பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு / வன உயிரியல் பூங்காவில் கசிவுநீர் குட்டை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வன உயிரியல் பூங்காவில் கசிவுநீர் குட்டை

வன உயிரியல் பூங்காவில் கசிவுநீர் குட்டை அமைப்பதின் முக்கியத்துவம்

முக்கியத்துவம்

கோடைகால தண்ணீர்த் தட்டுபாட்டுக்கு உதவும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கசிவுநீர் குட்டைகள் மூலம் சேகரிக்கப்பட்ட மழைநீர், பூங்காவின் கோடைகால தண்ணீர்த் தட்டுபாட்டை நீக்கியதுடன், வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பல உயிரினங்களுக்கும் நீர் ஆதாரமாக மாறிவருகிறது.

உயிரியல் பூங்காவில் வாழும் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகையைச் சேர்ந்த இனங்களும், விலங்குகளும் பராமரிக்கப்பட்டுகிறது. இயற்கையான வனப்பகுதியில் புள்ளிமான்கள் மற்றும் முள்ளம்பன்றி, நரி, கீரி, பாம்புகள், உடும்பு, காட்டுமுயல், மயில் போன்ற பல உயிரினங்களுக்கு அடிப்படை தேவைக்கும், அடைப்பிடங்களை சுத்தம் செய்வதற்கும் தண்ணீர்த் தேவை மிக அதிகமாகும்.

உயிரியல் பூங்காங்கவை காணவரும் பார்வையாளர்களுக்கான குடிநீர், கழிவறை  பயன்பாடு, பூங்கா பணியாளர்கள் குடியிருப்புத் தேவை, தோட்டப் பராமரிப்பு என பூங்கா பராமரிப்பிற்கு தண்ணீர் மிக அத்தியாவசியமானதாகும். பூங்காவில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பூங்காவில் ஒரு நாள் சராசரி தண்ணீர்த் தேவை சுமார் 5 இலட்சம் லிட்டர் ஆகும்.இப்பூங்காவின் தண்ணீர்த் தேவை முழுவதும் நிலத்தடி நீரையே நம்பி உள்ளது. பூங்காவின் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வரும் நகரமயமாக்கலினால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, உறுதியற்ற பருவமழை போன்ற காரணங்களினால் பூங்காக்கலில் மழைநீர் சேகரிப்பு பணி அவசியமாகிறது. எனவே உயிரினங்களில் வாழும் பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான தயாரிக்கப்பட்டு அதன்படி மழைநீர் வழிந்தோடும் ஓடையில் குறுக்காக அடுத்தடுத்து கசிவு நீர் குட்டைகளை அமைத்தும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் சேகரிக்கலாம்

முடிவுரை

மேற்படி கசிவு நீர் குட்டைகள் பூங்காவின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ள திறந்தவெளி கிணறுகளைச் சுற்றிலும் இருக்குமாறு அமைக்கப்பட்டால்,  அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டு வன உயிரினங்களுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையை போக்கலாம்.

ஆதாரம் : தினமணி

3.03333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top