம் குழு உலோகங்கள்
  • ஸ்கிராப் கிரியாவூக்கி மாற்றி மறுசுழற்சி
  • கலப்பு விலைமதிப்பற்ற உலோகங்கள் மறுசுழற்சி

மறுசுழற்சி செய்வது எப்படி?

குறைத்தல் (Reduce), மீள்பயன்படுத்தல் (Reuse), மறுசுழற்சி (recycle) என்ற கழிவு மேலாண்மை வியூகத்தில் மறுசுழற்சி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மறுசுழற்சி செய்வது பல்வேறு சூழலியல், பொருளியல், அரசியல், கல்வி நலன்களைக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். இன்று பல நாடுகளில் ஒரு சட்டப் பொறுப்பாகவும் உள்ளது.

மறுசுழற்சி என்பது நாம் பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்த தக்கவாறு மீள் உருவாக்கம் செய்தல் ஆகும். இதனால் இப்பொருட்கள் கழிவிற்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இது சூழல் மாசடைடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இதே பொருட்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் பேணப்படுகின்றன.

மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைவாக அமையும். இதனால் குடும்பப் பொருளாதாரம் தொடக்கம் நாட்டுப் பொருளாதாரம் வரை பொருளியல் நன்மைகள் உள்ளன. மறுசுழற்சி செய்வது தொடர்பான பொதுமக்கள் அறிவு, முறைமைகள், துறைசார் அறிவுகள், உள்கட்டமைப்பு ஒரு சமூகத்தின் பேண்தகு நிலையைக் கூட்டுகிறது.

மறுசுழற்சி பல நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் மிகவும் உச்சகட்டமான மறுசுழற்சியைச் செய்வதற்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இம் மாதிரியான உள்கட்டமைப்பும் முறைமைகளும் பல நாடுகளில் விரிவுபெற்று வருகின்றன. பெரும் தொழிற்சாலைகளில் இருந்து வீடு வரை பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். பின்வரும் செய்முறை வீடுகளில் மறுசுழற்சி செய்வதற்கானது ஆகும்.

செய்முறை

அறிந்து கொள்ளல்

முதலாவதாக எவை எவை மறுசுழற்சி செய்யப்படலாம், எவ்வாறு செய்யப்படலாம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாழும் ஊரைப் பொறுத்து எவற்றை, எவ்வாறு செய்யலாம் என்பது மாறுபடும். மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களில் பின்வருவன அடங்கலாம்.

உயிரிக் கழிவுகள்

உணவுக் கழிவுகள், இலைகள், செடிகள் போன்றவை. உங்களுக்கு வசதி இருந்தால் இவற்றை நீங்களே மக்கிய உரமாக ஆக்கித் தோட்டத்தில் பயன்படுத்தலாம்.

காகிதப் பொருட்கள்

  • பத்திரிகை, இதழ்கள், கடிதங்கள் போன்றவை
  • கண்ணாடிப் போத்தல்கள்
  • உலோகத் தகரங்கள், பேணிகள், அலுமினியத் தட்டுக்கள்

வகைப்படுத்தல்

பயன்படுத்தி முடித்த உடனேயே மறுசுழற்சிப் பொருட்களை பிறம்பாக, மறுசுழற்சி முறைக்கேற்ப வகைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை பிறம்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நகரங்களில் குறைந்தது மூறு வகையாகப் பிரித்துக் கையாழுகிறார்கள். உயிரிப் பொருட்கள், மறுசுழற்சிப் பொருட்கள், கழிவுகள் என்று. இவ்வாறு வகைப்படுத்திய பொருட்களை முறையாக எடுத்துச் செலுமாறு வையுங்கள், அல்லது எடுத்துச் சென்று குடுங்கள்.

விற்பனை செய்தல்

பல நாடுகளில் மறுசுழற்சி செய்யப்படக் கூடிய பொருட்களை விற்க முடியும். வீடு வீடாக வந்தும் வாங்குவார்கள். இவ்வாறு வகைப்படுத்தி சேமித்து வைத்தவற்றை விற்றும் சற்று வருவாயும் பெற்றுக் கொள்ளலாம். போத்தல்கள் போன்றவற்றை சில கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்கலாம்.

சிறப்பு மறுசுழற்சி

இலத்திரனியல் பொருட்கள், மின்கலங்கள், ,மருந்துகள், பூச்சுக்கள் (paints) போன்றவை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்யவேண்டும். எனவே அதற்கான வழிகளை அறிந்து செய்யுங்கள். எ.கா இலத்திரனியல் கருவிகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் உண்டு. பல சந்தர்ப்பங்களில் குளிரூட்டி போன்ற பெரிய பொருட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்று மறுசுழற்சி செய்வர்.

மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்

போத்தில், காகிதம், உடுப்பு, தளபாடங்கள், கட்டிடப்பொருட்கள் என்று பல வகையான மறுசுழற்சிப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் விலை குறைவானவை, ஆனால் பயன்பாட்டில் ஈடானவை. அவற்றை கண்டறிந்து வாங்குங்கள்.

இணைந்து செயற்படுதல்

மறுசுழற்சி என்பது நாம் எல்லோரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு ஆகும். எவற்றை, எவ்வாறு மறுசுழற்சி செய்யலாம் என்பதை பற்றிய அறிவைப் பெருக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். வணிகங்கள், அரசுகள் மேலும் மேலும் மறுசுழற்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதை உக்குவியுங்கள்.

குறைத்தல், மீள் பயன்படுத்தல்

மறுசுழற்சியை விட சிறந்த முறை பொருட் பயன்பாட்டைக் குறைத்தல், அல்லது பயன்படுத்திய பொருட்களை மீள் பயன்படுத்தல் ஆகும்.

ஆதாரம் : S ஞானசேகர் (பதிவர்)



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate