பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை / திடக்கழிவு உற்பத்தியின் ஆதாரம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

திடக்கழிவு உற்பத்தியின் ஆதாரம்

திடக்கழிவு உற்பத்தியின் பிரச்சினைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

திடக்கழிவு உற்பத்தியின் பிரச்சினைகள்

1947ல் பெரு நகர மற்றும் நகரங்களில் இந்தியாவின் 6 மில்லியன் டன்கள் திட கழிவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டிருந்தது.  1997ல் 48 மில்லியன் டன்களில் 25 விழுக்காடு நகராட்சி கழிவுகளில் சேகரிக்கப் படவில்லை. 70 விழுக்காடு இந்திய நகரங்களின் போதுமான நிலமும் வாகன வசதியும் இல்லாததால் கழிவுகளை அகற்ற இயலவில்லை.  ஒதுக்கப்பட்ட நிலங்களில் சரியான வழிமுறைகள், மண் மற்றும் நிலத்தடி நீர் சீர்கேடு அடையாமலிருக்க பின்றபற்றப்படவில்லை.  தனிநபர் வருமானத்துடன் தொடர்புடைய மக்களின் பொருட்கள் வாங்கும் தன்மை, திடக்கழிவு ஏற்படுதலுடன் நெருங்கிய தொடர்புடையது.  தனி நபர் வருமானம் அதிகரிக்கும்போது சேமிப்பின் பெரும்பகுதி பொருட்கள் வாங்குவதில் செலவழிக்கப்படுகிறது.  பெரும்பாலும் இந்த நிலை குறைந்த வருவாய் பிரிவினரை மத்திய வருவாய் பிரிவினராக மாற்றுகிறது.

நகரத் திடக்கழிவுகள்

நகர திடக்கழிவு என்பது வீடுகள் மற்றும் வணிக கழிவுகள் உயிரியல் மருத்துவக் கழிவு ஆகியவைகளை உள்ளடக்கியது.

நகரக் கழிவுகளை சேகரிக்கும் முறைகள்

நகராட்சி குப்பைகளை நகரங்களில் கொட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசால் ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் கொட்ட வேண்டும். தடையை மீறி குப்பைகளைக் கொட்டுவதாகப் புகார்கள் வந்தால் அதன்மேல் தக்க நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்கலாம்.

வீடுகளில் உண்டாகும் கழிவுகளைக் குறிப்பிட்ட நேரங்களில் வரும் நகராட்சி குப்பை வண்டிகளில் கொட்டலாம்

விடுதி உணவகம் அலுவலகம், வணிக வளாகக் கழிவுகளை தனியாகப் பிரித்து அகற்றலாம்

மாமிசக் கடை மற்றும் மீன், காய்கறி, பழக்கடை கழிவுகள் இயற்கையாக மட்கக் கூடியவை. இதனால் இவைகளை மட்க வைத்து உரமாக்கிக் கொள்ளலாம்.

உயிரிய மருத்துவக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகராட்சி திட கழிவுகளுடன் சேர்த்து விடக்கூடாது.  இதற்காக தனியாக வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

குடியிருப்பு கழிவுகளை ஒன்றாகச் சேர்த்து கைவண்டி மற்றும் சிறிய குப்பை வண்டிகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்.

தெருவில் திரிகின்ற விலங்குகளைக் குப்பைகளை கொட்டியுள்ள இடங்களிலோ அல்லது பிற இடங்களிலோ அனுமதிக்கக் கூடாது.

திடக் கழிவுகளை அகற்றும் போதும் அவற்றைக் குறிப்பிட்ட இடத்தில் கொட்டும் போதும் அந்த இடத்தின் அழகு குறைகிறது.  எலி, பூச்சிகள் கொசுக்களின் இருப்பிடமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.  உடல்நலச் சீர்கேடுகளான தொற்றுநோய், டைபாய்டு, பிளேக், வயிற்றுப் போக்கு மற்றும் தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  திடக்கழிவுகள் நீரையும் காற்றையும் மாசுபடுத்தி சூழல் கேடு விளைவிக்கலாம்.

சட்டமும் நகரக் கழிவு மேலாண்மையும்

பொது சுகாதாரம், சுற்றுப்புறம் மற்றும் பொருளாதாரத்திற்குப் பிரச்சினை ஏற்படுத்தும் நகரக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும் அகற்றுவதற்கும் நகரக் கழிவு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  பல சட்டங்கள் நகரக் கழிவு மேலாண்மையைக் கட்டுப் படுத்த வகை செய்கின்றன.

 • தீங்கியல் சட்டம்
 • இந்திய தண்டனைச் சட்டம் 1860
 • உரிமையியல் சட்டம் 1908
 • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950
 • குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973
 • தண்ணீர் (மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு) சட்டம், 1974
 • காற்று (மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு) சட்டம், 1981
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986
 • ஆபத்தான கழிவுகள் (பராமரிப்பு மற்றும் கையாளுதல்) சட்டம் 1989
 • கடலோரப் பகுதி அறிவிக்கை 1991
 • மருத்துவக் கழிவு (கையாளுதல் மற்றும் மேலாண்மை) விதிமுறைகள் 1998
 • ஞெகிழிகள் (பிளாஸ்டிக்) (உற்பத்தி மற்றும் உபயோகம்) விதிமுறைகள் 1999
 • நகரக்கழிவுகள் (கையாளுதல் மற்றும் மேலாண்மை) விதிமுறைகள் 2000

சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழ்நிலையில் வாழும் உரிமை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரிவு 21ல் உறுதி அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை ஆகும்.  அது மட்டுமல்லாது மற்ற தொடர்புடைய சட்டங்காளன தீங்கியல் சட்டம் இந்திய தண்டனைச்சட்டம், உரிமையியல் சட்டம் 1908, ஆகியவைகளின் மூலம் பல்வேறு நீதிமற்றங்களின் வாயிலாக அறிந்து கொள்ளப்பட்டும் அமலாக்கப்பட்டும் உள்ளது.  நமது நாட்டின் முதன்மைச் சட்டமான அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 51-ஏ (ஜி)ன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மற்றும் அதனை மேம்படுத்தவும் அடிப்படைக் கடமையை விதித்துள்ளது. இந்தக் கடமையை பிரிவு 48ஏ வின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் விதித்துள்ளது. சுகாதாரமான சூழலில் வாழ்வது கூட அடிப்படையான மனித உரிமை ஆகும். 1948ல் நடைபெற்ற உலக மனித உரிமைப் பிரகடனம் தனது 3வது பிரிவில் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழும் உரிமையைப் பிரகடனபடுத்தியது. நமது அரசியலமைப்புச் சட்டமும் பிரிவு 25ல் ஒவ்வொரு குடிமகனும் தன் குடும்பத்தோடு நலமாகவும் நோயில்லாமலும் வாழும் உரிமையை அறிவுறுத்துகிறது.

நமது நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 3,6 மற்றும் 25ல் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படி நகரக்கழிவுகள் கையாளுல் மற்றும் மேலாண்மை விதிமுறைகள் 2000ஐ தேசிய அளவில் செயலாக்கி உள்ளது. இந்த விதிமுறைகள் ஒவ்வொரு நகராட்சிக்கும் நகரக் கழிவுகளைச் சேகரித்தல் பிரித்தல் சேமித்தல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லுதல் பதப்படுத்துததல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்களைச் செய்வதற்குப் பொருந்தும்.

திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2000 நகரச் கழிவுகள் மட்க வைத்தலை எல்லா நகர அமைப்புக்களுக்கும் கட்டாயமாக்கி உள்ளது. மட்கும் தன்மையுள்ள குப்பைகளை மண்ணில் போட்டு மட்க வைத்தல் மண்புழு உற்பத்திக்காக மண்ணிற்குள் புதைத்தல் அல்லது வேறு உகந்த உயிரியல் முறையில் கழிவுகளை சமன்படுத்த வேண்டும் என்று திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2000 அறிவுறுத்துகிறது.  31.12.2003க்குள் இந்த திடக்கழிவு அப்புறப்படுத்தும் முறை மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த விதிமுறைகளில் கூறப்பட்டவைகளை நடைமுறைப்படுத்துவது அந்தந்த நகர அமைப்புகளின் பொறுப்பு என்று கூறுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவுகள் 6,8 மற்றும் 25ல் கூறப்பட்டுள்ளபடி மத்திய அரசு சுற்றுச்சூழல் நல்லமுறையில் பாதுகாக்கப்பட பல விதிமுறைகள், அறிவிக்கைகள் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  அதில் உயிரிய மருத்துவக் கழிவு (கையாளுதல் மற்றும் மேலாண்மை) விதிமுறைகளை 1998ம் அடங்கும்.

ஞெகிழிகள் (பிளாஸ்டிக்) (உற்பத்தி மற்றும் பயன்பாடு) விதிமுறைகள் 1998, மூலம் மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது எடுத்துச் செல்வது, திரவங்களை நிரப்புவது மற்றும் அடைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளின் அடர்த்தி 20 மைக்ரான்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது.

இந்திய தரச்சான்று நிறுவனம் பரிந்துரை செய்துள்ள தரத்தில் மட்டுமே பொருள்களை உற்பத்தி செய்ய நிர்ணயித்துள்ளது. உற்பத்தியாளர்கள் தங்கள் பிளாஸ்டிக் பைகளில் மேல் இது மறுசுழற்சி மூலம் செய்யப்பட்டது என்ற குறிப்பைப் பதிந்திருக்க வேண்டும்

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினர்க்ளுக்குத் தேவையான நடவடிக்கைள் எடுக்க சுய ஒழுங்கு முறையை ஏற்படுத்த இந்த விதிமுறைகளில் வழி செய்யப்பட்டுள்ளது. மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கண்ட வழிமுறைகளைச் செயல்படுத்தத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நெறிமுறைப்படுத்தவும் வகை செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு என்ன

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச நகர மேம்பாட்டு இலாகாவின் செயலாளர் பொறுப்பு வகிப்பவர் அந்தந்த பகுதிகளில் நகர திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2000-ல் குறிப்பிடப் பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த பொறுப்பேற்க வேண்டும்.

மாவட்ட நீதிபதி அல்லது இணை ஆணையாளர் அந்தந்த மாவட்டங்களில் தங்களுடைய பகுதிகளில் இந்த விதிமுறைகளை அமல்படுத்தப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

ஆரம்பக்கட்டக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு உட்பட பல நகரங்கள் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2000ஐ அமல்படுத்துவதில் இறங்கி உள்ளன.  வீடு வீடாகச் சென்று சேகரித்தல், தரம் பிரித்ததல், மட்க வைத்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் நிலத்தைச் சமப்படுத்துவதில் முறையான பாதுகாப்பான முறையைக் கையாள்வது உள்ளடக்கிய செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன.  நகராட்சி அமைப்புகளுக்கு இவைகளைத் தயார் செய்து கொள்ள 3 வருட அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய குடிமக்களின் பொறுப்பு என்ன?

முதலில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படைக் கடமையை நமது அரசியலலமைப்புச் சட்டம் பிரிவு 51ஏ(ஜி)யில் கூறுகிறது.  இப்போது நமது முன்னே எழுந்திருக்கும் கேள்வி குடிமக்காளாகிய நாம் நமது கடமையை நிறைவேற்றி இருக்கிறோமா என்பதுதான். கிரேக்க தத்துவ மேதை பிளாட்டோவின் வார்த்தைகளில் சொல்வதானால் நமது முதுகுகளை வெளிச்சத்தின் பக்கம் திருப்பி சுவரில் நமது நிழல்களைப் பார்க்கும் குகை (கற்கால) மனிதர்களாகத்தான் இன்னமும் இருக்கிறோம்.

நகராட்சி கழிவுகளை பிரித்தெடுக்க சில ஆலோசனைகள்

நகராட்சி நிர்வாகம் நகர மக்களை உற்சாகப்படுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவற்றின் மூலம் மறுசுழற்சி (அ) மறு பயன்பாட்டிற்கான பொருட்களைக் கழிவிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகளை கூறலாம்.  மக்கள் பிரதிநிதிகள், பொதுநலவாதிகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தலாம்.

நகராட்சி திட கழிவுகளை கொட்டுதல்

 • நகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுமிடத்தைத் தூய்மையான இடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது சிறப்பாகும்.  சுகாதாரமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக் கூடாது.
 • குப்பைக் கொட்டும் நிலத்தை அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை மற்றும் கழிவு உற்பத்தியைக் கொண்டு தீர்மானிக்கவும்
 • குப்பைக் கொட்டும் இடத்தை நகராட்சி நிர்வாகமோ மற்ற நிர்வாகமோ தேர்ந்தெடுத்தும் வடிவமைத்தும் திறந்த வெளியில் இல்லாமலும் பார்த்துக் கொள்ளலாம்.
 • குப்பைக் கொட்டும் கொள்கலன்கள் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.  உதாரணமாக கொள்கலன்களில் பச்சை வண்ணம் பூசி அதில் மட்கும் கழிவுகளை தனியாகவும், மறுசுழற்சி செய்யும் கழிவுகளை வெள்ளை வண்ண கொள்கலன்களிலும் போட வைக்கலாம்.

நகராட்சி கழிவுகளை பதப்படுத்துதல்

 • நகராட்சி நிர்வாகம் சிறப்பான பொருத்தமான தொழிற்நுட்பத்தினை பயன்படுத்தி கழிவுகளை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்
 • உயிர் மக்க கழிவுகளை உரமாகவோ, மண்புழு உரமாகவோ, குழிவெட்டி புதைத்தோ மற்ற எந்த வகையிலாவது பயன்படுத்தலாம்.

கடற்கரை சூழல் மற்றும் சமூக நிர்வாகக் கழிவு

திடக்கழிவு பிரச்சனை பெரிய நகரங்களில் அதிகமாக இருக்கிறது.  தொடர்ந்து அபாயத்தை எட்டக்கூடிய மிக உயரிய நிலையில் கடற்கரை நகரங்கள் உள்ளன.  இந்தியாவில் கடற்கரைப்பகுதிகளில் உள்ள வீட்டு திடக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் மிகப் பெரிய மாசு படுத்தியாக உள்ளது.  நமது நாட்டில் ஏறக்குறைய 4400லி வீட்டுச் சாக்கடைகள் 440லி தொழிற்சாலைக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கின்றன.

தொழிற்சாலை கழிவுகள் பயன்பாடு

தூசி சாம்பல்:

சிமென்ட், செங்கல் சூளை, சுண்ணாம்பு, தளமிடுதல்,கட்டுமானம், சுரங்கத்தொழில்,  ஞெகிழ்த்தி

ஊது உலைக் கசடுகள்:

சூப்பர் சல்பேட் சிமென்ட்,  உலோகம் கலந்த சிமென்ட், நிறமுள்ளசிமென்ட்,தளமிடுதல்

இரும்பு தாது மற்றும் பிற உலோக கசடுகள்

கட்டுமானம்,  பொஷோலொனா உலோக சிமென்டு

ஜிப்சத்தின் உபரி பொருள்

ஜிப்சம் சாந்து,  சாந்து பூசிய பலகைகள் ,   போர்ட்லென்ட் சிமென்ட் ,  சுருங்காத சிமென்ட - கனிமவூட்டி ,  சிமென்ட் மற்றும் கந்தக அமிலம் தயாரிப்பில் உடனிகழ்வு பொருள்

சுண்ணாம்பு கசடு - சிமென்ட் தயாரிப்பில்

சுண்ணாம்புக்கு இனிப்பூட்டி,  சுண்ணாம்பு பொஷோகலானா செங்கல், அதே தொழிற்சாலையில் மறுசுழற்சி செய்தல், சிமென்ட், சுண்ணாம்பு கலவை தயாரித்தல்

குரோமிய கசடு

சிமென்ட் தயாரிப்பில் தாது பொருள்,  நிறமுள்ள சிமென்ட்  தயாரிப்பு

செஞ்சேறு

இணைப்பான் (இணைக்கும் பொருள்)  கட்டுமானம்,  தளமிடுதலில் நிறமேற்றி, செஞ்சேறு செங்கல்,  ஓடு மற்றும் தளமிடுதல்,  செஞ்சேறு செயற்கை கதவு

ஆதாரம் : சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம்

2.86153846154
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top