பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை / கழிவு மேலாண்மையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கழிவு மேலாண்மையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

கழிவு மேலாண்மை பற்றிய தகவல் இங்கு தரப்பட்டுள்ளன.

கழிவு மேலாண்மை ஒரு பார்வை

கழிவு உருவாகும் இடங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை

வீட்டு உபயோகம் திடக்கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கி எறிதல் கூடாது

அடுக்குமாடி கட்டிடங்கள்,  உணவு கழிவு/மட்கும் கழிவுகள் மற்றும் மறு சுழற்சிவணிக வளாகங்கள் மற்றும் செய்யக்கூடிய பொருட்களைத் தனியாகப் தனியார் சங்கங்கள் போடுவதற்கு பொதுவானப் பெரிய குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். குப்பைகளை அந்தத் தொட்டிகளில் போட சங்க உறுப்பினர்களை அறிவுறுத்த வேண்டும்

சிறு தெருக்கள் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள பொதுவான குப்பைத்தொட்டிகளில் உணவு கழிவு/மட்கும் கழிவுகளைப் போட வேண்டும்

கடைகள், அலுவலகங்கள் வணிக வளாகங்களில் அமைந்திருந்தால் நிறுவனங்கள், முதலியவை சங்கத்தினால் வைக்கப்பட்டுள்ள பொது குப்பைத் தொட்டியில் கொட்டலாம்

உணவகங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் உறுதியானதாகவும் 100 லிட்டர் கொள்ளளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் அதைத் தூக்குவதற்கு வசதியாக மேற்புரமோ அல்லது பக்கவாட்டிலோ கைப்பிடி இருக்க வேண்டும்.

காய்கறி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துச் செல்ல பழ அங்காடிகள் பொருத்தமாக பெரிய குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் தங்கள் கடைகளின் முன்னால் கழிவுகளை எறியக்கூடாது கழிவுகளை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொது குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும்

இறைச்சி மற்றும்      தங்கள் கடைகளின் முன்னாலோ திறந்த வெளியிலோ மீன் அங்காடிகள் கழிவுகளை எறியக்கூடாது 100 லிட்டர் கொள்ளளவுள்ள, உறுதியான, அதைத் தூக்குவதற்கு வசதியாக மேற்புரமோ அல்லது பக்கவாட்டிலோ கைப்பிடியுள்ள குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் வளாகங்களில் அமைந்துள்ள சங்கத்தினரால் வைக்கப்பட்டுள்ள பொது குப்பைத் தொட்டிக்கு மாற்ற வேண்டும்

தெருவிலுள்ள தெருக்களிலோ, நடைபாதையிலோ அல்லது விற்பனையாளர்கள் திறந்த வெளியிலோ கழிவுகளை எறியக்கூடாது ஒரு பையோ அல்லது ஒரு கூடையோ வைத்துக் கொண்டு கழிவுகளை அதில் போட வேண்டும் அதை விற்பனை செய்யும் கைவண்டியிலேயே மாட்டிக் கொள்ள வசதி செய்து கொள்ள வேண்டும்

திருமணக்கூடம் மற்றும்  திடக்கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, சமூகக்கூடம் தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ து£க்கி எறிதல் கூடாது உள்ளாட்சி அமைப்புகள் எடுத்துச் செல்ல பொருத்தமாக பெரிய குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்

மருத்துவமனைகள்   திடக்கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ து£க்கி எறிதல் கூடாது உயிரிய மருத்துவக்கழிவுகளை நகராட்சியால் அமைக்கப் பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடக்கூடாது உயிரிய கழிவு மேலாண்மை விதிமுறைகள் 1998ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி கழிவுகளை அகற்ற வேண்டும்

கட்டிடம் மற்றும் கட்டிட கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, இடிப்பு கழிவுகள்  தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கி எறிதல் கூடாது. கட்டிட வளாகத்தினுள்ளேயோ அல்லது நகராட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று கட்டிட வாசலிலேயோ வைத்திருக்கலாம் ஆனால் அவை போக்குவரத்திற்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் இருக்க வேண்டும்

தோட்டக் கழிவுகள்

தோட்டத்தினுள்ளேயே தோட்டக்கழிவுகளை மட்கச் செய்யலாம் முடியுமானால் உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட நாட்களில் வாரம் ஒருமுறை கழிவுகளை சீர் செய்யலாம் பெரிய பையிலோ அல்லது தொட்டியிலோ கழிவுகளைச் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளால் நியிமிக்கப்பட்டவர்களிடம், அதற்காகக் குறிப்பிட்ட நாளில் அவர்கள் வரும்போது ஒப்படைக்க வேண்டும்

மறுசுழற்சி / மறு உபயோகம் செய்யப்படும் பொருட்கள்

 • காகிதம்
 • பழைய பிரதிகள்
 • பழைய நூல்கள்
 • காகித பைகள்
 • செய்தித் தாள்கள்
 • பழைய வாழ்த்து அட்டைகள்
 • அட்டை பலகை பெட்டி
 • பிளாஸ்டிக்
 • கொள்கலன்கள்
 • சீசா
 • பைகள்
 • பாலீத்தீன் அட்டை
 • கண்ணாடி மற்றும் களிமண்
 • சீசா
 • தட்டு
 • குவளை
 • கிண்ணம்
 • மற்றவை
 • பழைய கலன்கள்
 • பாத்திரங்கள்
 • துணிகள்
 • மரச்சாமான்கள்

அரசு சாரா அமைப்புகளின் பங்கு

அரசு சாரா அமைப்புகள் சமீப காலமாக குடியிருப்போர் பகுதிகளில் முதல்நிலை தொடக்கத் துப்புரவு பணிகளைத் தொடங்கி விட்டன.  குப்பை மேலாண்மையில் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகளைச் சுறுசுறுப்புடனும் ஒழுக்கத்துடனும், அமைப்புகளாக (குழுக்களாக) சமூக மற்றும் தொழிற்நுட்ப அறிவியல் உதவியுடன், குப்பை சேரும் இடங்களில் துப்புரவு பணியாற்றுகின்றனர்.  அப்படிப்பட்ட ஆய்வுகள் வியாபாரப் பகுதிகள் மற்றும் முதலீட்டாளர்களின் சாத்திய கூறுகளை அடையாளம் காட்டுகிறது.  கழிவுகளைப் பிரித்தெடுத்தலில் அவர்களது பணி முக்கியமானது. கழிவுகளைச் சேகரிப்பதோ கையாளுவதோ உள்ளூர் பொறுப்பாளர்களைப் பொருத்தது.

திடக்கழிவு மேலாண்மையில் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் குப்பைச் சேகரிக்கும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றார்கள்.  அவர்கள் நகரங்களைத் தூய்மையாக வைக்கவும் திடக்கழிவுகளற்ற நகரை உருவாக்குவதிலும் வெற்றி கண்டுள்ளனர்.  அரசு சாரா அமைப்புக்கள் சுற்றுச்சூழல் கல்வி, பள்ளிகளில் விழிப்புணர்வு, மற்றும் மக்களிடம் கழிவு மேலாண்மையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு சாரா அமைப்பின் நோக்கம்

மக்களிடம் மறுசுழற்சி பொருட்கள் மற்றும் திடக்கழிவு சேகரிப்பு முறைகளை பெரிய அளவில் விழிப்புணர்வு செய்தல்

வேலைவாய்ப்பின் மூலம் அமைப்புக்களாக வீடு வீடாக சென்று திடக்கழிவுகளை சேகரித்தல்

முதல்நிலை சேகரிப்பு திட்டத்தில் மக்களின் பங்கை, சமூக அளவில் வலியுறுத்தல்

கழிவுகளை உரமாகவோ மண்புழு உரமாகவோ குழிவெட்டி புதைத்தல் மூலமாகவோ மாற்றுவதை உற்சாகப்படுத்துதல்

குப்பைத் தொட்டிகளிலிருந்து சேகரிப்போரின் பங்கு

குப்பைத் தொட்டிகளிலிருந்து நேரடியாக சேகரிப்போர் சமுதாயத்தில் மிகவும் கீழ்தட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் சில ஆண்கள் ஆவர். பொதுவாக பெருநகர மற்றும் நகரப்பகுதிகளில் குப்பைக் கூடைகளிலிருந்து கழிவுகளை பிரிக்கின்ற அற்புத பணியைச் செய்கின்றனர்.  மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கண்ணாடி போன்றவைகளை வியாபாரிகளிடம் விற்று பணமாக்குவதில் ஆர்வமாய் உள்ளனர். குப்பைகளை தரம் பிரித்து நாம் வெளியேற்றினால் அவர்களுக்கு மறைமுக உதவியாக இருக்கும். அவர்கள் நீண்டநேரம் குப்பைத்தொட்டிகளில் காலத்தை செலவிட வேண்டாம். தொற்று நோய்க்கிருமிகளிலிருந்தும் பாதிப்புக்குள்ளாவதைத் தவிர்க்கலாம்.

கழிவுகளை கையாளுவதால் ஏற்படும் பாதிப்புகள்

 • நோய் கழிவுகளைத் தொடுவதால் நேரடியாக இரத்தம் மற்றும் தோல்களை பாதிக்கிறது
 • நோய் தொற்றிய தூசிகளால் கண் மற்றும் சுவாச நோய்கள் உண்டாகின்றன
 • கழிவுகளை உண்ணும் விலங்குகள் கடிப்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன
 • குடல் நோய்களை உண்டாக்கும் கழிவுகளை உண்ணும் பூச்சிகளினால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகின்றன

நாட்பட்ட நோய்கள்

கழிவுகளைச் சாம்பலாக்கும் இயந்திரத்தை இயக்குபவர்கள் புற்றுநோய் உட்பட பல நாட்பட்ட தீராத வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

விபத்துகள்

பளு மிகுதியான கழிவு கொள்கலன்களைக் கையாளுவதால் எலும்பு மற்றும் தசை கோளாறு உண்டாகிறது

அறுவைக் கத்திகளைத் தொடுவதால் ஏற்கனவே உள்ள புண்களில் பாதிப்பு ஏற்படுகிறது

அபாயமிக்க இரசாயான கழிவுகளைத் தொடுவதால் தீப்புண் மற்றும் உடல்நல கேடு விளைகிறது

குப்பை மேடுகளில் மீதேன் வாயுவினால் உண்டாகும் தீ விபத்துகளினால் தீப்புண் ஏற்பட வாய்ப்புள்ளது

மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள்

நகரங்களில் வெளியேற்றப்படும் திடக்கழிவுகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் கெடுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.  அனுமதிக்கப்படாத இடங்களில் கழிவுகளைக் கொட்டும் நிர்வாகத்தின் மீது உடனடி நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுக்க வேண்டும்

மாசு கட்டுப் பாட்டு வாரியம் உள்ளூர் மக்களிடையே நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு குப்பைகளை அப்புறப் படுத்தி எடுத்துச் செல்லும் நவீன தொழிற்நுட்பம் குறித்தும் ஆய்வு செய்திட வேண்டும்.

மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியமும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் இணைந்து தேசிய மற்றும் மாநில அளவிலான சுற்றுச் சூழல் சம்மந்தமான பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டு நிர்வாகத்திடமும் பொது மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

செயல்முறைக்கான நடவடிக்கை

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் சட்டத்திலும் சட்ட விதிமுறைகளிலும் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்குட்பட்டு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரையும் திடக்கழிவுகளையும், அகற்றவும் சுத்திகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த முயற்சிக்கின்றன.

வழிமுறைகள்

மத்திய மாசு கட்டுப் பாட்டு வாரியம் நகரக் கழிவுகளை (கழிவுநீர் மற்றும் திடக்கழிவு) ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் மேலாண்மை செய்வதற்கு, நீர் (முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974ல் பிரிவு 18ல் குறிப்பிட்டபடி மாநில வாரியங்களுக்கு உத்தரவிடுகின்றன.

உத்தரவுகளை நிறைவேற்ற தொடர் நடவடிக்கை

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் முறையாலும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் முயற்சியாலும் சில செயல்முறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   மேலும் மாநில அளவிலும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வரும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் (நோட்டீஸ்) அனுப்பி முறையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றன.

திடக்கழிவைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

 • மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்லும்பொழுது துணி மற்றும் சணல் பைகளை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று வாங்க வேண்டும்.
 • பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் கூடுமான வரை தவிர்க்க வேண்டும்
 • கார் உபயோகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
 • குளிர்பானம் மற்றும் குளிர்ந்த நீரை பாட்டில்களில் அடைத்து மீண்டும் மீண்டும் அந்த பாட்டில்களையே பயன்படுத்த வேண்டும்
 • வீட்டு குப்பைகளை மக்கக்கூடியது மக்காதது என இரு கூடைகளில் பிரித்து கையாள வேண்டும்
 • தோட்டத்தில் எருகுழி அமைத்து மக்கக்கூடியது அனைத்தையும் அங்கே போடலாம்
 • அனைத்துக் குப்பைகளையும் நகராட்சி குப்பை வண்டி மூலமாக அப்புறப்படுத்துவது நல்லது
 • வெளியூர் செல்லும்பொழுது காகிதம் மற்றும் மீதி உணவை சரியாக குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்
 • கழிவுகளைத் தெருக்களிலும், சாக்கடை, பொது இடங்கள், நீர் நிலைகளிலும் எறியக்கூடாது.
 • கரிம / மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய கழிவுகளைச் சேமிக்க வேண்டும்.
 • அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள், பல்வேறு சேமிப்பு கிடங்குகள், வியாபார கிடங்குகள் ஆகியவற்றில் இருப்பவர்கள், சங்கம் அமைத்து கழிவுகளைத் திரட்டி மொத்தமாகக் குறிப்பிட்ட இடத்தில் கொட்டலாம்.
 • வீட்டு விலங்கான நாய் மற்றும் பூனைகழிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
 • அந்தப் பகுதி மக்கள் மொத்தமாக சேர்ந்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
 • கழிவுகளை அகற்ற தேவையான பணத் தவணையை உடனடியாக கொடுக்க வேண்டும்.
 • பொது விழிப்புணர்வு கல்வி.

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.98305084746
கவிதா Sep 18, 2019 05:12 PM

நான் கிராமத்தில் வசிக்கிறேன். இங்கு மக்கும் (ம) மக்காத குப்பைகளை வீடுகளில் சேகரித்து எரித்து விடுகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர் அவர் வீட்டின் முன் எரிக்கிறார்கள்....ஏதும் வழி கிடைக்குமா .......? ( சங்ககரி)

GUNASEKARAN MUTHUSAMY Oct 17, 2015 04:56 PM

good

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top